Monday, February 1, 2010

பெயர் மாற்றம்

எப்போதும் போல படித்தேன்

இன்றைய 'கற்பழிப்பை'
பலியானவள் பானு
அண்ணாநகரில் வசிப்பவள்
அண்ணாநகர் பானுவை
எனக்குத் தெரியாது
ஆனாலும் சஞ்சலமாக இருக்கிறது
பெயர் மாற்றப்பட்டதாகக்
கடைசியில் போட்டிருக்கிறார்கள்
இப்போது
தெரிந்த பெண்களின்
உண்மைப்பெயர்களை
மாற்றிப் பார்க்கும்
யோசனை பிறக்கிறது
பானு மட்டும் வராதவாறு
கவனமாக இருக்கிறேன்

39 comments:

சங்கர் said...

கவித புரிஞ்சிடுச்சே, நான் அட்ரஸ் மாறி வந்திடலையே :))

கே.என்.சிவராமன் said...

அழுத்தமா இருக்கு அனு...

தோழமையுடன்
பைத்தியக்காரன்

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமை , என் பெயரையும் இங்கே பதிஞ்சுக்கிறேன் .

KarthigaVasudevan said...

அகஸ்மாத்தா வந்தாலும் ஒன்னும் புரிஞ்சிட மாட்டேங்குது.
:(

நேசமித்ரன் said...

//சாட்டிங்கில் பெண்கள்
ஒரு நாள் பெண்டாளப் போகும் இடங்களில் ஆண்கள்
தற்கொலைக்கு உறக்க(?) மாத்திரை வாங்கும் சீட்டுகளில்
ஆப்பரேஷனுக்குப் பிறகு அ-நங்கைகள்

சந்தேக கேஸில் பிடித்தபோது ஒரு முறை
கலவரத்தில் ஒரு முறை மதம் மாற்றி
ஓட்டப் பல்லா எருமை மாடு மனுஷனாய்யா நீ அவள்கள்
மற்றபடி சிக்நல் முக்குகளில் கேட்கும் உறுப்புசார் பெயர்கள்
ஆனாக் ஒன்னைய தவிட்டுக்குதாண்டா வாங்குனோம் என்ற அக்காளின் விளிப்பை மட்டும்
மறக்க முடியாமல் செய்துவிட்டது
காலம்//

அக்மேயிசக் கவிதையா அனு...?!
அருமை அருமை

Sridhar Narayanan said...

//கவித புரிஞ்சிடுச்சே, நான் அட்ரஸ் மாறி வந்திடலையே :))//

ரிப்பீட்டே.

எப்போதும் போல படித்தேன் இன்றைய உங்கள் கவிதையை. புரிந்துவிடக்கூடாதே என்று இனி
கவனமாகப் படிக்கிறேன். :))

thamizhparavai said...

யதார்த்தம்...

ப்ரியமுடன் வசந்த் said...

இப்பிடியா யோசிக்கவைப்பீங்க? யப்பா விளங்கியது 16 X 2 அப்புறம்தான்...

பா.ராஜாராம் said...

ஓட்டுப் போட்டேன் மக்கா.

ஆனால் உங்கள் கவிதை இல்லை இது.

:-)

உயிரோடை said...

பெய‌ரையே மாத்தித்தீங்க‌ சிம்பிள்.

ந‌ல்ல‌ க‌விதை அனுஜ‌ன்யா.

ஈரோடு கதிர் said...

மிக அருமை

Vidhoosh said...

அமித்தம்மா பதிவில் வரும் தனலச்சுமியை படிக்கும் போது ஏற்பட்ட அதே பயம் வருகிறதுங்க. :(

T.V.ராதாகிருஷ்ணன் said...

aahaa...

தராசு said...

கவுஜ ரொம்ப சின்னதா இருக்கே தல

பரிசல்காரன் said...

என்ன சொல்லவென்று தெரியவில்லை. ரொம்பவே நல்லாருக்கு..

sathishsangkavi.blogspot.com said...

நல்லா இருக்கு நண்பா... வித்தியாசமான சிந்தனை நண்பா...

நர்சிம் said...

மிகப் பிடித்திருந்தது...ராஜாராம் ஸார் ஏன் ஏன் ஏன்?? புரியுற மாதிரி இருந்தா உங்கது இல்லைன்னு உசுப்பேத்து அண்ணன பேனாவத் திருப்ப விடுறதே பொழப்பாப் போச்சு..;)

அண்ணா..இது போல எழுதுங்க..எங்களுக்கும் புரியட்டும்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா இருக்கு அனுஜன்யா.

செ.சரவணக்குமார் said...

அருமை

எறும்பு said...

அருமை...

நல்லா இருக்கு...

Ashok D said...

எனக்கு புரியலயே :(

CS. Mohan Kumar said...

//நர்சிம் said...
அண்ணா..இது போல எழுதுங்க..எங்களுக்கும் புரியட்டும். //

நான் இதனை வழி மொழிகிறேன்

உண்மைத்தமிழன் said...

