Thursday, March 5, 2009

விடாது ஹைகூக்கள்

*************************************************
பிரியமான அப்பாவுடந்தான்
தந்தையர் தினம் செலவழிந்தது
அந்த முதியோர் இல்லத்தில்
*************************************************
பக்தர்கள் நிரம்பிய கோயிலில்
மணியும் மத்தளமும்
இயங்கியது மின்சாரத்தில்
*************************************************
நூறு பேருடன் பயணித்தும்
யாருடனும் பேசவில்லை
பாட்டரி தீர்ந்து போனதால்
*************************************************

44 comments:

narsim said...

//பாட்டரி தீர்ந்து போனதால்//

பளீர் பொளேர் அனுஜன்யா.. ஆம்.. இது இல்லை என்றால் அவ்வளவுதான் என்ற நிலை.. அதிலும் யாருடைய நம்பரும் வேறு நினைவில் வைத்திருக்க முடிவதில்லை..

மின்சார மணி.. சத்தமாக..

Highகூ...

அமுதா said...

/*நூறு பேருடன் பயணித்தும்
யாருடனும் பேசவில்லை
பாட்டரி தீர்ந்து போனதால்*/
இப்படி தான் ஓடுகிறது வாழ்க்கை

மேவி... said...

nalla irukku thala

na.jothi said...

இந்த மூன்றையும் தொடர்பா
எழுதுனிங்களா?
3 வது தான் முதல் பிரச்சினையே
யார்கிட்டேயும் பேசாம மனது
இறுகிப்போய் பெற்றோர்களை
முதியோர் இல்லத்தில் சேர்ப்பதும்
அமைதி வேணும்ன்னு கோயில்க்கு
போறதும்
ஹைக்கூ ஹைக்ளாஸ்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இவை புத்திசாலித்தனமான வரிகள், அவ்வளவே!

Cable சங்கர் said...

//நூறு பேருடன் பயணித்தும்
யாருடனும் பேசவில்லை
பாட்டரி தீர்ந்து போனதால்//

சூப்பர் அனுஜன்யா..

ச.முத்துவேல் said...

மூனாவது நல்லாயிருக்குது. புதுசாயிருக்குது.

ராமலக்ஷ்மி said...

இல்லங்கள் நிரம்புகின்றன
இதயமற்ற பிள்ளைகளால்.

மணியோசை மின்சாரத்தில்..
பக்தருக்கு மனமில்லை.

சுற்றியிருக்கும் உயிர்களைவிட
அலைபேசி அளவளாவலே
ஆனந்தம் பாட்டரி உயிர்விடும் வரை.

விடாது ஹைகூக்கள்
மூன்றுமே முத்துக்கள்.

பரிசல்காரன் said...

சூப்பரோ சூப்பர் ஜி!

கடைசி ஹைக்கூ (இத ஹைக்கூன்னா சுஜாதா எந்திருச்சி வந்து அடிப்பாரு! குறும்பான்னு சொல்லலாமா?) ரொம்ப நாளைக்கப்பறம் எல்லார்கிட்டயும் பகிர்ந்துக்கற ஒரு கவிதையைக் குடுத்துது!

அப்புறம்... குத்தம் சொல்லாமப் போனா நம்மளை ‘பெரிய இவன்’னு எப்படிச் சொல்லிக்கறது? அதுனால ஒரு கருத்து...

முதல் இரண்டு குறும்பாவின், கடைசி வரிகளின் முதல் வார்த்தைகள் இல்லாமலும், அவை நன்றாக இருக்கும்! (இதுக்கு நீ சொல்லாமலே இருந்திருக்கலாம்-ங்கறீங்களா??)

பரிசல்காரன் said...

இப்போதான் கவனிச்சேன். சி.கே சொன்னத. (C.K = கார்.கம்)

Highகூ! பொருத்தமான அழகான வார்த்தை. க்ரேட் நர்சிம்!

மாசற்ற கொடி said...

