Thursday, December 3, 2009

ஜிப்சிபல நாடுகள் சுற்றிய
எந்த நாட்டுக்கும்
சொந்தமில்லாதவன்
பின்னிரவில் வந்து சேர்ந்தான்
பார்வை பறிபோன
கலங்கரை விளக்கத்தின்
காந்தப் படிகள்
அவனைச் சுழற்றி இழுத்தன
அவனின் தேர்ந்த கால்கள்
இலாவகமாக நகர்ந்தாலும்
ஒரு காளையின் உக்கிரத்துடன்
கலங்கரை விளக்கம்
அவன் உணர்வுகளைக்
கிளறி அலைக்கழித்தது
தன் நேரம் வந்ததை
இறுதியில் உணர்ந்தவன்
கீழ் நோக்கிப் பாய்கையில்
அலைகள் கொந்தளித்து
'ஓலே ஓலே' என்றன
வன்மம் தீர்த்த கலங்கரைக்கும்
மரணத்தின் சோகத்தால்
அமைதியான அலைகளுக்கும்
அவன் இப்போது
பருந்தாக மாறி
வானில் வட்டமடிப்பது தெரியாது

(உயிரோசை 31st August 2009 மின்னிதழில் பிரசுரம் ஆனது)

34 comments:

குசும்பன் said...

கவிதை கவிதை!அருமை!அருமை

கமலேஷ் said...

கவிதை ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு...

Mahesh said...

உங்களுக்கு வடை கிடையாது.... தமிழ் கவிதைக்கு ஜிப்சின்னு இங்கிலிபீச்சுல தலைப்பு வெச்சா எப்பிடி வரி விலக்கு குடுக்கறது?

கவிதை அருமை... வழக்கம்போல..

தராசு said...

இந்த உரையாடல் படுத்துற பாடு இருக்கே!!!!!! என்ன சொல்றது போங்க....

நந்தாகுமாரன் said...

Classic Poetry

மணிஜி said...

குசும்பன் said...
கவிதை கவிதை!அருமை!அருமை

பாவி..இதுக்கு நீ அங்கிளை பச்சையா திட்டியே இருக்கலாம்..

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஏன் சார் திடீர்னு இப்படி :)

கார்க்கிபவா said...

//தராசு said...
இந்த உரையாடல் படுத்துற பாடு இருக்கே!!!!!! என்ன சொல்றது போங்க..//

தராசண்ணே, இதுவும் டெம்ப்ளேட் ஆயிடுச்சா?

இவரு படுத்துற பாடு தாங்காமத்தான் உரையாடல் அமைப்பினர் எல்லோரையும் ரவுடி ஆக்கியே தீருவதென்று கிளம்பிட்டாங்க. மத்தவங்களுக்கு போட்டா ஓக்கே, இவருக்கேவா?

கார்க்கிபவா said...

என்ன தல? கவிதையை பத்தியா? சரி பெப்சி குடிச்சிக்கிட்டே சொல்றேன்.

அவரு இருக்கிற ஊரு மும்பை. செல்ல பேரு யூத் அங்கிள்.

எதுக்கு அடிக்கிறீங்க? எங்களுக்கு நீங்களே ஒரு கவிதைதான் தல..

"உழவன்" "Uzhavan" said...

உங்களின் கவிதைத் தொகுப்பு எப்போது? :-)

யாத்ரா said...

ஏற்கனவே வாசித்திருக்கிறேன், ரொம்பப் பிடித்த கவிதை.

Ashok D said...

அதே கலங்கரைக்கு அருகிலிருந்து ‘எராடிக்’ன்னு ஏதோ சொன்னிங்க... அது இதுதானா... :)

Vijayashankar said...

அருமை! கவிதை!!

Kumky said...

ஹூம்.
ரவிஷங்கர்...ப்ளீஸ்.

thamizhparavai said...

கவிதை படிச்சேனோ இல்லையோ.. கார்க்கியின் கமெண்டுக்கு விழுந்து விழுந்து சிரிச்சேன்....

கவிதை...???
கண்டிப்பா மூணு, நாலு பேரு வந்து விளக்குவாங்க...
இல்ல ரெண்டு பேராவது ‘அது அப்படி இருக்கக் கூடாது.. இப்படி இருக்கக் கூடாது’ன்னு சண்டை போடுவாங்க...
அந்த கேப்பில புரிய ஆரம்பிக்கலாம்...

பெசொவி said...

அப்போ கலங்கரை விளக்கம் இப்போ கலங்கற விளக்கம் ஆயிடுச்சா.......

இரவுப்பறவை said...

கவிதை நல்லா இருக்குங்க....

பா.ராஜாராம் said...

அனு,

எவ்வளவு அழகான இடத்தில் இருக்கிறீர்கள்! சுயம்பு போல்!

Karthikeyan G said...

fine sir..

