Wednesday, February 25, 2009

காக்கைக் கூட்டம்உச்சியிறங்கும் போதில்
யாருமற்ற மேற்கின் நிசப்தம்
பின்னிரவின் பேரெழுச்சிக்குமுன்
சோம்பல் முறித்த சிற்றலைகள்
பிரிக்கப்படும் பொட்டலத்திற்கு
கூடத் துவங்கிய காகங்கள்;
சூட்டிகைகள் சில
தேர்ந்த அலகுகளால்
பெருந்துண்டுகளை
வானில் கவ்வி மறைந்தன,
மதிப்பெண்களின் சூட்சுமம்
அறிந்த முன்னிருக்கை
மாணாக்கர் போல்;
நொறுங்கிய துகள்களை
மணலுடன் உண்ட மற்றவை
தொங்கிய தலையுடன்
மண்சோறு உண்ட
அக்காளை நினைவுறுத்தின.
கசக்கி வீசப்பட்ட
அலுமினியத் தாளை
தேடிப்பிடித்து உண்டன
இதுவரை இரை கிட்டாத
இரண்டு காகங்கள்;
வீசப்பட்ட தாளின் நிறம்
பத்தாவப்புடன் நிறுத்திக்கொண்ட
இஸ்திரி வண்டி பழனியின்
சட்டைப்பையில் இருந்த
லாட்டரிச் சீட்டின் நீலந்தான்
நெடுஞ்சாலையில் நிறுத்தி
கடற்கரைக்கு வழிகேட்டவனை
எதிர்த்திசையில் திருப்பிவிட்டேன்(உயிரோசை 22.12.08 மின்னிதழில் பிரசுரமானது)

30 comments:

Unknown said...

நல்லா இருக்கு.
நான் கூட ஸ்கூட்டர் கண்ணாடியை கொத்தும் காக்கையைப் பற்றி கவிதை எழுதியுள்ளேன். படித்து விட்டு கருத்துச் சொல்லவும்.

மாதவராஜ் said...

நல்ல கவிதை.

உண்மைதான். வாழ்வின் கரை கடற்கரையைவிட ஆழமானதாகவும், பரந்ததாகவும் இருக்கிறது.

கார்க்கிபவா said...

வாவ்.. அருமையா இருக்கு தல.. உயிரோசையின் முக்கிய கவிஞர் ஆகிட்டீங்க போல!!!!

மண்குதிரை said...

உயிரோசையிலே படித்துவிட்டேன் அனுஜன்யா

வாழ்த்துக்கள்

வால்பையன் said...

//நெடுஞ்சாலையில் நிறுத்தி
கடற்கரைக்கு வழிகேட்டவனை
எதிர்த்திசையில் திருப்பிவிட்டேன்//

என்ன வில்லத்தனம்,

உங்களுக்கு ஏன் ஒன்ன பார்த்த வேற வேற மாதிரியெல்லாம் யோசனை போகுது!

எதிர்கவுஜ எழுதுற மாதிரி சிறுசா எதாவது சரக்கு புட்டி இருக்கா?

na.jothi said...

பொழுது விடியும்
ஓரிரு நிமிடங்கள் மாதிரி
சட சடவென வார்த்தைகள்
ஒரே கவிதையில்
நல்லா இருக்கு

Mahesh said...

//நெடுஞ்சாலையில் நிறுத்தி
கடற்கரைக்கு வழிகேட்டவனை
எதிர்த்திசையில் திருப்பிவிட்டேன்//

என்னா வில்லத்தனம்??!!

அத்திரி said...

அருமையான கவிதை ஐயா!!!!

முரளிகண்ணன் said...

\\கசக்கி வீசப்பட்ட
அலுமினியத் தாளை
தேடிப்பிடித்து உண்டன
இதுவரை இரை கிட்டாத
இரண்டு காகங்கள்\\

ஏதோ செய்கிறது.

Anonymous said...

அருமையான கவிதை

Unknown said...

சூப்பரா இருக்கு அண்ணா... :)) உயிரோசைக்கு வாழ்த்துகள்.. :)))

கிருத்திகா ஸ்ரீதர் said...

"இஸ்திரி வண்டி பழனியின்
சட்டைப்பையில் இருந்த
லாட்டரிச் சீட்டின் நீலந்தான்"

வாழ்வாதாரத்தைக்குறித்த நம்பிக்கைகள் ஆளாளுக்கு வேறுபடுகிறது காக்கைகளின் பிரிவைப்போல.

"கடற்கரைக்கு வழிகேட்டவனை
எதிர்த்திசையில் திருப்பிவிட்டேன்"

ஒன்றே போலத்தோன்றும் சில முரண்களை காண்கையில் நம்முள் படியும் விரக்திக்கும் வடிகால் தேவைதானே...

நல்ல கவிதை... வாழ்த்துக்கள்

VIKNESHWARAN ADAKKALAM said...

வாழ்த்துகள் அனுஜன்யா... அழகா எழுதி இருக்கிங்க...

ராமலக்ஷ்மி said...

