Tuesday, May 12, 2009

செல்வா கொடுத்த அல்வா ……(எதைப்) பற்றியும் பற்றாமலும் .... (12th May '09)


சென்ற மாதம் வேலன் மும்பை வந்திருந்தார். வீட்டுக்கு வந்தவுடன் ஒரு பொட்டலம் கொடுத்து 'இதை கொஞ்சம் இளஞ்சூடாக்கும்மா' என்று என் மனைவியிடம் கொடுத்தார். அப்படி இளஞ்சூட்டில் வந்த அமிர்தத்தின் பெயர் 'திருநெல்வேலி அல்வா'. - செல்வா கொடுத்த அல்வா (தலைப்பு சரிதானே). ஆம், செல்வேந்திரன், அண்ணாச்சி மும்பை செல்கிறார் என்று கேள்விப்பட்டு, விமான நிலையத்துக்கு வந்து ஆசையுடன் கொடுத்தாராம். உடனே செல்வாவுக்கு போன் போட்டு நன்றி சொன்னேன். 'புத்தகம் அனுப்பிய போது கண்டுக்கவேயில்ல - சரியான சாப்பாட்டு ராமன் போல' என்று நினைத்திருப்பார்.

இனிப்பெல்லாம் அவ்வளவுதான். வேலன் வந்தா எவ்வளவு டென்ஷன் தெரியுமா? வந்து செட்டில் ஆனவுடன் கேட்கும் முதல் கேள்வி 'இப்ப என்ன படிக்கிறீங்க'. நானும் நகுலன், (ஒரு முறை மறதியில் சகாதேவேன் என்றும் சொல்லிவிட்டேன்) லா.ச.ரா., தி.ஜானகிராமன் என்றெல்லாம் சமாளித்துப் பார்த்தேன். பாமாவின் கருக்கு, கண்மணி குலசேகரன், ஆதவன் தீட்சண்யா என்று out of syllabus பெயர்கள் சொல்லி என்னைத் தவிக்க விடுகிறார். என் மனைவியோ படித்துக் கொண்டிருந்த அவள் விகடன், குமுதம் எல்லாவற்றையும் ஒளித்து வைத்து விட்டு, தீராநதி, உயிர்மை, காலச்சுவடு (ஒரு முறை புத்தகம் தலைகீழாக இருந்ததை வேலன்தான் கவனித்தார்) என்று படித்தாள். 'இந்த வாரம் அய்யப்ப மாதவன் கவிதை' என்று வேலன் பேசத் துவங்க, 'இருங்க அடுப்பில் எதோ தீயுற வாசனை' என்று அவள் எஸ்கேப்.

இது ஒரு புறம் இருக்கையில், எப்படி தான் நம்ம வலையுலகு வாத்ஸ்யாயனருக்கு மூக்கில் வியர்க்குமோ! போன் வரும். எதிரில் வேலன். ஆபிஸ் வேலை பிசி என்று அளக்கவும் முடியாது. முதல் கேள்வி 'ஏம்பா, எப்படி இருக்க' அதெல்லாம் தானே நண்பர்கள் கேட்பார்கள். ம்ஹும், 'என்ன புத்தகம் படிக்கறீங்க இப்ப? நகுலன் முடிச்சவுடனே, கோபி கிருஷ்ணன் படிக்கலாம். சீரோ டிகிரி எப்படி இருந்தது? பிரமிள் கவிதைகள் கூட நீங்க அவசியம் படிக்கணும்' என்ற ரீதியில் போகும்.

என் வாழ்க்கையில் படிக்காமல் இருந்ததற்கு என் பள்ளித் தலைமை ஆசிரியர் மார்ட்டின் அவர்களிடம் கூட இவ்வளவு பயந்ததில்லை.

************************************************************

மும்பையில் வாக்குப் பதிவு தேசிய சராசரிக்கு மிகவும் கீழ். 42%. படிப்புக்கும், பொறுப்பு உணர்வுக்கும் தொடர்பு இருப்பது போலத் தெரியவில்லை. நான்கு நாட்கள் தொடர் விடுமறை வாய்ப்பும் ஒரு பெரும் காரணி. நிறைய பேர் புதன் இரவே 'விடு ஜூட்'. மும்பையிலேயே இருந்தும் வாக்களிக்காத தெற்கு மும்பை வாசிகள் (நகரின் பெரும் பணக்காரர்கள்) வாக்களிக்காமல் இருந்ததற்குச் சொல்லப்பட்ட காரணங்கள் சில:

வாக்குச் சாவடிகளில் குளிர் சாதன வசதி இல்லை
வரிசையில் நிற்க வேண்டுமாம்.
என் வேலைக்காரர் எனக்கு முன்னால் வரிசையில் நிற்பதா?
என் சல்சா (ஜல்சா இல்லை நண்பர்களே) நடன வகுப்பு தடைப்படுமே
Stilt-Parking எங்கள் வாகனங்களுக்கு கிடைக்கவில்லை
வெய்யில் கொளுத்துகிறது
என்னது! Door delivery/Net Voting கிடையாதா?

