Wednesday, October 14, 2009

கொன்றை வேந்தன்


சொல்லி வைத்தாற்போல்
எல்லா மரங்களிலும்
மஞ்சள் தொப்பிகள்
ஊரிலிருந்து வந்த அவள்
சரக்கொன்னை பூக்கள் என்றாள்
உபரித் தகவலாக
சிவனுக்கு உகந்தது என்றாள்
மயான சாம்பலாலும்
கழுத்துப் பாம்புகளாலும்
அஞ்சியிருந்த நான்
இரண்டு எட்டெடுத்து
சரக்கொன்றைகளில் இரண்டையுருவி
சிவன் கழுத்திலும் போட்டேன்
கழுத்தின் நீலம்
மஞ்சளாக மாறிற்று
சூடப்படாத
மீதிக் கொன்றைகளில்
நீலம் பாய்ந்தது இரவில்

(உயிரோசை 29th June 2009 மின்னிதழில் பிரசுரம் ஆகியது)

33 comments:

ஆரூரன் விசுவநாதன் said...

//கழுத்தின் நீலம்
மஞ்சளாக மாறிற்று
சூடப்படாத
மீதிக் கொன்றைகளில்
நீலம் பாய்ந்தது இரவில்//


இனிமை

முரளிகண்ணன் said...

இளைஞரே

இது சர்ரியலிஸமா

இல்லை

மேஜிக்கல் ரியலிஸமா?

எதுவாயோ இருக்கட்டும்

அருமையாய் இருக்கிறது

நாடோடி இலக்கியன் said...

ஏதோ புரிந்த மாதிரியும் இருக்கு.

Kumky said...

முரளிகண்ணன் said...

இளைஞரே

இது சர்ரியலிஸமா..

இளைஞரே இது சரியில்லைம்மா...என்று படித்து கொஞ்சம் சந்தோஷப்பட்டு தொலைத்துவிட்டேன்...மன்னிக்கவும்.

Katz said...

Arumai.

யாத்ரா said...

கவிதை ரொம்பப் பிடித்திருக்கிறது.

\\சூடப்படாத
மீதிக் கொன்றைகளில்
நீலம் பாய்ந்தது இரவில்\\

மஞ்சள் நீலமாகவும் நீலம் மஞ்சளாகவும்,,,,,,, நிறங்கள் நிறங்களிலிருக்கிறதா, கண்களிலிருக்கிறதா, மனத்திலிருக்கிறதா ,,,,,,,, வர்ணங்கள் உணர்த்துவது என்ன, உணர்த்துவதும் உணர்வதும் ஒன்று தாமா,,,,,,,,

நேசமித்ரன் said...

கவிதையை கீழிருந்து மேலாக வாசித்து பார்த்தேன் அனு
பெண் பார்க்கப்படும் பெண்ணின் பார்வையுடன் அந்தக் கவிதையும்
அழகு

ஊரிலிருந்து வந்தப் பெண் சரக்கொன்னை என்றாளா? இல்லை தட்டச்சுப் பிழையா ?
:)\

Ashok D said...

//மயான சாம்பலாலும்
கழுத்துப் பாம்புகளாலும் அஞ்சியிருந்த //

பாம்பு.. சிலருக்கு பயம் இருக்கும்
மயான சாம்பல்ல...?
சரி பாம்பு சாம்புன்னு ..ok
பொழச்சி போங்க


இப்படிக்கு பிரபல கவிஞர்
D.R.அஷோக்

(பிரபல கவிஞர் - அரசியல்ல இதெல்லாம் சாதாணரனமப்பா..)

Ashok D said...

அச்சச்சோ பத்திரிக்கையில்ல பிரசுரம் ஆகிடுச்சா.. இப்போதான்.. கவனிச்சேன்..

கவித சூப்பருங்கோ...

Unknown said...

// சிவன் கழுத்திலும் போட்டேன்
கழுத்தின் நீலம்
மஞ்சளாக மாறிற்று
சூடப்படாத
மீதிக் கொன்றைகளில்
நீலம் பாய்ந்தது இரவில் ///


ஆஹா... ஆஹா... அபாரம்... அபாரம்....!!