நல்லா இருக்கு. மூன்று கருத்துகளும் சம கால வழக்கை (வாழ்க்கையை) அழகாக படம் பிடித்து காட்டுகிறது.

அன்புடன்
மாசற்ற கொடி

மாசற்ற கொடி said...

நல்லா இருக்கு. மூன்று கருத்துகளும் சம கால வழக்கை (வாழ்க்கையை) அழகாக படம் பிடித்து காட்டுகிறது.

அன்புடன்
மாசற்ற கொடி

வால்பையன் said...

ஜூப்பரு தல

மண்குதிரை said...

வணக்கம் அனுஜன்யா !

//நூறு பேருடன் பயணித்தும்
யாருடனும் பேசவில்லை
பாட்டரி தீர்ந்து போனதால்//

ரசித்தேன்

Unknown said...

3rd one super... :)))

மாசற்ற கொடி said...

As an after thought, the "battery" does not mean the cell phone's alone. யோசிக்க வைத்ததற்கு
நன்றி.

அன்புடன்
மாசற்ற கொடி

யாத்ரா said...

அருமை

Thamira said...

வாவ்.. அழகு.!

(வலது புறத்தில் உங்களுக்குப்பிடித்த எழுத்துகள் என்ற பிரிவில் எனது பெயர் இல்லை என்பதை நினைவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறேன். பின்விளைவுகளை யோசித்துக்கொள்ளவும்.)

மணிகண்டன் said...

****
பிரியமான அப்பாவுடந்தான்
தந்தையர் தினம் செலவழிந்தது
அந்த முதியோர் இல்லத்தில்
****

ஏன் ? அவ்வளவு சீக்கிரமா பையன முதியோர் இல்லத்துல சேத்து விட்டுட்டாரா அப்பா ?

****
நூறு பேருடன் பயணித்தும்
யாருடனும் பேசவில்லை
பாட்டரி தீர்ந்து போனதால்
****

நல்லவேளை, பாட்டரி மட்டும் இருந்து இருந்தா, நூறு பேரும் காத பொத்திக்கணும். எல்லார் கிட்டயும் பேசிக்கிட்டு இருப்பீங்க.

ஹைக்கூ இலக்கண ரூல்ஸ் 17.2.1 மிஸ் பண்ணிட்டீங்க. அத கண்டு சீற்றம் கொண்ட ஜ்யோவ்ராம் சுந்தர் வாழ்க !

மணிகண்டன் said...

****
பிரியமான அப்பாவுடந்தான்
தந்தையர் தினம் செலவழிந்தது
அந்த முதியோர் இல்லத்தில்
****

ஏன் ? அவ்வளவு சீக்கிரமா பையன முதியோர் இல்லத்துல சேத்து விட்டுட்டாரா அப்பா ?

****
நூறு பேருடன் பயணித்தும்
யாருடனும் பேசவில்லை
பாட்டரி தீர்ந்து போனதால்
****

நல்லவேளை, பாட்டரி மட்டும் இருந்து இருந்தா, நூறு பேரும் காத பொத்திக்கணும். எல்லார் கிட்டயும் பேசிக்கிட்டு இருப்பீங்க.

ஹைக்கூ இலக்கண ரூல்ஸ் 17.2.1 மிஸ் பண்ணிட்டீங்க. அத கண்டு சீற்றம் கொண்ட ஜ்யோவ்ராம் சுந்தர் வாழ்க !

பூமகள் said...

அழகான முரண் தொடர்கள்..

முதல் முரண் பிள்ளைகளுக்கு பளார்.. பளீர் டச்.

"கோவிலிலும் பற்றற்ற நிலையில்
நான்..
மின்சார மணி ஓசையால்..!"

நூறு பேரோடு பயணித்தாலும்
ஆறுதல் தொலைவில் தானில்லையா??

தொடர்புக் கருவியில் செயலிழப்பு நிச்சயம் நம்மை அசையவிடாதல்லவா??