எப்படி இருக்கு?

தனவந்தர்களை விட்டுத் தள்ளுங்கள். மத்யம, கீழ்-மத்யமர்கள் கூட வாக்களிப்பில் அவ்வளவு நாட்டமில்லாமல் இருந்ததில் சிவா சேனா, பா.ஜ.க. கூட்டணி சற்று கவலைப் படுகிறது. அதாவது ஆளும் கட்சியின் மீது ஒன்றும் பெரிய அதிருப்தி இல்லை என்று இது உணர்த்துகிறதாம். இது ஒரு புறமிருக்க, முஸ்லிம் சமுதாய மக்கள் ஒட்டு மொத்தமாக ஒரு கட்சிக்கு வாக்களிக்கவில்லை என்பதில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி மிகவும் பயந்து போயிருக்கிறது.

எனக்கு என்னவோ தென் மாநிலங்களை விட, மற்ற இடங்களில் தேர்தல் வெற்றி தோல்விகளை 'இதெல்லாம் சகஜமப்பா' என்று பெரிய அரசியல்வாதிகள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று தோன்றுகிறது. குறைந்த பட்சம் பொது இடங்களில் காண நேர்ந்தால் சிரிக்கிறார்கள்; கை குலுக்கவோ, ஆரத் தழுவவோ செய்கிறார்கள்.
************************************************************


நடந்து கொண்டிருக்கும் ஐ.பி.எல். வெற்றியுமில்லாமல், தோல்வியுமில்லாமல் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. நிர்வாகத் திறமைக்கு நிச்சயம் லலித் மோடியைப் பாராட்டத்தான் வேண்டும். தென் ஆப்ரிக்காவில் இத்தனை ஜனங்கள் போட்டியைக் காண வருவது ஒரு ஆச்சரியம்.

நிற்க. என்னுடைய ஆதர்ச அணி - சிரிக்காதீர்கள் - ராயல் சேலஞ்ஜர்ஸ் - எனக்குப் பிடித்த டிராவிட், கும்ப்ளே, கால்லிஸ் போன்றவர்கள் இருப்பதால். என் தம்பிக்கு தாதா இருப்பதால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ். பக்கத்துக்கு வீட்டுப் பெண் பஞ்சாபி. ஆனால் அவளுக்கு கிங்க்ஸ் XI பஞ்சாப் பிடிக்காது. ஷாருக் கான் அணி என்பதால் அவளுக்குப் பிடித்தம் கொல்கத்தா தான். அவள் கணவன் சொந்த ஊர் பாட்னா. ஆனால் பிடித்த அணி சென்னை சூப்பர் கிங்க்ஸ். (வேறென்ன, தோனி அவங்க ஊராம்). என் ஆபிஸ் நண்பன் டில்லியைச் சேர்ந்தவன். அதலால் டில்லி டேர் டெவில்ஸ் அவனுக்குப் பிடித்தம். சச்சினை எல்லோருக்கும் பிடித்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நிறைய பேர் சப்போர்ட் செய்வதில்லை. Truly cosmopolitan city.

என் தம்பியிடம் சொன்னேன் - நம்ம சென்னையில் எல்லோரும் ஒரே அணியைத் தான் சப்போர்ட் செய்வாங்க - சென்னை சூப்பர் கிங்க்ஸ் - என்றேன். அவன் 'நம்ம மக்கள் ராங்கா இருந்தாலும் ஸ்ட்ராங்காத் தான் இருப்பாங்க' என்றான் பொடி வைத்து, இந்தத் தேர்தல் சமயத்தில்.

************************************************************


இப்போது மிகவும் பிரசித்தமாக இருக்கும் வோடோ போன் விளம்பரங்கள் ஏதோ கிராபிக்ஸ் என்று எண்ணியிருந்தேன். உண்மையான மனிதர்கள் நடித்து, பின்பு கம்ப்யூட்டர் தகிடு தத்தங்களில் இவ்வாறு வெளிவருகிறதாம். Amazing. தேர்தலில் பிசியாகி உள்ள யுவ கிருஷ்ணா, இந்த விளம்பரங்கள் எடுக்கப்பட்ட விதம், செலவுகள், பயன்கள் பற்றி ஒரு பதிவு எழுதுவார் என்று எதிர்பார்க்கிறேன்.

