Tuesday, September 23, 2008

உயிரோசையில் பிரசுரமான கவிதைஉயிர்மை.காம் (உயிரோசை இதழ்) மின்னிதழில் பிரசுரமான எனது முதல் கவிதை.


அலைவரிசை


அலைவரிசை மாற்றங்களில்
நிராகரிக்கப்பட்ட பாடலொன்று
அண்டைவீட்டு சாளரத்திலிருந்து
தஞ்சமடைந்தது என்னிடம்;
விலக மறுத்த வரிகள்
கவரவில்லையெனினும்
இலயிக்கத்துவங்கியது மனம்
அலைவரிசை மாற்றங்களின்
சாத்தியக்கூறுகளில்


(நன்றி - உயிர்மை.காம்)


54 comments:

வெண்பூ said...

ஆஹா... அனுஜன்யா, கவிதை எனக்கு புரியல.. (பெரிய கவிஞர்தான் நீங்க).. பரவாயில்ல ஒரு பிரசன்ட் சார் போட்டுக்குறேன்.

anujanya said...

வெண்பூ,

கவிதை புரியவில்லை என்பது பெரும்பாலும் வரும் குறை. இந்தக் கவிதையைப் பொறுத்தவரை இப்படிப் பார்க்கலாம்:

ரேடீயோ ஸ்டேஷன் மாற்றும் போது (சன் எப்.எம். டு மிர்ச்சி) ஒரு பாடல் பாதியிலேயே துண்டிக்கப்பட்டு பக்கத்து வீட்டிலிருந்து உங்களை வந்து சேரலாம். உங்களுக்கு அவ்வளவாகப் பிடிக்கா விட்டாலும் உங்களையே தொற்றிக்கொள்ளும் அது. அதைப்பற்றி யோசிக்கையில், அடுத்தமுறை என்ன பாடல் இவ்வாறு வந்து தொற்றிக்கொள்ளும் என்று யோசிப்போம். இது ஒரு புரிதல்.

வேறு தளத்தில், நாம் எல்லோரும் ஆசைப்பட்ட மாதிரியே அண்டை வீட்டில் ஒரு அழகான பெண், நம்மைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறாள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவள் அலை வரிசை வேறு. Eminem, Spice Girls, MJ, Hollywood, Chelsea, Kobe என்னும் ரேஞ்சில் அவளிருக்க, நாமளோ S.A.ராஜ்குமார், விக்ரமன், நமீதா, தோனி என்ற தளத்தில் இருப்போம். இந்த அலைவரிசை மாறக்கூடிய சாத்தியங்களையும் மனம் அசை போடலாம் என்பது இன்னொரு தளம்.

கமல் சொல்ற மாதிரி, வெண்பூ, கேள்வி கேக்குறது ரொம்ப சுலபம். இவ்வளவு பெரிய விளக்கம் சொல்றது கொடும....மவனே, இதுக்காகவாவது ஒரு பத்து பின்னூட்டம் போடணும்.

அனுஜன்யா

சென்ஷி said...

வெண்பூவுக்கு நாம ஏதோ விளக்கம் கொடுக்கலாமேன்னு வந்தா நீங்க அசத்திட்டீங்க அனுஜன்யா :)). கவிதை நல்லா இருக்குது. சாத்தியக்கூறுகள் அமைப்பு அழகு :)

சுருக்கமா சொல்லனும்னா சுஜாதாவோட ராஜகுமாரியோட பல்லக்குல ஏறுற காதலன் கதைய கூட சொல்லலாம். (பேர் மறந்துடுச்சுன்னா கோச்சுக்க மாட்டீங்களே :) ).

Blogger said...

தாங்கள் விளக்கம் கொடுத்த பின்பு தான் கவிதை புரிந்தது..
சூப்பர்..
:-)

வெண்பூ said...

நாலு வரி கவிதையில இவ்ளோ விஷயமா? இப்போ அந்த கவிதையை படிச்சா அது அழகா புரியுது. நன்றி அனுஜன்யா

வெண்பூ said...

//கவிதை புரியவில்லை என்பது பெரும்பாலும் வரும் குறை. //
என்னை மாதிரி மொக்கச்சாமிகளுக்கு அது பெரும்குறை...

வெண்பூ said...

//நாம் எல்லோரும் ஆசைப்பட்ட மாதிரியே அண்டை வீட்டில் ஒரு அழகான பெண்//
இது மேட்டரு..

வெண்பூ said...

