Friday, July 4, 2008

முன் அமைதி




ஆறாம் தளத்து வீட்டில்
முப்புறமும் ஜன்னல்கள்
வேறு கோணங்களில்
ஒரே காட்சியுடன்;
அலைகளற்ற கடலும்
மேகமற்ற வானும்.
கண்கள் விரிந்த என்னிடம்
கடலிலிருந்து
கைப்பற்றிய நிலமென்றான்.
கனிமநீர் தித்தித்தாலும்
உணவு சற்றே கரித்தது
என் ரத்தக் கொதிப்புடன்
அமிலங்களின் சங்கமத்தை
வயிற்றில் எதோ எரிச்சல்
என்று எண்ணியிருக்கக் கூடும்.
இறங்கி வருகையில் அவன் மகள்
சுனாமியில் முதலெழுத்து
ஓசையற்றது என்றாள்

14 comments:

Ayyanar Viswanath said...

நன்று..

பரிசல்காரன் said...

சூப்பர்ங்க என்று மட்டும் பின்னோட்டம் போடலாம்தான்..

சரி.. உண்மையை சொல்லிடறேன்..

என் மர மண்டைக்கு ஒண்ணுமே புரியல!

ச.முத்துவேல் said...

சுனாமியில் முதலெழுத்து
ஓசையற்றது என்றாள்

என்னவோ செய்கிறது இவ்வரிகள்.நிறைய சொல்லுகிறீர்கள் இவ்வரிகள் மூலம்.அற்புதமான அன்றபவம்.

anujanya said...

அய்யனார்,

நான் மிகவும் மதிக்கும் பதிவாளர்களில் நீங்களும் ஒருவர். வாழ்த்துக்கு நன்றி.

அனுஜன்யா

anujanya said...

கே.கே. ,

என்ன வெச்சு காமெடி எதுவும் பண்ணலியே? மின்னஞ்சல் முகவரி கொடுங்க. நான் சொல்ல வந்த விஷயத்தைப் புரியவைக்க முயற்சி செய்யுறேன். சபைல சொன்னா அய்யனார் மாதிரி ஆட்கள் 'பூ இவ்வளவுதானா' என்று சிரித்து விடும் அபாயம் உள்ளது.

அனுஜன்யா

anujanya said...

நன்றி முத்துவேல், தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

அனுஜன்யா

Anonymous said...

//என் மர மண்டைக்கு ஒண்ணுமே புரியல!//

எனக்கும் அதே நிலைதான்... :(

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா வந்திருக்குங்க கவிதை...

Unknown said...

sorry எனக்கும் புரியல...!! :-(

வளர்மதி said...

தொடக்க வரிகளும் இறுதி வரிகளும் நன்றாக வந்திருக்கின்றன.

இடையில் இன்னும் செதுக்கியிருக்க வேண்டுமோ என்று தோன்றுகிறது.

எனினும் நல்ல முயற்சி.

தொடர்ந்து எழுதுங்கள் ...

வளர் ...

anujanya said...

என்னுடைய 'இந்த ஆண்டின் கவிதை' எழுதிவிட்டேன் போலும்! ஒரே கவிதைக்கு அய்யனார், சுந்தர் மற்றும் வளர்மதி ஆகியோரின் அன்பான 'தட்டு'. You may not know what it means to me. நன்றிகள் பல.

அனுஜன்யா

ramesh sadasivam said...

கவிதையின் சில வரிகள் புரிந்தாலும், நிறைய கேள்விகள் எழுகின்றன...என் போன்றவருக்கும் புரியும்படி எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்...!

ஜி said...

:))

Naan erkanave sollitten.. enakku kavinjyanam kuraivunnu :)))

anujanya said...

ஜி, இது கொஞ்சம் ஓவர்.

அனுஜன்யா