வால்பையன் said...

எதிர் கவுஜ போடலாம்னு பார்த்தா திரும்பி வந்த ஆப்பு நான் உங்களுக்கு அல்லக்கைன்னு சொல்றாரே தல!

எனக்கு ஒன்னும் பிரச்சனையில்ல, உங்களுக்கு ஒகேனா போட்டுடலாம்!

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லா இருக்கு அனு.

Vidhoosh said...

:) ஆவென்று வாய் திறந்து படித்துக்கொண்டேன்.

--வித்யா

நர்சிம் said...

தலைப்பே கவிதைண்ணா

பித்தன் said...

interesting....

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

கவிதை அழகு, அருமை.

மண்குதிரை said...

nice...

தராசு said...

அந்த கடைசி வரி அப்படியே டச்சிங் தல.

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

அருமை.. :))

மாதவராஜ் said...

கூடுவிட்டு கூடு பாய்வது இதுதானா...!
பிட்டுக்கு மண்சுமந்த கதையில் விழுந்த ஒரு அடி, உலகத்துக்கே விழுந்ததே... அப்படியா...?
இந்த நீலம் ஒரு புதிர்தான். கடலாயிருந்தாலும், வானாய் இருந்தாலும், கொன்றை பூக்களில் பாய்ந்தாலும்.

"உழவன்" "Uzhavan" said...

படித்தோம் :-)

ரௌத்ரன் said...

மறுபடியுமா :))

ச.முத்துவேல் said...

நல்ல ஃபீல் கொடுத்தது இந்தக் கவிதை.விளக்கமுடியாது. எப்படித்தான் எழுதுனீங்களோன்னு ஆச்சரியமாயிருக்குது.(ஆச்சைரியம்,கிண்டலான அர்த்தத்தில் அல்ல)

அமிர்தவர்ஷினி அம்மா said...

அருமை

ராமலக்ஷ்மி said...

//கழுத்தின் நீலம்
மஞ்சளாக மாறிற்று
சூடப்படாத
மீதிக் கொன்றைகளில்
நீலம் பாய்ந்தது இரவில்//

வரிகள் அழகு.

கவிதை அருமை.!

anujanya said...

@ ஆரூரன் விசுவநாதன்

நன்றி உங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும்.

@ முரளிகண்ணன்

குறும்பு? நன்றி முரளி.

@ நாடோடி இலக்கியன்

அதேதான். நன்றி பாஸ்.

@ கும்க்கி

//இது சர்ரியலிஸமா..

இளைஞரே இது சரியில்லைம்மா...//

அக்மார்க் கும்க்கி. சரி சரி.

@ வழிப்போக்கன்

வாங்க. ஏன் ரொம்ப நாட்களாக எழுதுவதில்லை?

நன்றி

@ TVR

நன்றி சார்.

@ யாத்ரா

உங்கள் வாசிப்பும், புரிதலும் ......அட்டகாசம்.

நன்றி யாத்ரா

@ நேசமித்ரன்

//பெண் பார்க்கப்படும் பெண்ணின் பார்வையுடன்//

:)))))

ஊர்ப் பெண் பேசுந்தமிழ் அப்படி :)

நன்றி நேசன்

@ அசோக்

ஒரு நிமிடம் இது மேடியின் கமன்ட்டோ என்று நினைத்தேன் :)

நன்றி அசோக்

@ மேடி

//ஆஹா... ஆஹா... அபாரம்... அபாரம்....!!//

புரியுது பாஸ் :)))

நன்றி மேடி

@ வால்பையன்

'அல்லக்கை' என்றால் ஏதோ கெட்டவார்த்தை என்று நினைத்திருந்தேன் :)

கருத்து ஓரளவு சரியென்றாலும் சொல்லிய விதம் எனக்குப் பிடிக்கவில்லை. கருத்துக்கு மதிப்பளித்து எதிர் கவுஜ எழுதாமல் இருக்கலாம். I leave it to you.

@ ராஜாராம்

நன்றி ராஜா.

