Friday, January 9, 2009

பூவாகி, காயாகி


பூக்கவேயில்லை என்றும்
காய்க்க வாய்ப்புமில்லை என்றும்
பெருமர நிழலில்
காற்று வாங்கியபடி பேசிக்கொண்டனர்;
இரவு கவிந்ததும்
வலுவிழந்த இழைகளால் வீழ்ந்து
கிளைகளில் முளைத்திருந்த
சாயம் போயிருந்த பட்டங்களைப்
பார்த்து முறுவலித்தது
மின்சாரப் பூக்களை சொரியத்
துவங்கியிருந்த மரம்.

38 comments:

மேவி... said...

its nice. but will comment after reading it once more

மேவி... said...

"பூக்கவேயில்லை என்றும்
காய்க்க வாய்ப்புமில்லை என்றும்
பெருமர நிழலில்
காற்று வாங்கியபடி பேசிக்கொண்டனர்;
இரவு கவிந்ததும்
வலுவிழந்த இழைகளால் வீழ்ந்து
கிளைகளில் முளைத்திருந்த
சாயம் போயிருந்த பட்டங்களைப்
பார்த்து முறுவலித்தது
மின்சாரப் பூக்களை சொரியத்
துவங்கியிருந்த மரம். "
ama... good post

புதியவன் said...

கவிதை அருமை...
அதுவும் கடைசி வரிகள் மிக அருமை...

நட்புடன் ஜமால் said...

\\மின்சாரப் பூக்களை சொரியத்
துவங்கியிருந்த மரம்.\\


மிக அழகு

வெண்பூ said...

அனுஜன்யா.. எனக்கு கவிதை புரியல.. ஆனாலும் "கம்பேக்"ஐ தெரிவிச்சுகறதுக்காக ஒரு அட்டன்டன்ஸ் போட்டுக்கிறேன்...

Karthikeyan G said...

Present sir :-)

ISR Selvakumar said...

நன்றாக எழுதுகிறீர்கள். ஆனால் பதிவு குறைவாக இருக்கிறது. பொதுவாக கவிதைப் பதிவுகள் குறைவாகவே உள்ளன. அந்த குறையை சரி செய்ய இன்னும் நிறைய எழுதுங்கள்.

மேவி... said...

read it many times....
"பூக்கவேயில்லை என்றும்
காய்க்க வாய்ப்புமில்லை என்றும்
பெருமர நிழலில்
காற்று வாங்கியபடி பேசிக்கொண்டனர்;"
can relate ths to people who enjoy all benefits but complain abt it

வால்பையன் said...

ஏறவில்லை என்றும்
போதை ஏற வாய்ப்புமில்லை என்றும்
சால்னா கடையில்
முறுக்கு கொரித்தபடி பேசிக்கொண்டனர்;
இரவு கவிந்ததும்
வலுவிழந்த கால்களால் வீழ்ந்து
கிளைகளில் சிக்கியிருந்த
சாயம் போயிருந்த வேட்டியை
பார்த்து முறுவலித்தது
முருக்கும்,மிக்சரும் சொரியத்
துவங்கியிருந்த வாந்தி.

na.jothi said...

"வலுவிழந்த இழைகளால் வீழ்ந்து
கிளைகளில் முளைத்திருந்த
சாயம் போயிருந்த பட்டங்களைப்"

இந்த வார்த்தைகளின் கோர்வை
ரொம்ப நல்லா இருக்கு

இந்த கவிதையை படித்தவுடன்
எனக்கு தோன்றியதை என்னுடைய
பதிவில் எழுதியிருக்கேன்

anujanya said...

@ MayVee

Think you like this poem. Ur understanding is rite. As to the later part, the tree does have kites as vegetables, lights as flowers. Only the paradigm has changed. To comprehend this u need to change to different plane. Hence tree's all-knowing smile. In a different context, u may relate it to adoption too. The more you think, the multiple images you get. Thats all purely the work of the reader. :). Anyways thanks.

@ புதியவன்

நன்றி புதியவன் உங்கள் வருகைக்கும் புரிதலுக்கும்.

@ ஜமால்

நீங்கள் எப்போதுமே 'நட்புடன்' தான் :). நன்றி ஜமால்.

@ வெண்பூ

வாய்யா! ரொம்ப நாள் கழிச்சு வர்றதால போனாப் போகுது. இல்லாட்டி, 'கவித புரியல'ன்னா, பத்து பின்னூட்டம் கணக்கு ஞாபகம் இருக்குல்ல :)

@ கார்த்திகேயன்

நன்றி கார்த்தி. புரியல அல்லது நல்லா இல்ல என்பதைச் சொல்லாமல் செல்வது ஒரு கலை. :)

@ செல்வகுமார்

நன்றி செல்வா. நிறைய எழுத நல்ல கற்பனையும், மொழி வளமும் வேண்டும். அதற்கு பன்மடங்கு வாசிப்பு வேண்டும். இதுக்கே மூச்சு முட்டுகிறது தலைவா.