அழகான முரண் கவி.. பாராட்டுகள் அனுஜன்யா. :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஐயையோ, இங்கயும் மணிகண்டன் வருவாருன்னு தெரியாமப் போச்சே... இதுலயும் கேயாஸ் தியரி மாதிரி ஏதாவது கண்டுபிடிப்பாரே :) :)

வாழவந்தான் said...

உங்கள் கவிதைகளுக்கு இதுதான் பதில்...
உலகமே உலகமயமாகலில் சுழல
மனிதன் மட்டும் இயந்திரமயமாக்கலில்!!
நச் ஹைகூக்கள் :-)

சந்தனமுல்லை said...

//
பாட்டரி தீர்ந்து போனதால்//

:-)..மனதில் நிற்கும் ஹைக்கூ-களைக் கொடுத்திருக்கிறீர்கள்!

Karthikeyan G said...

நல்ல இருக்கு..

வாரமலரின் 3 பரிசுகள் காத்திருக்கின்றன. (ச்சும்மா..) ;)

எம்.எம்.அப்துல்லா said...

மூனாவது முத்து :)

மணிகண்டன் said...

****
ஐயையோ, இங்கயும் மணிகண்டன் வருவாருன்னு தெரியாமப் போச்சே... இதுலயும் கேயாஸ் தியரி மாதிரி ஏதாவது கண்டுபிடிப்பாரே
*****

விடமாட்டேன். என்னோட முன் ஜென்ம பிளாக்கர் வாழ்க்கைல எப்படி விளையாடி இருக்கீங்க பாருங்க. (கேயாஸ் தியரி)

http://thodar.blogspot.com/2009/03/blog-post.html

MSK / Saravana said...

மற்ற இரண்டு ஹைக்கூக்களும் சாதரணமானதுதான்..

//நூறு பேருடன் பயணித்தும்
யாருடனும் பேசவில்லை
பாட்டரி தீர்ந்து போனதால்//

இதுதான் அனுஜன்யா டச்.. செமையா இருக்குங்க்னா..

கார்க்கிபவா said...

நான் போட்ட கமெண்ட்டு எங்க தல??????

//Highகூ...//

முடிவில் ரெண்டு புள்ளி எதுக்கு தல.. ஆவ்வ்வ்வ்வ்வ்

முரளிகண்ணன் said...

மிகவும் ரசித்தேன். அட்டகாசம்.

புதியவன் said...

//நூறு பேருடன் பயணித்தும்
யாருடனும் பேசவில்லை
பாட்டரி தீர்ந்து போனதால்//

இந்த ஹைகூ நல்லா இருக்கு...

அமிர்தவர்ஷினி அம்மா said...

மூன்றுமே அழகு....

தமிழன்-கறுப்பி... said...

மூணாவது நல்லாருக்கு!

நான் அதனை தப்பாக புரிந்துகொள்வில்லை என்று நினைக்கிறேன்...

"உழவன்" "Uzhavan" said...

அத்தனையும் அருமை!

அன்புடன்,
உழவன்

அத்திரி said...

ஹைக்கூ இல்லை........... நிதர்சன உண்மை..............ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ராம்.CM said...

சூப்பரோ சூப்பர் ஜி!

sakthi said...

பிரியமான அப்பாவுடந்தான்
தந்தையர் தினம் செலவழிந்தது
அந்த முதியோர் இல்லத்தில்
nitharsanam

குசும்பன் said...

யாருப்பா அது அனுஜன்யா பிளாக்கை கடத்தி தமிழில் புரியும் படி அழகான கவிதை எழுதுவது! இதோட நிறுத்திக்கப்பா!

அவரு இமேஜை டேமேஜ் செய்யாதீங்க!

முகுந்தன் said...

//பிரியமான அப்பாவுடந்தான்
தந்தையர் தினம் செலவழிந்தது
அந்த முதியோர் இல்லத்தில்
//

எப்போதும் போல சாட்டையடி..

