Thursday, May 7, 2009

சில கவிதைகள் (குறும்பாக்கள் என்றும் சொல்லலாம்)




**************************************************

வயோதிகம் கடிகாரமாய்
துடித்துக் கொண்டிருக்கிறது
இன்னொரு நாளைப்
பார்த்துவிடும் உயிர்ப்புடன்



**************************************************

வெகுநாள் மீனவன்
தொடர்ந்த ஆமைவேட்டையில்
மங்கிய தன் கண்களால்
ஆமையைக் கும்பிட்டான்
நின்று கொன்றால்
எதுவும் தெய்வந்தான்

**************************************************

உனக்கான என் அன்பு
உணரப்படாமல்
மறைந்திருக்கிறது
பிரித்ததும் வீசி எறியப்பட்ட
உறையின் உட்புறத்து
இளஞ்சிவப்பு காகிதம் போல்

**************************************************

உலர்த்தப்பட்ட ஆடையின்
நாலைந்து கண்கள்
உள்ளங்கைக் குளத்தில்
பிணைந்திருந்த ரேகைகள்

**************************************************
(நவீன விருட்சம் மின்னிதழில் பிரசுரமானது)

52 comments:

முரளிகண்ணன் said...

அனைத்தும் அருமை.

இரண்டாவது அருமையோ அருமை

உயிரோடை said...

சரியா புரியலங்க அண்ணா. நவீன விருட்சத்தில் வந்ததிற்கு வாழ்த்துகள்

மண்குதிரை said...

நவீன விருட்சத்திலே ரசித்தேன். அழகான குழந்தையை எத்தனை முறை வேண்டுமானாலும் கொஞ்சலாம்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நான்குமே அருமை!

எனக்குப் பிடித்தவை,

//வெகுநாள் மீனவன்
தொடர்ந்த ஆமைவேட்டையில்
மங்கிய தன் கண்களால்
ஆமையைக் கும்பிட்டான்
நின்று கொன்றால்
எதுவும் தெய்வந்தான்//

//உலர்த்தப்பட்ட ஆடையின்
நாலைந்து கண்கள்
உள்ளங்கைக் குளத்தில்
பிணைந்திருந்த ரேகைகள்//

-ப்ரியமுடன்
சேரல்

na.jothi said...

முதல் கவிதை அருமை ( புரிஞ்சது !)
மூனாவது கவிதைக்கு
இளஞ்சிவப்பு காகிதம் இல்லாம
வேற கலர்ல இருந்தா எடுத்து வைச்சுருப்பாங்களோ

Sridhar V said...

என்னமோ ‘குறும்பா’ சொல்லப் போறீங்கன்னு நம்பி வந்தேன்யா. ஆனா ரொம்ப சீரியஸா எழுதியிருக்கீய போல. :)

நல்லா இருக்குங்கோவ்.

குசும்பன் said...

//பிரித்ததும் வீசி எறியப்பட்ட
உறையின் உட்புறத்து//

புரியவில்லை தயவு செய்து விளக்கவும்!

கார்க்கிபவா said...

/முரளிகண்ணன் said...
அனைத்தும் அருமை//

இது அதை விட அருமை..

//குசும்பன் said...
//பிரித்ததும் வீசி எறியப்பட்ட
உறையின் உட்புறத்து//

புரியவில்லை தயவு செய்து விளக்கவும்//

புரிந்துவிட்டது.தயவு செய்து செய்முறை காட்டவும்..

Unknown said...

நவீன விருட்சத்திலே ரசித்தேன். :)))நான்குமே அருமை அண்ணா :))

Anonymous said...

எல்லாக் கவிதைகளும் நல்லா இருக்கு.

//வயோதிகம் கடிகாரமாய்
துடித்துக் கொண்டிருக்கிறது
இன்னொரு நாளைப்
பார்த்துவிடும் உயிர்ப்புடன்//

இது எனக்கு மிகவும் பிடித்திருக்கு.

அமிர்தவர்ஷினி அம்மா said...

முதல் இரண்டும் அருமை.

கடைசி புரிஞ்சும் புரியாத மாதிரி இருக்கு...

அன்புடன் அருணா said...

