Friday, December 26, 2008

ரகசியங்கள்


ரகசியங்கள் கட்டவிழ்க்கும்
தருணங்கள் வந்துவிட்டதென்றாள்
விகாரமாயிருப்பினும்
பின்னாட்களின் நிம்மதி நிமித்தம்
அவள் இறக்கிவிட்ட பாரங்கள்
பெரும் பொருட்டல்லவெனினும்
தைரியத்தின் உச்சகட்டமாக
அவள் பார்த்தவைகள் என்னளவில்
சுயநலங்களும் சாகசங்களில்
விருப்பமின்மையும் மட்டுமே;
எனது 'அதீத' நடவடிக்கைகள்
பகிரப்படாது, என்மேல் மட்டும்
தொங்கிக்கொண்டிருக்கும்
கொலைவாளென சுழல்வதை
என்னுடைய தொடர் சாகசமாகவும்
அவள் மேலுள்ள அக்கறையாகவும்
நீங்கள் கொள்ளலாம்,
அவளுக்கு அது
சூன்ய உணர்வைத் தந்தாலும்


(உயிரோசை 17.11.08 மின்னிதழில் பிரசுரமானது)

37 comments:

நட்புடன் ஜமால் said...

\\"ரகசியங்கள்"\\

பதிவிட்டேவா ...

நட்புடன் ஜமால் said...

புகைப்படம் மிக அருமை.

நட்புடன் ஜமால் said...

வார்த்தைகள் - பலம்.

புதியவன் said...

உள்மன உணர்வுகள்
வார்த்தைகளில் தெரிகிறது...

narsim said...

//எனது 'அதீத' நடவடிக்கைகள்
பகிரப்படாது, என்மேல் மட்டும்
தொங்கிக்கொண்டிருக்கும்//

அனு"ஜம்"யா!!!

சந்தனமுல்லை said...

//என்மேல் மட்டும்
தொங்கிக்கொண்டிருக்கும்
கொலைவாளென சுழல்வதை
என்னுடைய தொடர் சாகசமாகவும்//

ரசித்தேன் இவ்வரிகளை!

Anonymous said...

அனுஜன்யா,

நல்ல கவிதை.

ஒளி பாய்ச்சப்படாத இருள் பிரதேசங்கள் எல்லோரிடமும் உண்டெனினும், எவ்வாறதை மறைக்கிறோமென்பதில்தான் அவரவர் சாகசம் ஒளிந்திருக்கிறது.

நர்சிம்மின் பின்னூட்டதையும் ரசித்தேன்.

வால்பையன் said...

//எனது 'அதீத' நடவடிக்கைகள்
பகிரப்படாது, //

நீங்க தான் “அந்த” அதீதனா?

- இரவீ - said...

ரகசியத்த சொல்ல மாட்டேனு சொல்லுறதுக்கு - ஒரு ரகசிய பதிவு..
//என்மேல் மட்டும்
தொங்கிக்கொண்டிருக்கும்
கொலைவாளென //
அவ்ளோ பயங்கரமான ரகசியமா?

வாசகன் said...

ரகசியங்கள் கட்டவிழ்க்கும்
தருணங்கள் வந்துவிட்டதென்றாள்.
விகாரமாயிருப்பினும் பின்னாட்களின் நிம்மதி நிமித்தம் அவள் இறக்கிவிட்ட பாரங்கள் பெரும் பொருட்டல்லவெனினும்,தைரியத்தின் உச்சகட்டமாக
அவள் பார்த்தவைகள் என்னளவில்
சுயநலங்களும்,சாகசங்களில் விருப்பமின்மையும் மட்டுமே;
எனது 'அதீத' நடவடிக்கைகள்
பகிரப்படாது, என்மேல் மட்டும்
தொங்கிக்கொண்டிருக்கும் கொலைவாளென சுழல்வதை,என்னுடைய தொடர் சாகசமாகவும் அவள் மேலுள்ள அக்கறையாகவும்
நீங்கள் கொள்ளலாம்,அவளுக்கு அது
சூன்ய உணர்வைத் தந்தாலும் !