இக்கவிதையை நானும் முன்னரே உயிரோசையில் படித்தேன். இரை தேடும் காக்கைக் கூட்டத்தின் ஒவ்வொரு பிரிவிலும் செயலிலும்.. இயல்பு வாழ்க்கையில் அரை ஜாண் வயிற்றுக்குப் புரை தேடும் மனிதரிலிருந்து அடுத்தவர் பற்றிய சிந்தனையேயற்று தாம் வாழ்த்தால் போதுமென நினைக்கிறவர் வரையிலான ஒப்பீடு வியக்க வைக்கிறது. வாழ்த்துக்கள்.

Anonymous said...

எப்படி இப்படியெல்லாம்...அசத்தல் :-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

அருமையான ஒப்பீடு

Anonymous said...

நல்ல கவிதை...வாழ்த்துகள் அனு !
By, RVC

புதியவன் said...

கவிதை நல்லா இருக்கு...உயிரோசையில் வந்ததற்கு வாழ்த்துக்கள்...

அமுதா said...

நல்ல கவிதை

ச.முத்துவேல் said...

நுட்பமான பல விடயங்களைப் பதிவுசெய்துள்ளீர்கள்.இக்கவிதையிலிருக்கும்
பார்வை உங்கள் சூழலிலிருந்துப் பார்க்கும்போது,ஆச்சரியமளிக்கிறது. நல்ல கண்ணோட்டம். பாராட்டுக்கள்.

மணிகண்டன் said...

எனக்கும் கவிதை புரிய ஆரம்பிச்சுடுச்சு !

எனக்கும் கவிதை புரிய ஆரம்பிச்சுடுச்சு !

எனக்கும் கவிதை புரிய ஆரம்பிச்சுடுச்சு !

எனக்கு புரிஞ்ச ஒரே கவிதைய லேபில்ல சிறுகதைன்னு சொன்ன அனுஜன்யா ஒழிக !

கவிதை சூப்பர் சார். அடிக்கடி உங்க கவிதைகள பிரசுரம் பண்ணுங்க.

Anonymous said...

நல்லா இருக்கு அனுஜன்யா.

உயிர்ரொசை, விசை மாதிரி சிற்றிலக்கியப் பரப்பில் அடிக்கடிப்
படைக்கிறீர்கள்.

அங்கு அள்ளிக் கொடுத்துவிட்டு இங்கு கிள்ளிக் கொடுக்கிறீர்கள். உங்களிடமிருந்து இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறோம்.

MSK / Saravana said...

// கிருத்திகா said...

"இஸ்திரி வண்டி பழனியின்
சட்டைப்பையில் இருந்த
லாட்டரிச் சீட்டின் நீலந்தான்"

வாழ்வாதாரத்தைக்குறித்த நம்பிக்கைகள் ஆளாளுக்கு வேறுபடுகிறது காக்கைகளின் பிரிவைப்போல.

"கடற்கரைக்கு வழிகேட்டவனை
எதிர்த்திசையில் திருப்பிவிட்டேன்"

ஒன்றே போலத்தோன்றும் சில முரண்களை காண்கையில் நம்முள் படியும் விரக்திக்கும் வடிகால் தேவைதானே...

நல்ல கவிதை... வாழ்த்துக்கள்//

ஆழமான கவிதை.. அசத்தல் அண்ணா.. :)

www.narsim.in said...

//வடகரை வேலன் said...
நல்லா இருக்கு அனுஜன்யா.

உயிர்ரொசை, விசை மாதிரி சிற்றிலக்கியப் பரப்பில் அடிக்கடிப்
படைக்கிறீர்கள்.

அங்கு அள்ளிக் கொடுத்துவிட்டு இங்கு கிள்ளிக் கொடுக்கிறீர்கள். உங்களிடமிருந்து இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறோம்
//

என்ன செய்றதா உத்தேசம்???

www.narsim.in said...

நெடுஞ்சாலையில் நிறுத்தி
கடற்கரைக்கு வழிகேட்டவனை
எதிர்த்திசையில் திருப்பிவிட்டேன்//

ஏதோ செய்கின்றன.. வழக்கமான கலக்கல் சாரே..!

ரௌத்ரன் said...

நல்ல கவிதை அனுஜன்யா...நன்றாக வந்திருக்கிறது.

anujanya said...

@ ரவிஷங்கர்

நன்றி ரவி. உங்க கவிதை ரொம்ப நல்லா இருக்கு.

@ மாதவராஜ்

நன்றி மாதவ்.

@ கார்க்கி

ம்ம், பாத்து, உயிரோசை கோவிச்சுக்கப் போறாங்க. நன்றி சகா.

