Thursday, August 28, 2008

அய்யனாருக்குப் பகிரங்கப் பின்னூட்டம்

முதலிலேயே டிஸ்கி
நண்பர்களே, இந்தப் பதிவு சற்று தீவிர ஆனால் சுவாரஸ்யமான இலக்கியத்தைப் பற்றி பேசும். எனக்கு லக்கி மற்றும் பரிசலின் சுண்டியிழுக்கும் ஆற்றல் இல்லாததால் நேரடியாகவே சொல்லிவிடுகிறேன் 'இது உங்களுக்கு அலுப்பைத் தரலாம்'. ஆதலினால் நீங்கள் இப்போதேயோ, ஐந்தாறு வரிகளுக்குப் பின்னாலோ தாராளமாக விலகலாம். இத்தகைய எச்சரிக்கைகளைப் புறக்கணித்து முழுதும் படித்து, நிருபணமாக பின்னூட்டமும் அளிப்பவர்களுக்கு சமீபத்தில் (கி.பி.2015) வெளிவர இருக்கும் எனது கவிதைப் புத்தகம் பரிசாக வழங்கப்படும்.

இனி உங்கள் விதி.

சாராவின் இறக்கைகளும் ஜோவின் பியானோவும்...

பார்க்க:http://ayyanaarv.blogspot.com/2008/08/blog-post_21.html

Magical Realism

முதலில் படித்து விட்டு தலை சுற்றியது. பேசாமல் 'சிறப்பு அல்லது நன்று' சொல்லிவிட்டு நகர்ந்தோடி பரிசல்/லக்கி பதிவுகளில் கும்மி அடிக்கலாமென்று நினைத்தேன். ஒண்ணுமே புரியல அய்ஸ். வசந்த் மொழியில் சொல்லவேண்டுமென்றால் 'I sway boss!'.

உள்ளுக்குள் ஒரு குரல் (பின் தொடரும்) 'இன்னிக்குத் தப்பிக்கலாம்; இன்னும் போகப்போக என்ன செய்வதாக உத்தேசம்?; இல்ல ஆ.வி./ஜு.வி. என்று செட்டில் ஆகிவிட எண்ணமா?' என்று வினவியது. தன்மானம் என்ற ஒன்று வேறு அவ்வப்போது எட்டிப் பார்த்தது. சரி பின்னூட்டத்திலாவது ஏதாவது clue கிடைக்குமென்று பார்த்தால் ஆளாளுக்கு என்னென்னவோ எழுதி இரவில் தூக்கம் போயே போச்சு. அண்ணாச்சி எழுதியது மட்டும் புரிந்தது/பிடித்தது.
(“வாசித்துக் கிழித்தேன் டவுசரை; மெதுவாய், மிக மெதுவாய், மிக மிக மெதுவாய்,, கிழிந்த டவுசரைத் தைக்க முடியாமல் உறைந்து போனேன்”).

ஒரு வழியாக, தேர்வை எதிர்கொள்ளும் மாணவனின் தீவிரத்துடன், வலையில் மேய்ந்தேன். மாஜிக்கல் ரியலிசம் என்பதற்கு 'மாய யதார்த்தம்' என்று பெயர் சூட்டினேன் (இதுவும் எங்கோ இலக்கியப்பக்கங்களிலிருந்து சுட்டது தான்). யதார்த்தத்தையும் மாயத்தையும் ஒரு புள்ளியில் சேர்ப்பது; மனித வாழ்வின் புற காரணிகளுடன் அக ஆழங்களைக் கலப்பது; அறிவியல் சார்ந்த இயல்பிய உண்மைகளுடன் உளவியல் சார்ந்த மானுட உண்மைகளின் சேர்க்கை; இவ்வகை இலக்கியங்களில் வாசகியின் பங்கு மகத்தானது. படிக்கும் வாசகியானவள் (உங்கள் கதைசொல்லி போல் ஆணாதிக்கவாதி இல்லை நான்) தான் அதுவரையறிந்த யதார்த்தத்திலிருந்து, கதைசொல்லியின் யதார்த்த நிலையைத் தழுவி நிற்பது; அஃது அவளுக்கு கதையை, அதன் நுட்பத்தைக் கட்டவிழ்க்க உதவும். இது வாசகியின் 'பரிணாமக் கடமை' எனக் கொள்ளலாம். (லேகா/கிருத்திகா : மனதில் கொள்க)