//வயோதிகம் கடிகாரமாய்
துடித்துக் கொண்டிருக்கிறது
இன்னொரு நாளைப்
பார்த்துவிடும் உயிர்ப்புடன்//

ரொம்ப நல்லாருக்கு.....
அன்புடன் அருணா

கார்த்திகைப் பாண்டியன் said...

முதல் கவிதை நல்லா இருக்குங்க.. எளிமையா.. புரியுது..ரெண்டாவதும் நாலாவதும் கொஞ்சம் குழப்புது..

நர்சிம் said...

முதல் கவிதை அருமை.அடுத்து அருமையோ அருமை.

மணிநரேன் said...

முதலாவது கவிதை மிகவும் பிடித்தது.

புதியவன் said...

நான்கு கவிதைகளும் அழகு

மூன்றாவது கவிதை வெகு அழகு...

sakthi said...

வயோதிகம் கடிகாரமாய்
துடித்துக் கொண்டிருக்கிறது
இன்னொரு நாளைப்
பார்த்துவிடும் உயிர்ப்புடன்

superb

really superb anna

sakthi said...

உனக்கான என் அன்பு
உணரப்படாமல்
மறைந்திருக்கிறது
பிரித்ததும் வீசி எறியப்பட்ட
உறையின் உட்புறத்து
இளஞ்சிவப்பு காகிதம் போல்

oru vilakaurai eluthidungalen

enaku konjam puriyalai

Unknown said...

// உலர்த்தப்பட்ட ஆடையின்
நாலைந்து கண்கள்
உள்ளங்கைக் குளத்தில்
பிணைந்திருந்த ரேகைகள் //


இத நா எப்புடி எடுத்துக்குறது..... நெறையா விளக்கங்கள் மண்டைய
கொடையுதே ......????


ப்ளீஸ் சொல்லிபோடுங்கோ தலைவரே......!!!!!



ஆனாலுமும் எல்லா கவிதையுமும் நெம்ப சூப்பரா இருக்குதுங்கோ.....!!!! வாழ்த்துக்கள்....!!!!

Sanjai Gandhi said...

இந்த குறும்பாக்கள் எல்லாம் என்னை மாதிரி ஞானசூனியத்துக்கு புரியனும்னா எந்த காலேஜில படிக்கனும்? :(

Sanjai Gandhi said...

//வயோதிகம் கடிகாரமாய்
துடித்துக் கொண்டிருக்கிறது
இன்னொரு நாளைப்
பார்த்துவிடும் உயிர்ப்புடன்//

இது ஜூப்பர்..

( புரிஞ்சது இது ஒன்னு தான் மாம்ஸ்.. கோச்சிக்காதேள் ) :)

நந்தாகுமாரன் said...

குறும்பாக்கள் அனைத்தும் அரும்பாக்க்கள்

அகநாழிகை said...

அனுஜன்யா,
முதல் இரண்டு கவிதைகளும் ஆழ்ந்த அர்த்தத்துடன் என்னைக் கவர்ந்தன. இரண்டுமே இன்னமும் கூட நீண்டு வந்திருக்கக்கூடிய கவிதைகள்.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

Thamira said...

முதல் மூன்றும் எனக்கே புரிந்துவிட்டது.. கொஞ்சம் ஜனரஞ்சகமாகிவருகிறீர்கள் என நினைக்கிறேன். இழுத்துப்பிடிக்கவும். புரிதலுடன் கூடிய வாசிப்பே இன்பமானது.. இந்தக்கவிதைகள் தொடரும் எண்ணங்களைத் தருவதாய் சிறப்பாக அமைந்துள்ளன.!

Raju said...

வாழ்த்துக்கள் நண்பரே.

நான் தமிழ் படிப்பது இணையம் வாயிலாக என்றாலும், உங்களைபோன்றோர் கவிதைகளில் நான் ஆழ்ந்து அனுபவிப்பது அருமை.....

நீங்கள் எழுதுவது அருமை.

ஆமாம் கடைசி கவிதைல ( பா? ) எதோ விடுப்பட்டது போல் உள்ளது... அது தான் உங்கள் மன தோற்றமா?

thamizhparavai said...

எனது வரிசைப் படுத்தலில்
முதலிரண்டு இடங்களை மாற்றிப் போட வேண்டும்.
மூன்றாவது புரியுது ஆனா புரியலை...
நான்காவது அனுஜன்யா ‘டச்’(சத்தியமாப் புரியலை)

MSK / Saravana said...