@ மண்குதிரை

நன்றி தோழா (தோழி இல்லைதானே?). ஆமாம், இன்னைக்கு தான் உங்க இடம் வந்து பார்த்தால், நீங்க எம்மேல வருத்தப்பட்டது தெரிந்தது. நான் உயிரோசை வாசகர் கருத்தில் சொல்லவந்தது ஒத்த சிந்தனை இருவருக்கு ஒரே சமயம் வருவதை வியந்து தான். Anyways, all is well that ends well :))

@ வால்பையன்

குரு, பேஜாரா பீல் பண்ணா வில்லத்தனம் தான் வரும் :)
எதிர்கவுஜ - நீங்க இதுலயே எழுதலாமே? இதுக்கு ஒரு ரசிகர் கூட்டமே இருக்கு :)

@ புன்னகை

உங்க பின்னூட்டமே கவிதையா இருக்கு.

//பொழுது விடியும்
ஓரிரு நிமிடங்கள் மாதிரி
சட சடவென வார்த்தைகள்//

நன்றி மற்றும் வாழ்த்துகள் - கவிஞர் ஆகிவிட்டதற்கு

@ மஹேஷ்

நன்றி மஹேஷ். முதல் வருகை. இன்னும் ஒரு நாள் கழித்து நீங்க போயிருந்தா நம் மீட் பண்ணியிருக்கலாம்.

@ அத்திரி

வாம்மா, ஐயா எல்லாம் போட்டு நம்ம வயசக் கூட்டற. இருக்கட்டும். நன்றி அத்திரி.

@ முரளி

நன்றி முரளி

@ கடையம் ஆனந்த்

நன்றி ஆனந்த்.

@ ஸ்ரீ

நன்றி. ஆமா, வாழ்த்துகள் எனக்கா, உயிரோசைக்கா? :))

@ கிருத்திகா

புரிதலுக்கு நன்றி. என்ன இருந்தாலும் கவிதாயினி வாயால் கேட்டால் அதிக மகிழ்ச்சி.

@ விக்னேஸ்வரன்

நன்றி விக்கி.

@ ராமலக்ஷ்மி

முன்னே எல்லாம் வாங்க சகோதரி என்று சொல்வேன். இப்ப நன்றி 'ஜெய் ஹோ' என்று சொல்லவேண்டும்.

@ இனியவள் புனிதா

அடடா, ரொம்ப நாள் கழித்து சகோதரி வருகை. நன்றி புனிதா.

@ அமித்து.அம்மா

நன்றி அமித்து.அம்மா

@ RVC

வாங்க தல, என்ன ஆணி அதிகமா, அனானியா வரீங்க? நன்றி. ஆமா, எப்போ உங்க அடுத்த பதிவு?

@ புதியவன்

நன்றி கவிஞரே.

@ அமுதா

நீங்களும் ரொம்ப நாட்கள் கழித்து வருகிறீர்கள். நன்றி அமுதா.

@ முத்துவேல்

வணக்கம் தோழா. உங்க கிட்ட பேசியது மிக ஆனந்தம். நன்றி.

@ மணிகண்டன்

உனக்கு புரிஞ்சிடிச்சு என்றால் கொஞ்சம் கவலையாகத்தான் இருக்கு :)

நன்றி மணி.

@ வேலன்

//அங்கு அள்ளிக் கொடுத்துவிட்டு இங்கு கிள்ளிக் கொடுக்கிறீர்கள். உங்களிடமிருந்து இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறோம்.//

நீங்களே வம்பை விலைக்கு வாங்குகிறீர்கள். மிக 'அதிகமாக' அடுத்த பதிவில் கொடுத்து ஆயிற்று; பரிசல் அதை நக்கல் செய்தும் ஆயிற்று :))

@ சரவணன்

நன்றி சரா. உன்னோட பாராட்டில் மிக மகிழ்ச்சி.

@ நர்சிம்

//என்ன செய்றதா உத்தேசம்??//

அடுத்த பதிவ பாருங்க. இனிமே கேப்பீங்க? நன்றி உங்க பாராட்டுக்கு.

@ ரௌத்ரன்

இன்னொரு பிடித்த கவிஞன். நன்றி ரௌத்ரன்.

அனுஜன்யா

வால்பையன் said...

//எதிர்கவுஜ - நீங்க இதுலயே எழுதலாமே? இதுக்கு ஒரு ரசிகர் கூட்டமே இருக்கு :)//

தோனுச்சு
ஆனா உங்க கவிதை ரொம்ப பெருசு, அம்புட்டு எழுதுறதுக்குள்ள தாவூ தீந்துரும்

Thamira said...

புரிஞ்சா மாதிரியும் இருக்குது.. புரியாத மாதிரியும் இருக்குது.. முழுமையா விளங்கிக்கொண்டு மகிழமுடியவில்லை.. நம்ப அறிவு அவ்வளவுதான்.

anujanya said...

@ வால்பையன்

இப்ப வால் நட்சத்திரம் ஆனதால் பிசியா இருப்பீங்க. அடுத்த கவிதைக்கெல்லாம் உடனே எ-கவிதை எழுதி விடுங்க.

@ தாமிரா

நீங்களும் வெண்பூவும் ஒரு குரூப்பாதான் செயல் படுறீங்க! 'புரியல'னு சொல்லி எஸ்ஸ் ஆகிட வேண்டியது :)

அனுஜன்யா