Tuesday, January 27, 2009

மண் மகள்


சேற்றுப் பிரதேசத்தில்
வாலறுந்த
குதிகாலணியை
வீசி எறிந்தாள்
என்னிடம் மீதிச்
சில்லறை வாங்காமல்
சென்றவளின் வாயிலிருந்து
தேசத்தின் சுகாதாரம்
தூற்றப்பட்டது.
அவள் வசிக்கும் தூரதேசம்
போற்றப்பட்டது
பிறிதொரு நாளில்
கீரைக்குப் பேரம் பேசுகையில்
உதட்டின்மேல் இரு விரலிட்டு
சேற்றில் சங்கமித்த
உமிழ்நீரைப் பீய்ச்சியவள்
வெளிநாட்டில் வேலையிழந்த
அவளாகத்தான் இருக்க வேண்டும்
(கீற்று இதழில் பிரசுரமானது)

38 comments:

இராம்/Raam said...

நல்லாயிருக்கு.. :)

ராமலக்ஷ்மி said...

அருமை. புன்னகைக்க வைக்கிறது கடைசி வரிகள். போற்றப் பட்டது போதும் நீ என விரட்டிவிட தூற்றிய தாய்மடிதான் அடைக்கலம் தருகிறது. மண் மக்கள் உணர்வார்களாக:)!

நட்புடன் ஜமால் said...

\\வாயிலிருந்துதேசத்தின் சுகாதாரம்தூற்றப்பட்டது\\

அருமை.

தமிழ் said...

அருமை

எம்.எம்.அப்துல்லா said...

ஆஹா அண்ணே என்னைய புதுசா எழுத வச்சுட்டீங்க...ரெண்டு நாள் கழித்து நம்ப கடைப் பக்கம் வாங்க.

புதியவன் said...

நிதர்சனத்தை சொல்லும் வரிகள்
கவிதை வெகு அருமை...

na.jothi said...

நல்லா இருக்கு
இது போல கதை ஒன்று படித்த ஞாபகம் வருது

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா வந்திருக்குங்க.

narsim said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
நல்லா வந்திருக்குங்க.
//

அப்புறமென்ன.. கலக்கல்தான்

Anonymous said...

வண்ணச் சீரடி மண்மகள் அறிந்திலள்-னு சொன்னாரு இளங்கோவடிகள்.

அந்த வரி் இந்தக் கவிதைக்கு உந்துதல்?

நல்லா இருக்கு அனுஜன்யா.

Unknown said...

அருமை அண்ணா.. :))) வாழ்த்துகள்.. :))

முரளிகண்ணன் said...

அட்டகாசம் அனுஜன்யா. உமிழ்னீருக்குப் பதில் வேறு எதுவும் உபயோகித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோ?

சந்தனமுல்லை said...

//வாயிலிருந்து
தேசத்தின் சுகாதாரம்
தூற்றப்பட்டது.//


நல்லாருக்கு அனுஜன்யா!

கிருத்திகா ஸ்ரீதர் said...

மிக வேகமாக தாக்கியிருக்கிறீர்கள். நல்ல கட்டமைப்பு.... வாழ்த்துக்கள்.

மேவி... said...

"தேசத்தின் சுகாதாரம்
தூற்றப்பட்டது."
வார்த்தைகளை அருமையா use பண்ணி இருக்கிங்க...


"அவள் வசிக்கும் தூரதேசம்
போற்றப்பட்டது"
ஆமாங்க..... ஏதோ அமெரிக்கா எல்லாம் தெய்வத்தின் இருப்பிடம் மாதிரி பேசுவாங்க......

"உமிழ்நீரைப் பீய்ச்சியவள்
வெளிநாட்டில் வேலையிழந்த
அவளாகத்தான் இருக்க வேண்டும் "
global economic melt down யை கொண்டு வந்துடிங்க.....
கவிதை அருமை......

தேவன் மாயம் said...

உதட்டின்மேல் இரு விரலிட்டு
சேற்றில் சங்கமித்த
உமிழ்நீரைப் பீய்ச்சியவள்
வெளிநாட்டில் வேலையிழந்த
அவளாகத்தான் இருக்க வேண்டும் ///

நல்ல வார்த்தைகள்!!
கவிதை நன்றாக உள்ளது!!

anujanya said...

@ இராம்

நன்றி இராம். நீங்கதான் போணி பண்றீங்க :)

@ ராமலக்ஷ்மி

நன்றி. ரொம்ப சீக்கிரம் வந்துட்டீங்க இந்த முறை :)

@ ஜமால்

நன்றி ஜமால். எப்படி இத்தனை பேரை உற்சாகப் படுத்த முடிகிறது!. hats off.

@ திகழ்மிளிர்

நன்றி திகழ்மிளிர்.

@ அப்துல்லா

வா தம்பி. ப்ளாக் இப்போ சரி ஆயிடுச்சா? வருகிறேன்.

@ புதியவன்

நன்றி.

@ smile

அப்படியா? நிஜமாவே என் சொந்த கற்பனை :) நன்றி.

