Monday, May 18, 2009

விடு - முறைகளை


தேர்தலுக்கு ஒரு நாள்
உழைப்பாளருக்கு ஒரு நாள்
சனி, ஞாயிறு இரு நாள்
உப்பிய தொப்பையைத் தடவிய
உழைக்காத கைகள்
மை கறை படியா இடக்கை நடுவிரல்
வெளியேறிய வாகனங்களில்
குடிமகன்களின் ஒரே கவலை
நீர்வீழ்ச்சிகளிலும்
அடர்கானகத்திலும்
ஐ.பி.எல். காண முடியாதென்பது தான்
மறுநாள் எண்ணைத் தைலத்துடன்
சிரித்துக் கொண்டார்கள்
நகரில் நூற்றுக்கு நாற்பத்திரெண்டு
முட்டாள்கள் இருப்பதாக

(கீற்று மின்னிதழில் வெளியானது)

47 comments:

கார்க்கிபவா said...

நல்லா இருக்கு.. ஆனா ஓட்டு போட்ட புத்திசாலிகள் என்ன நல்லவர்களுக்கா ஓட்டுப் போட்டார்கள்? அதுக்கு போடமாலும் இருக்கலாம்.. :)))

Cable சங்கர் said...

ஓட்டு போடறது கடமைன்னு சொல்லிட்டு.. இப்படி நக்கலடிக்கிறது.. நல்லாயில்ல.. ஏதோ நீஙக் எல்லாம் சொன்னீங்கண்னுதானே நான் ஓட்டு போட்டேன் கார்க்கி

Unknown said...

நல்லா வந்திருக்கு.நானும் அந்த பேலன்ஸ் (100-42)58ல் இருக்கேங்க.
அப்ப கொடிவேரில அருவில குளிச்சுட்டு இருந்தேங்க.

//நீர்வீழ்ச்சிகளிலும்//

மனது பதறவில்லை.

Anonymous said...

தப்பு கார்க்கி. ஓட்டுப் போட்டவர்கள்தான் பா ம க வை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். ஆக மக்கள் சில நிர்பந்தங்களுக்கு அடிபணிந்தாலும் (மதுரை) அவர்கள் சுயமாகச் செயலாற்ற சந்தர்ப்பம் கிட்டும்போது சரியாகத்தான் செய்கிறார்கள்.

எங்களூர் கொங்கு முன் பேரவை. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட் காலி. இது சதி அரசியலுக்கு மக்கள் வைத்த வேட்டு.

Anonymous said...

சாரி அனு கவிதையைப் பற்றி ஏது கூறவில்லை அந்தப் பின்னூட்டத்தில்.

முதன் முறையாகக் கார்க்கிக்குப் புரியும்படி எழுதியிருப்பதால் இது கவிதையா?

சென்ஷி said...

////நீர்வீழ்ச்சிகளிலும்//

மனது பதறவில்லை.//

மனம் பதறித்தான் போகிறது ரவிஷங்கர்! :))

தலைப்பில் ஒரு சிறு கோடு பிரித்திருக்கிற முறைகளை தனியே சித்தரித்திருப்பது அழகு!

sakthi said...

குடிமகன்களின் ஒரே கவலை
நீர்வீழ்ச்சிகளிலும்
அடர்கானகத்திலும்
ஐ.பி.எல். காண முடியாதென்பது தான்

நல்லா கேட்டிங்க உறைக்கிற மாதிரி

மண்குதிரை said...

எளிய நடையில் நல்ல பகடி தலைவரே..

sakthi said...

முதன் முறையாகக் கார்க்கிக்குப் புரியும்படி எழுதியிருப்பதால் இது கவிதையா?

அதானே எனக்கு கூட புரியுதே

இரா. வசந்த குமார். said...

left hand mid finger...?

i think the ink is lined on left hand index finger...

நர்சிம் said...

டாப்பிக்கலா ஒரு கலக்கல்.. தலைப்பு கலகலக்கல்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கவிதையும், தலைப்பும் பிடித்திருக்கிறது. கவிதையை இன்னும் கொஞ்சம் செதுக்கியிருக்கலாம் :)

Mahesh said...

விட்டார்களே - முறைகளை... :(

selventhiran said...

நீங்களும் இப்படி கிளம்பிட்டிங்களா...

தமிழன்-கறுப்பி... said...

:))

Revathyrkrishnan said...

சமுதாய சிந்தனையில் எழுந்த கோபமா?? புரிகிறது அனுஜன்யா...