***************
மேலேயுள்ள பத்தியைப் படித்த பிறகு ஏதாவது தோன்றுகிறதா????

Anonymous said...

அன்புள்ள வாசகன்,

புரியலயா? புரிந்து கொள்ள மறுக்கிறீர்களான்னுதான் தெரியல?

ஒன்னும் இல்லாமலா இவ்வளவு பேரு அதப் பாராட்டி இருப்பாங்க. இவ்வளவு பேரு பாராட்டுனதுனால நல்ல கவிதைன்னு இல்ல. ஆனா இவ்வளவு பேருக்குப் புரிஞ்சது உங்களுக்குப் புரியலன்னா.. சாரி. இதுக்கெல்லாம் பழனியப்பா பிரத்ர்ஸ் கிட்டச் சொல்லி கோணார் நோட்ஸ் போட முடியாது.

இதும் புரியல, நர்சிம் எளிமையான வார்த்தைகளில் எழுதினதும் கவிதை இல்லைங்கிறீங்க. அப்ப எதுதான் கவிதை? சுட்டிக் காட்டுங்க.

anujanya said...

@ அதிரை ஜமால்

நன்றி ஜமால்.

@ புதியவன்

இப்படி பழி சுமர்த்துகிறீர்கள் ! நன்றி.

@ நரசிம்

நன்றி தல.

@ சந்தனமுல்லை

நன்றி சகோதரி.

@ வேலன்

நன்றி வேலன் நல்ல புரிதலுக்கும். பயணம் எப்படி இருந்தது?

@ வால்பையன்

நீங்கதான் அதக் கண்டுபுடிச்சீங்க! ஜ்யோவின் நண்பன் என்று எல்லோருக்கும் தெரிந்ததுதானே :)

@ ரவீ

வெளியில் சொல்லப்பட்டுவிட்ட, விட்ட ரகசியங்கள். நன்றி ரவீ.

@ வாசகன்

உங்கள் நக்கல் புரிகிறது. அவரவர் ஆற்றல் போல் எழுத்து. அவரவர் புரிதல் போல் கவிதை, பத்தி. :)

அனுஜன்யா

Unknown said...

நன்று அண்ணா :))

வாசகன் said...

அனுஜன்யா,
விமர்சித்ததால் உடனே கோபப்பட்டு பொங்காமல் இயல்பாக எடுத்துக் கொண்டதற்கு நன்றி.
அனுஜன்யா என்ற பெயர் அழகாக இருக்கிறது.

நண்பர் வேலன்,

>>புரியலயா? புரிந்து கொள்ள மறுக்கிறீர்களான்னுதான் தெரியல?>>

நண்பரே,இதே கேள்வி என்னிடமிருந்தும் வரலாம் இல்லையா?
:) காட்டாக,நல்ல கவிதை எது என உங்களுக்குப் புரியவில்லையா என நான் கேட்கலாம் இல்லையா? நான் கேட்கவில்லை,ஆனால் அதற்கான சாத்தியங்கள் இருப்பதை சுட்ட விரும்புகிறேன்...

>>ஒன்னும் இல்லாமலா இவ்வளவு பேரு அதப் பாராட்டி இருப்பாங்க.>>

>> இவ்வளவு பேரு பாராட்டுனதுனால நல்ல கவிதைன்னு இல்ல. >>

கேள்வியும் நீங்களே,பதிலும் நீங்களே...

>>ஆனா இவ்வளவு பேருக்குப் புரிஞ்சது உங்களுக்குப் புரியலன்னா.. சாரி. இதுக்கெல்லாம் பழனியப்பா பிரத்ர்ஸ் கிட்டச் சொல்லி கோணார் நோட்ஸ் போட முடியாது.>>

கோனார் நோட்ஸ் எல்லாம் வேண்டாம்,சுஜாதா ஒருமுறை எழுதினார்,புதுக்கவிதை எழுத பத்துக் கட்டளைகள்' அப்படின்னு ஒரு கட்டுரை.என் நினைவு சரியெனில் அது இந்தியா டுடே தமிழ் இதழில் வந்தது..சிரமம் பார்க்காமல் தேடிப் படிக்கவும்...