பின்றீங்க்னா.. கலக்கலா இருக்கு..
:)

ஆ.சுதா said...

முன்பே நவீனவிருட்சத்திலும் படித்திருந்தேன். நல்ல கவிதைகள்.
மீண்டும் ஒருமுறை ரசித்துக் கொண்டேன்

ச.முத்துவேல் said...

முதல்-முதல்.classic.
இரண்டு- அபாரம்.எதுவோ பெரிசா சொல்றீங்கன்னு மட்டும் புரியுது.ஆனா, என்னன்னுதான்..அதனாலதான் அபாரம்ன்னு சொல்றதா நினைக்கவேண்டாம். நான் புரிஞ்சுக்கிட்ட வரைக்குமே அபாரம்தான்.

மூன்று-சிம்பிள்

நான்கு- சுத்தம்.சுத்தமாப் புரியலீங்க. இவ்ளோ பேர் கேட்கறோமில்ல. சீக்கிரம் சொல்லிடுங்க.

மாதவராஜ் said...

கவிதைகள் அருமை. ரசித்தேன்.

Ashok D said...

படித்தவுடன் ச்ட்டுன்னு தோன்றிய எதிர்வினை, முதல் குறும்பாவிற்கு


இளையச்சமூகம் கடிகாரமாய்
துடித்துக் கொண்டிருக்கிறது
ஒவ்வொரு நாளையும்
கறைத்துக்கொள்ள சரக்குடன்

அடுத்தடுத்த கவிதையில் no எதிர்வினை only லயிப்பு
Welldone AnuJan(zen)ya

anujanya said...

@ முரளி

நன்றி தல

@ மின்னல்

ஏதோ கோவமா இருக்கீங்க :) நன்றி மின்னல்.

@ மண்குதிரை

பின்னோட்டமே கவிதை :) நன்றி பாஸ்.

@ சேரல்

நன்றி சேரல். உங்கள் ரசனை எனக்குப் பிடிக்கும்.

@ J

நன்றி ஜெ. உங்கள் முதல் வருகை? தெரியவில்லை, இளஞ்சிவப்பில் பாஸாகல :(

@ ஸ்ரீதர்

'குறும்பா' - உங்களுக்குக் குறும்பா இல்லை குசும்பா என்று யோசிக்கிறேன் தல. ரொம்ப நாளா ஆளக் காணோம் :(

நன்றி ஸ்ரீதர்.

@ குசும்பன்

பேர சொன்னவுடனே ஆஜர். உனக்கு கார்க்கி பதில் சொல்வார் :)

@ கார்க்கி

என்னடா, வரிசையா வில்லங்கமான பின்னூட்டமாவே வருது? புரிந்ததைக் குசும்பனிடம் சொல்லிடு. செய்முறை/செயப்பாட்டு முறை எல்லாம் 'அதீதன்' கிட்ட கேக்கலாம் :)

@ ஸ்ரீமதி

நன்றி ஸ்ரீ :)

@ வேலன்

நன்றி அண்ணாச்சி.

@ அமித்து.அம்மா

வாங்க அமித்து.அம்மா. ரொம்ப நாட்கள் ஆச்சு இங்க வந்து. அப்ப கடோசிதான் கவிதை என்கிறீர்கள் :) நன்றி.

@ அருணா

வாங்க ப்ரின்சி. ரொம்ப நாளைக்கப்புறம் வருகை. நன்றி அருணா.

@ கா.பாண்டியன் (இப்பிடி சொல்லலாம்ல?)

அப்படியா, சேரல் 2 & 4 தான் பிடிச்சிருக்குன்னு சொல்லுறார். அவர் கிட்ட கேக்கலாமா? நன்றி சகா. கடைசியில் பாருங்க.

@ நர்சிம்

நன்றி தல. பெரிய எழுத்தாளர் சொல்றாருன்னா ஏதாவது இருக்கும் :)

@ மணிநரேன்

உங்கள் முதல் வருகை? அதான் உங்களுக்கு 'முதல்' கவிதை பிடிக்கிறது. ச்சும்மா.
நன்றி மணி.

