Monday, November 10, 2008

குறக்கடவுள்


ருசிக்குச் சாப்பிடாது
பசிக்கு மட்டும் உண்ணும்
நரிக்குறவனை உன்
ஞான குருவாக்கிக்கொள்
சாதியம் களையும்
சாத்தியங்கள் அறிந்தவன்
அய்யர் வீட்டு அவியல்
அய்யங்காரின் தயிர்வடை
செட்டி நாட்டு அப்பம்
முதலியாரின் முறுகல் தோசை
பிள்ளைமார் வீட்டு பணியாரம்
ஏதுமில்லை என்றால்
காடை கவுதாரி
எல்லாமே ஒன்றுதான்
உண்ட மிச்சங்கள்
என்று நீ எண்ணுவது
சாதியத்தின் எச்சங்கள்.
அதனைக் கலந்து ஜீரணிக்கும்
அனைத்தையும் கடந்த
அவனன்றோ கடவுள்
(கீற்று.காமில் பிரசுரமானது)

31 comments:

ராமலக்ஷ்மி said...

//சாதியம் களையும்
சாத்தியங்கள்// அறிந்த குறவன் ஞானகுரு மட்டுமின்றி கடவுளும் கூட என்பதை அருமையாக உணர்த்துகிறது கவிதை. பாராட்டுக்கள் அனுஜன்யா.

நாணல் said...

நிஜம் தான்..
கவிதை அருமை..

நாணல் said...

//சாதியம் களையும்
சாத்தியங்கள் அறிந்தவன்//

சரி தான்...
நாம் மக்களுக்கும் இந்த மனப் பக்குவம் என்று வருமோ... ? :(

நாணல் said...

சொல்ல மறந்துட்டேன், வாழ்த்துக்கள்.. :)

ஆயில்யன் said...

//உண்ட மிச்சங்கள்
என்று நீ எண்ணுவது
சாதியத்தின் எச்சங்கள்.
அதனைக் கலந்து ஜீரணிக்கும்
அனைத்தையும் கடந்த
அவனன்றோ கடவுள்/

அழகாய் சொல்லியிருக்கீங்க!

உண்மையாய்....!

Anonymous said...

//உண்ட மிச்சங்கள்
என்று நீ எண்ணுவது
சாதியத்தின் எச்சங்கள்.//

சரியான வார்த்தைகள். நல்ல கவிதை.

Unknown said...

வாவ் சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணா.. :))))

Unknown said...

எனக்கும் கூட இப்ப அவசரமா ஜாதி மதம் எல்லாம் ஒழியனும்னு ஆசையா இருக்கு.. என்ன பண்ணலாம் அதுக்கு?? என்ன பண்ணா ஒழியும்?? :))

கார்க்கிபவா said...

அருமை..

narsim said...

//ருசிக்குச் சாப்பிடாது
பசிக்கு மட்டும் உண்ணும்//

ந‌ச்!!

முரளிகண்ணன் said...

மிக அருமை, உணர்ந்து ரசித்தேன்

Bee'morgan said...

//
உண்ட மிச்சங்கள்
என்று நீ எண்ணுவது
சாதியத்தின் எச்சங்கள்.
அதனைக் கலந்து ஜீரணிக்கும்
அனைத்தையும் கடந்த
அவனன்றோ கடவுள்
//
அருமை அண்ணா..

கீற்று.காமிற்கு வாழ்த்துகள்.. :)

VIKNESHWARAN ADAKKALAM said...

இரசித்தேன்...

anujanya said...

@ ராமலக்ஷ்மி

நன்றி. இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டீர்கள்!

@ நாணல்

நன்றி.

@ ஆயில்யன்

ரொம்ப நாள் கழித்து ஆயில்ஸ் வருகை. நன்றி.

@ வேலன்

நன்றி வேலன்.

@ ஸ்ரீமதி

நன்றி ஸ்ரீ. தெரியவில்லை ஸ்ரீ. அதுதான் வருத்தமான நிஜம்.

@ கார்க்கி

நன்றி சகா.

@ நர்சிம்

நன்றி நர்சிம். மறுபடியும் ரொம்ப அர்ரியர்ஸ் வெச்சுட்டேன். வருகிறேன்.

@ முரளிகண்ணன்

வாவ்! உங்கள் முதல் வருகை. நன்றி முரளி.

@ bee'morgan

வா, பாலா. ரொம்ப நாட்கள் ஆயிற்று. நன்றி.