//நம்மைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறாள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.//
அது எப்படி கண்டுக்குவா? அதுதான் அழகான பொண்ணுன்னு சொல்லிட்டீங்களே?

வெண்பூ said...

//அவள் அலை வரிசை வேறு.//
ஒரு 980 மெகாஹெர்ட்ஸ் இருக்குமா?

வெண்பூ said...

//மவனே, இதுக்காகவாவது ஒரு பத்து பின்னூட்டம் போடணும். //

இதோட ஆறு ஆச்சு. போதுமா இல்ல இன்னும் நாலும் முடிச்சிடவா?

வெண்பூ said...

நான் உங்க பேரை பாத்து நீங்க ஒரு லேடின்னு நெனச்சிட்டு இருந்தேன்..

வெண்பூ said...

அப்புறம் உங்க பின்னூட்டம்லாம் படிக்க படிக்கதான் கிளியர் ஆச்சி. நீங்களும் ஒரு தங்கமணிக்கு பயந்த சராசரி ரங்கமணின்னு...

வெண்பூ said...

இதை எதுக்கு இப்ப சொன்னேன்னு பாக்குறீங்களா?

வெண்பூ said...

கவுண்ட் 10 வரவேணாம் அதுக்குதான்.

சென்ஷி said...

//வெண்பூ said...
//நம்மைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறாள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.//
அது எப்படி கண்டுக்குவா? அதுதான் அழகான பொண்ணுன்னு சொல்லிட்டீங்களே?
//

முடியலைய்யா.. முடியல... :))

anujanya said...

@ சென்ஷீ

துபாய் டைம்ல ரிலீஸ் பண்ணினா உடனே வந்துடுவீங்களா? நன்றி. நல்ல கவிதையை (அது என் பாட்டு இல்ல) எழுதியவரை விட, நல்ல வாசகர் இன்னும் மேல் தளத்தில் புரிந்துகொள்வதாகப் பரவலாக ஒரு எண்ணம் உள்ளது. அந்த மாதிரி உங்களுக்கு ஏதாவது தோன்றினால், லக்கி சொல்ற மாதிரி 'சும்மா வெக்கப்படாதீங்க சார்', சொல்லுங்க.

@ the rebel

முதல் வருகை. சரியான பெயர் தான். கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருக்கிறேன். நன்றி உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும்.

@ வெண்பூ

அது. இத இத இதைத் தான் எதிர்பார்த்தேன். கோவி அண்ணன் இந்த ட்ரிக் பத்திகூட எழுதி இருக்கலாம். ஆனாலும் பத்து எதிர்பார்க்கல நண்பா. நன்றி*10.

அனுஜன்யா

anujanya said...

சென்ஷீ,

உங்க கும்மிய இங்க ஆரம்பிப்பதுபோல் வானம் மேகமூட்டமாக உள்ளது. மி த எஸ்கேப்.

அனுஜன்யா

Thamira said...

கவிதை பிரமாதம். வாழ்த்துகள் அனுஜன்.! (துணைக்கு விளக்கத்தையும் எடுத்துக்கொண்டேன்..)

நாணல் said...

:) நல்லா இருக்கே...
வாழ்த்துக்கள்....

Anonymous said...

அனு,

கவிதைங்கிறது அனுபவத்தின் ஒரு துண்டு அல்லது பிரதி. அதை வைத்துக் கொண்டு மீதத்தை கற்பனை செய்யத்தூண்டுவதே நல்ல கவிதை.

அந்த வகையில் இந்தக் கவிதை அபாரம்.

என் சின்ன வயசு ஞாபகங்களை தூசி தட்டி எழுப்பியது. வால்வு ரேடியோவில் பாட்டுக் கேட்டிருகிறீர்களா. ஆன் செயதால் ஒலி வரக் கொஞ்ச நேரம் ஆகும். அதற்குள் அண்டை வீட்டு ஒலியை உள்வாங்குவோம்.

MSK / Saravana said...

வாழ்த்துகள் அனுஜன்யா..

MSK / Saravana said...

கவிதையும் நல்லா இருக்கு..
:)

Lakshmi Sahambari said...

அழகான கவிதை .. வாழ்த்துக்கள் அனுஜன்யா :)

ராமலக்ஷ்மி said...

அருமை.

//அலைவரிசை மாற்றங்களின்
சாத்தியக்கூறுகளில்//

அழகாக முடித்திருக்கிறீர்கள்.

anujanya said...

@ தாமிரா

நன்றி தலைவா.

@ நாணல்

உண்மையாவா? நன்றி நாணல்.

