Friday, April 3, 2009

சாலமன்-முத்தையா - (எதைப்) பற்றியும் ....... பற்றாமலும் (3rd April ‘09)

(எதைப்) பற்றியும் ....... பற்றாமலும் (3rd April ‘09)

சென்ற வாரம் கேட்க நேர்ந்த உரையாடல்கள்:

ஒரு ஞாயிறு காலை பாலாஜி மந்திரில் (நம்ம ஊரில் திருப்பதி சாமி) அபிஷேக வேளை

அம்மா: "அதோ பாரு, சாமி மேல எல்லோ கலர் தண்ணி'

பையன் : "எதுக்கு தண்ணி விடறாங்க"

அம்மா: "அது - அபிஷேகம்"

பையன் : "அப்ஷேகம்னா?"

அம்மா: "சாமி குளிக்கறாங்க"

பையன்: "ஆனா, சாமி இன்னும் டூத்த ப்ரஷ்ஷே பண்ணலியே"

அம்மா: “ “

மீண்டும் பையன் : "குளிச்ச அப்புறம்?"

அம்மா : "துடைச்சு விடுவாங்க - நா உனக்கு துடப்பேன்ல - அது மாதிரி"

பையன் : 'அப்புறம்"

அம்மா : "டிரஸ் பண்ணிப்பாரு சாமி"

பையன் : "அப்புறம்"

அம்மா : "மாலை எல்லாம் போட்டுப்பாரு"

பையன் : "அப்புறம்"

அம்மா : "எல்லோருக்கும் ஹலோ சொல்லுவாரு"

"எல்லோருக்கும் அருள் புரிவாரு" என்று சொல்லி மாட்டிக்கொள்ளாத அந்த அம்மாவின் சாதுரியம் முன் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடமாக இருக்க வேண்டும்.
****************************************************************************************************
Thirumanjanam will be performed for Moolavar on Sunday, the 12th April 2009. All are invited and requested to participate.

थिरुमंजनाम विल बे पेर्फोर्मेद फॉर मूलावर ओं सन्डे , थे 12th अप्रैल 2009. अल अरे इन्वितेद एंड रेकुएस्तेद तो पर्तिसिपते.

இந்த மாதிரி இரு வரிகளை ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் தண்ணீரில் நனைத்த சாக் பீசால் கரும்பலகையில் ஒரு சேட்ஜி எழுதியது கவர்ந்தது. ஹிந்தியில் என்ன எழுதினார் என்று தெரியாது. 'மூலவர்' மற்றும் 'திருமஞ்சனம்' மட்டும் அப்படியே எழுதிவிட்டதாக அறிந்து கொண்டேன். சரி, இப்போ எப்பிடி ஹிந்தியில் எழுதினாய் என்றுதானே கேட்கிறீர்கள்? ஆங்கில வார்த்தைகளை ஹிந்தியில் transliterate செய்து விட்டேன், கூகிளாண்டவர் தயவில். என்ன மாதிரி வந்திருக்கிறதோ! ஹிந்தி தெரிந்தவர்கள் யாரேனும் சொல்லவும் :) பன்மொழி வித்தகனாகியதற்குப் பாராட்டப் போகும் உங்கள் அனைவருக்கும் எனது அட்வான்ஸ்டு நன்றிகள்.
****************************************************************************************************
அடுத்தது ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலின் மேல்மாடி விடுதி. இரவு சுமார் 9.30 மணி இருக்கும். ஒரு லிப்ட் வருகிறது. லிப்டுக்குள் ஒரு யுவதி. அருகில் அவள் கணவன்? அவன் மொபைலில் யாருடனோ.

லிப்ட் மூடும் தருவாயில் ஒரு ஆறு பேர் விடுதியிலிருந்து கீழே செல்ல வேண்டும். முதலாமவர் வந்து லிப்டைப் பிடித்துக் கொண்டு, தள்ளாடி வரும் தனது நண்பர்களுக்காகக் காத்திருக்கிறார். அந்த யுவதியும் பொறுமையாக பார்க்கிறாள்.

ஆங்கிலத்தில் நடந்த உரையாடல் ஓரளவு தமிழில்:

"ஹாய், ரொம்ம்ப நன்றி"

"பரவாயில்லை"

"உங்களுக்குச் சிரமம் இல்லை என்றால், தரைக்குச் செல்லும் பொத்தானை அமுக்குங்கள்"

"ஆயிற்று. அங்குதான் நாங்களும் செல்கிறோம்"

"ம்ம். சாரி, போதையிலிருக்கும் பாங்கர்களை (bankers) மன்னித்து விடுங்கள்"

"சட்டை செய்யாதீர்கள். பரவாயில்லை"

"இல்லை - நாங்கள் .கவலையை மறக்க இங்கு வந்தவர்கள் ... உங்களுக்குத் தெரியுமே .. உலகச் சந்தைகளின் சரிவும், வங்கிகளின் நிலையும்..."

"தெரியும்..எல்லாருமே அடி வாங்கிக் கொண்டுதான் இருகிறார்கள்"

"ஓ, நீங்களும் வங்கியாளரா?"

"இல்லை - அதில் டிபாசிட் போட்டவள்"

லிப்டு தரையைத் தொட்டிருந்தது.