>>இதும் புரியல, நர்சிம் எளிமையான வார்த்தைகளில் எழுதினதும் கவிதை இல்லைங்கிறீங்க. அப்ப எதுதான் கவிதை? சுட்டிக் காட்டுங்க.>>

நர்சிம் எழுதியது பற்றியும் சுட்டியதால் சொல்ல வேண்டியதாயிற்று..அவருடைய பதிவிலேயே சுட்டியிருக்கிறேன்.
நல்ல புதுக்கவிதைகளில் எனக்கும் மாறாத ஆர்வம் உண்டு..நல்ல கவிதை என்பது ஒரு சொந்த உன்னதம்,ஒரு அனுபவம்.

சுருக்கமான ஒரு விதி:மடித்துப் போட்ட வரிகளை சேர்த்து எழுதிப் படித்தால்:
-அது ஒரு உரைநடைப் பத்தியாக மாறக் கூடாது.
-கவிதையைப் படித்த உடன் அது உங்கள் மனதைப் பாதிக்க வேண்டும்,ஏதாவது ஒரு உணர்வு-நெகிழ்வு,கோபம்,ஆத்திரம்,பயம் ஏதாவது ஒன்று வர வேண்டும்!
-வார்த்தைகளில் ஒரு லயம் இருக்கவேண்டும்-புதுக்கவிதைகளுக்கு இந்த விதியில் விலக்கு அனுமதிக்கப் படலாம்...

மீதி 7 விதிகளுக்கு சுஜாதாவைத் தேடுங்கள் !

இப்பின்னூட்டம் வெளிவருமா என அறியேன்,இருப்பினும் சொல்ல நினைத்ததை சொல்லி விட்டேன்,புண்படுத்துதல் நோக்கமல்ல என்பதே அறிவீ(வா)ர்கள் என்றே நினைக்கிறேன்...

கிருத்திகா ஸ்ரீதர் said...

"அவள் மேலுள்ள அக்கறையாகவும்
நீங்கள் கொள்ளலாம்,
அவளுக்கு அது
சூன்ய உணர்வைத் தந்தாலும்"

The last line says more than all other lines... (out of home, unable to type in tamil will soon set up)

Anonymous said...

வாசகன்,

அனுஜன்யா பின்னூட்ட மட்டுறுத்தல் செய்வதால் உங்களுக்கான பதிலை நர்சிம் பதிவில் தந்துள்ளேன். அங்கு தொடருவோம் விவாதத்தை.

ஒவ்வொரு கருத்துக்கும் ஒரு ஒத்த கருத்தும் எதிர்க் கருத்தும் உள்ளதென்பதில் எனக்கும் அனுஜன்யாவுக்கும் உடன்பாடுள்ளதெனினும் அவரது அலுவல் நிமித்தம் அவர் மட்டுறுத்தல் செய்வது தவிர்க்கவியலாதது.

என் தரப்பு ந்ல்லதையும் உங்கள் தரப்பு நல்லதையும் எடுத்து புது கருத்து படைப்போம்.

கார்க்கிபவா said...

தல, அருமைன்னு சொல்றதுல என்ன இருக்கு? ஆனா வேற மாதிரி சொல்லத் தெரியல. அருமை

உயிரோடை said...

//விகாரமாயிருப்பினும்
பின்னாட்களின் நிம்மதி நிமித்தம்
அவள் இறக்கிவிட்ட பாரங்கள்//

யாருக்கு நிம்ம‌தி அவ‌ளுக்கா உங்க‌ளுக்கா இல்லை இருவ‌ருக்குமா? :)

//சுயநலங்களும் சாகசங்களில்
விருப்பமின்மையும் மட்டுமே;//

பெரும்பாலான‌ இட‌ங்க‌ளில் இப்ப‌டி தான் ஆகின்ற‌து.


