Tuesday, December 29, 2009

எல்லா ஆசிரியர்களையும் .........ருங்கள்


பத்திரிகை ஆசிரியர்கள் என்பவர்கள் சமூகத்தின் மிக உயர்ந்த இடம் பெற்றிருந்த நிலை மாறிவிட்டதைப் பற்றி குஷ்வந்த் சிங்க் எழுதிய கட்டுரையின் எனது தமிழாக்கம். அம்ருதா இதழில் வந்தது.




இந்தியப் பத்திரிகைத் துறையின் அறையும் உண்மை: "முதலாளிகள் மட்டுமே பொருட்டானவர்கள்; ஆசிரியர்கள் இல்லை"


ஒரு காலத்தில் - வெகு நாட்களுக்கு முன்பல்ல - பத்திரிகை ஆசிரியரின் சமூக நிலை, பெயர் இவையெல்லாம் அந்தப் பத்திரிகைகளுக்குப் பெருமை சேர்த்திருந்த நிலைமை இருந்தது.

பிரிட்டானிய ராஜ்ஜியத்தில், பிரிட்டானிய முதலாளிகளைக் கொண்ட 'டைம்ஸ் ஆப் இந்தியா, தி ஸ்டேட்ஸ்மேன்' போன்ற தேசிய நாளேடுகளின் ஆசிரியர்களுக்கு அரசின் விருதுகள் வழங்கப்பட்டு அவர்கள் கௌரவிக்கப்பட்டனர். சுதந்திரத்திற்குப் பிறகும் கூட, இந்தியர்கள் பத்திரிகை ஆசிரியர் பொறுப்பேற்றபோது, அவர்களுக்கு சமுதாயத்தின் ஆகச் சிறந்த கெளரவம் கிடைத்திருந்தது. பிரான்க் மொரேஸ், சலபதி ராவ், கஸ்துரி ரங்க ஐயங்கார், போதென் ஜோசப் மற்றும் பிரேம் பாட்டியா போன்ற பெயர்கள் எல்லா வாசகர்களுக்கும் தெரிந்திருந்தது. எண்பதுகளில் டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஆசிரியரான திலிப் பட்கோங்கர், பிரதம மந்திரிக்கு அடுத்ததாக நாட்டின் முக்கிய பதவி தன்னுடையது தான் என்று அறுதியிட்டத்தில் பிழை ஒன்றும் இல்லை. ஆளும் கட்சியின் மீதான நேர்மறையான விமர்சனங்கள், எதிர்க்கட்சிகளிடமிருந்து இல்லாமல், முழு பத்திரிகை சுதந்திரத்துடன் இருந்த சிறந்த, பொறுப்புள்ள ஆசிரியர்களிடமிருந்து வந்தன.

இந்த நிலை தொலைக்காட்சியின் வளர்ச்சியில் மாற்றமடைந்தது. தங்கள் கண் முன்னால் நிகழும் நிகழ்வுகளை பார்த்த மக்கள் மறுநாள் காலையில் அவைகளைப் பற்றி படித்திட தினசரியைப் பார்க்க எத்தனிக்க மாட்டார்கள். ஆகக் குறைவான சிலரே தலையங்கங்களைப் படிக்கிறார்கள். மின்னணு ஊடகங்களின் சவால்களைச் சமாளிப்பதில் முனைப்பு காட்டும் தினசரிகளின் முதலாளிகளும் அவர்தம் வணிக மேலாளர்களும், பத்திரிகை ஆசிரியர்களைத் தூக்கி எறியலாமென்பதைப் புரிந்து கொண்டனர். தேவையாயிருந்தது எல்லாம் குறைவான உடையணிந்த நட்சத்திரங்கள் அல்லது விளம்பர அழகிகளின் படங்கள், புதிது புதிதான உணவுகளின் செய்முறைகள், புராதன மதுவகைகள் மற்றும் கிசு கிசுக்கள் போன்றவற்றை வைத்து தங்கள் பக்கங்களை நிரப்புதல். இந்தச் சூத்திரத்தை நான்கு வார்த்தைகளில் அடக்கி விடலாம்: திரைப்படங்கள், சமகால நாகரீகம், உணவு மற்றும் ஆசிரியர்களை வன்புணர்தல். இந்த வன்புணர்ச்சிக்கு இரையான பெருமை வாய்ந்த எழுத்தாளர்கள் பலர் : பிரான்க் மொரேஸ், கிரிலால் ஜெயின், B.G.வெர்கீஸ் (மாக்செசே பரிசு வென்றவர்), அருண் ஷோரி (மற்றொரு மாக்செசே வென்றவர்), வினோத் மேத்தா, இந்தர் மல்ஹோத்ரா, பிரேம் ஷங்கர் ஜா. இன்று டைம்ஸ் ஆப இண்டியா, தி டெலிகிராப், தி ஸ்டேட்ஸ்மேன் இவற்றின் ஆசிரியர் யார் என்று கேட்டால் பத்தில் ஒன்பது பேருக்குத் தெரிந்திருக்காது. திலிப் பட்கோங்கரைப் பற்றிக் கேட்டால் 'திலிப் ....யாரது?' என்ற பதில் வரும்.