@ ஜ்யோவ்ராம்

நன்றி தலைவா.

@ நர்சிம்

இதுக்கு எவ்வளவு கெஞ்ச வேண்டியிருந்தது என்று எனக்குத்தான் தெரியும் :)

@ வேலன்

நன்றி. நீங்க ரொம்ப நல்லவரு. நான் சிலப்பதிகாரம் எல்லாம்... முடியல.

@ ஸ்ரீமதி

நன்றி ஸ்ரீ.

@ முரளி

'எச்சில்' என்பதற்கு 'உமிழ்நீர்' என்பது சற்று 'கவிதைத்துவம்' னு நினச்சேன். இல்ல..நீங்க வேற என்ன சொல்ல வரீங்க.....?

@ சந்தனமுல்லை

நன்றி சகோதரி.

@ கிருத்திகா

நன்றி கவிதாயினி. மகிழ்ச்சியா இருக்கு.

@ MayVee

வாப்பா! கலக்குற. நன்றி.

@ thevanmayam

நன்றி. உங்க பதிவுக்கு வரவேண்டும். :)

அனுஜன்யா

Ayyanar Viswanath said...

கடேசி வரி படிச்சி சிரிச்சிட்டேன்...சூழலுக்கேத்த கவிதை :)

சென்ஷி said...

கலக்கல் தலைவா... கடைசிவரி செம்ம நச் :-)))

பரிசல்காரன் said...

என்ன ஒரு ஆழமான தீம்! பின்றீங்க சாரே!

வரிகளைக் கோர்த்த விதத்தில் இந்தக் கவிதை இன்னும் சிறப்பாய் வென்றுவிட்டது!

na.jothi said...

எப்பொழுதுமே என் மனதில் உடனே தோன்றும்
அந்த கதை , யாராவது வெளிநாடு தான் பெரிசு
என்று சொல்லும் பொழுது
ரொம்ப நாளுக்கு முன் படித்த கதை
பெரியவர் ஒருவரும் வெளிநாட்டில் வந்திருக்கும்
இளைஞர் ரயில் பயணத்தில் சந்திக்கும் பொழுது
நம் நாட்டை ஏளனமாக பேசுவான்
பின் ரயிலில் பழம் வியாபாரியிடம் தெரியாமல்
ஒரு பழத்தை திருடுவான் அதை அந்த பெரியவரும்
பார்த்துவிடுவார் அதனுடன் கதைமுடியும்
அதை தான் சொல்ல வந்தேன்
சொல்ல வந்ததை சரியாக சொல்லாமல் விட்டதற்கு வருந்துகிறேன்

மாதவராஜ் said...

அனுஜன்யா!

எப்போதும் உங்கள் பதிவுக்கு முதலிலேயே கருத்துச் சொல்ல நினைப்பேன். நேற்று திருநெல்வேலியில் நண்பர் ஒருவர் மாரடைப்பால் அவதியுற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருந்தார். பார்த்துவிட்டு விடிகாலையில்தான் சாத்தூர் வந்து சேர்ந்தேன். (நண்பனிடம் இதையெல்லாம் பகிர்ந்து கொள்ளலாம்தானே)

கவிதை நன்றாக வந்திருக்கிறது. சேற்றில் முதலில் விழுந்த செருப்புக்கும், பிறகு விழுந்த எச்சிலுக்கும் இடையே வாழ்க்கை கிடக்கிறது. வேலியிழந்த மனிதர்கள்.... வாலறுந்த செருப்பு... யோசிக்க வைக்கிறது.

கார்க்கிபவா said...

:))

anujanya said...

@ அய்யனார்

நிறைய நாட்களுக்குப்பின் உங்கள் வருகை! நன்றி அய்ஸ்.

@ சென்ஷி

அய்ஸ் வந்தவுடன் நீங்களும். ஒரு குருப்பா வராங்கப்பா (வடிவேலு ஸ்டைல்) :))
நன்றி சென்ஷி.

@ பரிசல்

இன்னிக்கு என்னமோ நரிமுகத்தில் முழிச்சுட்டேன் போல. ஒரே நட்சத்திரக்கூட்டம். பரிசல்/ஜ்யோவ்/நர்சிம்/வேலன்/
முரளி/சென்ஷி/கார்க்கி. இந்தக் கவிதைல நெசமாலுமே ஏதாவது இருக்குமோ?

@ smile

ஐயோ, நான் சும்மா சொன்னேங்க. நீங்க சீரியசா விளக்கம் கொடுத்துக்கிட்டு. சும்மா லூஸ்ல விடுங்க தலைவா.

@ மாதவராஜ்

நீங்க எப்ப வந்தாலும் ஓகே நண்பா. இப்போ உங்க நண்பர் உடல்நலம் தேறி வருகிறாரா?

உங்கள் புரிதல் வழமை போல் சிறப்பு. நன்றி மாதவ்.

@ கார்க்கி

_/\_

அனுஜன்யா

அமிர்தவர்ஷினி அம்மா said...

சூழலுக்கும் பொருத்தமான நச் கவிதை

உயிரோடை said...