@ வால்பையன்

என் கவிதையை விட நீங்கள் எழுதியது பன்மடங்கு சிறப்பாக உள்ளது - சொன்னது நான் இல்லை - என்னோட பாஸ்.

@ Smile

நன்றி புன்னகை. நீங்கள் எழுதியது அழகாக இருக்கு. மற்ற கவிதைகளும் கூட.

அனுஜன்யா

narsim said...

//வலுவிழந்த இழைகளால் வீழ்ந்து//

வீரவணக்கம் தல‌

கிருத்திகா ஸ்ரீதர் said...

"வலுவிழந்த இழைகளால் வீழ்ந்து
கிளைகளில் முளைத்திருந்த"
மிகவும் நேர்த்தியான வரிகள்... சொல்லப்போனால் கவிதையின் பலத்தை நிர்ணயிக்கும் வரிகளும் கூட....

Anonymous said...

அனுஜன்யா,

ஒவ்வொரு முறை படிக்கும் போதும் புதுப் படிமம் எழுகிறது.

கான்க்கிரீட் காடுகளில்
அளிப் பூக்களைச்
சொரிந்தவாறே
மின் கம்பங்கள்

என்று படித்த ஞாபகம் வருகிறது.

ராமலக்ஷ்மி said...

இதை வாசித்து மனதில் பலவாறாக யோசித்த வண்ணமிருந்தேன். கவிஞர் என்ன நினைத்து எழுதினார் என்கிற ஆர்வம் ஒருபுறம் இருக்க புரிதல்கள் ஒவ்வொருவருக்கும் வேறுபட்டு நிற்பது உங்கள் கவிதைகளின் சிறப்பு.

அதன் நிழலில் காற்று வாங்கி அதனையே விமர்சித்து செல்வோர்..பூக்காது காய்க்காது இனி பட்ட மரம்தான் என்று....பூக்கிறது புன்முறுவல்.. ஒரு சமயத்தில் கம்பீரமாய் வ்ண்ண மயமாய் வானில் பறந்து இன்று தன்னைப் போலவே வலுவிழந்து போன பட்டங்களைப் பார்த்து..பாதிக்கவில்லை எதுவும் அதனை..தொடர்கிறது வாழ்வை ஒளிமயமாய்..
//வலுவிழந்த இழைகளால் வீழ்ந்து
கிளைகளில் முளைத்திருந்த//
கிருத்திகா சொன்னது போல கவிதைக்கு வலு சேர்க்கும் வரிகள்.

மொத்தத்தில், என் புரிதல் சரியோ தவறோ இப்படியும் புரிந்திடலாம்தானே?

மதன் said...

அழகான வரிகள் அனுஜன்யா. வாழ்த்துக்கள்..!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஓவ்வொருவருக்கு ஒவ்வொருவிதமாகப் புரிவதே (அதாவது பல தளங்களில் செயல்படுவதே) நல்ல கவிதையென்பேன். அந்த வகையில் இது எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் 'பெருமர நிழல்' போன்ற காலச்சுவடு / உயிர்மைக் கவிதை பாணி வார்த்தைகள் கொஞ்சம் உறுத்துகின்றன :( அதைவிட நீங்கள் MayVeeக்குத் தந்த விளக்கங்கள் :)

குழந்தை பிறக்காத பெண்கள் பற்றிய கவிதையாக எனக்குத் தோன்றியது. இதன் நீட்சியாக, அறிவியல் வளர்ச்சியைக் குறிப்பதாக மின்சாரப் பூக்களை அர்த்தப் படுத்தலாம்.

MSK / Saravana said...

அட்டகாசம் அண்ணா..
வழக்கம் போல வாலின் கவிதையும் சூப்பர்..

anujanya said...

@ நரசிம்

நன்றி மாறவர்மா.

@ கிருத்திகா

நன்றி மற்றும் மகிழ்ச்சி!

@ வேலன்

புதுப் படிமம் கிடைப்பதில் மகிழ்ச்சி வேலன்.

//கான்க்கிரீட் காடுகளில்
அளிப் பூக்களைச்
சொரிந்தவாறே
மின் கம்பங்கள்//

நல்லா இருக்கு இந்த வரிகள்.

@ ராமலக்ஷ்மி

இவ்வளவு சிந்தித்து, அலசுவது மிக்க மகிழ்வைத் தருகிறது. உங்கள் புரிதல்கள் சிறப்பானவை.

@ மதன்

நன்றி மதன். உங்கள் முதல் வருகை? நீங்கள் கவிதைகளில் பின்னுறீங்களே!