@ புதியவன்

நன்றி புதியவன். நினச்சேன் உங்களுக்கு மூன்றாவது பிடிக்கும் என்று :) காதல் மன்னன் அல்லவா நீங்கள்!

@ சக்தி

நன்றி சக்தி. மேலே உள்ள 'புதியவன்' கிட்ட கேளுங்க சக்தி. புரிய வைப்பார் :). அது ஒரு சாதாரண காதல் கவிதை சக்தி. உங்களுக்கு ஒரு கடிதம் வந்தால் அது வந்த உறை, உறையின் உட்புற நிறம் இவைகளைக் கவனிப்பீர்களா?

@ மேடி

ஹா ஹா, எவ்வளவு பேருக்கு 'மண்ட காயுற' பின்னூட்டம் போடுற. கொஞ்சம் அனுபவி :) சொல்றேன் - கடைசியில்

நன்றி மேடி. உன்ன கலாய்க்கலாம்ல?

@ சஞ்சய்

காலேஜா? முதல்ல எல்.கே.ஜி., யு.கே.ஜி.எல்லாம் படிக்கணுமேயப்பு. மொதக் கவித புரிஞ்சுடுத்தா? பேஷ் பேஷ்

@ நந்தா

நன்றி நந்தா.

@ அகநாழிகை

நன்றி வாசு. நல்ல கதை மட்டுமில்லை, கவிதையும் கூட நீளமில்லை என்பார்கள் :) சும்மா ஒரு பேச்சுக்கு. ஒப்புக் கொள்கிறேன்.

@ ஆதி

இழுத்துப் பிடித்தால் 'புரிதல்' போய்விடும். என்ன செய்யலாம் தல? நன்றி ஆதி.

@ ராஜு

வாங்க ராஜு. நன்றி உங்கள் கருத்துக்கு. ம்ம், இறுக்கமான விதிகள் எல்லாம் இல்லை ராஜு. எப்படி புரிகிறதோ, அப்படி ஏத்துக்கலாம். உங்களுக்கே கொஞ்ச நாட்களில் வேற மாதிரி புரியும்.

@ தமிழ்ப்பறவை

நன்றி. ஏதோ புகழறீங்கன்னு நினச்சேன். கடைசியில் 'டச்' னு ஒரு 'நச்'.

@ சரா

நன்றி சரா.

@ முத்துராமலிங்கம்

நன்றி முத்து.

@ முத்துவேல்

முத்து, உன்னிடம் பிடிச்சதே, நல்ல புரிதலும், அது கிடைக்காத போது வெளிப்படையா ஒப்புக்கொள்வதும் தான். ஒன்றிலும், மூன்றிலும் சிக்கல் இல்லை. சில பேருக்கு இரண்டும், நான்கும் கொஞ்சம் சிக்கல் போல. சொல்லிடறேன். சுந்தர் என்ன நிச்சயம் திட்டுவாரு. இருந்தாலும், நண்பர்கள் கேக்கும் போது சொல்வதுதான் முறை.

இரண்டாவது கவிதை - சில மீனவர்களுக்கு ஆமை வேட்டை ஆடினால், அந்த ஆமைகளின் சாபம் கண்களை பாதிக்கும் என்று ஒரு நம்பிக்கை. Hemingway எழுதிய The Old Man and the Sea படித்திருப்பீர்கள். அதில் ஒரு passing line இவ்வாறு வரும். பிறகு, யார், யாரை வேட்டியாடுகிறார்கள், யார் நின்று கொல்கிறார்கள் என்று வெவ்வேறு விதங்களில் புரிந்து கொள்ளலாம் :)

நான்காம் கவிதை - உண்மையில் 'பூ, இவ்வளவுதானா' என்பீர்கள். ஒரு முழுதும் பிழியப்படாத ஈரப் புடவை/சட்டை கொடியில் காய்கையில் எங்கிருந்தோ சில சொட்டுகள் வந்துகொண்டே இருக்கும். அவற்றை உங்கள் சின்ன மகள் உள்ளங்கையில் ஏந்தும் காட்சியை உருவகப் படுத்துங்கள்.

@ மாதவராஜ்

நன்றி மாதவ்.

@ அசோக்

உங்க எதிர்வினை நல்லாவே இருக்கு. எழுதுங்களேன். நன்றி அசோக்.