சமீபத்திய

அளவிலா மகிழ்ச்சி : நர்சிம் கதை ஆனந்த விகடனில் வந்தது; ராமலக்ஷ்மியின் முதல் சிறுகதை 'கலைமகள்' பத்திரிகையில்

அளவான மகிழ்ச்சி : அதிஷா கதை அதே ஆ.வி.யில் வந்தது (ஒரு பக்கத்துக்கு அவ்வளவு தான்)

பெருமிதம் : சென்னை பதிவர்களின் புது முயற்சி (Dr.ருத்ரன்-Dr.ஷாலினி)

தலைகுனிவு : இளங்கோவனின் பெரியார் பற்றிய கொச்சை பேச்சு

நேர்காணல் : அய்யனாரின் நேர்காணல் - 'நாம்' இதழுக்காக வந்தது

பிடித்த கவிஞர்கள் : ஒரு ஐவர் கூட்டணி - யாத்ரா/ நந்தா /மண்குதிரை / சேரல்/ப்ராவின்ஸ்கா (ரொம்ப நல்லா எழுதுகிறார்கள்-தனித்தனியே தான்)

பெரிய நிம்மதி : உங்களுக்குத் தான். இந்த முறை நோ கவிதை.

பிறந்தநாள் வாழ்த்துகள் : இன்று (May 12) என் தம்பி கிட்ட சொல்லலாம்;




நாளை (May 13) வலையுலகின் ஆகப்பெரும் வலை வீசுபவருக்குச் சொல்லலாம்; இவர் பிறந்த நாளுக்காக அரசு விடுமுறை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் எவ்வளவு பெரிய ஆளுன்னு. சற்றுமுன் வந்த தகவல் - இவர் படைப்பும் இந்த வார ஆ.வி.இல் வருகிறதாம்.

45 comments:

குசும்பன் said...

நான் தான் முதல் போனியா:)

குசும்பன் said...

//பக்கத்துக்கு வீட்டுப் பெண் பஞ்சாபி. ஆனால் அவளுக்கு கிங்க்ஸ் XI பஞ்சாப் பிடிக்காது. ஷாருக் கான் அணி என்பதால் அவளுக்குப் பிடித்தம் கொல்கத்தா தான். //

பஞ்சாபி ரெஸிப்பி ஒன்னு கேட்கனும் போன் நம்பர் தரமுடியுமா?

Cable சங்கர் said...

ஒழுங்கா படிங்க அனுஜன்யா.. அடுத்த டிரிப்புல உங்களுக்கு ஓரல் டெஸ்ட் இருக்கு..

ராமலக்ஷ்மி said...

எங்க ஊர் அல்வா:)!

ஓட்டுப் பதிவு பெங்களூரிலும் இந்தமுறை மோசம்தான். 50 விழுக்காடுதான்:(!

ஐ.பி.எல் போட்டியை மகன் பார்க்க, நான் வோடோஃபோன் விளம்பரங்கள் வருகையில் மட்டும் ஓடிச் சென்று பார்க்கின்றேன்:)!

கொஞ்சமாக எனக்கும் சந்தோஷப் படுங்களேன். முதன் முதலாக எனது சிறுகதை இம்மாத ‘கலைமகளில்’:)!

Anonymous said...

அன்னைக்குத்தான் எங்க வீட்டுக்கும் அல்வா டோர் டெலிவரி ஆச்சு..

வால்பையன் said...

செல்வா அல்வா கொடுத்தாரா இல்லை கொடுத்துவிட்டாரா!

அவரு செல்லுக்கே யாரோ கடுக்கா கொடுத்துட்டாங்களாம்!

நிறைய படிப்பா தூக்கம் வருதா உங்களுக்கு! எனக்கு கண்னை கட்டிகிட்டு வருது!

வாழ்த்து ரெடியா இருக்கு!

selventhiran said...

ஹா... ஹா அனுஜன்யா... சகாதேவனை நினைத்து நினைத்து சிரிக்கிறேன்... சூப்பர்.

na.jothi said...

உங்க தம்பிக்கு பிறந்த வாழ்த்துக்கள்

சென்ஷி said...

பொறுமையா படிச்சுட்டு வர்றேன் :)

ச.முத்துவேல் said...

உண்மையிலயே பின்றீங்க.இப்படி எதைப்பற்றியும்னு பத்தி எழுதறது நல்லாவருது. அரசியலத் தொடர்ந்து எடுத்துக்கறீங்க. நல்லாயிருக்குது. தங்கமணீய வச்சுப் பண்ற காமெடில்லாம் கலக்கல்.(ஆனா, பாவம்)

அய்யனாரின் நேர்கணல் எப்படி மிஸ் பண்ணென்னு தெரியல. இப்போ படிச்சுடறேன்.

Raju said...