இதுக்குப் பேரு கவிதையா..? சரி.. பரவாயில்லை..!

விநாயக முருகன் said...

Super...Super

Unknown said...

:)))

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

வித்தியாசமாய் ,நல்லாயிருக்கு கவிதை.

சிட்டுக்குருவி said...

இதுக்கு பேரு தான் அனுஜன்யா கவிதையா!!!!!!!!

பா.ராஜாராம் said...

ஒரு சுழல்,மிரட்சி,தொடர் மீட்டல் அனுபவம் வாய்க்கும் நர்சிம்,அனு,நேசன்,சுந்தரா கவிதைகளில்.

நடக்க விடாமல்,வேலைகளில் கவனம் செலுத்த விடாது கூடவே வந்து கொண்டிருக்கும் இவர்கள் கவிதையை வாசித்த அனுபவம்.வாசிப்பவனை அடுத்த தளத்திற்கு நகர்த்தும் வேலைகளை கவிதைக்குள் ஒளித்து வைத்திருப்பார்கள்.அம்முனையை பற்றும்வரையில் சித்திரவதைதான்.

அச்சித்ரவதை இதில் குறைவுதான் என சொல்ல வந்தேன்.சுருங்க சொல்லியதில் சரியாக ரீச் ஆகவில்லையோ என்னவோ.

மேலும்,என்ன பிறாண்டினாலும் தாங்கும் நம்ம அனுதானே!(என்ன அடிச்சாலும் தாங்குறாண்டா..இவன் ரொம்ப நல்..ல..வண்டா..மனநிலைதான்.)

:-)

ச.முத்துவேல் said...

பெயர் மாற்றம் மட்டுமா. ஆளே மாறிட்டீங்க இந்தக் கவிதையில. ரொம்ப நல்லாருக்கு.

Kumky said...

கடைசி இரண்டு வரிகளில் உள்ளது கவிதையும் மனமும்...

புரியாவிட்டாலும்., புரிந்தாலும் பாட்டு உண்டு...நல்லாத்தான் தாங்கறீங்க ஜென்யாஜி...

Sakthi said...

aandandu kaalamaga irukkum theeratha thalai vali KARPALIPPU.. kavithai nalla irukku..

மேவி... said...

nice :)))

anujanya said...

@ சங்கர்

செம்ம குசும்புதான் உனக்கு :)

நன்றி சங்கர்

@ பைத்தியக்காரன்

நன்றி சிவா.

@ ரமேஷ்

ரொம்ப நாட்களுக்குப் பின் வருகிறீர்கள். எப்படி இருக்கீங்க பாஸ்?

@ ஸ்டார்ஜன்

வாங்க தல. உங்கள் முதல் வருகை! நன்றி.

@ கார்த்திகா வாசுதேவன்

நிறைய பேருக்குப் புரிஞ்சிருக்கே சகோ. ட்ரை பண்ணுங்க :)
நன்றி கார்த்திகா.

@ நேசமித்திரன்

பின்னூட்டமே எப்பவும் போல ஹெவி டுட்டி கவிதை :)
அக்மேயிசமா? என் பேரு அனுஜன்யாங்கோ. Manndelstam இல்லீங்கோ :)

நன்றி நேசன்.

@ ஸ்ரீதர் நாராயணன்

யோவ், செம்ம குசும்புதான். உங்களோட நட்சத்திர வாரத்தை மிஸ் பண்ணிட்டேன் பாசு.

Techno geek என்றால் மீசை மழித்து, கண்ணாடி போட்ட உருவத்தை கற்பனை செய்திருந்தேன். South Indian hero மாதிரி இருக்கீங்க.

@ தமிழ்ப்பறவை

நன்றி பரணி

@ வசந்த்

இரண்டு தபா படிக்கவே இவ்வளவு அலட்டலா ? உன்னை எல்லாம்....

நன்றி வசந்த்

@ ராஜாராம்

அய்யய்யோ, மண்டபத்தில் வேற யாரோ எழுதி.... நெசமாலுமே நான்தான் எழுதினேன் :)

நன்றி ராஜா

@ உயிரோடை

நன்றி லாவண்யா

@ கதிர்

வாங்க பாசு. உங்கள் நட்சத்திர வாரம் கூட, பின்னூட்டம் போட முடியாத படி ஆபிசில் வேலை. தாமதமான வாழ்த்துகள்.

நன்றி கதிர்.

@ விதூஷ்

அப்படியா? நன்றி வித்யா.

@ T V R

நன்றி சார்.

@ தராசு

நல்ல கவிதையும் நீளமில்லை போலும் :). நன்றி பாஸ்.

@ பரிசல்

நன்றி கே.கே.

@ சங்கவி

ரொம்ப நன்றி நண்பா.

@ நர்சிம்

//உங்கது இல்லைன்னு உசுப்பேத்து அண்ணன பேனாவத் திருப்ப விடுறதே பொழப்பாப் போச்சு..;)//

இன்னும் சிரிச்சுக்கிட்டே இருக்கேன் நர்சிம். நன்றி.