@ சுந்தர்

காலச் சுவடு/உயிர்மை - :)) இது பள்ளிச் சிறுவனின் உற்சாகம் போல. சிறிது நாட்களில் சரியாகிவிடும்-வேண்டும் :)

போலவே விளக்கங்களும். சரி செய்து கொள்கிறேன்.

@ சரவணன்

நன்றி சரா. வால்பையன் - ஆமாம்.

அனுஜன்யா

மேவி... said...

hey the poem is interesting....
am reading it for the nth time....

மேவி... said...

"(உயிரோசை 17.11.08 மின்னிதழில் பிரசுரமானது)"

hey give th link for tht issue yaar.

சந்தனமுல்லை said...

நல்ல வரிகள்..ரசனையான கவிதை..

உயிரோடை said...

கவிதை உணர்வு பூர்வமாக நல்லா இருக்கு.
வாழ்த்துகள்

ரௌத்ரன் said...

எளிமையாகவும், லேசான ஹைக்கூ கூறுடனும் அழகா இருக்குங்க கவிதை...ரெண்டு தடவ வாசிச்சுட்டு அடுத்ததுக்கு நகர்ந்தப்போ டக்குன்னு மண்டைக்குள்ள பல்பு எரிஞ்சுது..உடனே கமண்டினாத்தான் உண்டுண்டு வந்தேன்...

இராம்/Raam said...

அருமை... முதல் வாசிப்பில் சாதாரணமாக தோணினாலும், மறுவாசிப்புகளில் அழகாக பரிணமிக்கிறது கவிதை...

ரசித்தேன்.... :)

anujanya said...

@ MayVee

நன்றி. லிங்க் கொடுத்து விட்டேன்.

@ சந்தனமுல்லை

நன்றி சகோதரி

@ மின்னல்

கவிதாயினி சொன்னால் சரியாத்தான் இருக்கும். நன்றி மின்னல்.

@ ரௌத்ரன்

நன்றி ரௌத்ரன். உங்கள மாதிரிக் கவிஞர் சொன்னால் மகிழ்ச்சியாகத்தான் இருக்கு.

@ இராம்

நன்றி இராம். உங்கள் தொடர் ஊக்கமும், வாழ்த்தும் நிறைய மகிழ்வைத் தருகிறது.

அனுஜன்யா

தேவன் மாயம் said...

முறுவலித்தது
மின்சாரப் பூக்களை சொரியத்
துவங்கியிருந்த மரம்.///

நல்ல பதிவு!!!

பொங்கல் வாழ்த்துக்கள்!!!

தேவா..

ச.முத்துவேல் said...

பன்முகத் தன்மை கொண்ட நல்ல கவிதை.

கோகுலன் said...

அன்புள்ள அனுஜயா..

இரண்டு நாட்களுக்கு முன் இந்தபதிவை வாசித்தேன்..அதிலிருந்து " பூவாகி காயாகி " என்ர பழைய பாடலையே உதடுகள் முணுமுணுக்கத் தொடங்கிவிட்டன..அது எனக்கு மிக பிடித்த பாடல்..

இந்த கவிதை நன்றாக உள்ளது.... இறுதி வரிகள் நன்று..

anujanya said...

@ தேவன்மயம்

நன்றி. உங்கள் முதல் வருகை என்று நினைக்கிறேன். உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்.

@ முத்துவேல்

நன்றி முத்துவேல்

@ கோகுலன்

உங்கள் முதல் பின்னூட்டம் என்று எண்ணுகிறேன். நன்றி கோகுலன்.

அனுஜன்யா

மேவி... said...

happy pongal

anujanya said...

இனிய பொங்கல் வாழ்த்துகள்

அனுஜன்யா

Unknown said...

Super kavithai anna.. :)) Belated pongal wishes.. :))

anujanya said...

நன்றி ஸ்ரீ. உனக்கும் தாமதமான பொங்கல் வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

தமிழன்-கறுப்பி... said...

அடுத்த பதிவு...?

anujanya said...

@ தமிழன்-கறுப்பி

இது நியாயமா? நல்லா இருக்கு/இல்ல எதுவும் சொல்லாம, க்ளினிக் மருத்துவர் போல 'நெக்ஸ்ட்' என்கிறீர்கள் :)

தல சொல்லிட்டீங்க இல்ல. எதையாவது தூசு தட்டி போட்டுவிடுகிறேன் :)

அனுஜன்யா

chandru / RVC said...

அனு, நலமா? கவிதை நன்றாகயிருக்கிறது, படமும்..!

anujanya said...

@ rvc

வாங்க சந்திரா, வெகு நாட்களுக்குப்பின் உங்கள் வருகை. அய்ஸ் சொன்ன மாதிரி உங்க ப்ளாகே இப்பதான் ஞாபகம் வந்ததா உங்களுக்கு? பாராட்டுக்கு நன்றி.

அனுஜன்யா