நந்தாகுமாரன் said...

கவிதையின் visual imagery content எனக்குப் பிடித்திருக்கிறது

ராமலக்ஷ்மி said...

அருமை:)! தலைப்பு அட்டகாசம்.

Sanjai Gandhi said...

சூப்பர் மாமா.. தவிர்க்க முடியாத காரணங்களால் வாக்களிக்கதவர்கள் தவிர கொழுப்பெடுத்த ஓட்டுப் போடாதவர்கள் எல்லாம் குற்றவாளிகள் தான். யாருக்கும் வாக்களிக்க விரும்பலைனா 49ஓ வை பயன்படுத்தறது தானே.

//ஓட்டுப் போட்டவர்கள்தான் பா ம க வை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். ஆக மக்கள் சில நிர்பந்தங்களுக்கு அடிபணிந்தாலும் (மதுரை) அவர்கள் சுயமாகச் செயலாற்ற சந்தர்ப்பம் கிட்டும்போது சரியாகத்தான் செய்கிறார்கள்.

எங்களூர் கொங்கு முன் பேரவை. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட் காலி. இது சதி அரசியலுக்கு மக்கள் வைத்த வேட்டு//

அண்ணாச்சி சொன்னதை வழி மொழிகிறேன். எல்லோரும் நமக்கென்னனு ஓட்டுப் போடாம இருந்திருந்தா வாக்கு சதவீதம் குறைந்திருக்கும். இவர்களின் பங்களிப்பு பெரிதாய் தெரிந்திருக்கும்.



இந்தக் கவிதை எனக்கே புரியுதே.. அப்டினா இதை அனுஜன்யா மாம்ஸ் கவிதைன்னு ஒத்துக்க முடியாது. ;)

அன்புடன் அருணா said...

:((
அன்புடன் அருணா

புதியவன் said...

சமூகத்தின் மேலுள்ள கோபமும் அக்கறையும் தெளிவாகத் தெரிகிறது கவிதையில்...

ஆ.சுதா said...

நல்லா இருக்கு கவிதை.

Thamira said...

கவிதை புரிந்துவிட்டதால் சப்பென்றாகிவிட்டது அங்கிள்.. அப்புறம் அது எந்த நிமிடத்திலும் நிகழ்ந்துவிடலாம்.. முதல் வாழ்த்தாக என்னுடையதை குறித்துக்கொள்ளுங்கள். 100 வாழ்த்துகள்.!

thamizhparavai said...

இந்த விஷயத்துல ஒண்ணும் சொல்றதுக்கில்ல தல...

நாணல் said...

:) நல்ல கவிதை...

ச.முத்துவேல் said...

நல்லாயிருக்கு. கீற்றுவில் வந்ததற்கு வாழ்த்துகள்.

யாத்ரா said...

கவிதை அருமை,

ஓட்டு பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. அதுவும் இன்றைய மனநிலையில்.

வால்பையன் said...

நானும் ஒரு முட்டாள் தான்!

Ashok D said...

ஓட்டு இட்டார் ஓட்டை(பாமக)அடைத்தார்
ஓட்டு இடார் ஜாலியாக Boatடிட்டார்
விடுமுறையில்

anujanya said...

@ கார்க்கி

உனக்கு வேலன் பதில் சொல்லிட்டாரு. சோம்பேறித்தனத்துக்கும் கொண்டாட்டத்துக்கும் இப்படி ஒரு சால்ஜாப்பு :)

@ கேபிள்

அது அது சங்கர். நல்லா சொல்லுங்க.

@ ரவிசங்கர்

கொடிவேரா? அது எங்க இருக்கு?

பதறவில்லை என்றால் அது அருவியா இருக்கும் :) நன்றி ரவி

@ வேலன்

அது அது. நல்லா சொன்னீங்க கார்க்கிக்கு.

//முதன் முறையாகக் கார்க்கிக்குப் புரியும்படி எழுதியிருப்பதால் இது கவிதையா?//

கரெக்ட் இல்ல?

@ சென்ஷி

நன்றி சென்ஷி. ரவிக்கு உங்க பதிலுக்கும் சேர்த்து நன்றி.

@ சக்தி

நன்றி சக்தி. என்ன சக்தி, நீங்களும் 'கவிதையா இது?' என்கிறீர்கள்.