படித்தேன், ரசித்தேன். ;-)

நடுத்தர வர்க்கம் பற்றி, நல்ல லயிப்பு... சரி மும்பையில் ஆப்சயிட் வேலை என்ற பெயரில் எஸ்ஸெல் வேர்ல்ட் செல்லும் வழக்கம் இன்னும் உண்டா? (ஐ.டிக்கு இது மிகவும் பொருந்தும்...).. பெங்களூரில் இந்த கொடுமை இன்னும் இருக்கு, என்ன ரெசெச்சன், என்ன எகனாமி, ஒன்னும் தேறாது! செலவு செய்தால் தான் வேலை ஓடுது என்கிறார் என் பாஸ்...

யாத்ரா said...

அல்வா மேட்டர் சூப்பர், out of syllabus அருமை,

\\'ஏம்பா, எப்படி இருக்க' அதெல்லாம் தானே நண்பர்கள் கேட்பார்கள். ம்ஹும், 'என்ன புத்தகம் படிக்கறீங்க இப்ப? \\

:)))

\\என்னது! Door delivery/Net Voting கிடையாதா?\\ :)

\\'நம்ம மக்கள் ராங்கா இருந்தாலும் ஸ்ட்ராங்காத் தான் இருப்பாங்க' \\

:)

எல்லாமே பிடித்திருக்கிறது,

தங்களின் பிடித்தப் பட்டியலில் நண்பர்கள் பெயருடன் என் பெயரும் இருந்ததைப் பார்த்த போது,

என்ன தவம் செய்து விட்டேன், எங்கோ பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் என் முகமும் பார்த்தறியாத தங்களைப் போன்றவர்களின் நேசத்தைப் பெற்றிருப்பதற்கு, என்ன தவம் செய்துவிட்டேன்

இப்படித் தான் உணர்கிறேன், மிகவும் நெகிழ்ச்சியாய் உணர்கிறேன், மிக்க நன்றி.

அண்ணா,உங்க தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

சின்னப் பையன் said...

எனக்கு சில சந்தேகங்கள்:

1. செல்வா கொடுத்த மொத்த அல்வாவும் வந்துச்சா இல்லே transit loss ஆயிடுச்சா?

2. சகாதேவன்னு நிஜமாவே யாரும் எழுதலியா?

3. நம்ம ஊர் அரசியல்வாதிகள் ஒவ்வொரு தேர்தலின்போதும், போன தடவை திட்டினவங்களோடு கை குலுக்குறாங்களே... நீங்க பாக்கலியா?

சமீபத்திய எல்லாம்... சூப்பர். எல்லோருக்கும் வாழ்த்துக்கள். (அந்த பேரனைத் தவிர!!).

உங்க தம்பிக்கும், பரிசலுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

முரளிகண்ணன் said...

டெம்பிளேட் சூப்பர்.

பதிவும் சூப்பர்தான்.

சென்னையில் 60% அளவுக்குத்தான் சூப்பர் கிங்ஸ் ஐ சப்போர்ட் செய்கிறார்கள்.

நான் விசாரித்த வரையில்.

நான் மும்பையைத்தான் சப்போர்ட் செய்கிறேன். இரண்டாவது பெங்களூர்.
மூன்றாவது டெல்லி.

நந்தாகுமாரன் said...

சும்மா சொல்லக் கூடாது ... உங்கள் டைரியும் ஸ்வாரஸ்யமாகத்தான் இருக்கிறது ...

Karthikeyan G said...

எல்லாமே நன்று.

எனக்கு சென்னை & டெக்கான்(லஷ்மனுக்காக).

Is there any VVS Laxman FAN.. :)

Sridhar V said...

//ஏதோ கிராபிக்ஸ் என்று எண்ணியிருந்தேன். உண்மையான மனிதர்கள் நடித்து, பின்பு கம்ப்யூட்டர் தகிடு தத்தங்களில் இவ்வாறு வெளிவருகிறதாம். Amazing.//

அதுவும் கிராஃபிக்ஸ்தாங்க. Motion Capturing-னு ஜீன்ஸ் படத்துல பிரபலமா தமிழ் பத்திரிகைகள் பேசிட்டு இருந்தாங்களே...அதேதான். Plain Cartoon-ல அவ்வளவு நுணுக்கமா முகபாவங்கள், வாயசைவுகள், கை / கால் அசைவுகள் கொண்டு வர முடியாது. அதனால மனிதர்களை நடிக்க விட்டு அப்படியே அவர்களின் அசைவுகளை பொம்மைகளின் மேல் ஏற்றி விடுகிறார்கள் :)

இனிமேல் வாத்ஸாயனரோ, வேலனோ ‘என்ன படிக்கிறீர்கள்’ என்று கேட்டால் ‘எல்லாம் உங்க பதிவைப் படிச்சிட்டு அதப் பத்தியே நெனச்சிட்டு இருக்கேன்’ சொல்லிப் பாருங்களேன் :))

குசும்பன் பதிவுல உங்க போட்டோ பாத்தேன். அந்த டி-ஷர்டை இன்னமுமா வச்சிருக்கீங்க? :))

மாசற்ற கொடி said...