மா.ய. படைப்புகளின் இன்னபிற குணாதிசயங்களை பின்வருமாறு பட்டியலிடலாம்:

1) மாற்றுக் கருத்து ('other' perspective)
2) ஒரு குறிப்பிட்ட நாகரிக/வரலாற்று/பூகோளப் பின்னணியில் கதை
இருத்தல்
3) கனவுகளும் கற்பனைகளும் கதையினூடே இருத்தல்
4) சுதந்திர, பின் நவீனத்துவ (ஆஹா, கிளம்பிட்டாங்கையா!) பாணி எழுத்து
5) விளக்கவியலாத நிகழ்வுகள் மிகச் சாதாரண சூழலில் நடப்பதும் மற்றும் கதைமாந்தர்கள் அத்தகைய தர்க்கத்தை மீறும் நிகழ்வுகளை சட்டை செய்யாதிருப்பது

மேலும் உயர்கற்பனைகள் கதையின் பின்புல தளத்தையே கேள்விக்குறி ஆக்குதல்; வினையும், விளைவும் தலைகீழாதல் (சோக நிகழ்விற்கு முன்பே கதை மாந்தர் விசனப்படுதல்); காலத்தை உருமாற்றல் அல்லது சுருக்குதல் என்று அனைத்து தகிடு தத்தங்களும் செய்யலாம், மிக வசிகரமாக. முடிவாக அழகிய நீதி (poetic justice) வெளிப்படும்.

இந்த அனைத்தையும் ஓரளவு உள்வாங்கிக்கொண்டு மீண்டும் இருமுறை படித்தேன் அய்யனார். Simply awesome. மேற்கூறிய அம்சங்களில், உங்கள் படைப்பில் பெரும்பான்மையான அம்சங்கள் இருந்தது உள்ளங்கை நெல்லிக்கனி. இப்போது சொல்கிறேன் சட்டைக் காலரை நிமிர்த்தியபடி 'நன்று / சிறப்பு'.

பின் குத்து 1 : வளர்/ஜமாலன் போன்றோர் உங்கள் 'சாரா மற்றும் ஜோ'வை பிரித்து மேய்ந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். உங்கள் நலத்திற்குதான்; வானத்திலிருந்து தரையிறங்கலாம்.

பின் குத்து 2 : நட்பின் உரிமையில் பரிசல் மற்றும் லக்கி பற்றி எழுதியுள்ளேன். அவர்கள் கொடுக்கும் வாசிப்பின்பம் என்னளவில் மிக மிக அதிகமே.

26 comments:

Anonymous said...

//நண்பர்களே, இந்தப் பதிவு சற்று தீவிர ஆனால் சுவாரஸ்யமான இலக்கியத்தைப் பற்றி பேசும்//

எப்ப தீவிரவாதி ஆனீங்க?

Anonymous said...

//எனக்கு லக்கி மற்றும் பரிசலின் சுண்டியிழுக்கும் ஆற்றல்//

நமீதா மாதிரியா?

Anonymous said...

//சமீபத்தில் (கி.பி.2015) வெளிவர இருக்கும் எனது கவிதைப் புத்தகம் பரிசாக வழங்கப்படும்.//

புத்தகம் கூட இலவசமாக ஒரு மாத மளிகைப் பொருள் இலவசமா?

Anonymous said...

//முதலில் படித்து விட்டு தலை சுற்றியது.//

இரண்டாவதாப் படிங்க.

Anonymous said...

அடர் இரவின் மெளனத்தின் மொழியின் அர்த்தம் விளங்கா பொழுதின் நீட்சி்யில் கிளர்ந்தெழும் நினைவின் தடத்தில் விழுந்தெழும் கருநிழல் பரிகசிக்கும் உன் பரிணாமம்.

இப்படி மையமா ஒரு பின்னூட்டம் போட்டீங்கன்னா பதிவ ஒட்டிப் பேசுவதாகவும் வெட்டிப் பேசுவதாகவும் கொள்ள ஏதுவாகும்.