@ ஜ்யோவ்

நன்றி குரு

@ சரவணக்குமார்

நன்றி பாஸ்.

@ எறும்பு

முதல் வருகையா? நன்றி பாஸ்.

@ அசோக்

நீ எல்லாம் ஆகப் பெரிய கவிஞர். உங்க லெவெலுக்கு இதெல்லாம்.... :)
நன்றி அசோக்

@ மோகன் குமார்

நர்சிம்முக்கு ஏம்பா இப்படி ஜால்ரா... :)))
நன்றி பாசு. முயற்சி செய்கிறேன்.

@ உண்மைத் தமிழன்

தல, என் இந்தக் கொலைவெறி?

@ விநாயக முருகன்

வாரே வா. கவிஞரே சொல்லியாச்சு. இந்த கவிதை உண்மையிலேயே சூப்பர் தான்.
நன்றி வி.மு.

@ ஸ்ரீமதி

ஆரம்பிச்சுட்டியா ? ஓகே ஓகே நானும் போட்டுக்குறேன் :))))

நன்றி ஸ்ரீ

@ ஜெஸ்வந்தி

நன்றி சகோ.

@ சிட்டுக்குருவி

நீங்க கேட்பதைப் பார்த்தால் பயமா இருக்கு :). கவிதைன்னு நினைத்து எழுதிவிட்டேன். மன்னிச்சு விட்டுடுங்கோ :)
நன்றி சிட்டுக்குருவி - உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும். ஆமா, எப்ப எழுதப் போறீங்க?

@ ராஜாராம்

நம்ம குருதான் எல்லா மாதிரியும் எழுதிப் பழகுன்னாரு பாஸ். ஆமா, நான் ரொம்ப நல்லவன்ன்ன்தான் :)
நன்றி ராஜா.

@ முத்துவேல்

நன்றி முத்து. கொஞ்சம் வேற பாணியில் எழுத முயன்றேன்.

@ கும்க்கி

பாட்டு உண்டு என்று தான் தெரியுமே. இருக்கட்டும் இருக்கட்டும்.
நன்றி பாசு.

@ சக்தியின் மனம்

நன்றி பாஸ். உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்.

@ மேவீ

அட அட யாருப்பா இது? எங்கேயோ கேட்ட பெயரா இருக்கே..
நன்றி மேவீ

@ அன்புடன் அருணா

அட, ப்ரின்சி கிட்டேயிருந்து பூங்கொத்து. நன்றி :)

@ தமிலிஷில் வாக்களித்த 15 பேருக்கும் நன்றி x 15

அனுஜன்யா

ராகவன் said...

Dear Anujanya,

Azhuththamaa adhuvum aazhamaa irukku kavithai...

thamizh font problem, siramam porukkavum.

anbudan
ragavan

Thamira said...

யதார்த்தம்.

anujanya said...

@ ராகவன்

ரொம்ப நன்றி ராகவன்.

@ ஆதி

நன்றி பாசு.

அனுஜன்யா

Anonymous said...

Ithula enna puthumai irukku , illa enna viruviruppu iruunu iththanai per arumainnu solrango?

அனு... ithupol vettiyaay pukalpavarklidamirunthu othungkiyae irungaL .

Ungkaludaiya ella kadduraikaLum arumaiyaka irukkirathu, eaetho sila kavithaikal paravayillai.


ithu thaan unmai

ippadikku
romba nalla anony

Anonymous said...

//நடக்க விடாமல்,வேலைகளில் கவனம் செலுத்த விடாது கூடவே வந்து கொண்டிருக்கும் இவர்கள் கவிதையை வாசித்த அனுபவம்.வாசிப்பவனை அடுத்த தளத்திற்கு நகர்த்தும் வேலைகளை கவிதைக்குள் ஒளித்து வைத்திருப்பார்கள்.அம்முனையை பற்றும்வரையில் சித்திரவதைதான்.//

intha rajaram thaan romba danger- anavar ivaridam ushara iruukkanum.

kattu katta paaraddu vachukittu udkaarnthirukaar

anujanya said...

@ ரொம்ப நல்ல அனானி

நீங்கள் யார்னு தெரியவில்லை. தெரிந்தவராக இருந்து உண்மைப் பெயரில் சொல்லத் தயக்கமாக இருப்பதால் இப்படிச் சொல்கிறீர்களா என்று தெரியவில்லை. என் கவிதைகள் பற்றிய உங்க கருத்துக்கு நன்றி. ஆனால் கவிதை படிக்க, பிடிக்க ஒரு மனோபாவம் இருக்க வேண்டும். அது வாய்த்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள். அல்லாதவர்கள்...இன்னும் அதிர்ஷ்டசாலிகள் :)

ராஜாராம் என் இனிய நண்பர். அவர் பற்றிய உங்கள் கருத்து எனக்கு வருத்தம் தருகிறது.

அனுஜன்யா