இந்தியப் பத்திரிகைத் துறையின் கடினமான உண்மை என்னவென்றால் - முதலாளிகள் முக்கியம்; ஆசிரியர்கள் அல்லர். பணம் முக்கியம்; திறமை அல்ல; ஏசியன் ஏஜ் பத்திரிகையின் நிறுவன-ஆசிரியரான M.J.அக்பர் முகாந்திரங்களின்றி தூக்கி எறியப்பட்டது, பணபலம் ஆளுமையும், அனுபவத்தையும் குப்பைக்கூளத்தில் போட்டதற்குச் சமீபத்திய சான்று. அவர், நிலவும் இன்றைய ஆளுமைகளில் ஆகச் சிறந்தவர். அவர் தான் கொல்கத்தாவைச் சேர்ந்த ஆனந்த பஜார் குழுமத்தின் சார்பில் சண்டே வாராந்தரி மற்றும் தி டெலிகிராப் தினசரி ஆகியவற்றைத் துவக்கி வைத்தார். நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். பல பதிப்புகள் கண்ட ஐந்தாறு புத்தகங்கள் எழுதியவர். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அவர் சில நண்பர்களுடன் ஏசியன் ஏஜ் பத்திரிகையைத் துவக்கினார். நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் லண்டன் மாநகரிலிருந்து வெளியான ஏசியன் ஏஜ் ஒரு துணிச்சலான முயற்சியாகும். மிகக் குறைவான விளம்பரங்களே இருந்ததெனினும், வேறெந்த இந்தியப் பத்திரிகையைக் காட்டிலும் படிக்க சுவாரஸ்யமான பல விடயங்களை ஆங்கில மற்றும் அமெரிக்க பத்திரிகைகளிலிருந்து உள்ளடிக்கியிருந்தது. ஒரு முழுமையான தினசரிக்கான அடையாளங்கள் அனைத்தும் அதனிடம் இருந்தன. இத்தகைய பிரத்யேக குணாதிசியங்களுடன், அது அரசையும், ஆளும் கட்சியையும் விமர்சிப்பவர்களின் கட்டுரைகளையும் பிரசுரித்தது. பத்திரிகையின் இந்த ஒரு அம்சம் ஒரு வேளை அக்பருடைய புதிய பங்கீட்டாளரை எரிச்சல் அடையச் செய்திருக்க வேண்டும். அவர் தனக்கான அரசியல் அபிலாக்ஷைகளுடனும், அரசின் சாதகமான பக்கத்தில் நிற்கும் விருப்பத்துடனும் இருந்தார். இதன் விளைவாக, ஒரு வித முன்னெச்சரிக்கையுமின்றி, மார்ச் 1 அன்று காலை அலுவலகத்துக்குச் செல்லுகையில் ஏசியன் ஏஜ் பத்திரிகையின் பெயர்ப் பலகைகளில் தலைமைப் பத்திரிகையாசிரியர் பொறுப்பில் தனது பெயர் இனி இல்லை என்று அக்பர் அறிய வந்தார். அது நல்ல வளர்ப்பு முறையில்லாத, பணம் படைத்த ஒருவரால் இழைக்கப்பட்ட ஒரு மன்னிக்க முடியாத அவமரியாதையாகத் திகழ்ந்தது.