@ எல்லோருக்கும் : உங்களுக்கு எல்லாம் எப்படியோ. எனக்கு இது வரையில் இது போல ஒவ்வொருவருக்கும் பதில் சொல்வது பிடித்திருக்கிறது. நண்பர்களுடன் உரையாடுவது போல உணர்கிறேன். ஒரு எழுத்து பிடிப்பதாலோ அல்லது பிடிக்காததாலோ, பின்னூட்டங்கள் வருகின்றன. என்னைப் பொறுத்த வரை அவைகளுக்கு பதில் சொல்வது அவர்களுக்கான குறைந்தபட்ச மரியாதை. நல்ல வேளையாக அதற்கான நேரமும் எனக்கு வாய்த்திருக்கிறது. உங்களில் யாருக்காவது இது பிடிக்கவில்லை என்றால் சொல்லுங்கள். வேறு வழி யோசிக்கலாம்.

அனுஜன்யா

Unknown said...

// @ மேடி

ஹா ஹா, எவ்வளவு பேருக்கு 'மண்ட காயுற' பின்னூட்டம் போடுற. கொஞ்சம் அனுபவி :) சொல்றேன் - கடைசியில்

நன்றி மேடி. உன்ன கலாய்க்கலாம்ல? ///





நா ஞானி ஆகக்கூடாதுங்கரதுல ......... என்ன ஒரு வில்லத்தனம்....!!!

ச.முத்துவேல் said...

இரண்டாவது கவிதை-விளக்கம்-இவ்ளோ இருக்கா இதன் பின்னணியில!Then, great!

/Hemingway எழுதிய The Old Man and the Sea படித்திருப்பீர்கள்/
சர்தான். நானா? என்னை வச்சு காமெடி..கீமெடி? :) எங்கேங்க. தமிழுக்கே தத்தளிக்கிறேன்.

4 வது கவிதை- ம்? ம்ஹூம்.:)

எல்லோருக்குமான பதிவு-இப்படியே தொடரலாம்.பிடித்திருக்கிறது.

thamizhparavai said...

//அவைகளுக்கு பதில் சொல்வது அவர்களுக்கான குறைந்தபட்ச மரியாதை. நல்ல வேளையாக அதற்கான நேரமும் எனக்கு வாய்த்திருக்கிறது. உங்களில் யாருக்காவது இது பிடிக்கவில்லை என்றால் சொல்லுங்கள். வேறு வழி யோசிக்கலாம்.
//
அனுஜன்யா தயவு செய்து வேறு வழி யோசித்திர வேண்டாம். இதுவே மிகச்சிறந்த வழியாகும். இதனை வழிமொழிகிறேன்...

na.jothi said...

ரொம்ப நாளா உங்க ப்ளாக்
பக்கம் வரலனு ஒத்துக்கறேன்
அதுக்காக இப்படி சொல்லிட்டிங்களே
அண்ணே

Ashok D said...

//உங்க எதிர்வினை நல்லாவே இருக்கு. எழுதுங்களேன்//
ஒரு வார்த்தை எவ்வளவு தந்துருஷ்டியை தருகிறது...

http://www.ashokpakkangal.blogspot.com/

கொஞ்சம் கிறுக்கியிருக்கேன்.... படித்துபாருங்கள்
All are just 3 or 4 liner, it wont take much time….
எல்லோருக்கும் தான்பா...(narsim,mankurdirai,etc..)
(படிச்சிட்டு நல்லாயில்லன்னா பின்னோட்டம் போடுங்க தூக்கிருவோம்.Anu)

//அவைகளுக்கு பதில் சொல்வது அவர்களுக்கான குறைந்தபட்ச மரியாதை.// சத்யமான வார்த்தைகள் அனுஜன்யா

thamizhparavai said...

தலை அப்பிடியே ஒரு எட்டு இங்க வந்துட்டுப் போங்க...http://thamizhparavai.blogspot.com/2009/05/blog-post_08.html

ராமலக்ஷ்மி said...

//வயோதிகம் கடிகாரமாய்
துடித்துக் கொண்டிருக்கிறது
இன்னொரு நாளைப்
பார்த்துவிடும் உயிர்ப்புடன்//

உருக்கம்.

