Thursday, June 12, 2008

சில ஹைகூக்கள்

எண்ணைக் குழாய்கள்
மண்ணைப் புணர்ந்ததில்
கிழிந்ததென்னவோ
ஓசோன் திரைதான்


பத்து காகிதப் பந்துகளுக்குப்பின்
'மரங்களைக் கொல்லாதீர்'
என்று துவங்கியது கவிதை

17 comments:

அகரம் அமுதா said...

///பத்து காகிதப் பந்துகளுக்குப்பின்
'மரங்களைக் கொல்லாதீர்'
என்று துவங்கியது கவிதை///

இந்த ஹைக்கூ என்னை மிகவும் கவர்ந்தது. வாழ்த்துக்கள் அனுஜன்யா!

சென்ஷி said...

ஹைக்கூக்கள் இரண்டும் அருமை...

நிறைய எழுதுங்கள்.. எதிர்ப்பார்ப்புகள் அதிகமாகின்றன.

இரண்டு கவிதையுமே சூழலைப்பற்றியதாய் மாறியது சிறப்பாக இருக்கிறது :))

ப்ரசன்னா (குறைகுடம்) said...

அனுஜன்யா, தங்களது பின்னூட்டத்தை தொடர்ந்து இங்கு வந்தேன். எல்லா கவிதைகளும் படித்து முடித்தேன். அவ்வளவும் அருமை.

favourites-ல் இணைத்து விட்டேன்.

anujanya said...

அமுதா, நன்றிகள் பல.

சென்ஷி, ஒரு வழியாக வந்தீர்கள். ஊக்கத்திற்கு நன்றி.

பிரசன்னா, பரிசு வாங்கிய நல்ல கவிஞர் நீங்கள். உங்கள் பின்னூட்டம் மிகுந்த உற்சாகம் அளிக்கிறது.

உங்கள் மூவருக்கும் நன்றியுடன் அடிக்கடி வருமாறு வேண்டுகோளும் வைக்கிறேன்.

goma said...

அனுஜன்யா
தங்கள் கவிதை ஓட்டம் ,நின்று நிதானமாக, பொருள் பதிய, நடை போடுகிறது .தங்களது பேனா ,என் பாணியிலேயே பயணிப்பது கண்டு ,மகிழ்ச்சி.
மரங்களைக் காக்க வேண்டும் என்று சொல்ல ஒரு மரத்தைக் கொல்ல வேண்டிய கட்டாயத்தை அழகாக கோடாலி போல் வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக எழுதி விட்டீர்கள்.

anujanya said...

நன்றி கோமா

அனுஜன்யா

MSK / Saravana said...

//பத்து காகிதப் பந்துகளுக்குப்பின்
'மரங்களைக் கொல்லாதீர்'
என்று துவங்கியது கவிதை//

கலக்கல்

anujanya said...

சரவணன், நன்றி. எல்லாக் கவிதைகளையும் படித்ததற்கும்.

அனுஜன்யா

ரௌத்ரன் said...

//பத்து காகிதப் பந்துகளுக்குப்பின்
'மரங்களைக் கொல்லாதீர்'
என்று துவங்கியது கவிதை//

அசால்ட்டு பண்றீங்க போங்க...

anujanya said...

நன்றி ரௌத்ரன்.

அனுஜன்யா

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு சுற்றுச்சுழல் பத்தின ஹைக்கூ!!

அமுதா said...

அருமையாக உள்ளன...

anujanya said...

@ சந்தனமுல்லை

மிக்க நன்றி

@ அமுதா

தங்கள் முதல் வருகை. கருத்துக்கு நன்றி


அனுஜன்யா

ராமலக்ஷ்மி said...

//பத்து காகிதப் பந்துகளுக்குப்பின்
'மரங்களைக் கொல்லாதீர்'
என்று துவங்கியது கவிதை//

அற்புதம் அனுஜன்யா.

anujanya said...

நன்றி ராமலக்ஷ்மி. இந்த ஹைக்கூ நிறைய பேரைக் கவர்கிறது.

அனுஜன்யா

முரளிகண்ணன் said...

அனுஜன்யா, என் முட்டாள் தந்தை எண்ணி இப்போது நொந்து கொள்கிறேன். முதலில் பெண்பதிவர் என நினைத்து வராமல் தயங்கி நின்றேன். பின் படித்து ரசித்துவிட்டு போய்விட்டேன். இப்போது திரும்பிப்பார்த்தால் அம்சமாக இருக்கிறது எல்லாம்.

மன்னிக்கவும் முதலிலேயே பின்னூட்டமிடாததற்க்கு

anujanya said...

@ முரளி

அதனால் என்ன முரளி. லேட்டா வந்தாலும்....

பெண் பதிவர்கள் என்றால் என்ன தயக்கம்.... நான் முதலில் அங்கு போய் விடுவேன். சகோதரிகள் என்றால் எனக்குக் கொள்ளைப் பிரியம். நீங்க என்ன நினைசீங்க? :)))))

அனுஜன்யா

பி.கு. //என் முட்டாள் தந்தை எண்ணி // எழுத்துப் பிழை என்று நினைக்கிறேன். உங்கள் தந்தையை உங்களுக்கு நிறையப் பிடிக்கும் என்று எல்லோருக்கும் தெரியும் :)))