தனக்கும் பத்திரிகைத் துறைக்கும் தவறிழைத்தவர்களை அக்பர் என்ன செய்யப் போகிறார் அல்லது என்ன செய்யக் கூடும் என்பதைக் கணிப்பது கடினம். இந்நிகழ்ச்சி அவரை உறுத்திக்கொண்டிருக்கும். அவருக்கு 57 வயதுதான் ஆகிறது. மேலும் அவர் மறப்பவரோ, மன்னிப்பவரோ அல்லர்.


இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆப் இண்டியா பத்திரிகையின் பிரதிகள் துர்லபமான 60,000 எண்ணிக்கையிலிருந்து 4,00,000 இலக்கை அடைய எனக்கு உதவிய சிறிய ஆசிரியக் குழுமத்துள் அக்பரும் ஒருவர். அக்பர் இந்த வருடம் தூக்கி எறியப்பட்டது போலவே நானும் 1978 இல் கழற்றி விடப்பட்டது ஒரு முரண்நகை. இந்தப் பத்திரிகையும், பென்னெட் கோல்மன் பதிப்பித்த எல்லா வெளியீடுகளைப் போல (டைம்ஸ் ஆப் இந்தியாவையும் சேர்த்து), அரசு, ஜெயின் குடும்பத்திற்கு மீட்டுக் கொடுத்தது. அவர்கள் பொறுப்பேற்ற உடனேயே என்னுடைய விடயத்தில் தலையிடத் துவங்கிவிட்டனர். என்னுடைய வேலை ஒப்பந்தம் முறிக்கப்பட்டு, எனக்குப் பின் பொறுப்பு ஏற்பவர் அமர்த்தப்பட்டார். எனக்கு ஒரு வாரம் இருந்தது. இல்லஸ்ட்ரேடட் வீக்லிக்கு ஒரு செழுமையான வருங்காலம் வரவேண்டுமென்று ஒரு கண்ணீர் மல்கிய பிரிவுரை எழுதினேன். அது பிரசுரிக்கப்படாமலே போனது. என்னுடைய மேசையை சரி செய்ய காலை அலுவலகத்திற்கு வந்த போது, உடனே விலகுமாறு கோரிய கடிதம் என்னிடம் கொடுக்கப்பட்டது. என்னுடைய குடையை எடுத்துக் கொண்டு, நடந்து வீடு திரும்பினேன்.


அது தகாத (உரித்தானதல்லாத), வேண்டுமென்றே இழைத்த ஒரு இழிவு. இன்னமும்கூட அது என்னை வருத்துகிறது. ஜெயின் பழிவாங்கல் இன்று வரை தொடர்கிறது. என்னை கவுரவிக்கும் - அமிதாப் பச்சன், மகாராணி காயத்ரி தேவி, பிரதம மந்திரி மன்மோகன் சிங் போன்றோர் தலைமையில் நடக்கும் - விழாக்களைப் பற்றி டைம்ஸ் ஆப் இந்தியாவில் எழுதுகையிலும் கூட எனது புகைப்படங்கள் வருவதே இல்லை. பானை நிறைய பணமும் ஏராளமான அதிகாரமும் அடையப் பெற்றவர்கள் இப்படித்தான் சிறு-புத்தியுடன் இருக்கிறார்கள்.

24 comments:

Anonymous said...

ஆம் அனு.

இன்றைய பத்திரிக்கைகளுக்கு முகமென்ற ஒன்று இருக்கிறதா? உள்ளடக்கத்தில் அனைத்தும் ஒன்றே. ஆசிரியர் என்பவர் பேருக்குத்தானே தவிர எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. படைப்புக்களைத் தீர்மானிப்பது முதலாளிகளே தவிர ஆசிரியர்களல்ல.

ஆளும் கட்சிக்கு ஆதரவான முதலாளியும் அவரை ஆதரிக்கும் ஆசிரியரும்தான் இன்றைய தேவை. எழுத்துத் திறமையோ மற்றவையோ அல்ல.

கமலேஷ் said...