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

//நூறு பேருடன் பயணித்தும்
யாருடனும் பேசவில்லை
பாட்டரி தீர்ந்து போனதால்//

நன்று! சமீப நாட்களில் படித்து ரசித்த அழகான கவிதை இது.

-ப்ரியமுடன்
சேரல்

anujanya said...

@ நரசிம்

Highகூ ! நன்றி தல.

@ அமுதா

நன்றி அமுதா.

@ MayVee

நன்றி.

@ புன்னகை

நன்றி. இல்லை வெவ்வேறு சமயங்களில் தோன்றியது.

@ ஜ்யோவ்

//புத்திசாலித்தனமான வரிகள்,//

மணிகண்டன் கவனிக்கவும். நாங்களும் புத்திசாலிதான்.

குரு, கொஞ்சம் பொறுத்தருள்க. உங்க ரேஞ்சே தனி.

@ கேபிள் சங்கர்

வாங்க தல. நன்றி.

@ முத்துவேல்

நன்றி முத்துவேல்

@ ராமலக்ஷ்மி

நன்றி உங்கள் தொடர் ஊக்கத்திற்கு.

@ பரிசல்

நன்றி கே.கே. நீங்க சொல்றது சரிதான். அந்த வார்த்தைகள் இல்லாம நல்லாவே இருக்கும். ஆனா, சுந்தர் சொல்றத கேட்டா, எல்லா வார்த்தைகளையும் எடுத்துடனும் :)
கே.கே. பாராட்டுவது C.K. பாராட்டை !

@ மாசற்ற கொடி

இரண்டு பாராட்டுகளுக்கு நன்றி :) (நா கொஞ்சம் ஸ்லோவா தான் கமெண்டு ரிலீஸ் பண்ணுவேன் :) )

@ வால்பையன்

என்ன குரு, இது எல்லாம் மூணு வரிதானே. எதிர் கவிதை போடலாமே!

@ மண்குதிரை

நன்றி.

@ ஸ்ரீமதி

நன்றி ஸ்ரீ.

@ மாசற்ற கொடி

ம்ம், ரொம்ப சிந்தனை :) நன்றி.

@ யாத்ரா

நன்றி. உங்கள் முதல் வருகை?

@ தாமிரா

நன்றி தல. அது எல்லாம் எலக்கியவாதிகள். நீங்களும் அம்புட்டு கெட்டவரா?

@ மணிகண்டன்

இது ஹைக்கூ இல்லன்னு சொல்றதுல எவ்வளவு வரைட்டி? ஜ்யோவ், பரிசல் அப்புறம் நீ. நல்லா இருங்கப்பு.

@ பூமகள்

நன்றி பூமகள். உங்கள் முதல் வருகை என்று நினைக்கிறேன்.

@ வாழவந்தான்

நன்றி. உங்களுக்கும் முதல் வருகை.

@ சந்தனமுல்லை

நன்றி முல்லை. ரொம்ப நாளாச்சு பப்புவைப் பற்றி படித்து :). வருகிறேன்.

@ கார்த்திகேயன்

நன்றி கார்த்திகேயன்.

@ அப்துல்லா

நன்றி தம்பி.

@ சரவணன்

நன்றி சரா.

@ கார்க்கி

நீ கமெண்டு போட்டாதானே வரும். வேற எங்கியாவது போட்டிருக்கலாம் :)
புகழ்ந்து தானே எழுதின? இல்லாட்டி ஆட்டமாடிகா ரிஜெக்ட் ஆயிடும் :)

@ முரளிகண்ணன்

நன்றி முரளி. கொஞ்சம் ஜ்யோவை 'கவனி'யுங்கள்.

@ புதியவன்

நன்றி

@ அமிர்தவர்ஷிணி அம்மா

நீங்கதான் கரெக்ட் அமித்து.அம்மா

@ தமிழன்

ரொம்ப குசும்புங்க உங்களுக்கு :)

@ உழவன்

நன்றி உழவன். உங்களுக்கும் முதல் வருகை?