@ மண்குதிரை

நன்றி மண்குதிரை

@ வசந்த குமார்

நான் இருப்பது மும்பையில். இங்கு இடக்கை நடுவிரலில்தான் இந்த முறை மை வைத்தார்கள். இங்கு மே தினத்திற்கு முன் தினம் தேர்தல். அதுவும் கவிதையில் இருக்கு :)

@ நர்சிம்

நன்றி தல.

@ ஜ்யோவ்

தர்க்கம், தொழில் நுட்பம் .... பல சமயங்களில் நாயும், கல்லும் இரண்டுமே காணவில்லை. நன்றி சுந்தர்.

@ மஹேஷ்

நன்றி மஹேஷ்.

@ செல்வா

ஆமாம், ஆனால் வாக்களித்த பின்புதான் :)

@ தமிழன் கறுப்பி

வாங்க தல. நன்றி. :)

@ ரீனா

ஆமாம் ரீனா, கொஞ்சம் கோபம் :) நன்றி.

@ நந்தா

குறும்பு :) நன்றி நந்தா.

@ ராமலக்ஷ்மி

நன்றி சகோ

@ சஞ்சய்

அதனால தான் உன் கட்சி கூட ஜெயிச்சுருக்கு மாப்ள :)

என்னது, கவிதை இல்லையா? நேரந்தான் :(

@ அருணா

நன்றி ப்ரின்சி. நீங்க போட்டீங்கள ? :)))

@ புதியவன்

நன்றி புதியவன்.

@ முத்துராமலிங்கம்

நன்றி முத்து

@ ஆதி

'அங்கிளா'? இந்த நாப்பது வயசிலேயே உனக்கு இம்புட்டு லொள்ளு இருந்தா, இருபது வயசில என்ன வாலுத்தனம் பண்ணியிருப்ப!

கவித புரிஞ்சா 'சப்'. இல்லாட்டா 'என்னதான் சொல்ல வரீங்க? மண்ட காயுது' நல்லா இரு ஆதி :)

@ தமிழ்ப்பறவை

ஏன் பரணி? நீயும் வோட்டு போடலியா?

@ நாணல்

வாங்க தங்கச்சி. ரொம்ப நாட்களுக்குப் பின் வருகை. நன்றி.

@ முத்துவேல்

நன்றி முத்து.

@ யாத்ரா

நன்றி யாத்ரா.

@ வால்பையன்

எல்லோருமே தான் குரு :)

@ அசோக்

அடேடே! இப்ப எல்லாம் முழு நேரக் கவிஞர் ஆயாச்சா?


அனைவருக்கும்: முதலில் 'எல்லோருக்கும் நன்றி' என்று மட்டும் சொல்லிவிட நினைத்தேன். ஈழ செய்தி மிகுந்த மனச் சோர்வை அளிக்கிறது. பிறகு இதை சற்று மறக்கவே, நண்பர்களுடன் பேசுவது போல எண்ணிக்கொண்டு இந்த பின்னூட்டங்கள்.

அனுஜன்யா

வினோத் கெளதம் said...

நல்லா இருக்கு சார்..
நீங்க தான் எல்லோரும் பார்த்து பயந்து நடுகுங்குகின்ற "கவிதை" அனுஜன்யாவா..:௦)

anujanya said...

@ வினோத்

வாங்க வினோத், முதல் வருகை! கார்க்கி சொல்றத எல்லாம் நம்பாதீங்க. நான் நிஜமா நல்லவன் - இது மாதிரி நீங்க பின்னூட்டம் போடுற வரைக்கும் :)

நன்றி வினோத்.

அனுஜன்யா

RaGhaV said...

அற்புதமான படைப்பு..!

வாழ்த்துக்கள்.. :-)

விக்னேஷ்வரி said...

நல்லா இருக்கு.

TKB காந்தி said...

நல்லா இருக்குங்க. அதென்ன 342, சும்மாவேங்களா?

anujanya said...

@ ராகவேந்திரன்

ஹாய் ராக்ஸ், முதல் வருகை. நன்றி கமெண்டுக்கு.

நன்றி பின்தொடர்வதற்கும். ஏம்பா, வரும்போது இன்னும் இரண்டு பேர கூட்டிட்டு வரக் கூடாதா? 98 லியே அவுட் ஆகிடுவோமோன்னு டென்ஷனா இருக்கு :)


@ விக்னேஷ்வரி

நன்றி சகோ.

@ காந்தி

வாங்க கவிஞர்! இப்ப எந்த ஊரு? 342? புரியல. 42 என்று எழுதியது, மும்பை வாக்குப் பதிவின் சதவிகிதம். நன்றி காந்தி

அனுஜன்யா

ஆதவா said...

