Saturday, May 15, 2010

ஹாங்காங் பயணம்



கடந்த மார்ச் மாதம் சில நாட்கள் ஹாங்காங் சென்றிருந்தேன். முன்பே சென்றிருந்தாலும், தனியே அதுவும் வெளிநாட்டுப் பயணம் என்பதில் வரும் வழக்கமான அஜீரண உபாதைகள் ஒரு வாரம் முன்பே வரத் துவங்கியது. கனடாவில் இருந்து வரும் இரண்டு பெருசுகளுக்கு, வேறென்ன, மீண்டும் மீண்டும் பவர் பாயிண்ட் வித்தைதான். என்றைக்கு இதற்காகவே வெளியே துரத்தப் போகிறார்களோ !



பாஸ், பிசினஸ் கிளாஸ்.... என்றதும், 'என்னது? உன்னோட பவர் பாயிண்ட்ல உன்னோட சாதனைகள நீயே பார்க்கலையா? ஏதோ கள்ளத் தோணியில அனுப்பாம விமானத்தில் போவதே உனக்கெல்லாம் அதிகம்'னு துவங்கி அடுத்த பதினைந்து நிமிடங்கள் அன்பாக அர்ச்சனை செய்தார். 'சரி போறும், பி கேர்ஃபுல்' என்று என்னை நோக்கி ஆள்காட்டி விரல் காண்பித்து அவரை அடக்கி, ஐந்து மணிநேரப் பயணத்திற்கு தயார் ஆனேன்.




ஜெட் ஏர்வேஸ். வழமை நேர்த்தியில் ஜெட் ஏர்வேஸ் பெண்கள் (இந்த மாதிரி துவங்கும் ஒரு அருமையான கவிதை இருக்கிறது..விளம்பரங்கள் வேண்டாமென்று..மேலே சொல்லவில்லை). ஒரு சிக்கலும் இல்லாமல் ஹாங்காங் விமான நிலையம் சென்றடைந்தேன். சென்ற முறை பரிச்சயம் இல்லாததால் டாக்சியில் சென்று, எக்கச்சக்க செலவு செய்திருந்தேன். இம்முறை மெட்ரோவில் ஹாங்காங் ஸ்டேஷன் சென்று, அங்கிருந்து நான் தங்கும் ஹோட்டலுக்கு டாக்சியில் சென்று விட்டேன். ஹாங்காங் மெட்ரோ பன்னிரண்டு தடங்களில் வெவ்வேறு இடங்களுக்குச் செல்கின்றன. நம்பவே முடியாத திறன். சுத்தம்.




என்ன, எல்லா பெயர்களும் 'ஹிங் வாங் யூங்' என்பது போலவே இருக்கிறது. என்னுடைய தென்னிந்திய உச்சரிப்பில், அவர்கள் ஆங்கில அறிவில் - அவர்களுடன் பேசுவதைவிட - ஞாயிற்றுக் கிழமை மதியம் தூர்தர்ஷனில் வருவது போல் சைகை மொழியில் பேசுவது சுலபம் என்ற முடிவுக்கு இரு சாராரும் வந்திருந்தோம். அவர்கள் சொல்லித்தான் தெரிந்தது -'இந்தியர்கள் சரி என்பதற்கும், முடியாது என்பதற்கும் பக்கவாட்டிலேயே தலையை அசைக்கிறார்கள்' என்று. அவர்கள் எல்லோரும் 'ஓகே, எஸ்' போன்ற நேர்மறைகளுக்கு மேலும் கீழும் என்றும், 'முடியாது, இல்லை' போன்ற எதிர்மறைகளுக்குப் பக்கவாட்டிலும் தலையாட்டுகிறார்கள். அவங்களுக்குள்ளும் ஏதோ ஒண்ணு இருக்கு பாரேன்.