@ வேலன்

கவிதை என்பது எது என்ற விளக்கம் அழகு. தொல்லைகாட்சி இல்லாத ரேடியோ மட்டும் இருந்த ஒரு கனாக்காலம் என்று ....என் தந்தை கூறுவார்.

@ சரவணன்

நன்றி வாழ்த்துக்கும் பாராட்டுக்கும்

@ லக்ஷ்மி

கவிதாயினி வாயால் பாராட்டு என்பது கூடுதல் மகிழ்ச்சி. நன்றி லக்ஷ்மி.

@ ராமலக்ஷ்மி

நீங்கள் நேற்றே ஆசி வழங்கியாயிற்று. நன்றி சகோதரி.

அனுஜன்யா

Bee'morgan said...

நல்ல வேளை.. எனக்கும் புரியலனு கேக்கலாம்னு நினைச்சேன்.. வேண்பூ நல்லவர்(!) முன்னாடியே கேட்டு விளக்கமும் கிடைச்சாச்சா.. நாம எஸ்கேப்.. :)
அண்ணா, இப்போலாம் தலைய சுத்தற மாதிரி எழுத ஆரம்பிச்சுட்டீங்க..

உயிர்மைக்காக ஸ்பெஷல் பாராட்டுகள்.. :)

anujanya said...

@ bee'morgan

வா, பாலா. வெண்பூ நல்லவர்னு சொல்லி ஒரு '!' போட்ட பாரு அங்க நிக்குற. தலைய சுத்துதா? அப்ப நிசமாலுமே நான் கவிஞன் ஆகிப்புட்டேனா? நன்றி பாலா.
வாய்பாடுக்குப்பின் ஏன் என்னும் எழுதவில்லை? உன்னிடம் நிறைய எதிர்பார்க்கிறேன்.

அனுஜன்யா

na.jothi said...

கவிதையை படித்தவுடன்
கடைசி 2 வரிக்கு முன் வரை உங்களுடைய முதல் விளக்கமாகவும்
கடைசி 3 வரி உங்களுடைய இரண்டாவது விளக்கத்திற்கு
பிள்ளையார் சுழி ன்னு நினைச்சுகிட்டேன்
அப்புறம் தான் உங்களுடைய விளக்கம் படித்தவுடன் முழு கவிதைக்கும்
தனி தனியா விளக்கம் கொடுத்ததை பார்த்தேன்

Unknown said...

அண்ணா கவிதை நல்லா இருக்கு..!! :)) விளக்கம் படிக்காமலே புரிஞ்சிகிட்டேன்..!! :)))))) (சாரி வெண்பூ அண்ணா..!! :( )

anujanya said...

@ smile

வாங்க ஸ்மைல். அப்போ நீங்கள்தான் இரண்டாம் ஆசாமி (சென்ஷீ முதல்), பொழிப்புரை இல்லாமலே என் கவிதையை புரிந்துகொண்டதில். மிக மகிழ்ச்சி. ஆமாம், இன்னும் களத்தில் குதிக்காமலே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால்... விட மாட்டோம். நன்றி உங்கள் வருகைக்கு.

அனுஜன்யா

anujanya said...

@ ஸ்ரீ

வாம்மா தங்கச்சி. 'துவையல்' ரொம்ப பிசியா? வர்றேன் அங்க. இந்த கும்மி அடிக்கிறீங்க!

//விளக்கம் படிக்காமலே புரிஞ்சிகிட்டேன்..!! :)))))) (சாரி வெண்பூ அண்ணா..!! :( )//

அட அட அது. வெண்பூ மட்டுமில்ல, உங்க அண்ணன், தலை மறைவான 'ஜி' க்கும் சேத்துதான் இந்த கமெண்ட். நன்றி ஸ்ரீ. 'ஜி' என்னும் பின் புலி பற்றி தகவல் அறிந்தால், போனசாக ஒரு பின்னூட்டம் தரப்படும்.

அனுஜன்யா

Unknown said...

ஆமா துவையல் எல்லாம் தீந்தப்பிறகு அங்க வந்து என்ன பண்ண போறீங்க?? ;)) இப்ப கவிதை தான் போட்ருக்கேன் வந்து பாருங்க..!! :))))))
புலி இன்னும் கொஞ்ச நேரத்துல கரைப் பக்கம் ஒதுங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது..!! ;))

VIKNESHWARAN ADAKKALAM said...

அனுஜன்யா ரொம்ப நல்லா எழுதுறிங்க...

anujanya said...