மேவி... said...

"பல மனிதர்களை சந்தித்த பொழுதிலும்
எந்த மனிதனும்
சொந்தமில்லாதவன்
பின்னிரவில் வந்து சேர்ந்தான்
பார்வை பறிபோன
கலங்கரை விளக்கத்தின்
காந்தப் படிகள்
அவனைச் சுழற்றி இழுத்தன
அவனின் தேர்ந்த கால்கள்
இலாவகமாக நகர்ந்தாலும்
ஒரு காளையின் உக்கிரத்துடன்
கலங்கரை விளக்கம்
அவன் உணர்வுகளைக்
கிளறி அலைக்கழித்தது
தன் நேரம் வந்ததை
இறுதியில் உணர்ந்தவன்
கீழ் நோக்கிப் பாய்கையில்
அலைகள் கொந்தளித்து
'ஓலே ஓலே' என்றன
வன்மம் தீர்த்த கலங்கரைக்கும்
மரணத்தின் சோகத்தால்
அமைதியான அலைகளுக்கும்
அவன் இப்போது
பருந்தாக மாறி
வானில் வட்டமடிப்பது தெரியாது"

sir.... intha madiri starting vaicha nalla irukkumaaa... vilakkamaa sollunga.... naanum rowdy aga vendum????

Thamira said...

ஓலே.. ஓலே..

விநாயக முருகன் said...

உயிரோசையிலேயே படித்தேன். அழகான கவிதை. இந்த கவிதை படிக்கையில் இயற்கை படத்தில் வரும் அந்த பாடல் நினைவுக்கு வந்தது

creativemani said...

நானும் பல காலமா முயற்சி பண்ணிக்கிட்டு தான் இருக்கேன்...
பிடிபடவே மாட்டேங்குதே... :)

அன்புடன் மணிகண்டன்

நர்சிம் said...

//ஒரு காளையின் உக்கிரத்துடன்//

மிகப் பிடித்திருந்தது .. அதுக்கு மேல சொல்லத் தெரியல

anujanya said...

@ குசும்பன்

மொதோ போணியே நீயா? வெளங்கினாப்புலதான் :)

நன்றி குசும்பன்

@ கமலேஷ்

நன்றி கமலேஷ். உங்கள் முதல் வருகைக்கும்.

@ மஹேஷ்

ஜிப்சி என்னும் வார்த்தை மூவாயிரம் ஆண்டுக்கு முன்பே தமிழில் புழங்கிய வார்த்தை என்று தமிழறிஞர் யாரையாவது சொல்ல வைத்து விடலாம் :)

நன்றி மஹேஷ்

@ தராசு

உங்க டெம்ப்ளேட் பின்னூட்டம் படுத்துற பாடு அத விட... :)))

நன்றி பாஸ்

@ நந்தா

நன்றி நந்தா

@ தண்டோரா

யோவ், உங்களுக்கு நான் அங்கிளா? நல்லா இருக்கு அய்யா நியாயம் :).
நன்றி மணிஜி.

@ அமித்து.அம்மா

அது...தானா வருது. பயப்படாதீங்க. சரியாகிடும் :)

நன்றி AA

@ கார்க்கி

டேய் டேய் அடங்குடா. நேர பார்த்து ரெண்டு சாத்தலாம்னு கூப்பிட்டா, எஸ்கேப் ஆயிட்ட. இப்ப பேச்சை பாரு.

@ உழவன்

'விரைவில்' னு சொல்ல ஆசை. நான் கூட உயிர்மை, அக நாழிகை என்று எல்லாரு கிட்டயம் சொல்லிட்டேன். அவங்க நீங்கள் முதலில் கவிதை எழுதத் துவங்குங்கள். நிச்சயம் தொகுப்பு போட்டு விடலாம்னு சொல்றாங்க பாஸ் :(((

நன்றி நண்பா.

@ யாத்ரா

நன்றி யாத்ரா.

@ அப்துல்லா

இதுதான் ஸ்டார் ஸ்மைல் இல்ல?

@ அசோக்

எராடிக் தானே அசோக்? எரோடிக் இல்ல தானே? ஷப்பா.

நன்றி அசோக்

@ விஜயஷங்கர்

என்ன வெச்சு காமெடி....எதுக்கும் நன்றி பாஸ்.


அனுஜன்யா

anujanya said...

@ குசும்பன்

@ கும்க்கி

யோவ்.

@ தமிழ்ப்பறவை

அப்படியே புரிஞ்சா எனக்கும் கொஞ்சம் சொல்லிடு பரணி. கார்க்கி கம்மன்ட்டுக்கு எல்லாம் ரசிகர்களா? கொடுமைடா சாமி.

நன்றி பரணி

@ பரிசல்காரன்

இதோ பாருடா ஒரு ஹைக்கூ பின்னூட்டம். என்ன பாஸ், எவ்வளவு நாட்கள் கழித்து இங்க வருகை?