இந்த font, color, very pleasant to read.

மும்பை அரசியல் வித்தியாசம். நன்றி.

IPL - நல்ல அலசல். Dada விற்காக KKR சப்போர்ட் என்றாலும் இப்பொழுது first மும்பை, then சென்னை. நான் அறிந்த வரைக்கும் பிடிக்காத டீம் - unanimous choice- RR. Otherwise in general the reaction is "may the better team win " !

"சமீபத்திய" concept அருமை, புதுமை. உங்கள் தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அன்புடன்
மாசற்ற கொடி

Thamiz Priyan said...

எனக்கு முதலில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் தான்.. அப்புறம் தான் சென்னை வருது.. :)

அப்புறம் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

பரிசலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

ராமலக்ஷ்மி அக்காவுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்!

ராமலக்ஷ்மி said...

பதிவிலேயே பகிர்ந்து கொண்டுவிட்டீர்களா? அளவிலா மகிழ்ச்சி எனக்கும்:)!

பதிவிலே பார்த்ததாய் இப்போதுதான் தமிழ் பிரியன் வாழ்த்தினார்!

நாளை போல வலையேற்றுகிறேன் கதையை.

நன்றி அனுஜன்யா!

Thamiz Priyan said...

///Cable Sankar said...

ஒழுங்கா படிங்க அனுஜன்யா.. அடுத்த டிரிப்புல உங்களுக்கு ஓரல் டெஸ்ட் இருக்கு..///

ஆமா... அண்ணாச்சி கொஸ்டீன் பேப்பர் கடுமையா ரெடி பண்றாராம்.. ;-))
இங்க கல்ஃபில் அந்த விளம்பரங்கள் வருவதில்லை.. :(

மணிகண்டன் said...

கலக்கல் அனுஜன்யா. இந்த வாரம் பிறந்த நாள் காணும் உங்க தம்பி + அந்த பதிவருக்கும் வாழ்த்துக்கள். (யாரு ?)

Unknown said...

மொதல்ல பரிச்சைக்கு படிங்க ......

பிரவின்ஸ்கா said...

உங்கள் தம்பிக்கு என்னுடைய வாழ்த்துக்களையும்
தெரிவிக்க வேண்டுகிறேன்.

நண்பர்களின் பெயரோடு என் பெயரையும் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
தங்களின் அன்பில் மிதிந்து கொண்டிருக்கிறேன்.
தங்களைப் போன்றவர்கள் தரும் உற்சாகத்துக்கு நான் நன்றி சொல்லி தீராது.
மிக்க நன்றி.
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா.

Anonymous said...

செல்வா கொடுத்த அல்வா - தலைப்பு பிரமாதம்.

பத்தி எழுத்து உங்களுக்கு நன்றாக வருகிறது. தொடர்ந்து எழுதவும்.

Mahesh said...

கொஞ்ச கொஞ்சம் சுஜாதா டச் இருக்கே !!

மேவி... said...

காலேஜ் ஹோச்டேல் ல இருக்கும் போது நண்பன் கொண்டு வந்த ஒரு பெரிய பக்கெட் திருநெல்வேலி அல்வா சாப்பிட்டுவிட்டு இரண்டு நாள் கிளாஸ் க்கு போகாமல் ....... toilet க்கு ஓடி கொண்டு இருந்தேன் ....

உங்களது பதிவை படித்த பின் அது தான் நியாபகம் வந்தது .....


உங்க தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

மேவி... said...

"பெரிய நிம்மதி : உங்களுக்குத் தான். இந்த முறை நோ கவிதை."

அப்பட ....
இப்ப தான் நிம்மதியா இருக்கேன் .......
ஹீ ஹீ ஹி
ஹா ஹா ஹா ஹ

மேவி... said...

பிறகு எனக்கு கிரிக்கெட் பிடிக்காது ...

நாம vote basketball க்கு தான்

மாதேவி said...

"கேட்கும் முதல் கேள்வி 'இப்ப என்ன படிக்கிறீங்க'.இவர்களைப் போன்றோர்களின் ஊக்குவிப்பு இருப்பதால்தான் நிறையப் படிக்கத்தூண்டுகிறது.

உங்க தம்பிக்கு வாழ்த்துக்கள்.

கார்க்கிபவா said...

ஹிஹி..நான் இன்னமு கொலகத்தா சப்போர்ட்டர் தான்

மண்குதிரை said...

ரொம்ப சுவரஷ்யமா இருக்கு தலைவரே.

சகாதேவன்........, என சில இடங்களில் சிரிப்பை அடக்க முடியவில்லை.