விக்கி,

ரொம்ப நாளுக்கப்புறம் வரீங்க. நன்றி நண்பா.

அனுஜன்யா

na.jothi said...

நன்றி அனுஜன்யா உங்களுடைய அன்பிற்கு
இப்பொழுது தான் எழுதுவதற்கு பயிற்சி எடுத்துகொண்டிருக்கிறேன்
பின்னூட்டங்கள் மூலம்

Anonymous said...

அண்ணா வாழ்த்துகள் கவிதை நல்லா இருக்கு..!!

anujanya said...

@ இனியவள் புனிதா

ஆஹா, தங்கை இந்தப் பக்கம் ரொம்ப நாளாக் காணோமே என்று பார்த்தேன். நன்றி புனிதா.

அனுஜன்யா

வால்பையன் said...

//அனுஜன்யா, கவிதை எனக்கு புரியல.. (பெரிய கவிஞர்தான் நீங்க)..//

இதை நான் வழி மொழிகிறேன்

anujanya said...

@ வால்பையன்

என்னடா தல இன்னும் வரலியே என்று பார்த்தேன். அவ்வளவு பெரிய அனுமார் வால் மாதிரி விளக்கம் குடுத்தும் புரியலையா? ஒரு தீர்மானமாதான் கிளம்பிட்டீங்கையா கிளம்பிட்டீங்கையா !

நல்லா இருங்க சாமி.

அனுஜன்யா

வால்பையன் said...

//அவ்வளவு பெரிய அனுமார் வால் மாதிரி விளக்கம் குடுத்தும் புரியலையா?//

விளக்கம் கொடுக்க தேவையில்லாதது கவுஜ
விளக்கம் தேவைப்படுவதால் உங்களது கவிதை
மெய்யாலுமே நீங்க பெரிய கவிஞர் ஆகிட்டிங்க தலைவா

anujanya said...

@ வால்பையன்

ஒரு வழியா குரு வாயாலே ஆசி வாங்கியாச்சு. நன்றி

அனுஜன்யா

வால்பையன் said...

//ஒரு வழியா குரு வாயாலே ஆசி வாங்கியாச்சு.//

செல்லம் என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலையே

ஜியா said...

நான் புரிஞ்சிக்கிட்டது...

பக்கத்து வீட்டிலிருந்து வரும் வறுமையையோ, மகிழ்ச்சியையோ ஒத்த சத்தம் நமக்கு பிடிக்கவில்லையெனினும், அக்கதைத்தலின் மேல் ஒரு ஈடுபாடு ஏற்ப்பட்டு அடுத்த முறையும் அதனை கேட்க செவிக்கொடுக்க முனைவது.... :))

உங்க விளக்கம் அல்லது எண்ணம் அருமையா இருக்குது :))

ஜியா said...

/ உங்க அண்ணன், தலை மறைவான 'ஜி' க்கும் சேத்துதான் இந்த கமெண்ட். நன்றி ஸ்ரீ. 'ஜி' என்னும் பின் புலி பற்றி தகவல் அறிந்தால், போனசாக ஒரு பின்னூட்டம் தரப்படும்.//

தலைமறைவா?? புலியா?? ஒய் திஸ் மர்டர் வெறி?? :)))

anujanya said...

ஜி,

//நான் புரிஞ்சிக்கிட்டது...

பக்கத்து வீட்டிலிருந்து வரும் வறுமையையோ, மகிழ்ச்சியையோ ஒத்த சத்தம் நமக்கு பிடிக்கவில்லையெனினும், அக்கதைத்தலின் மேல் ஒரு ஈடுபாடு ஏற்ப்பட்டு அடுத்த முறையும் அதனை கேட்க செவிக்கொடுக்க முனைவது....//

இது இது. இதுக்குதான் சொன்னேன் பி.ந.புலி (பின் புலி) என்று. உண்மையிலேயே இன்னும் மேலான புரிதல். ஆசிரியன் இறந்துவிட்டான். பிரதி மட்டும் இருக்கிறது (ஜியிடம்)

தலைமறைவு தான். கொஞ்ச நாளா பதிவுகள் இல்லை. access இல்லை. பின்னூட்டங்களும் இல்லை என்றால் பயப்பட மாட்டோமா? By any chance, you are not working for Leyhmans/Goldman Sac/Bear Sterns/Merryl I suppose! Juz kidding. அவர்கள்தான் தலைமறைவுப் பட்டியலில் டாப் இப்போது.

அனுஜன்யா

anujanya said...

