தட்டிலே சோற்றுடன்
உண்ண அமர்ந்தாள்.
பருக்கையைப் பார்த்து
பேசத் துவங்கினாள்.
இதற்கு முன்
நெல்லாக எங்கு இருந்தாய்
எந்த வயலில் விளைந்தாய்
எந்த எலியின் வாயிலிருந்து
எப்படித் தப்பினாய்
அந்த எலியை
முழுங்கிய அரவம்
இப்போது என்ன செய்யும்
பதில் கிடைக்குமுன்
அம்மா சாதத்தைப்
பிசைந்து விட்டாள்
11 comments:
:))))
உங்கள் அனைத்து கவிதைகளையும் வாசித்து முடித்தேன்... சில கவிதைகளின் வாசிப்பும் வார்த்தைகளும் அழகாய் இருந்தாலும், உணர்த்த வரும் கருத்து பிடிபடவில்லை...
:)) எனக்கு கவிஞானம் கொஞ்சம் குறைவு.. அதான்!!! :)))
சரி! சோற்றைப் பிசைந்தாகி விட்டது. அவள் பசியாறினாளா? இல்லையா?
மிகவும் அழகான.. அழுத்தமான கவிதை அனுஜன்யா..
பாராட்டுக்கள்!
பல சிந்தனைகளைக் கிளறி விட்ட கவிதை .
நன்றி ஜி - உங்களுக்குக் கவி ஞானம் குறைவா! இருக்கட்டும்.
அமுதா - செவிக்கு இல்லாததால் சிறிது வயிற்றுக்கு ஈயப்பட்டது.
கே.கே.- ரொம்ப டாங்க்ஸ்பா.
நன்றி சேவியர்.
அனுஜன்யா
அழகான கவிதைக்கு பொருத்தமான தலைப்பு.. எளிமையான வார்த்தைப் பிரயோகம் பளிச்னு மனசில ஒட்டிக்குது.. பாராட்டுகள்.. :)
நன்றி முருகன்.
அனுஜன்யா
நல்லா இருக்கு ..
:)
சரா, நன்றி.
அனுஜன்யா
ஆமாம் இப்படித்தான் வாழ்வின் பல கேள்விகளுக்கு விடை தெரியும் முன்னரே அவை அடுத்தக் கட்டம் நோக்கி நகர்ந்து விடுகின்றன.
நன்றி சகோதரி. உண்மைதான். சிலசமயம் விடை தெரியாமலிருப்பதும் ஒரு வரம்தான்.
அனுஜன்யா
Post a Comment