கீற்றுக்கு வாழ்த்துகள்

ரௌத்ரன் said...

நல்லா வந்திருக்குங்க கவிதை...இருப்பினும் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை...ஏதோ ஒன்னு தொந்தரவு பண்ணுது...பிறகு கூறுகிறேன்...

anujanya said...

@ அமிர்தவர்ஷிணி அம்மா

நன்றி

@ மின்னல்

தேங்க்ஸ்.

@ ரௌத்ரன்

வாங்க கவிஞரே! சொல்லுங்க.

அனுஜன்யா

ரௌத்ரன் said...

மறுபடியும் படிச்சு பார்த்தேங்க...ஒரு பெரிய பின்னூட்டம் எழுதி மறுபடி அழிச்சுட்டேன்...என்னோட நாணயத்திற்கும் ரெண்டு பக்கம் இருக்கறதால :)

Anonymous said...

thiru .anujanya avarkalukku nan naran.en kavithaikalai niryaya itankalil solliirukereergal mika nantri .plz send ur id narann.blogspot.com
zenzeebra.blogspot.com

BAUVIAM said...

eppadi eppadi sinthikka mudikirathu...
sathyam eppadi agumbothu

ethuvum nadkum than...

athu sari

keerai vanga / keertai beram pessa

neram kidaithathooo ......

bauviam.

BAUVIAM said...

nanbare,

nanru

pavam

venthapunile vel vendam

vanthorai vazavaipom !

mendum vanthoraium vaza viduvom

barathi kanda india urvaga

niraiya illangargal thevai

MSK / Saravana said...

நல்ல கவிதை.. (அதான் மேலே எல்லா தலைகளும் சொல்லிட்டாங்களே)..
:)

வாழ்த்துக்கள்.. கீற்றுவிற்காக..

anujanya said...

@ ரௌத்ரன்

என்னமோ சொல்ல வரீங்க. ஆனா இல்லன்னு சொல்றீங்க. சும்மா லூஸ்ல விடுங்க தலீவா. எத வேணாலும் சொல்லலாம். no probs. :)

@ நரன்

உங்கள் நன்றிக்கு நன்றி நரன். உங்கள் கவிதைகள் நல்லா இருக்கு. நல்ல விஷயத்தைப் பகிர்வது இன்னும் சந்தோஷமான விஷயம்தானே. என்னுடைய மின்னஞ்சல் முகவரி anujanya@gmail.com

@ BAUVIAM

உங்கள் முதல் வருகைக்கு நன்றி. Juz wanted to see the lighter side of things.

@ சரவணன்

நன்றி சரா.

அனுஜன்யா

ச.முத்துவேல் said...

கீற்றுவிலேயே படித்தேன். அங்கதத்தோடு அமைந்த கவிதை. ஆடக்கூடாது என்ற எச்சரிக்கை காட்டுகிறது. இன்னும் சில கருத்துகளும் உள்ளடங்கியிருக்கிறது. நன்று.

anujanya said...

@ முத்துவேல்

நன்றி முத்துவேல்.

அனுஜன்யா

ரௌத்ரன் said...

//சும்மா லூஸ்ல விடுங்க தலீவா. எத வேணாலும் சொல்லலாம்.//

புரிதலுக்கு நன்றி அனுஜன்யா...economic melt down ல் படிக்க நேர்ந்த தற்கொலைகளும்,நெருங்கிய நண்பர்கள் வட்டத்தில் ஏற்பட்டிருந்த அமைதி இழப்புகளும் தான் கவிதையை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாமல் போகக் காரணம்...


நாம கொஞ்சம் சென்சிட்டிவ்...கவிதைய படிச்சப்போ கருத்து அருவி மாதிரி வந்துச்சு..நாம எதாவது சொல்ல போயி அது அனுஜன்யாவ வந்து தாக்கிடுமோன்னு நெனச்சப்போ,எழுதுன கமெண்டு கூட நின்னு போச்சு...

அனுஜன்யா..அனுஜன்யா...

நம் சோகம் நம்மோடு போகட்டும் என்று பிறகு விட்டுவிட்டேன்...
:)

anujanya said...

ரௌத்ரன்,

நீங்கள் எழுதிய பின்னர் இதன் தாக்கம் நான் முனைந்ததைக் காட்டிலும் இன்னும் அதிகமாக இருப்பது புரிந்தது. நான், ஒரு மெல்லிய ஹாஸ்யத்துடன் சூழலைச் சொல்ல விழைந்தேன். ஆனால், இதனை அனுபவத்தவர்களின் வலி எனக்குத் தெரியவில்லை. நகைச்சுவை என்பது யாரையும் புண்படுத்தாமல் புன்னகை/சிரிப்பு வரவழைக்க வேண்டும். அந்த விதத்தில் சற்று சறுக்கல்தான் இந்தக் கவிதை என்று உணர்கிறேன். உரிமையுடன் சுட்டிக் கட்டுவதற்கு நன்றி தோழா.

Still, no probs. இன்னமும் லூஸ்ல விடுங்க. :))

அனுஜன்யா