//நின்று கொன்றால்
எதுவும் தெய்வந்தான்//

இவ்வரிகள் அசத்தல். ஹி, உங்கள் விளக்கத்தினால் இன்னும் நன்றாகப் புரிந்தது.

கடைசியாக இப்படி சிக்கலான கவிதைகளுக்கு ஓரிரு நாள் கழித்து விளக்கமும் கொடுக்கலாம்தான். வார்த்தைகளையும் வரிகளையும் மாத்திரம் வியந்து விட்டுப் போய் விடாமல் எல்லோரும் முழுமையாய்ப் புரிந்து ரசிப்போம்ல:)!

மண்குதிரை said...

தலைவரே இதுக்கு இப்படி ஒரு அர்த்தம் உண்டா? ஆமை ஒகே உள்ளங்கைக்குள், நா வேற நினைத்தேன்.

பல பொருள் தருகிற இதைத்தான் "global standard" கவிதை என்பர்களோ!

சிவக்குமரன் said...

////முரளிகண்ணன் said...
அனைத்தும் அருமை//

இது அதை விட அருமை..

//குசும்பன் said...
//பிரித்ததும் வீசி எறியப்பட்ட
உறையின் உட்புறத்து//

புரியவில்லை தயவு செய்து விளக்கவும்//

புரிந்துவிட்டது.தயவு செய்து செய்முறை காட்டவும்../////


கவிதைய விட கவிதைக்கு வர பின்னூட்டங்களைத்தான் நான் ரொம்ப ரசித்தேன். என்ன பண்றது, நம்ம புரிதல் அவ்ளோதான்.

Karthikeyan G said...

உங்கள் கவிதைக்கான விளக்கங்களை நீங்களே தருகிறீர்களே?
இது நல்ல கவிதையின் வசீகரத்தை நீக்கி கவிதையை மிக சாதரண வரிகளாக தோன்ற செய்து விடுகிறது.(Atleast எனக்கு மட்டுமாவது)

தமிழ் said...

/வயோதிகம் கடிகாரமாய்
துடித்துக் கொண்டிருக்கிறது
இன்னொரு நாளைப்
பார்த்துவிடும் உயிர்ப்புடன்


**************************************************

உனக்கான என் அன்பு
உணரப்படாமல்
மறைந்திருக்கிறது
பிரித்ததும் வீசி எறியப்பட்ட
உறையின் உட்புறத்து
இளஞ்சிவப்பு காகிதம் போல்/

இரண்டும் என்
இதயத்தைக் கவர்ந்தது

Ashok D said...

உலர்த்தப்பட்ட ஆடையின்
நாலைந்து ஓட்டைகள் (கிழிசல்)
உள்ளங்கை(அளவே குளத்தில் நீர்) என பொருள் கொண்டேன்

நீங்கள் விளக்கியதும் தெளிவு கொண்டேன்

anujanya said...

@ மேடி

நீ இப்பவே ஒரு 'ஞானி' தான். :)

@ முத்துவேல்

நாலாவது : ம்ஹும்? இதுக்கு மேல.. சுந்தர் இல்ல, கார்த்திகேயன் G வந்து அடிப்பாரு :)

நன்றி முத்து.

@ தமிழ்ப்பறவை

நன்றி. அங்கயும் வந்துட்டேனே :)

@ J

சாரிபா. 'புன்னகை' னு வந்திருந்தா உடனே தெரிஞ்சிருக்கும். நீ நம்ம ஆளு :)

@ அசோக்

நல்லா எழுதுறீங்க. யாத்ரா/சேரல்/மண்குதிரை/
பிரவின்ஸ்கா/நந்தா என்று ஒரு பட்டாளமே ரொம்ப அழகாக எழுதுகிறார்கள். அவர்கள் கவிதையைப் படியுங்கள். இன்னும் மெருகேறும்.

உங்களுக்கு விளக்கம் கொடுத்தால் மகிழ்ச்சி. சில பேருக்கு கிர்ர்ர்ர்ர் :)

@ ராமலக்ஷ்மி

நன்றி சகோ. மேலே சொன்னதுதான். விளக்கம் கொடுப்பதில் சிக்கல்கள் இருக்கு.

@ மண்குதிரை

விளக்கம் கொடுக்கக் கூடாதென்பது தெய்வீகம். அதை அவ்வப்போது மீறுவது மனிதம் :)

@ சிவக்குமாரன்

வாப்பா. நல்லா இரு :) நன்றி சிவா.