உங்களுக்கு பின்னால் வருபவர்கள் நீங்கள் சொன்னதிலிருந்து பல கருத்துக்க்களை அவர்களுக்கேற்றவாரு எடுத்துக் கொள்வர்.

நீங்கள் ஒரு பி ந பதிவராகாவிட்டாலும் பி ந பின்னூட்டக்காரர் ஆகலாம்

வால்பையன் said...

அங்க போதை தலைகேறி கிறுகிறுன்னு ஓடி வந்தா!
இங்கே ஒரு புல் பாட்டில் ரம்ம காட்றாங்கப்பா

Ayyanar Viswanath said...

அனுஜன்யா

ஒரு பின்னூட்டப் பதிவினை எதிர்பார்த்திருக்கவில்லை..என்னதான் ஆசிரியன் இறந்துவிட்டான் என சொல்லித் திரிந்தாலும் சரியான புரிதல் அல்லது சக புரிதல் என்பது எழுதுபவனுக்கு மிகுந்த இணக்கமானது..மகிழ்ச்சியும் அன்பும்..

இதே போன்றதொரு மன உணர்வினை நந்தாவும் பைத்தியக்காரனும் முன்பே தந்திருந்தார்கள்..நீங்கள் இன்னமும் விரிவாய் பகிர்ந்துகொண்டதிற்கு நன்றி..

Anonymous said...

என்னய்யா சொல்ல வர்ரீங்க..........
அய்ய்யய்யோ.......

Anonymous said...

அய்யய்யோ இப்படி ஆயிட்டாரே.......
யாராச்சும் காப்பாத்துங்களேன்....ப்லீஸ்

MSK / Saravana said...

அய்யனாரின் பதிவுகள் ஒரு போதை தரும் வஸ்து..
நான் அவர் பதிவுகளை மட்டுமே மிகவும் மெதுவாய் வாசிப்பதுண்டு..
எழுத்து போதை..

MSK / Saravana said...

மாஜிக்கல் ரியலிசம் பற்றிய தகவல்களுக்கு நன்றி அனுஜன்யா..
:)

MSK / Saravana said...

அப்படியே பி.ந பற்றி ஒரு முழு விளக்க பதிவு (தொடர் பதிவா போட்டாலும் சரி..) போடுங்க..

narsim said...

நல்ல ஆழமான பதிவு,

எனக்கும் இப்படி இலக்கியத்தின் இடுக்குகளில் புகவேண்டும் என்ற ஆசை..

ஆனா.. வரும்...ஆனா...வராது....

நர்சிம்

பரிசல்காரன் said...

அய்யனாருக்குத்தான் புத்தகப் பரிசு போகும்!

உங்கள் புரிதலுக்கும், பாராட்டுக்கும் நன்றி!

இது ஒரு மெடல் எங்களுக்கு!

(இரண்டு கே.கே-க்களின் சார்பாக..)

anujanya said...

@ வேலன்

/இரண்டாவதாப் படிங்க/ - ரசித்தேன்.

/நீங்கள் ஒரு பி ந பதிவராகாவிட்டாலும் பி ந பின்னூட்டக்காரர் ஆகலாம்/

இப்படி கலாய்க்கலாமா? நல்லா இருங்க சாமி.

@ வால்பையன்

/அங்க போதை தலைகேறி கிறுகிறுன்னு ஓடி வந்தா!
இங்கே ஒரு புல் பாட்டில் ரம்ம காட்றாங்கப்பா/

ஹாஹா! ஆனா உங்களைதான் குடிக்கக்கூடாது என்கிறாரே பரிசல்.

@ அய்யனார்

இவ்வளவு பெரிதாக பின்னூட்டம் (அதுவும் பகிரங்கமாக) உங்களுக்கு சற்று embarassing என்று தோன்றியும், எனக்கு வேறு வழி தெரியவில்லை. உங்கள் பதிவின் உயர்வைப்பற்றி பலரும் அறிய வேண்டும் என்ற ஒரு ஆசை. நன்றி.
அண்ணாச்சிக்கு வாக்களித்தபடி ஒரு கவுஜையும் அவுத்து விடுங்க விரைவில்.