Ashok D said...

அங்கவை செங்கவை?
அதாங்க
கற்றவை பெற்றவை?!

Sikkim superkings
Himachal chargers
என்னது.. அப்டில்லாம் டீமே... இல்லையா...
All are IPL 3

Thamira said...

நானும் நகுலன், (ஒரு முறை மறதியில் சகாதேவேன் என்றும் சொல்லிவிட்டேன்) லா.ச.ரா., தி.ஜானகிராமன் என்றெல்லாம் சமாளித்துப் பார்த்தேன். பாமாவின் கருக்கு, கண்மணி குலசேகரன், ஆதவன் தீட்சண்யா என்று out of syllabus பெயர்கள் சொல்லி என்னைத் தவிக்க விடுகிறார்.//

என் வாழ்க்கையில் படிக்காமல் இருந்ததற்கு என் பள்ளித் தலைமை ஆசிரியர் மார்ட்டின் அவர்களிடம் கூட இவ்வளவு பயந்ததில்லை.//

Stilt-Parking எங்கள் வாகனங்களுக்கு கிடைக்கவில்லை
வெய்யில் கொளுத்துகிறது
என்னது! Door delivery/Net Voting கிடையாதா?

எப்படி இருக்கு?//

அவன் 'நம்ம மக்கள் ராங்கா இருந்தாலும் ஸ்ட்ராங்காத் தான் இருப்பாங்க' என்றான் பொடி வைத்து, இந்தத் தேர்தல் சமயத்தில்.//

செம்ம.. செம்ம..

Thamira said...

Cable Sankar said...
ஒழுங்கா படிங்க அனுஜன்யா.. அடுத்த டிரிப்புல உங்களுக்கு ஓரல் டெஸ்ட் இருக்கு..
//

செல்வேந்திரன் said...
ஹா... ஹா அனுஜன்யா... சகாதேவனை நினைத்து நினைத்து சிரிக்கிறேன்...
//

ச்சின்னப் பையன் said...
எனக்கு சில சந்தேகங்கள்:

1. செல்வா கொடுத்த மொத்த அல்வாவும் வந்துச்சா இல்லே transit loss ஆயிடுச்சா?
//


ரிப்பீட்டேய்ய்..

மாதவராஜ் said...

அனைத்தும் சிறப்பு. வேலனை சித்தரித்த விதம் புன்னகைக்க வைத்தது.
இந்த வோடா போன் விளம்பரம் எத்தனை தடவைப் பார்த்தாலும் அலுக்க மாட்டேன்கிறது. ரசித்துக்கொண்டே இருக்கலாம்.

Unknown said...

ரொம்ப நல்லா இருக்கு பதிவு :)))

//பிடித்த கவிஞர்கள் : ஒரு ஐவர் கூட்டணி - யாத்ரா/ நந்தா /மண்குதிரை / சேரல்/ப்ராவின்ஸ்கா (ரொம்ப நல்லா எழுதுகிறார்கள்-தனித்தனியே தான்)//

இதுக்கு என் கண்டனங்கள் :)))

அமிர்தவர்ஷினி அம்மா said...

என் வாழ்க்கையில் படிக்காமல் இருந்ததற்கு என் பள்ளித் தலைமை ஆசிரியர் மார்ட்டின் அவர்களிடம் கூட இவ்வளவு பயந்ததில்லை.

:)-

வாக்குச் சாவடிகளில் குளிர் சாதன வசதி இல்லை
வரிசையில் நிற்க வேண்டுமாம்.
என் வேலைக்காரர் எனக்கு முன்னால் வரிசையில் நிற்பதா?
என் சல்சா (ஜல்சா இல்லை நண்பர்களே) நடன வகுப்பு தடைப்படுமே
Stilt-Parking எங்கள் வாகனங்களுக்கு கிடைக்கவில்லை
வெய்யில் கொளுத்துகிறது
என்னது! Door delivery/Net Voting கிடையாதா?

எப்படி இருக்கு?
சொல்லனுமா, கவிதை மாதிரியிருக்கு.
முதலில் படிச்சவுடன் கவிதைன்னு நெனச்சேன், அப்புறம் லைன் பை லைன் வாசிச்சவுடன் தான் புரிஞ்சுது!!!

அளவான / அளவில்லா மகிழ்ச்சிகளை உண்டாக்கிய / உண்டாக்கிகொண்டிருக்கும் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்

மே 12, உங்க தம்பி கிட்ட சொல்லிடுங்க வாழ்த்துக்களை.

ஆகப்பெரும் வலை வீசுபவருக்கு : தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்

(வாழ்த்தியமைக்கு நன்றிகள் :))))

நர்சிம் said...

