Tuesday, October 20, 2009

நம்பிக்கைத் துரோகம்



கற்பனை வறட்சி, சுய சிந்தனையின்மை போன்ற உபாதைகளில் அடிக்கடி நான் அவதிப்படுவதால், அவ்வப்போது ஆங்கிலத்தில் படித்தவற்றில் சிலவற்றை மொழியாக்கம் செய்யும் உத்தேசம் இப்போது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கதை, கவிதை, கட்டுரை என்று. எப்படி இருந்தாலும் ரொம்ப பாவம்தான் நீங்கள்!

இந்த முறை ஒரு Topical கவிதை
நம்பிக்கைத் துரோகம்

எவ்வாறு நான் ஒருவரை நம்ப முடியும்
அவ்வொருவர் என் நம்பிக்கையைத் தகர்த்தபின்
என் இதயம் வெறுமையாக
பனிக்கட்டி போல் உறைந்து
உடையும் தறுவாயில்
நீர் கசிகிறது
அந்நீர் சொட்டி, வழிந்தோடுகிறது
அந்த நம்பிக்கை
அந்தத் தருணம்
அதற்குள் இருந்த எல்லாவற்றையும்
நீ உடைத்தெறிந்து விட்டாய்
உன்னையோ உன் நண்பர்களையோ
நம்புவதற்கில்லை
ஆனால் நாம் நண்பர்களில்லை என்றில்லை
வெறும் நட்பு - நம்பிக்கையற்ற நட்பு மட்டுமே
என் நம்பிக்கையை மீள்பெற நீ முயன்றிட வேண்டும்
உன்னை மீண்டும் எப்போதேனும் நம்புவதற்கான
காரணங்களை எனக்குப் புரியச் செய்
உடைந்த நம்பிக்கைகளை
சீரமைக்க வேண்டும்
நீ கடினமாக முயல வேண்டும்
அதற்காக நீ என்னை
வெறுக்கவேண்டும் என்றில்லை
உன்னை மீண்டும் நம்பலாமென
எனக்குக் காண்பியேன்

(Jennifer Rondeau என்னும் கவிதாயினியின் ஆங்கிலக் கவிதையிலிருந்து (முடிந்தவரை) மொழியாக்கம். )

என் பிரிய ஜ்யோவுக்காக :((

22 comments:

பா.ராஜாராம் said...

அருமையான கவிதை,பகிர்வு அனு.நேர பொருத்தமும் கூட!நண்பர்களுக்கு தர நம்மிடம் வேறு என்ன இருக்கு?ஒரு பேனாவும்,கொஞ்சம் எழுத்தும்.கொண்டு நேர் செய்திருக்கிறீர்கள்!அன்பு நிறைய மக்கா.

மணிகண்டன் said...

உங்க கவிதை அளவுக்கு effective ஆக இல்லை. எனக்கு படிச்சவுடன புரியுது :)-

Karthikeyan G said...

சார், கவிதையின் ஆங்கில மூலம் எங்கே... ( குற்றம் கண்டுபிடிக்கத்தான் ;-) )

Anonymous said...

ஒரு simple & straightforward் கவிதை.நல்லா இருக்கு.

நர்சிம் said...

கவிதை நல்லாத்தான் இருக்கு..ஆனா ‘மீண்டும் நம்பலாமென எனக்கு காமியேன்’ எல்லாம் வேண்டமப்பா சாமீகளா.காட்டுன வரைக்கும் போதும்.

ஹேமா said...

மொழிபெயர்ப்பானாலும் நல்லாவே இருக்கு.மொழிபெயர்த்துக் கோர்த்த விதமும் அருமை.

Rajan said...

நல்லா இருக்குங்க... வாழ்த்துகள்

அன்புடன் மணிகண்டன் said...

//ஆனா ‘மீண்டும் நம்பலாமென எனக்கு காமியேன்’ எல்லாம் வேண்டமப்பா சாமீகளா.காட்டுன வரைக்கும் போதும்.//

வாஸ்தவம் தான்...

யாத்ரா said...

அருமையான கவிதையை ரொம்ப அழகாக தமிழாக்கி அளித்திருக்கிறீர்கள், ரொம்ப நன்றி, தொடர்ந்து உங்கள் மொழிபெயர்ப்பு கவிதைகளுக்காகவும் காத்திருக்கிறேன்.

Mahesh said...

உங்களோட இன்னொரு முகம்.... அருமை !!!

ஹ்ம்ம்.... இதையெல்லாம் படிக்கும்போது நானெல்லாம் டம்மி பீஸோன்னு தோணுது... நிஜமாவே :(

அ.மு.செய்யது said...

//என் பிரிய ஜ்யோவுக்காக :((//

//உன்னை மீண்டும் நம்பலாமென
எனக்குக் காண்பியேன்//

:)))))))))))

க.பாலாசி said...

//வழிந்தோடுகிறது
அந்த நம்பிக்கை
அந்தத் தருணம்
அதற்குள் இருந்த எல்லாவற்றையும்
நீ உடைத்தெறிந்து விட்டாய்//

துரோகத்தின் வலி.....