@ kumkyb & kumky

இருவரும் ஒருவரே என்று நினைக்கிறேன். நானும் அய்யனாரை அப்படித்தான் நினைத்தேன். நன்றி.

@ சரவணன்

நன்றி சரவணன். போதைதான். அதைத்தான் வால்பையனும் சொல்கிறார். இந்தமுறை எவ்வளவு மெதுவாக படித்தும் way beyond... பின் நவினத்துவம் எல்லாம் பெரிய சப்ஜெக்ட். பெரிய புலிகள் இருக்கும் இடம்.

@ நர்சிம்

நன்றி நர்சிம். ஆசை இருக்குல்ல? மூழ்கிட வேண்டியதுதான்.

@ பரிசல்

As always, a gentleman. பெரிய ஐயங்காருக்கும் சொல்லிடுங்கோ.

அனுஜன்யா

தமிழன்-கறுப்பி... said...

உங்கள் பின்னூட்டங்கள் மட்டுமே இதுவரை படித்திருக்கிறேன்

இதுதான் முதல் பதிவு அஃதும் பின்னூட்டப்பதிவாயிற்று...

ஆராய்ந்து வாசிக்க முற்பட்டதில் மகிழ்ச்சியும் அதனை எம்மோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகளும்...

நானும் அந்த பதிவை வாசித்திருந்தேன் எனக்கு புரிந்த வகையில் அதற்கு பின்னூட்டமிடடிருப்பதாக நினைவு...

anujanya said...

தமிழன்,

நானும் பார்த்திருக்கிறேன் பலமுறை அய்யனார் வலையில். இந்தப் பதிவு நானும் உங்கள் அளவு புரிதல் பெற முயன்ற கதை. அவ்வளவே. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

அனுஜன்யா

புதுகை.அப்துல்லா said...

சொல்ல ஓன்னும் இல்லை! சற்றே புன்னகைத்து விட்டுப் போகிறேன் :)

anujanya said...

புன்னகை தானே அப்துல்லா? அடிக்க வராமல் இருந்தால் சரி.

அனுஜன்யா

Unknown said...

அச்சச்சோ அண்ணா இது பின்னூட்டமா?? நான் படிக்கலாமா?? ;)

anujanya said...

ஸ்ரீ,

தாராளமாகப் படிக்கலாம். இது ஒண்ணும் கவிதை இல்லையே!

அனுஜன்யா

Unknown said...

என் ப்ளாக் பக்கமே வராத அண்ணாவை கன்னாபின்னாவென கண்டிக்கிறேன்..!! :((

சென்ஷி said...

மாய ‌ய‌தார்த்தத்தின் பின்னணியை ரொம்ப‌ அழ‌கா சொல்லியிருக்கீங்க‌.. அழ‌கான‌ ப‌திவு :)

anujanya said...

சென்ஷீ,

என் நண்பா! எங்க ஆளையேக் காணோம்! நன்றி இங்கு வந்ததற்கு மட்டுமல்ல. மீண்டும் வலைக்கு வந்ததற்கும்.

அனுஜன்யா

ஜமாலன் said...

//பின் குத்து 1 : வளர்/ஜமாலன் போன்றோர் உங்கள் 'சாரா மற்றும் ஜோ'வை பிரித்து மேய்ந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். உங்கள் நலத்திற்குதான்; வானத்திலிருந்து தரையிறங்கலாம்.//

ஆமா மேஜிகல் ரியாலிஸம் அதாங்க மாய யதார்த்தம் மற்றும் பி.ந. என்றால் என்ன? அய்யனாரை படிச்சிட்டு வர்ரேன்..

விடவேமாட்டீங்களா? “இன்னுமாடா நம்பள நம்பிகிட்டு இருக்கானுவ. வெளியுராமுல. நல்லா களப்புறானுங்கடா பீதிய”

:) :) :)

anujanya said...

நம்ப முடியவில்லை. ஜமாலன் நம்ம வீட்ல! வாங்க தலைவா! மோதிரக்கை மாதிரி நீங்க நாலு வரி திட்டி எழுதினாகூட மகிழ்ச்சிதான்.

அனுஜன்யா