@ அத்திரி

நன்றி ஐயா :)

@ ராம்

நன்றி தல

@ சக்தி

நன்றி சக்தி. கவிதை எழுதுகிறீர்கள். உங்கள் முதல் வருகை?

@ குசும்பன்

குசும்பா! உன்னை ஒண்ணுமே செய்ய முடியாதா? அப்புறம் உன்னைப்பற்றி ஒரு பின்.நவீனம் எழுதிடுவேன் :)

@ முகுந்தன்

ஹாய் முகுந்த். இன்னும் சிங்கை? கேஷவ் எப்படி இருக்கான்? நன்றி.

@ சேரல்

நன்றி சேரல்.

யாத்ரா, பூமகள், உழவன், சக்தி, நீங்க என்று நிறைய முதல் வருகைகள். எல்லோரும் கவிதை எழுதுபவர்கள். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு.

கொஞ்சம் தாமதமான 'நன்றி'களுக்கு மன்னியுங்கள். நானும் பிசி என்று எப்படிக் காண்பித்துக்கொள்வது!

அனுஜன்யா

www.narsim.in said...

கைராசி போணி நம்மது..40வரைக்கும் வந்துருச்சே தல..

anujanya said...

ஆமாம், உண்மைதான். கம்பர் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும். அவர் கையும் கைராசி தான்.

அனுஜன்யா

Unknown said...

மன்னிக்கவும் அனுஜன்யா லேட்டாக
வந்ததற்கு.இதைப் படித்து விட்டேன்
ஏற்கனவே.

பின்னூட்டம் இட்ட நினைப்பிலேயே இருந்துருக்கிறேன்.ஆனால்பின்னூட்டம்
இடவே இல்லை.இதை’பரிசல்” விவகாரத்தின் போதுதான் அறிய முடிந்தது.


ஹைகூ பார்முலா:

//தினசரி வாழ்கையில் நாம் சந்திக்கும் சில மின்னல்/கண நேர(snapshot /flash/ lightning)அனுபவங்கள்/கணங்கள் ஏற்படுத்தும்
உணர்ச்சிகளை/சலனங்களை/பிரமிப்புகளை மூன்று வரியில்
காட்சிப் படுத்துவதுதான் ஹைகூ.

சுத்தமாக ஒரு நேரடி அனுபவம்.


இதில் உருவகம்/உவமை/மிகை/வருணனை/பிரசாரம் இருக்கக் கூடாது.சமூகச் சாடல்கள் இருக்கக் கூடாது.காட்சிகளை விளக்கக்கூடாது. அனுபவத்தின் பின் விளைவுகளைப் பற்றிச்சொல்லக் கூடாது.சுட்டிக் காட்டக் கூடாது.

ஒரு மின்னல் போல் காட்டி மறையும் ஒரு “சடக்’ என்ற அனுபவ உணர்ச்சி மூன்று வரிகளில் வெளிப்படுவது//


இனி என் விமர்சனம்:-

தயவு செய்து creativeஆக எடுத்துக்கொள்ளுங்கள்.


முதல் கவிதையில் காட்சிப் படுத்தவில்லை.”ஒரு வருத்த தொனி”
இருக்கிறது.இப்படி இருக்கலாம்.

முதியோர் இல்லம்
தந்தையர் தினம் முடிந்து
புறப்பட்டார்கள்

(இந்த புறப்பட்டவர்கள் யார்? It goes without saying)

இரண்டாவது கவிதையும் காட்சிப் படுத்தவில்லை. No snapshot.ஒரு அங்கதம் இருக்கிறது.இப்படி இருக்கலாம்.

கோவில
தீபாராதனை
மின்சார மணி மத்தளத்தில்

மூணு பொருந்தி வருகிறது.

ஆமா நம்ம லேட்டஸ்ட் ஹைகூ பற்றிச் சொல்லவில்லையே?வாங்க.

நன்றி