நகரெங்கும் கேள்வி கேட்காமல் நாற்பது அல்லது அறுபது மாடி கட்டிடங்களை நட்டு விடுகிறார்கள். சிங்கப்பூருடன் ஒப்பிடுகையில், இது இன்னும் பெரிய நகரம் என்று தோன்றுகிறது. சிங்கை நிச்சயம் இன்னும் சுத்தமாக இருக்கிறது. மற்றபடி இந்த இரு நகர்-நாடுகளுக்கிடையில் நிறைய ஒற்றுமைகள். தாலாட்டுப் பாடும் தொனியில் கேட்டுக் கொண்டேயிருக்கும் மாண்டரின் மொழி. சில சமயம் கேண்டனீஸ். எங்கு பார்த்தாலும் கடல் உணவு மையங்கள். தண்ணீரில் எது மிதந்தாலும், நீந்தினாலும், கிடந்தாலும் பிடித்து வந்து பச்சையாகவோ, வறுத்தோ, மற்ற சித்திரவத்தைகள் செய்தோ நாவில் நீரொழுகச் சப்புக் கொட்டிக்கொண்டே இரண்டு குச்சிகளால் சாப்பிட்டுத் தள்ளுகிறார்கள். ஆனால், உபசரிப்பில், எப்போதும் முகத்தில் தவழும் புன்சிரிப்பில் சீனர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. நான் அசைவம் சாப்பிடுவதில்லை என்று சொல்லியதும், சமையல் கலைஞரிடம் சொல்லி கிட்டத்தட்ட நம்ம ஊர் கொழுக்கட்டை போல் (உள்ளே காய்கறிகள், பருப்பு என்று நினைக்கிறேன்) நிறைய செய்து 'என்ஜாய் மாடி' என்று மாண்டரினில் சொன்னார்கள். இன்னும் கொஞ்சம் வேணுமா என்று கேட்டதற்கு, 'ஆம்' என்று ஒழுங்காக தலையை மேலும் கீழும் ஆட்டினேன்.




சைனாவுடன் இணைந்தாலும், பொருளாதாரம், கலாசாரம், கல்வி போன்ற பல விஷயங்களில் பழைய தனித்தன்மையுடனே ஹாங்காங் இன்னமும் இருக்கிறது. நாமெல்லாம் தனி சுதந்திர நாடுகள் என்று நம்பும் தைவான், திபெத் போன்ற இடங்களைப் பற்றி துளியும் உணர்ச்சி வசப்படாமல், வீட்டிலுள்ள குறும்புக்கார சிறுவனைப் பற்றி பேசுவது போல் பேசுகிறார்கள். ரொம்ப பழம்பெருமை பேசுவதில்லை. ஒருவேளை மெயின் லேன்ட் சீனாவில் பேசுவார்களோ என்னவோ! ஹாங்காங் வாசிகளே தயக்கமின்றி ஒப்புக்கொள்ளும் விஷயம் - அடுத்த நூற்றாண்டின் நகரம் ஷாங்காய் என்று. அப்படி இருக்கிறதாம்.

நிறைய பேருக்கு ஆண்டனி சாங், அலெக்ஸ் சாய், ஜான் சாங் என்றெல்லாம் பெயர் இருந்தாலும், அவர்கள் எந்த மதத்தையும் பின்பற்றுவதில்லை. ஆங்கில, ஐரோப்பியர்கள் நிமித்தம் குழந்தை பிறந்த உடனேயே தன் ஊர்ப் பெயருடன் ஒரு கிருத்துவப் பெயரையும் முன்னால் போட்டுக் கொள்வதாக அறிந்தேன். ஆனால் நிறைய பேர் தேவாலயங்களுக்குச் செல்வதையும் கண்டேன். மற்றும் சிலர் Tao என்னும் மதம் தமது மதம் என்றார்கள். இந்தியாவில் ஏன் இத்தனை விடுமுறைகள் என்று எக்கச்சக்க வயிற்றெரிச்சலுடன் கேட்டார்கள். எவ்வளவு சண்டை போட்டாலும், எல்லா மதப் பண்டிகைகளுக்கும் எல்லோரும் விடுமுறை கேட்போம் என்றேன்.