@ vikneshwaran

விக்கி, வாப்பா நீ வந்தும் ரொம்ப நாளாச்சு. என்னது, நானுமா? வருகிறேன். நன்றி.

அனுஜன்யா

ச.முத்துவேல் said...

நரிக்குறவர்களைப் பற்றிய பார்வை, கவிதை எழுதுவது என்ற எண்ணமே பாராட்டுக்குரியது.அதிலும் உயர்த்திப் பிடித்து எழுதியிருப்பது நன்று.
கீற்று.காமில் மிண்டும் உங்கள் கவிதை.வாழ்த்துகள்.

புதுகை.அப்துல்லா said...

கவிதை மட்டும் அல்ல ஒவ்வொரு முறை நீங்க தேர்ந்தெடுக்கும் கருவும் அசத்துகிறது :)

anujanya said...

@ முத்துவேல்

நன்றி முத்துவேல்

@ அப்துல்லா

நன்றி தோழா

அனுஜன்யா

வெண்பூ said...

அருமை அனுஜன்யா.. அற்புதமான கவிதை..

வால்பையன் said...

அருமையான கவிதை
அதுவே சமுதாயத்திற்க்கு செருப்படியாக இருப்பது மறுக்க முடியாத உண்மை

Anonymous said...

அற்புதமான கவிதை..

ஜியா said...

//உண்ட மிச்சங்கள்
என்று நீ எண்ணுவது
சாதியத்தின் எச்சங்கள்//

rasiththen

ஜியா said...

சாதியம் பற்றைய அருமையான படைப்பு...

anujanya said...

@ வெண்பூ/வால்பையன்/ஆனந்த்/ஜி

அனைவருக்கும் நன்றி. உங்கள் பார்வைகளுடன் ஒத்துப்போவதில் எனக்கும் மகிழ்ச்சி.

அனுஜன்யா

MSK / Saravana said...

வாழ்த்துக்கள்.. :)

MSK / Saravana said...

//சாதியம் களையும்
சாத்தியங்கள் அறிந்தவன்//

கடவுள் கவிதை நல்லா இருக்குங்க்னா..

MSK / Saravana said...

//ஸ்ரீமதி said...

எனக்கும் கூட இப்ப அவசரமா ஜாதி மதம் எல்லாம் ஒழியனும்னு ஆசையா இருக்கு.. என்ன பண்ணலாம் அதுக்கு?? என்ன பண்ணா ஒழியும்?? :))//

ஒழியனும்னு ஆசைப்படுவது ரொம்ப நல்ல ஒன்று.. ஆனா
அவசரமா ஒழியனுமா.. சரி இல்லையே..

அனுஜன்யா அண்ணா.. உங்களுக்கு ஏதாவது புரியுது??

Unknown said...

// Saravana Kumar MSK said...
//ஸ்ரீமதி said...

எனக்கும் கூட இப்ப அவசரமா ஜாதி மதம் எல்லாம் ஒழியனும்னு ஆசையா இருக்கு.. என்ன பண்ணலாம் அதுக்கு?? என்ன பண்ணா ஒழியும்?? :))//

ஒழியனும்னு ஆசைப்படுவது ரொம்ப நல்ல ஒன்று.. ஆனா
அவசரமா ஒழியனுமா.. சரி இல்லையே..

அனுஜன்யா அண்ணா.. உங்களுக்கு ஏதாவது புரியுது??//

சரவணா அது ஒரு flow-ல எழுதினது அதெல்லாம் எடுத்து இப்படி ச்சின்னப்புள்ளத்தனமா கேள்வி கேட்கக்கூடாது ஓகே?? ;)))))

anujanya said...

@ சரா, ஸ்ரீ

நன்றி சரா. மற்றபடி நீ ஸ்ரீயைக் கலாய்ப்பதும், உனக்கு பதிலடி கிடைப்பதும் சுவாரஸ்யம்.

அனுஜன்யா

MSK / Saravana said...

//சரவணா அது ஒரு flow-ல எழுதினது அதெல்லாம் எடுத்து இப்படி ச்சின்னப்புள்ளத்தனமா கேள்வி கேட்கக்கூடாது ஓகே?? ;)))))//

நம்பி விடுகிறேன்.. ;)

Anonymous said...

//அதனைக் கலந்து ஜீரணிக்கும்
அனைத்தையும் கடந்த//

நிச்சயமா!

கவிதை நல்லா இருக்குங்க அனுஜன்யா.

Gandhi

anujanya said...

@ tkbg

நன்றி காந்தி.

அனுஜன்யா