@ வால்பையன்

உங்களிடமா! உங்களிடமே வாலாட்ட முடியுமா? ஆனால் உண்மையாகவே சொல்கிறேன் நான் மதிக்கும் பதிவர்தான் நீங்கள்.

அனுஜன்யா

ச.முத்துவேல் said...

உயிரோசையில் 2 கவிதைகள் இடம்பெற்றது பெருமகிழ்ச்சியளிக்கிறது.வாழ்த்துகள்.நானொரு இசைப்பிரியன்.கவிதை நல்ல நுட்பமான பதிவு.இன்னொரு கவிதை எங்கே.

anujanya said...

@ முத்துவேல்,

நன்றி உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும். இரண்டாவது போட வேண்டும்.

அனுஜன்யா

சந்தனமுல்லை said...

நல்ல கவிதையை வாசித்த திருப்தி!!

//அலைவரிசை மாற்றங்களின்
சாத்தியக்கூறுகளில்//

:-)

வாழ்த்துக்கள்!!

anujanya said...

நன்றி சகோதரி.

அனுஜன்யா

புதுகை.அப்துல்லா said...

வெண்பூ said...
//கவிதை புரியவில்லை என்பது பெரும்பாலும் வரும் குறை. //
என்னை மாதிரி மொக்கச்சாமிகளுக்கு அது பெரும்குறை...

//

வெண்பு என்ன மாதிரின்னு சொல்லாதீங்க, எங்கள மாதிரின்னு சொல்லுங்க :)

anujanya said...

அப்துல்லா,

இனிய நண்பா! ஒரு வழியாக வந்தாயா! முதலில் கையைக் கொடு. எப்பேர்பட்ட காரியம், ஓசையின்றி செய்கிறாய்! இந்த மாதிரி கவிதை எழுதுவதைவிட பன்மடங்கு மேலான காரியம் செய்கிறாய். Really proud of you.

நீயும் கவிஞன் தான். இல்லையேல் நானும் மொக்கசாமிகளில் ஒருவன்தான்.

இந்த கவித எப்பிடியோ, என் அடுத்த கவித உனக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

அனுஜன்யா

உயிரோடை said...

க‌விதை அருமை. இதோ என் புரித‌ல்.

ஒன்று
------

திருமண‌மான‌ பெண் ஒருத்தியின் நிராக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ காத‌ல் நினைவில் ஆடினாலும், த‌ன் நிலை உண‌ர்ந்து க‌ண‌வ‌னோடு காத‌ல் உண‌ர்வை எப்ப‌டி ஏற்ப‌டுத்திக் கொள்ள‌லாம் என்ற‌ எதார்த்த‌மான‌ சிந்த‌னை.

இர‌ண்டு
-------

காத‌ல் போனால் சாத‌லா இன்னொரு காத‌ல் இல்லையா? சுடிதார் போனால் தாவ‌ணி உள்ள‌த‌டா என்ற‌ தத்துவ‌தை உண‌ர்த‌ல். அலைவ‌ரிசை மாறினால் சுடிதார் நினைவோடு தாவ‌ணியை சுகி.


மூன்று
-------

எவ்வ‌ள‌வோ விருப்ப‌ப் ப‌ட்டாலும் சில‌ நிக‌ழ்வுக‌ளை த‌விர்க்க‌ இய‌லாது. அலுவ‌ல‌க்க‌த்தின் பிடிக்காத‌ ஒருவ‌ருவ‌ராய் இருந்தாலும் வ‌லுக‌ட்டாய‌மாக‌ புன்ன‌கைக்க‌ வேண்டும், அண்டை வீட்டு பாட்டு பிடிவாத‌மாக‌ காதுக‌ளில் விழுவ‌தை த‌விர்க்க‌ இய‌லுமா? அதனால் இலயிக்கத்து புன்ன‌கையுங்க‌ள்

ஏன் இந்த‌ கொலைவெறின்னு கேட்க‌றீங்க‌ளா இன்னும் சிந்த‌னை கொட்டுதுங்க‌ உங்க‌ க‌விதையை ப‌டிக்கையில்.....

ஒரு க‌விதை ப‌ண்முக‌ விள‌க்க‌த்துக்கு
http:\\minnalpakkam.blogspot.com

anujanya said...

@ மின்னல்

நன்றி உங்கள் முதல் வருகைக்கு. கவிதை ரசிகரா நீங்கள். பல்வேறு கோணங்களில் சிந்திக்கிறீர்கள்!

அனுஜன்யா