 இரண்டு கனடா கனவான்களும் 'சரி ஏதோ சொல்ல வருகிறான். விட்டுப் பிடிப்போம்' என்று புரியாத ஆங்கிலத்தில் சொல்லி கை குலுக்கினார்கள். இந்த முறையும் தப்பிச்சிட்ட - எப்படிரா மாதவா என்று சொல்லியவாறே ஊரைப் பார்க்க மெட்ரோவைப் பிடித்தேன். திரும்பி வருகையில்தான் நிதானமாக ஹாங்காங் ஏர்போர்ட் வளாகத்தை நோட்டம் விட்டேன். பெரிய, நேர்த்தியான விமான நிலையம். குறிப்பிடும்படியான நிகழ்சிகள் ஏதுமின்றி ஊர் வந்து சேர்ந்தேன்.




மும்பை விமான நிலையம். அதற்கு அருகாமையில் ஒரு ஜோபட்பட்டி (நம்ம ஊரு சேரி). எங்கும் புழுதி, சாக்கடை, வாகனப் புகை, நெரிசல். ஆனாலும் நம் நாடு. slumdog என்றாலும் millionaire தான். மன்னிக்கவும். சேரிநாய் என்றாலும் கோடீஸ்வரன். சரியா ரானின் ?

31 comments:

கபீஷ் said...

எப்பவும் போல அழகான பயண கட்டுரை. நன்னீஸ் :))))

கபீஷ் said...

திருஷ்டி படம் இல்லயா?

Ashok D said...

நீங்கள் என் ப்ளாகுக்கு வருவதில்லை என்ற எண்ணம்(காண்டு) இருப்பினும், இது பயணக்கட்டுரைதானே என்ற சலிப்பு இருப்பினும், வேண்டா வெறுப்பாக படிக்க ஆரம்பித்தாலும்,

மொழியின் நடையும், பகடியின் வழியில் நகர்தலையும் ஆழந்து ரசித்து படித்து enjoy பண்ணி தொலைக்க வேண்டியிருக்கு... நல்லாயிருங்க.. :)

Anonymous said...

குறிப்பிடும்படியான நிகழ்சிகள் ஏதுமின்றி ஊர் வந்து சேர்ந்தேன். //

அப்ப இந்த பதிவு அவசியமா? எதோ இருக்குன்னு ஓடி வரவங்களை ஏமாத்தலாமா? :)))

Unknown said...

Sari

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

உங்களை ரானின் ரொம்ப படுத்தறார் போல :)

நல்லா இருந்தது உங்க பத்தி. கவிதை எழுதும்யா என்றால் பத்தி எழுதுவது. பத்தி எழுதுங்கள் என்றால் கவிதை எழுதுவது. சரி, சரி, எழுத்தாளனின் சுதந்திரம்!

நீங்க உலகம் சுற்றும் வாலிபன் போல. வண்ணாரப்பேட்டையைத் தாண்டாத எனக்கு வயித்தெரிச்சல் :)

மேவி... said...

nice :)

(time illainga....athan ippadi )

Unknown said...

i also learned from my friends that Hongies struggle to speak English :)

ராமலக்ஷ்மி said...

அருமையான நடையில் அழகான பகிர்வு.

//'இந்தியர்கள் சரி என்பதற்கும், முடியாது என்பதற்கும் பக்கவாட்டிலேயே தலையை அசைக்கிறார்கள்' என்று. //

ஆமாம், சில பேர் பக்கவாட்டுடன் மேலும் கீழுமையும் சேர்த்துக்கொள்வாங்க. மையமா இருக்கும்:)!

படங்கள் எல்லாமும் நல்லா இருக்கு:)! ஏர்போர்ட் வளாகம் ஏன் இரண்டு முறை:)? பி கேர்ஃபுல். ‘இப்படியெல்லாம் கேட்கப்படாது’ன்னு நான் என்னைச் சொன்னேன்.

உயிரோடை said...

அண்ணா, ஹாங்காங் சுத்தி பார்கலையா?