//சாகசமாகவும்//

சாக‌ச‌மாக‌ அவ‌ளும் நினைக்கின்றாள் நீங்க‌ளும் எங்க‌ளை நினைக்க‌ சொல்கின்றீர்க‌ள் என்ன‌ சாக‌ச‌ம். இந்த‌ சாக‌ச‌ம் என்ற‌ வார்த்தை க‌விதையை விட்டு வில‌கி நிற்ப‌தாக‌ப‌டுகின்ற‌து அனுஜ‌ன்யா.

//அவளுக்கு அது
சூன்ய உணர்வைத் தந்தாலும்//

அது உங்க‌ள் தோல்வியை தானா காட்டுகின்ற‌து. யார் எப்ப‌டி கொண்டாலும் ஏன் நீங்க‌ளே அந்த‌ சாக‌ங்க‌ளை ப‌ற்றி என்ன‌ நினைத்தாலும். ம்ம்ம்ம் பாவ‌ம‌வ‌ள்

உயிரோடை said...

வாச‌க‌ன் சார்,

நீங்க‌ நினைக்கிற‌து போல‌ இருக்க‌ற‌து ம‌ட்டும் தான் க‌விதை என்று நினைக்க‌ கூடாது. இருப்ப‌தில் ந‌ல்ல‌தை ச‌த்த‌மாக‌ சொல்லுங்க‌ள். குறையை இனிப்பு க‌ல‌ந்து இனிமையாக‌ சொல்லுங்க‌ள். இப்ப‌டி முக‌த்தில் அடித்த‌ மாதிரி சொல்வ‌து அறிஞர்க்கு அழ‌க‌ல்ல‌. அனுஜ‌ன்யா எழுதியுள்ள‌து என‌க்கு க‌விதையாக‌ப‌டுகின்ற‌து. அழ‌கென்ப‌து பார்ப‌வ‌ன் க‌ண்ணில் ம‌ட்டுமே ஆகும்.

ந‌ன்றி,
மின்ன‌ல்

MSK / Saravana said...

//எனது 'அதீத' நடவடிக்கைகள்
பகிரப்படாது, என்மேல் மட்டும்
தொங்கிக்கொண்டிருக்கும்
கொலைவாளென சுழல்வதை
என்னுடைய தொடர் சாகசமாகவும்
அவள் மேலுள்ள அக்கறையாகவும்//

கில்லாடி நீங்க.. ;)

MSK / Saravana said...

இதுக்கு தான் நான் ரகசியங்களே வச்சிகறதில்லை.. ;) [நம்புங்கப்பா..]

anujanya said...

@ ஸ்ரீ

நன்றி

@ கிருத்திகா

நன்றி, உங்கள் புரிதலுக்கு.

@ கார்க்கி

நன்றி சகா.

@ மின்னல்

இப்படி பிரித்து மேய்ந்தால்... தெரியாம எழுதிட்டேன் டீச்சர் :)))

@ வேலன் & மின்னல்

என் கவிதை (!) சார்பில் வாசகனிடம் பேசுவதற்கு நன்றி.

@ சரவணன்

சரா, நான் கில்லாடி என்று மிகப் பெரிய கில்லாடி கொடுக்கும் பட்டம். :));
ஒரு உன்னோட ரகசியங்கள் முழுதும் அம்பலம் ஆகும் கண்ணு. அப்ப வெச்சுக்கறேன். :) நன்றி சரா. நீ நல்ல பையன் என்று எனக்குத் தெரியும்.

அனுஜன்யா

மேவி... said...