நன்றி கே.கே.

@ பெ.சோ.வி.

ஆஹா, இது நல்லா இருக்கே :)

நன்றி பாஸ்

@ இரவுப்பறவை

நன்றி நண்பா.

@ ராஜாராம்

மும்பையையா சொல்றீங்க ராஜா? ரொம்ப குறும்பு உங்களுக்கு.

நன்றி ராஜா.

@ கார்த்தி

அப்பா, ஒரு வழியா தப்பிச்சிட்டேன். நன்றி கார்த்தி.

@ மேவி

கவிதை (!) எழுதின பிறகு, 'ஆசிரியன் இறந்து விட்டான். பிரதி மட்டுமே இருக்கிறது' னு சொல்வாங்க. அதனால, உங்க இஷ்டம் மேவி. ஜமாயுங்க.

நன்றி மேவி

@ ஆதி

யோவ், டூஷன் ஃபீஸ் எடுயா மொதல்ல.

நன்றி ஆதி.

@ விநாயகமுருகன்

வித்தியாசமான சிந்தனை. வாழ்த்துகள் வி.மு. - தொகுப்பு வருகிறதே. கலக்குங்க பாஸ்.

@ அன்புடன் மணி

அதே ப்ராப்ளம் தான் எனக்கும் மணி :)

நன்றி

@ நர்சிம்

சொல்ல எதுவுமில்லை என்பதை எவ்வளவு அழகாகச் சொல்கிறார் இந்த நவீன எழுத்தாளர் !

நன்றி நர்சிம்

அனுஜன்யா

கமலேஷ் said...

என்னாட்சி உங்க அடுத்த பதிவுக்காக வெயிட் பன்றேன்..
ஆனா என்னும் update ஆகலை...

கமலேஷ் said...

உங்களோட "கவிதையின் கதை" படித்தேன்...
எவ்வளவு முக்கியமான பதிவை பதிவு செய்து இருக்கிறீர்கள்...
அதுவும் எவ்வளவு அழகா...என்னை போல எழுதி பழக ஆரம்பித்திருக்கும் அத்தனை பேர்க்கும் இது அரிசுவடி...
கவிதயின் கதையை நீங்கள் கவிதை வேறுபாடு உணர அதை சேர்த்து இணைத்திருந்தது...எவ்வளவு..எப்படி சொல்வதென்றே சொல்ல தெரியவில்லை...உங்களுடைய மெயில் id தேடி பார்த்தேன் இதில் இல்லை...நீங்கள் இந்த கருத்துரை பார்க்கும் போது கட்டாயம் kamalesh.chem@yahoo.com forward செய்யுங்கள் உங்களிடம் நான் கற்றுக்கொள்ள கூடியது.. நிறைய இருக்கிறது....

Kumky said...

பின்னூட்டங்களிலாவது நீங்கள் கொஞ்சம் கருணை காண்பித்திருக்கலாம்.
எப்போதுதான் எங்களைப்போன்ற மர மண்டைகளுக்கு கவிதை குறித்து கடைதேற்றுவதாக உத்தேசம்...?

Kumky said...

பாடுபொருள் குறித்து....ஒரு வரியாகிலும் குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

முபாரக் said...

புது எடத்துல புதுவித அனுபவமா? நல்லாருங்க :-)))

//ஓலே ஓலே//

இதுல ஏதும் தட்டச்சுப்பிழை இல்லையே? :-))))))

anujanya said...

@ கமலேஷ்

'கவிதையின் கதை' - நன்றி கமலேஷ். என் மின்னஞ்சல் முகவரி anujanya@gmail.com. (உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி விட்டேன்).

அடுத்த பதிவா? எனக்கு கற்பனை வளமும், சுறுசுறுப்பும் அவ்வளவு கிடையாது. தோன்றும் போது எழுதுவேன்.

நன்றி கமலேஷ்

@ கும்க்கி

ஹலோ, தனி மின்னஞ்சல் அனுப்பி இருக்கேன். படித்துவிட்டு திட்டவும் :)

நன்றி பாஸ்

@ முபாரக்

வாவ், எவ்வளவு நாள் கழிச்சு வரீங்க! 'ஓலே ஓலே' - உங்கள் குறும்பு .... :)

கொஞ்சம் அவ்வப்போது எழுதினால் என்னவாம் முபாரக்?

நன்றி பாஸ்

அனுஜன்யா

Unknown said...

//@ கும்க்கி

ஹலோ, தனி மின்னஞ்சல் அனுப்பி இருக்கேன். படித்துவிட்டு திட்டவும் :)//

எனக்கும் எனக்கும்... :))

anujanya said...

@ ஸ்ரீமதி

ஓகே. அனுப்பி ஆச்சு.

அனுஜன்யா