கவிதையின் மொழிபெயர்ப்பும் அருமை....

அமிர்தவர்ஷினி அம்மா said...

மொழிபெயர்ப்புக் கவிதை(யும்) நன்றாக இருக்கிறது.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

உடைந்த நம்பிக்கைகள் உடைந்த கண்ணாடி போல் தான் திரும்ப ஒட்டுவது கடினம்.
இது என் அனுபவம் நண்பரே

Ashok D said...

தப்பித்தவறி என்னையும் கவிஞனாக்கிட்டாங்க.. அதனால எதிர்வினையாற்ற என்ன சொல்ல வேண்டுமென யோஜிக்கிறேன்..

ஆஹா.. என்ன அருமையான பின்னோட்டம்.

(ஆஹான்னு அடிக்கறதுக்கு முதல்ல ஆஷான்னு அடிச்சிட்டேன்)

"உழவன்" "Uzhavan" said...

நல்ல பகிர்வு

Anonymous said...

//(ஆஹான்னு அடிக்கறதுக்கு முதல்ல ஆஷான்னு அடிச்சிட்டேன்)//

ஐயோ! அய்யோ ! சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சிடுச்சு நைனா !! என்ன காமெடி ஏன்னா நக்கலு !! எப்படி தான் இப்படி உங்களுக்கு மட்டும் எழுத வருதோ !

நகைச்சுவை என்கிறது ஒரு கலை இல்லையா !! அது கத்துக்கிட்டு எல்லாம் வராது தானா உள்ள இருந்து பொங்கனுமாம் ! உங்களுக்கு நல்லா பொங்குது.

குப்புக் குட்டி

ஈ ரா said...

சிதைக்காமல் மொழியாக்கம் செய்வது கடினமான வேலை.. ரசிக்க வைத்தது... வாழ்ழ்த்துக்கள்

anujanya said...

@ ராஜாராம்

நன்றி ராஜா.

@ மணிகண்டன்

ரொம்ப புகழாதீங்க. கூச்சமா இருக்குன்னு சொல்ல மாட்டேன்.

யோவ், உங்க குசும்புக்கு .......

நன்றி மணி

@ கார்த்திகேயன்

சில பேர் குற்றம் கண்டுபிடித்தே..... சரி சரி லிங்க் கொடுத்து விட்டேன் கார்த்தி :)

நன்றி

@ ஆதித்யா

நன்றி உங்கள் முதல் வருகைக்கும், பாராட்டுக்கும்.

@ நர்சிம்

:). யாவரும் கேளிர்?

@ ஹேமா

நன்றி ஹேமா.

@ ராதாமணாளன்

நல்ல பெயர். நன்றி

@ அன்புடன் மணிகண்டன்

நர்சிமுக்கு இன்னொரு விசிறியா. ரைட்டு :)

நன்றி மணி

@ யாத்ரா

ரொம்ப நன்றி யாத்ரா.

@ மஹேஷ்

எங்க பார்த்தீங்க இன்னொரு முகம்?

அப்படியெல்லாம் இல்ல பாஸ். You are quite versatile.

நன்றி மஹேஷ்.

@ செய்யது

:)))))). நன்றி செய்யது

@ பாலாசி

நன்றி பாஸ்

@ அமித்து.அம்மா

நன்றி AA

@ ஜெஸ்வந்தி

நீங்கள் சொல்வது நடைமுறை யதார்த்தம். கவிதை கற்பனையில் சஞ்சரிக்கிறது.

நன்றி ஜெஸ்வந்தி.

@ அசோக்

//(ஆஹான்னு அடிக்கறதுக்கு முதல்ல ஆஷான்னு அடிச்சிட்டேன்)//

ஹம், நடக்கட்டும். வீட்டம்மா போன் நம்பர் கொடுங்க :)

நன்றி அசோக்

@ உழவன்

நன்றி உழவன்

@ குப்புக் குட்டி என்னும் அனானி

அசோக்கின் விசிறியா நீங்க?

@ ஈ.ரா.

நன்றி பாஸ்.


அனுஜன்யா

Ashok D said...

யாருங்க அது குப்புக்குட்டி...
என்னைய்ய ரொம்ப புகழாதிங்க. anyway ரொம்ப தேங்ஸ்ங்ன்னா..

(மக்கா மேல டவுட் வருது! napolean Black label????

Thamira said...

ரெண்டாவது மூன்றாவது வாட்டி வாசிக்கவேண்டியிருந்தது.

என்னதான் மொழிபெயர்ப்புன்னாலும் எழுதுறது நீங்கதானே.. ஹிஹி.!

anujanya said...

@ அசோக்

புரிஞ்சா சரி :)

@ ஆதி

//என்னதான் மொழிபெயர்ப்புன்னாலும் எழுதுறது நீங்கதானே.. ஹிஹி.!//

நல்லா இருப்பா.

நன்றி ஆதி

அனுஜன்யா