@ விதூஷ்

பின்னூட்டமே ஒரு பூடகமான கவிதையா இருக்கே :)

நன்றி வித்யா

@ நர்சிம்

நன்றி நர்சிம்

@ பித்தன்

தேங்க்ஸ் பாஸ்

@ ஜெஸ்வந்தி

ரொம்ப நன்றி ஜெஸ்வந்தி

@ மண்குதிரை

தேங்க்ஸ்

@ தராசு

நன்றி பாஸ்.

@ அக்கிலீஸ்

நன்றி அக்கிலீஸ்

அனுஜன்யா

anujanya said...

@ மாதவராஜ்

//நீலம் ஒரு புதிர்தான். கடலாயிருந்தாலும், வானாய் இருந்தாலும், கொன்றை பூக்களில் பாய்ந்தாலும்.//

மிக ரசித்தேன் உங்கள் பின்னூட்டத்தை. நன்றி மாதவ்.

@ உழவன்

நன்றி. புரியவில்லை/பிடிக்கவில்லை என்று அர்த்தமா? :)

@ ரௌத்ரன்

ஹா ஹா ஹா.

@ அன்புடன் மணிகண்டன்

தேங்க்ஸ் பாஸ்.

@ முத்துவேல்

//நல்ல ஃபீல் கொடுத்தது இந்தக் கவிதை.விளக்கமுடியாது. எப்படித்தான் எழுதுனீங்களோன்னு ஆச்சரியமாயிருக்குது//

எனக்கும் இதேதான் :). நன்றி முத்து.

@ அமித்து.அம்மா

நன்றி AA

@ நாஞ்சில் நாதம்

யோவ்!

தேங்க்ஸ்.

@ ராமலக்ஷ்மி

நன்றி சகோ. அங்க வரணும்.

அனுஜன்யா

வாசகன் said...

கவிதையனுபவத்திற்கான கருத்து அருமை...

ஆனால் கவிதையாய் அமைந்த வார்த்தைகள் இன்னும் செப்பனிடப்பட்டிருக்கலாம் என்பது என் எண்ணம்.

anujanya said...

@ வாசகன்

வாங்க சார். செப்பனிட்டிருக்கலாம் போலத்தான் எனக்கும் தோன்றுகிறது. பொதுவாகவே என் எல்லாக் கவிதைகளிலும் மொழி எனக்கு முழுதும் பிடித்திருப்பதாக இல்லை. இன்னும் எளிமையாக, ஆழமாக இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால், அவரவர் சக்தி என்று ஒன்று உண்டே!

வெகு நாட்களுக்குப் பிறகு வருகை தந்து, பாராட்டியதற்கு ரொம்ப நன்றி சார்.

அனுஜன்யா

Unknown said...

ஆத்திசூடி, கொன்றை வேந்தன் எல்லாம் நானும் படிச்சிருக்கேனே... நீ தானே அண்ணா சொல்லி தந்த.. நான் தேர்ட் ஸ்டாண்டர்ட் படிக்கும் போது, நீ அப்போ டென்த் ஸ்டாண்டர்ட் படிச்சியே??

Thamira said...

விவரிக்கமுடியாத உணர்வை ஏற்படுத்தியது இந்தக்கவிதை. கவிதை இதைத்தான் செய்யவேண்டுமில்லையா..!

anujanya said...

@ ஸ்ரீமதி

நீ மூணாவது படிக்கும் போது நான் பத்தாவப்பா? ஓகே. பரவாயில்ல, எனக்கு இந்த டீல் பிடிச்சிருக்கு ஸ்ரீ :)

எப்படி இருக்க? முக்கியமா 'அவர்' எப்படி தாக்குப் பிடிக்கிறார்?

@ ஆதி

என்னிக்காவது ஒரு நாள் உண்மை வெளிய வந்துதான் தீர வேண்டும் :)))

நம்ம வலையில் ஒரு மான் மாட்டிக்கிச்சு. எல்லோரும் ஓடியாங்க.

நன்றி ஆதி

அனுஜன்யா

thamizhparavai said...

ரசித்தேன் அனு சார்...