@ கார்த்திகேயன் G.

உண்மைதான் கார்த்தி. ஆயினும், சில பேருக்கு இதில் ஒரு சுவாரஸ்யம் இருப்பதை மறுக்க முடியாது. But by and large I agree with you. நன்றி கார்த்தி.

@ திழ்மிளிர்

ஹாய் திகழ்மிளிர், எப்படி இருக்கிறாய்? ரொம்ப நாட்களுக்குப் பின் வருகை! நன்றி.

அனுஜன்யா

ச.முத்துவேல் said...

அந்தக் கவிதைக்கு இதுக்கு மேல நான் விளக்கம் கேட்கல.
“புரிஞ்சுடிச்சு. ஆனா,அதுக்கப்புறம் பிடிக்கலன்னு சொல்லியிருக்கிறேன்”.( நான் இப்படியொரு விளக்கத்தைச் சொல்லி மாட்டிக்காம இருந்திருக்கலாம்)

யாத்ரா said...

அண்ணா, நவீன விருட்சத்திலேயே படிச்சேன் கவிதைகளை, மிகவும் பிடித்திருந்தது, எல்லாமே பிடித்திருக்கிறது, குறிப்பாக உள்ளங்கைக் குளம் கவிதை தரும் பரவசம், அப்படியே மனசெல்லாம் ஜில்லுன்னு ஆயிடுச்சு.

ச.முத்துவேல் said...

ரைட்டு . நான் சொன்னமாதிரியே மாட்டிக்கிட்டேன். என்னைக்குத்தான் நான் டெவலப் ஆகப்போறேன்னு தெரியல. யாத்ராகிட்ட இது தொடர்பா பேசிப் புரிஞ்சுக்கிறன்.தேர்ந்த வாசகனாவதே பெரிய விசயந்தான். :)

கிருத்திகா ஸ்ரீதர் said...

"மங்கிய தன் கண்களால்
ஆமையைக் கும்பிட்டான்"
ம்ம்ம் அற்புதமான வரிகள்...

anujanya said...

@ முத்துவேல்

அப்படியெல்லாம் இல்லை முத்து. நாமாகவே புரிந்து கொண்டால் கவிதை வரிகள் அழகாக இருக்கும். இன்னும் என்னவெல்லாம் இருக்கோ என்ற எண்ணம் இன்னும் அதன் மாய அழகில் இலயிக்கும். 'அர்த்தம் சொல்கிறேன்' என்று போட்டு உடைத்து விட்டால், சுவாரஸ்யம் போய் விடும். சுந்தர் சும்மாவா சொல்றாரு!

அதனால இந்த கவிதை சாதாரணமாகத் தெரிந்தால் இருக்கட்டுமே. லூஸ்ல விடுங்க தல.

@ யாத்ரா

நன்றி யாத்ரா. அந்தக் கவிதை என் கண் முன்னால் நடந்தது. அதை எப்படியாவது எழுதிவிட வேண்டும் என்றும் உடனே தோன்றியது.

@ கிருத்திகா

வாங்க கவிதாயினி. பயணமெல்லாம் இனிதே முடிந்ததா? அங்க வந்து நிறைய படிக்கணும். ஒரே arrears ! நன்றி கிருத்திகா.

அனுஜன்யா

காஞ்சனை said...

அனுஜன்யா,
உங்கள் வலைப்பக்கம் வந்து வெகு நாட்களாகிறது. அருமையாக எழுதியிருக்கிறீர்கள், எல்லாப் பதிவையும்..

இதில் //வயோதிகம் கடிகாரமாய்
துடித்துக் கொண்டிருக்கிறது
இன்னொரு நாளைப்
பார்த்துவிடும் உயிர்ப்புடன்//

மனதைத் தொட்டது. விவரிக்க முடியாத உணர்வலைகள். நல்லாருக்கு..

anujanya said...

@ சகாராதென்றல்

வாவ், எவ்வளவு நாட்கள் கழித்து மீண்டும் வருகிறீர்கள் சஹாரா! . நானும் அங்கு வந்து பார்க்க வேண்டும். நன்றி உங்கள் பாராட்டுக்கு.

அனுஜன்யா