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

ஷாங்காய் பற்றிய உங்கள் கூற்று சரி..

நல்ல கட்டுரை..

creativemani said...

வழக்கம் போல.. என்ஜாயபிள் ட்ரிப்.. எங்களுக்கும் தான்.. ;)

வடுவூர் குமார் said...

இந்த‌ த‌லையாட்டும் முறையை புரிந்துகொள்வ‌தில் சீன‌ர்க‌ளுக்கு பெரும் குழ‌ப்ப‌ம்.ஒரு முறை எங்க‌ள் ம‌னித‌ வ‌ள‌ அதிகாரி இதே குழ‌ப்ப‌த்தை என்னிட‌ம் கூறினார் அத‌ற்கு ப‌க்க‌த்தில் உள்ள‌ ந‌ம்நாட்ட‌வ‌ரை காண்பித்து,இவ‌ருட‌ன் நான் அப்ப‌டி பேசும் போது அவ‌ர் குழ‌ம்புவ‌தில்லை நீங்க‌ள் ஏன் குழ‌ம்புகிறீர்க‌ள் என்று யோசியுங்க‌ள் என்றேன்.

வடுவூர் குமார் said...

ஹாங்காக்கும் சிங்கைக்கும் எப்போதுமே ம‌றைமுக‌ போட்டி இருந்துகொண்டே இருக்கும்.

நந்தாகுமாரன் said...

ஹ்ம் ... ஹாங்காங்கின் விண்கூரை மேல் ரெண்டு முறை பயணித்திருக்கிறேன் ... ஹாங்காங் விமான நிலைத்தில் கிட்டத்தட்ட ஆறுமணி நேரம் ரெண்டு முறை தங்கியிருக்கிறேன் ... அந்த நினைவுகளை மீட்டெடுக்க உதவியது உங்கள் பத்தி ... அந்த ஒளிப்படங்களை இன்னும் நான் பதிவேற்றவில்லை :)

பா.ராஜாராம் said...

intresting.. :-))

அரட்டை அகிலன் said...

இந்த விடுமுறைக்கு ஹாங்காங் போகலாமுன்னு முடிவு பண்ணிட்டேன் ... தேங்க்ஸ் ...... சூப்பரா இருந்தது உங்க கட்டுரை ..... !!!!!

ரிஷபன்Meena said...

//இந்தியாவில் ஏன் இத்தனை விடுமுறைகள் என்று எக்கச்சக்க வயிற்றெரிச்சலுடன் கேட்டார்கள். எவ்வளவு சண்டை போட்டாலும், எல்லா மதப் பண்டிகைகளுக்கும் எல்லோரும் விடுமுறை கேட்போம் என்றேன். //

உங்கள் மொழி நடையுடன் கூடவே இழையோடும் இந்த மெல்லிய நகைச்சுவை வாசிப்பதை அனுபவமாக மாற்றுகிறது.

ரிஷபன்Meena said...

//மும்பை விமான நிலையம். அதற்கு அருகாமையில் ஒரு ஜோபட்பட்டி (நம்ம ஊரு சேரி). எங்கும் புழுதி, சாக்கடை, வாகனப் புகை, நெரிசல்//

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கும், வெளிநாடு சென்று விட்டு வரும் இந்தியர்களுக்கோ நமது ஏற்போர்ட்டுகளை தொட்டதும் ஏற்படும் ஒரு உணர்வு.

நம்மை விட சின்ன சின்ன ”வளரும்” நாடுகள் கூட அழகாக வைத்திருக்கும் போது நாம் மட்டும் ஏன் இப்படி என்கிற ஆதங்கம் தான் அது.

இந்தியாவுடன் ஒப்பிட இயலாத தாய்லாந்தில்,ரோடுகள் சர்வதேசத் தரத்தில் இருக்கு.

நாமளும் அந்த அளவுக்கு தான் ரோடுகளுக்கு நிதி ஒதுக்குகிறோம் ஆனா ரோடு மட்டும் அந்த அளவுக்கு வருவதே இல்லை.