////பானை நிறைய பணமும் ஏராளமான அதிகாரமும் அடையப் பெற்றவர்கள் இப்படித்தான் சிறு-புத்தியுடன் இருக்கிறார்கள். ////

அருமையான மொழிபயர்ப்பு மற்றும் பகிர்வு. பதிறிக்கை துறை எப்படி இருக்கும் என்பதையும் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் முதல் முறையாய் உங்களின் இந்த பதிவுதான் யோசிக்க வைக்கிறது...பகிர்வுக்கு நன்றி...மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

இராஜ ப்ரியன் said...

என்ன கொடுமை ஐயா இது

sathishsangkavi.blogspot.com said...

//ஆளும் கட்சிக்கு ஆதரவான முதலாளியும் அவரை ஆதரிக்கும் ஆசிரியரும்தான் இன்றைய தேவை. எழுத்துத் திறமையோ மற்றவையோ அல்ல.//

இதுதான் இன்றைய பத்திரிக்கை.......

Unknown said...

கணமான விஷயம். கவனமாக மொழிப்பெயர்த்திருக்கீங்க அண்ணா. பத்திரிக்கையின் இன்றைய நிலை போலவே இருக்கு அதன் ஆசிரியரின் நிலையும். அவலமாய்.

Ashok D said...

அதனால் என்னவோ இந்த ஆளுமைகள் எல்லாம் ப்ளாகர் உலகத்துக்கு வந்துவிட்டனர் என்று எண்ணுகிறேன்(உங்களையும் என்னையும் சேர்த்துதான் சொல்றன்) :)))))

நல்ல மொழிபெயர்ப்பு.. ஆரம்பத்தில் கொஞ்சம் மக்கர்பன்னாலும் அப்பாலிக்கா சுலுவா படிக்கமுட்ஞ்து வாத்தியாரே..

நர்சிம் said...

வளரும் எழுத்தாளர்கள் தான் இந்த நிலையைப் போக்க வேண்டும் என்ற உங்கள் ஆதங்கம் புரிகிறது கவிஞரே.

Thamira said...

பொறுப்பான மொழிபெயர்ப்பு. தமிழ்ச்சூழலில் இன்னும் நிலைமை மோசம் என நினைக்கிறேன்.!

chandru / RVC said...

அருமையான மொழிபெயர்ப்பு. கலக்குறீங்க போங்க..! India - role of media in secularism-னு முந்தாநாள் ஒரு paper presentation பார்த்தேன். அங்கயும் இதே பாட்டுதான். //"முதலாளிகள் மட்டுமே பொருட்டானவர்கள்; ஆசிரியர்கள் இல்லை"// :(
tomorrow never dies படத்தில் போல சில செய்திகள் திட்டமிட்டு உண்மையாக்கப் படுகின்றனவோ என்கிற அய்யம் எனக்கு எப்போதுமே உண்டு.

ny said...

// ஒரு காலத்தில் - வெகு நாட்களுக்கு முன்பல்ல//

true...

பா.ராஜாராம் said...

D.R.Ashok said...


//அதனால் என்னவோ இந்த ஆளுமைகள் எல்லாம் ப்ளாகர் உலகத்துக்கு வந்துவிட்டனர் என்று எண்ணுகிறேன்(உங்களையும் என்னையும் சேர்த்துதான் சொல்றன்) :)))))//

:-)))

நல்ல பகிர்வு அனு.நன்றி.

பா.ராஜாராம் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் அனு!

thamizhparavai said...

பத்திரிக்கைத்துறை மட்டுமல்ல... எல்லாத்துறையிலும் இதற்குக் காரணம் ’கார்ப்பரேட் கல்சர்’...
எனக்குத் தெரிஞ்சது அவ்ளோதான்...
மொழி பெயர்ப்புக்கு நன்றி...

ந.ஆனந்த் - மருதவளி said...

அனுஜன்யா, உங்களது இந்த பதிவு உண்மையைப் பிரதிபலிப்பதாய் உள்ளது. நல்ல மொழியாக்கம்.
தமிழில் இன்று தினசரி படிக்கும் ஆர்வமே எனக்கு இல்லாமல் போய் விட்டது (இதே காரணத்தால் தான்). பெரும்பாலான மக்கள் பத்திரிகைகள் மற்றும் டி.வி மூலமாகவே நடப்புகளை அலசுகிறார்கள். ஆதலால் இந்த பிழையானது அரசியல், நாட்டு வளர்ச்சி, சினிமா என்று எல்லா இடங்களையும் தவறான பாதைக்கு இட்டுச் செல்லும்.

anujanya said...

