பழுப்பு நிறத்தில்
கறுப்புத் தீற்றல்களுடன்
வால் குழைத்துச்
சுற்றி வந்தது அவளை;
பூமியைச் சுற்றும் நிலாபோல
அவள் நகர்ந்தாலும்
சுற்றியபடியே தொடர்ந்தது;
அதிகாலையின் ஆரஞ்சும்
அலைகள் தெறித்த நீரும்
இந்த குட்டி சொர்க்கமும்
இரம்மியமாயின அவளுக்கு;
வாரியணைத்து எடுத்துச் செல்ல
அவளுக்கு விருப்பம்; அதற்கும்;
அவன் அந்தப்பக்கம் இந்தப்பக்கம்
தலையசைத்து விலகிப்போக
அவளும் அதுவும்
பார்த்துக் கொண்டனர் கடைசியாக
ஒன்றும் பேசாத அவள்
வாலாட்டாமல் தொடர்ந்தாள்
ஒன்றும் பேசாத அதுவும்
தொடர்ந்து வாலாட்டியது
கறுப்புத் தீற்றல்களுடன்
வால் குழைத்துச்
சுற்றி வந்தது அவளை;
பூமியைச் சுற்றும் நிலாபோல
அவள் நகர்ந்தாலும்
சுற்றியபடியே தொடர்ந்தது;
அதிகாலையின் ஆரஞ்சும்
அலைகள் தெறித்த நீரும்
இந்த குட்டி சொர்க்கமும்
இரம்மியமாயின அவளுக்கு;
வாரியணைத்து எடுத்துச் செல்ல
அவளுக்கு விருப்பம்; அதற்கும்;
அவன் அந்தப்பக்கம் இந்தப்பக்கம்
தலையசைத்து விலகிப்போக
அவளும் அதுவும்
பார்த்துக் கொண்டனர் கடைசியாக
ஒன்றும் பேசாத அவள்
வாலாட்டாமல் தொடர்ந்தாள்
ஒன்றும் பேசாத அதுவும்
தொடர்ந்து வாலாட்டியது
(உயிரோசை 17.11.08 மின்னிதழில் பிரசுரமானது)
எழுத, படிக்க ஒன்றும் தோன்றாமல், பிடிக்காமல், வெறுமையின் உச்சகட்டமாக என் பழைய கவிதைகளையே படிக்கும் உன்மத்த நிலை ஏற்பட்டது. இதற்கு முந்தைய இடுகையை விட இது எவ்வளவோ தேவலாம் என்றும் தோன்றுகிறது :(.
முதன் முறை இடுகையாகப் போட்ட போது பின்னூட்டம் இட்டவர்கள் பட்டியலை இப்போது பார்க்கிறேன். வேலன்-மாதவ்-நர்சிம்-சந்தனமுல்லை-கார்க்கி என்று நல்ல நட்புகள். ஹ்ம்ம். காலம் எல்லாவற்றையும் எப்படிப் புரட்டிப் போடுகிறது! போலவே மீண்டும் மாற்றிப் போடுமா? - இந்த மீள் பதிவைப் போல்!
எனக்கே சிரிப்பு வந்தாலும் எனக்கே சொல்லிக் கொள்கிறேன்..நீ ரொம்ப்ப்ப நல்லவன்டா...

மற்றபடி இப்போதைக்கு எழுதுவேன் என்று தோன்றவில்லை. காரணம் - எழுதும் ஆர்வம் வடிந்து விட்டதும், வாசிப்பு முற்றிலும் நின்று விட்டதும் தான். ஆதலினால் ...என்ஜாய் மாடி.