கார்க்கிபவா said...

சுந்தர்ஜி சொல்றத கேட்காம இருக்கிறதும் கட்டுடைத்தலோ?

பதிவு சுவாரஸ்யம் தல.... கலக்குங்க..


உங்க கவிதையை படிச்சாலும் கலக்கல்தான்..




ஆனா அது வயிற்றில்

எறும்பு said...

வழக்கம்மா கூலிங் கிளாஸ் போட்டு ஒரு படம் போடுவீங்களே அத காணோம்.. கிளாஸ மறந்து வீட்ல வச்சுட்டு போய்டீங்களா?
;)

Kumky said...

நல்ல அனுபவம்..

இன்னமும் கொஞ்சம் ஹாங்காங் பற்றி விலாவாரித்திருக்கலாம்...
படங்களுடன் கொஞ்சமாக பொருளாதாரமும் சமூகமும் உங்களின் மெல்லிய அங்கத நடையில் விவரித்திருந்தால் அருமையாக இருந்திருக்கும்..

பயணத்தொடர் புத்தகம் ஏதேனும்....?

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அழகான பயண கட்டுரை

HVL said...

//எங்கு பார்த்தாலும் கடல் உணவு மையங்கள். தண்ணீரில் எது மிதந்தாலும், நீந்தினாலும், கிடந்தாலும் பிடித்து வந்து பச்சையாகவோ, வறுத்தோ, மற்ற சித்திரவத்தைகள் செய்தோ நாவில் நீரொழுகச் சப்புக் கொட்டிக்கொண்டே இரண்டு குச்சிகளால் சாப்பிட்டுத் தள்ளுகிறார்கள். //

:):):)

கமலேஷ் said...

மிகவும் அழகான பயணக்கட்டுரை...
கவிங்கனுக்கே உரிய எழுத்து நடை...
மிகவும் நன்றாக இருந்தது...
வாழ்த்துக்கள்...

லகுட பாண்டி said...

பாஸ்: இந்த பையனுக்குலேயும் என்னவோ இருந்திருக்கு பாரேன். தனியா வெளிநாடெல்லாம் போய்ட்டு வர்ற அளவுக்கு. 
....................கட்........................
போக்கிரி விஜய்:யாரோட ப்ளான் இது? 
அனுஜன்யா : எங்க பாஸ். 

போக்கிரி விஜய்: அந்த .................... மட்டும் என் கைல கெடைச்சான்.

அனுஜன்யா : என்ன?

போக்கிரி விஜய்:வாழ்த்துக்கள் சொன்னேங்க.

anujanya said...

@ கபீஷ்

நன்னீஸ்க்கு நன்னீஸ் :)

திருஷ்டி படம்? ஏன், நீங்க அனுப்புறது தானே? கிர்ர்ரர்ர்ர்

@ அசோக்

அன்பான வாழ்த்துக்கு நன்றி டாக்டர்.

@ மயில்

இது டூ மச் விஜி. எழுத மேட்டர் இல்லாம படுற கஷ்டம் தெரிஞ்சும் இப்படி ஒரு கம்மெண்டு :(. கபீஷ் கூட சகவாசம் வேண்டாம் :)

@ பாஸ்கரன் சுப்ரமணியன்

ஆஹா.. நன்றி

@ ஜ்யோவ்

ஹலோ, இதுக்கு முன்னாடி எழுதியிருப்பது கவிதை தானுங்கோ. ஓஹோ, உங்களுக்கு அப்படி தெரியல. சரி சரி.

வண்ணாரப் பேட்டையைத் தாண்டாதவரா? கவிதைகளைப் படித்தால் அண்ட சராசரம் முழுதும் பார்த்த மாதிரி இருக்கு :)

நன்றி ஜ்யோவ்

@ மேவீ

தேங்க்ஸ் பா.

@ பாஸ்கரன் சுப்ரமணியன்

ஆமாம், நிறையவே கஷ்டப் படுகிறார்கள். நன்றி மீண்டும் வந்ததற்கும்.