ரொம்ப நல்லா எளிமையா இருக்குங்க...

anujanya said...

@ ஆதவா

நன்றி ஆதவா

அனுஜன்யா

பிரவின்ஸ்கா said...

கவிதை மிகவும் அருமை .

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

மணிகண்டன் said...

me the 100th follower !!!!

வசந்த் ஆதிமூலம் said...

102 * - நாட் அவுட் . அனுஜன்யா - கவிதை பேராசிரியர் வகுப்பில் ஒரு லாஸ்ட் பென்ச் ஸ்டுடென்ட் IN முதல் வணக்கம் . நம்மளையும் க்ளாசில சேர்த்துகோங்க சார்...

மணிகண்டன் said...

என்னோட me the 100th follower கமெண்ட் எப்ப ரிலீஸ் பண்ணுவீங்க ? :)- உலகத்துக்கு தெரியாமயே போய்டும் !

anujanya said...

@ பிரவின்ஸ்கா

ஹாய் பிரவின்ஸ்கா, உங்க முதல் வருகை. நன்றி (பின் தொடர்வதற்கும்)

@ மணி

வாவ், என்ன பொருத்தம். மணியாலதான் நான் சதம் அடிக்கணும்னு இருக்கு. ரொம்ப தேங்க்ஸ் மணி. Appreciate it.

@ வசந்த்

வாங்க வசந்த். ஹல்லோ, நானே பாசாகாமல், டுடோரியல் காலேஜில் சேந்திருக்கேன். வாங்க, வந்து என கூட கட்சி பெஞ்சுல ஒக்காருங்க :) 102 இக்கு நன்றி.

@ மணி

என்ன அவசரம். எதுக்கும், இது அல்பாயுசா, இல்ல இன்னும் ஒரு நாலஞ்சு பேரு வராங்களானு பாக்கத்தான். இப்ப பரவாயில்ல. 104.

ஊர்ல இல்லப்பா. சிவகாசி, மதுரை, சென்னைனு போயிட்டு இப்பதான் (monday) வந்தேன்.

என்னைப் பின்தொடரும் 104 பேருக்கும் மிக மிக நன்றி. இதெல்லாம் எனக்கு ஒன்றும் இல்லை என்றோ இது வெறும் எண் என்றோ, சுவாரஸ்யம் காட்டாமல் விலகும் உதேதேசம் இல்லை. இது உண்மையிலேயே மகிழ்ச்சி கொடுக்கும் விஷயம். மேலும் கொஞ்சம் பொறுப்புணர்ச்சியும் தருது. நம்மளையும் ஆளா மதிச்சு ஒரு நூறு பேரு இருக்காங்கன்னா, I should do justice. Thanks buddies. I really value each one of your gesture.

அனுஜன்யா

Sanjai Gandhi said...

//நம்மளையும் ஆளா மதிச்சு ஒரு நூறு பேரு இருக்காங்கன்னா, I should do justice. Thanks buddies. I really value each one of your gesture.//

உங்க தன்னடக்கத்துல அரை லோடு திருட்டு மணல் அள்ளிப் போட.. நானெல்லாம் உங்கள பாலோ பண்ற லிஸ்ட்ல அட்மிஷன் போடலை. ஆனா ரீடர்ல படிக்கிறேன். என்னை மாதிரி ஆயிரக் கணக்குல இருப்பாங்க.. அதனால இந்த நூரை மட்டுமே மைண்ட வைக்காதிங்க.. நீங்க சிகரம் தொட்டு நாளாச்சி.. :)

anujanya said...

அடப்பாவி சஞ்சய்,

இந்த மாதிரி கயமைத் தனம் வேற பண்ணுறியா? முதல் வேலையா 'பின் தொடரு'.

Jokes apart, thanks v.m. Sanjai.

அனுஜன்யா

கிருத்திகா ஸ்ரீதர் said...

"நகரில் நூற்றுக்கு நாற்பத்திரெண்டு
முட்டாள்கள் இருப்பதாக"
அறுபத்து மூணுன்னா சொன்னாங்க????
நல்லாருக்கு...

anujanya said...

@ கிருத்திகா

நன்றி கிருத்திகா . மும்பையில் 42% தான் :( . இந்தியாவிலேயே மிகவும் குறைந்த வாக்குப்பதிவு.

அனுஜன்யா