அனுஜன்யா... உங்களின் டிரேட்மார்க்குகளாக சில மார்க்குகள் உருவாகின்றன.. இதுவும்தான்.. அருமை.

கார்க்கிபவா said...

ரெண்டு நாளாச்சு.. எப்ப பதில் போடறதா ஐடியா தல?

anujanya said...

@ குசும்பன்

நல்ல போணி தான். போன் பண்ணினால் அவர் கணவர் தான் எடுப்பார். ஒரு six pack ஆசாமி.

@ சங்கர்

அதுக்காகத்தான் நான் தொலைதூரக் கல்வி படிக்கிறேன். அங்க வரதா இல்ல. வந்தாலும் சொல்றதா இல்ல. போன தடவ ராகிங் போறும் :)

@ ராமலக்ஷ்மி

தமிழ் நாடு பரவாயில்ல. நல்ல வாக்குப் பதிவு.

'கலைமகள்' - வாழ்த்துகள் & போட்டாச்சு முகப்பில் :)

@ மயில்

தெரியும். என்னடா அல்வா கம்மியா இருக்கேன்னு பார்த்தேன் :)

@ வால்பையன்

எனக்கும் கண்ணக் கட்டிக்கிட்டு தான் வருது குரு.

@ செல்வேந்திரன்

வாங்க செல்வா. பதிவே உங்களுக்காகத் தான்.

@ J

நன்றி ஜெ.

@ சென்ஷீ

சொல்லுவ. ஆனா எஸ்கேப்பு :)

@ முத்துவேல்

நன்றி முத்து. அய்சின் (அசின் இல்ல) நேர்காணல் 'மொழி நடை'க்காகவே படிக்கலாம். நல்ல ஆழமான எழுத்துகள்.

@ ராஜு

நன்று ராஜு. இல்ல தல. Expense control அப்பிடீன்னு மாதா மாதம் சம்பளம் தரத்தையே பெரிய விஷ்யமாக்கிட்டாங்க. இதுல எங்க off-site?

@ யாத்ரா

நன்றி யாத்ரா. நீங்க எழுதுறீங்க. எங்களுக்கு வாசிப்பின்பம் எவ்வளவு இருக்கு?

@ ச்சின்னப் பையன்

1. ஆம். மயில் வீட்டுக்குப் போய் விட்டது என்று நினைக்கிறேன் :)

2. இல்ல போலதான் இருக்கு. இல்லாட்டி வேலன் எதுக்கு பல்லக் கடிச்சாரு?

3. குட் பாயிண்ட்.

நன்றி ச்சி......

@ முரளி

யோவ், டெம்ப்ளேட் மாத்தி எவ்வளவ் நாளாச்சு? மும்பை-பெங்களூரு-டெல்லி? அது அது. நன்றி முரளி.

@ நந்த

அப்பா, வசிஷ்டர் ......
நன்றி நந்தா.

@ கார்த்திகேயன் G.

நன்றி கார்த்தி. VVS யாருக்குத்தான் பிடிக்காது? அங்கும் அவரை ஓரம் (Jacob இல்லை) கட்டுகிறார்கள்.

@ ஸ்ரீதர்

நன்றி ஸ்ரீதர். Making of zoozoo என்று இப்ப மின்னஞ்சல்கள் வரதே. அது நீங்க சொல்ற method தானா?

வேலன் பரவாயில்ல. சுந்தர் எழுதுவதைப் படித்து, புரிந்து.. இதுக்கு 'கருக்கு' மூன்று முறை படிக்கலாம் :)

டி-ஷர்ட் : ஸ்ரீதர், உங்க கிட்ட இத்தனை வில்லத்தனத்தை எதிர் பார்க்கவில்லை. தனியா பேசித் தீர்த்துக்கலாம் :)

@ மாசற்ற கொடி

font, colour - thanks. will bear in mind.

ஆமாம், RR 'R'உக்குமே பிடிக்கல. நன்றி உங்கள் வாழ்த்துகளுக்கு.

@ தமிழ் பிரியன்

நன்றி ஜின்னா. நீங்க நம்ம ஆளு :)

@ ராமலக்ஷ்மி

கதை சூப்பர். வாழ்த்துகள்.

@ தமிழ் பிரியன்

இப்ப தான் சொன்னேன் 'நம்ம ஆளு' னு. கவுத்துட்டியே பரட்ட!

@ மணி

நன்றி மணி. இப்ப தெரிஞ்சிருக்குமே?

@ மேடி

சரிங்க்ணா

@ பிரவின்ஸ்கா

நன்றி பிரவின்ஸ்கா. யாத்ராக்கு சொன்னதுதான். நீங்க எழுதுறீங்க. எங்களுக்கு எவ்வளவு இன்பம்! தொடர்ந்து எழுதுங்க.

@ வேலன்

நன்றி அண்ணாச்சி - அல்வாவுக்கும்.