@ வேலன்

அதனால் தான் நிறைய படைப்பாளிகள் சிறு பத்திரிகைகளில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நன்றி வேலன்

@ கமலேஷ்

நன்றி கமலேஷ். உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

@ இராஜ ப்ரியன்

அப்படிதான் பாஸ் :((.
நன்றி உங்கள் முதல் வருகைக்கு.

@ சங்கவி

ஆம். நன்றி நண்பா.

@ ஸ்ரீமதி

வாங்க மேடம். அதனால நீயே ஒரு பத்திரிக்கை துவக்கி விடேன் :)
நன்றி ஸ்ரீ.

@ அசோக்

ஆளுமைகள்..நீயும், நானும். யோவ், ஆட்டோ வரும். நன்றி அசோக்.

@ நர்சிம்

அதைவிட உங்களை மாதிரி ஆசாமிகள் பத்திரிக்கை துவங்கலாம் :))
நன்றி பாஸ்.

@ ஆதி

தமிழ்ச் சூழல் ரொம்ப மோசமா என்று தெரியாது. ஆனால், நிச்சயம் சரியில்லை என்னும் அளவு புரிகிறது. நன்றி ஆதி.

@ RVC

சரியா சொன்னீங்க சந்திரா. நிறைய செய்திகள் உருவாக்கப் படுபவையோ என்னும் சந்தேகம் இருக்கு. நன்றி சந்திரா.

@ kartin

வாங்க சார். ரொம்ப நாட்களுக்குப் பின் வருகை! ரொம்ப பிசியா? நன்றி கார்த்தி.

@ ராஜாராம்

நன்றி ராஜா. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

@ தமிழ்ப்பறவை

நன்றி பரணி.

அனுஜன்யா

மாதவராஜ் said...

நல்ல பகிர்வு.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன் அருணா said...

ஆசிரியர் என்றதும் பதறிப்போய் வந்தேன்!

Vidhoosh said...

இன்றுதான் வந்தேன்.

நல்ல தமிழாக்கம். நல்ல பதிவு.'

வித்யா

Vidhoosh said...

3/3 நான்தானும் சொல்லிகிறேன்.

கபீஷ் said...

நல்ல தகவல்.VKV அண்ணாச்சி சொன்னதை வழிமொழிகிறேன்

anujanya said...

@ மாதவராஜ்

வாங்க நண்பா. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

@ அருணா

சே சே. பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் மீது எனக்கு என்றுமே நிறைய மரியாதை உண்டு ப்ரின்சி :)

@ விதூஷ்

நன்றி வித்யா. பாராட்டுக்கும் நல்ல வோட்டுக்கும் :)

@ கபீஷ்

உங்கள் முதல் வருகை ? :))))

நன்றி. VKV என்றால் ஸ்பெஷல் தான் இல்ல ?

நன்றி ‘கபீஷ்’

அனுஜன்யா

கபீஷ் said...

//உங்கள் முதல் வருகை ? :))))//

இல்லீங்க ரெண்டாவது(Ref:முன்னார் இடுகை)

எப்பூடி? :-))))))))))



//VKV என்றால் ஸ்பெஷல் தான் இல்ல ?//

யெஸ்ஸூ :-)

Karthik said...

ச்சே, அருமையா இருக்குங்க தமிழ்ல்ல படிக்க. இங்கிலிஷையும் எடுத்து வெச்சு ரெண்டையும் படிக்கணும் போல இருக்கு. அது எங்க இருக்குனு சொல்லியிருக்கலாம். தேடிப் பார்க்கிறேன்.

anujanya said...

@ ஆனந்த்-மருதவளி

சாரி ஆனந்த். உங்களுக்கு பதில் சொல்ல தவறி விட்டேன் :(

உங்கள் கருத்துதான் குஷ்வந்த் சிங் சொல்வதும். நன்றி பாஸ்.

@ கார்த்திக்

நன்றி கார்த்திக்

http://www.outlookindia.com/article.aspx?237012
(இது தான் ஆங்கில வடிவத்தின் சுட்டி)

அனுஜன்யா