@ ராமலக்ஷ்மி

ரெண்டு த(ப்)பா போட்டு விட்டேன். மன்னிச்சு விட்ருங்க :)
நன்றி சகோ.

@ உயிரோடை

இதுக்கு மேல சுற்றிப் பார்க்க விடல லாவண்யா :)

@ அறிவன்

நன்றி பாஸ்.

@ அன்புடன் மணி

அப்பிடீங்கற! நன்றி மணி :)

@ வடுவூர் குமார்

ரொம்ப நாட்கள் கழித்து வரீங்க பாஸ். எப்படி இருக்கீங்க? இப்ப gulf இல்ல?
சிங்கை / ஹாங்காங் - நீங்கள் சொல்றதை உணர முடிந்தது. நன்றி பாஸ்.

@ நந்தா

முதல்ல இது பின்னூட்டமா, இல்ல கவிதையான்னு யோசிச்சேன் :)
சரி சரி படங்களை பதிவுல போடுறது!

@ ராஜாராம்

தேங்க்ஸ் ராஜா

@ அரட்டை அகிலன்

பேரைக் கேட்டாலே ..சும்மா..அரட்டையாக இருக்கே. நன்றி பாஸ். போயிட்டு வந்து நீங்களும் ஒரு போஸ்ட் போடுங்க.

@ ரிஷபன்

நன்றி பாஸ். உங்கள் 'புலி' பதிவுடன் பார்த்தா, நாங்க எல்லாம் சும்மா சுண்டெலி.
உங்கள் ஆதங்கம் எல்லா இந்தியர்களுக்கும் இருக்கு. ஹ்ம்ம்.

@ கார்க்கி

வயிற்றில் கலக்கலா? எங்களுக்கு உன்னோட மொக்கையில் 'சிக்கல்' வருதே... போடா போயி ....படிக்க வெய்யி.

@ எறும்பு

எறும்பா இருந்தாலும் செம்ம குறும்பு...அடுத்த பதிவில் போட்டுட வேண்டியது தான். இதுக்கு இவ்வளவு ரசிகர்களா?

@ கும்க்கி

போட்டிருக்கலாம். லாம். லாம்... அது சரி 'பயணப் புத்தகம்'? ஏன் ஏன் இந்த கொ.வெறி?

@ அப்பாவி தங்கமணி

நன்றி சகோ. அடுத்தது 'நம்ம' ஊருதான் :)

@ HVL

ஏதாவது கமெண்டும் போடலாமே :)))

@ கமலேஷ்

வாங்க கவிஞர். உடம்பு இப்ப பரவாயில்லையா?

@ ல.பாண்டி

அசத்தல் பாசு. நான் ரொம்ப பாவம் :)

@ தமிழிஷ் மற்றும் தமிழ்மணத்தில் வாக்களித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

அனுஜன்யா

Mahesh said...

அடிவயத்துல பட்டாம்பூச்சி, அள்ளைல வெட்டுக்கிளின்னு சொல்லிக்கிட்டே 7mm பவர் பாயிண்ட் படமா போட்டுக்கிடுருக்கீங்களே !!!!

Ronin said...

Nanraga irunthathu! Sorry I missed noticing this post earlier..Niraiya eluthungal..

What Industry was the trip about. Just curious..I am followings txns between India and China, as there is a large potential there(to even dump)..

Kadaisiyal phrase adakuvathu kashtamaga irunthathu allava? But this one was fresh..

Ungal Eluthil milirum humility nanraaga irukirathu..

Karthik said...

கொஞ்சம் ஷார்ட்டா இருந்த மாதிரி ஃபீல். மத்தபடி அருமை. :) ஆர்வமாக தேடிக் கொண்டே வந்த போட்டோ கடைசியில் இல்லாதது பெரிய ஏமாற்றம். :(

CS. Mohan Kumar said...

Hello Anujanyaa, how are you ? I have written about you in Valai Charam. Pl. read when you have time.

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_15.html