@ மஹேஷ்

அப்படியா! கேக்க கொஞ்சம் குஷியாத்தான் இருக்கு. என்ன சொல்ல வர? மாத்தணுமா? நன்றி மஹேஷ்.

@ MayVee

கவித பிடிக்காது; கிரிக்கெட் பிடிக்காது; அல்வா மட்டும் பிடிக்கும். நல்லா இரு :)

@ மாதேவி

உண்மைதான் மாதேவி. நன்றி.

@ கார்க்கி

ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஐயோ ஐயோ

@ மண்குதிரை

இந்த மாதிரி கமெண்டு இங்க ஓகே. கவிதையில் 'அருமை, அட்டகாசம்' இதெல்லாம் தான் எழுதணும். ஓகே? நன்றி

@ அசோக்

நன்றி அசோக். உங்களுக்கு ஜ்யோவ் கிட்டே இருந்து ஒரு லவ் லெட்டர் கிடைக்கலாம் :)

@ ஆதி

நன்றி ஆதி. சகாக்கள் கைத்தட்டலுக்கு தனி மவுசு தான் :)

@ மாதவராஜ்

ஆமாம் மாதவ். உங்க பதிவு எல்லாம் அவ்வப்போது படிக்கிறேன். பின்னூட்டம் போடுவதற்குள் இன்னும் இரண்டு பதிவு போடுறீங்க! அபார உழைப்பு. Red Salute!

@ ஸ்ரீ

நன்றி. உன் கோவம் புரியுது :). இப்ப போயி அங்க பார்க்கவும்.

@ அமித்து.அம்மா

ஆமா இல்ல, ஒரு பின்.நவீன கவிதை மாதிரி தான் இருக்கு காரணங்கள் !

நன்றி. நன்றிக்கும் நன்றிகள் (போறும் நிறுத்துங்கப்பா)

@ நர்சிம்

நன்றி தல. ஆதிக்குச் சொன்னது தான்.

@ கார்க்கி

இதுக்கெலாம் கூட விசிறிகள் என்று நினைக்கையில் என் நெஞ்சு விம்மி .....சரி சரி. இதோ எல்லாம் ரெடி கார்க்கி. நன்றி சகா.


அனுஜன்யா

Unknown said...

//அனுஜன்யா said...
@ ஸ்ரீ

நன்றி. உன் கோவம் புரியுது :). இப்ப போயி அங்க பார்க்கவும்.//

எங்க போயி பார்க்கணும்??

Deepa said...

எல்லாப் பகுதிகளும் ரசிக்கும் படியாக இருந்தன.
குறிப்பாக:
“என் வாழ்க்கையில் படிக்காமல் இருந்ததற்கு என் பள்ளித் தலைமை ஆசிரியர் மார்ட்டின் அவர்களிடம் கூட இவ்வளவு பயந்ததில்லை.”

விக்னேஷ்வரி said...

என்ன ஓரவஞ்சகம் இந்த செல்வாவுக்கு. உங்களுக்கு மட்டும் அல்வா. டெல்லி வரும் பொது வாங்கிட்டு வரலைனா, ரிசீவ் பண்ண போக மாட்டேன் :)

ஓட்டுப் போடும் விஷயத்தில் மும்பைவாசிகளை விட டெல்லிவாசிகள் மேல். இங்கு ஐம்பது சதவீதத்திற்கும் மேல் ஓட்டுப் பதிவு ஆகியிருந்தது. இது அதிகம் இல்லை எனினும், நான் அறிந்து பல பிசினஸ் மென் மற்றும் உயர் வர்க்கப் பெண்களும் வாக்களித்தனர்.

கண்டிப்பாக லலித் மோடி எடுத்த காரியத்தை செய்து முடிக்கும் வல்லவர்.

'நம்ம மக்கள் ராங்கா இருந்தாலும் ஸ்ட்ராங்காத் தான் இருப்பாங்க' //

ஹிஹிஹி... சரியா தான் சொல்லியிருக்காரு.

anujanya said...

@ ஸ்ரீமதி

உன்னோட இடத்தில் தான் :)

@ தீபா

நன்றி தீபா. ஆமாங்க, உண்மை அதுதான் :)

@ விக்னேஷ்வரி

உங்கள் முதல் வருகை. அதிலும் அட்டகாசமான எண்ட்ரி.

செல்வா - டில்லிக்கு ஒரு அல்வா பார்சேல்ல்ல்

நல்ல வேலை லலித் மோடி என்று முழுப் பெயர் சொன்னீர்கள் இந்த தேர்தல் சமயத்தில் :)

நன்றி சகோ. டைம் கிடைக்கும் போது (அதாவது ஒவ்வொரு பதிவுக்கும்) வாங்க.

அனுஜன்யா