"எனது 'அதீத' நடவடிக்கைகள்
பகிரப்படாது, என்மேல் மட்டும்
தொங்கிக்கொண்டிருக்கும்
கொலைவாளென சுழல்வதை
என்னுடைய தொடர் சாகசமாகவும்
அவள் மேலுள்ள அக்கறையாகவும்"

hmmm. i think ths adds value to ur blog. words are being effectively used.

மேவி... said...

open statement:-

language is not one's property. its open to all. all kinds of innovations are welcomed here.

some author once told tht poem is one whh express his feelings in word form ; which enables another person who has another set of thinking process to understand it.

also the owner of ths blog did not tell tht his poem is being written acc to rules.

also one individual cant decide how th innovation in a poem to be.

am not well versed in tamil. but th rules can be applied to any language.

Katz said...

கவிதை அருமை

என்னால இந்த மாதிரி எழுத முடியுமாங்கிற அளவுக்கு
யோசிக்க வைக்குது

வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

கொலைவாளென தலை மேலே சுழலுகின்ற ரகசியங்களை ரகசியமாய் வைக்க முடியாமல் திணறி வெளிவந்திருக்கும் இந்த “ரகசியங்கள்” ரசிக்க வைத்தது.

anujanya said...

@ MayVee

நன்றி. Though it initially looked sarcastic, the subsequent discussions were useful and the criticism, I feel, is constructive. Nice to know that I do enjoy support from you folks. Thanks.

@ கதிர்

நன்றி கதிர். இப்பதான் நல்லா அடி வாங்கியிருக்கேன். ஆனா நீங்கள் ரொம்ப நல்லவரு :)

@ ராமலக்ஷ்மி

நன்றி சகோதரி. பிறந்த நாள் வாழ்த்துக்களும்.

அனுஜன்யா

மாதவராஜ் said...

அனுஜன்யா!

தேர்ந்த வார்த்தைகளோடு தொடுக்கப்பட்ட வரிகள்.
பகிராததில் மட்டுமல்ல,
பகிர்வதிலும், பகிர்ந்ததிலும் ரகசியங்கள் இருக்கவே செய்கின்றன.

anujanya said...

@ மாதவராஜ்

நன்றி மாதவ் உங்கள் வருகைக்கும், புரிதலுக்கும்.

அனுஜன்யா

மே. இசக்கிமுத்து said...

திரும்ப திரும்ப படித்தேன்..கஷ்டமா இருக்குது புரிவதற்கு!! திரும்பவும் படிக்கிறேன்....

na.jothi said...

இந்த மாதிரி சொல்றதுக்கு தான்
சிதம்பர ரகசியம்ன்னு சொல்வாங்களா :))
நல்லா இருக்கு

புத்தாண்டு வாழ்த்துக்கள்
உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்

anujanya said...

@ இசக்கிமுத்து

அவ்வளவு கஷ்டப்படாதீர்கள். இது கவிதையா என்றே ஒருவர் கேட்பதால், ரொம்ப சீரியசாக எடுத்துக்கொள்ளாதீர்கள். எல்லாக் கவிதைகளும் எல்லோருக்கும் புரியவேண்டும் என்று அவசியமில்லை என்பது சான்றோர் வாக்கு :). அதற்காக இனிமேல் வராமல் இருக்காதீர்கள். நன்றி உங்கள் வருகைக்கு.

@ smile

நன்றி. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

MSK / Saravana said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

இராம்/Raam said...

அசத்தல்... :)

anujanya said...

@ சரவணன்

நன்றி சரா. உனக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

@ இராம்

உங்கள் முதல் வருகை இராம். நன்றி. மீண்டும் வாங்களேன்.

அனுஜன்யா

மாதங்கி said...

வாழ்த்துகள். கவிதைக்குப்
பொருத்தமாக அழகான புகைப்
படங்களை எடுத்து வெளியிட்டுள்ளீர்கள்

anujanya said...

@ மாதங்கி

வெகு நாட்களுக்குப்பின் உங்கள் வருகை மற்றும் பின்னூட்டம். நன்றி மாதங்கி.

அனுஜன்யா