"லேடீஸ் பர்ஸ்ட். நீங்க போங்க"

"இல்லை இல்லை - நீங்களே போங்க. நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் இந்தக் கதவில் மோதிக்கொள்ளும் சாத்தியக் கூறுகள் அதிகம்"

"இது ரொம்ப ஓவர் மேடம். ஆனாலும் ...நன்றி"

இந்த சம்பாஷணையைக் குறும்பாக கவனித்துக் கொண்டிருந்த கணவரை நான் ரசித்தேன்.
****************************************************************************************************
சமீபத்தில் உருவாகியிருக்கும் சாலமன்-பாப்பையா சாரி சாலமன்-முத்தையா தொடர் படு சுவாரஸ்யமாக இருக்கு. மாதவ் ஒரு கௌதம் கம்பீர் என்றால், ஜ்யோவ், சேவாக் போல விளாசிவிட்டார். ரொம்ப நாட்களாக சரியாக ஆடாத டிராவிட் விளாசுவது போல பைத்தியக்காரனும் கொட்டி விட்டார். அந்தப் பதிவுக்கு நந்தாவின் பின்னூட்டம் மிகச் சரியாக இருந்தது. தொடரப் போவது நர்சிம். இலக்கியவியாதிகளிடம் இருந்து [ஆமாம், இவங்க மட்டும் எல்லோரையும் அரசியல் வியாதிகள், மித வியாதிகள், மத வியாதிகள் என்று எல்லோரையும் சாடலாம். இவங்கள மட்டும் மொக்கைவியாதிகள் ஆகிய நாம் ஏன் சும்மா விடணும் :) ] தொடர் ஒரு மித இலக்கியவாதிக்கு வந்திருக்கு. குருவி தலையில் என்று யாரும் நினைக்க வேண்டாம். நர்சிம் தொடர்ந்து நம் எல்லோருக்கும் 'இனிய அதிர்ச்சி' கொடுத்துக் கொண்டே இருப்பவர். சமீப 'பால் மிஷல் பூக்கோ’ ஒரு சோறு பதம்.

இது எவ்வாறு புரிந்து கொள்ளப் பட்டு இருக்கிறது என்பதிலேயே சிறு குழப்பம். மாதவ் எழுதியது ஒரு மாதிரி ஆட்டோகிராப். ஜ்யோவ் இலக்கிய/பதிவுலகு பற்றிய தன் எண்ணங்களை தன்னோட பாணியில் சொல்லி விட்டார். இவருக்கு இருக்கும் கோபத்தைப் பார்த்தால் 'முதன்மையாக "வாசகன்" ' என்பதை ஒரு கணேச, சாரி, பிள்ளையார் சுழியாகவே எடுத்துக் கொள்ளலாம் போல இருக்கு :)

பை.காரன் எழுதியது அவரே பகடி செய்வது போல் 'ஃபிலிம் காட்டுதல்' தோற்றம் இருந்தாலும், நீண்ட நாட்களுக்குப் பின் எழுதும் தோழனுக்கு கடிதம் இந்த வகையில் இருப்பது பொருத்தமே.

எனக்கென்னவோ இந்த meme யை ரொம்ப நீட்டாமல் விட்டு விடுவது மேல் என்று படுகிறது. நிச்சயம் ஒரு நிலையில் இது வேறு வகையான 'கொசுவத்தி' பதிவுகளாக மாறி, எல்லோருக்கும் கொட்டாவி வரப் போவது நிச்சயம். சினிமா பற்றிய meme ஒரு தருணத்தில் ஏற்படுத்திய ஆயாசம் அனைவரும் அறிந்ததே.

Having said that (இந்தப் பிரயோகம் இப்போது கை கொடுத்தாலும், அலுவலக கலந்துரையாடல்களில் மிகவும் நைந்து போன வாக்கியம்), இந்தத் தொடரில் அய்யனார், வளர்மதி, பெருந்தேவி, கென், தமிழ்நதி ஆகியோர் (எழுதினால்) என்ன எழுதுவார்கள் என்று தெரிந்து கொள்ள ஆவல்.
****************************************************************************************************
Lead India '09 என்று டைம்ஸ் ஆப் இந்தியா ஒரு பிரச்சாரம் செய்து வருகிறது. கல்வி முறை, சுகாதாரத் துறை, மற்ற அரசுத் துறையில் ஊழல்கள் என்று பலவித இடங்களிலும் ஊடுருவி இருக்கும் சமூக அவலங்களை எதிர்த்து குடிமக்கள் ஒவ்வொருவரும் உறுதி பூணும் ஒரு செயல்பாடு என்று நினைக்கிறேன். நல்ல விஷயம்தான். ஆனால் புகைப் படங்களில் பெரியவர்கள் தங்கள் வீட்டு சிறார்கள் தலையில் கை வைத்து உறுதி பூணுவது போல் காணப் படுவது சற்று நெருடலாக இருக்கு. Any views?
****************************************************************************************************
இந்த வாரம் பிடித்த கவிதையில், உங்களுக்குப் பரிச்சயம் இருக்கக்கூடிய பெரிய கவிஞரின் இரு கவிதைகள்

தயங்கி தயங்கி

அம்மாவின் கை பிடித்து
மெதுவாகப் படி இறங்குகிறது
குழந்தை.
சீராகப் போய்க் கொண்டிருந்த
காலம்
சற்று தயங்கித் தயங்கி
முன்னகர்கிறது.

தனிமையின் விளிம்பு

கிண்ணத்தில் அளந்து
தட்டில் கவிழ்க்கப்பட்ட
அளவுச் சாப்பாட்டின்
வட்ட விளிம்பில்
பிரதிபலிக்கிறது
என் தனிமை.


இந்தக் கவிதைகளைப் பார்த்த பின் எனது கவிதை முயற்சிகளை ஒத்திப் போட்டு விட்டேன் :(. கவிஞர் யாரென்று கண்டு பிடியுங்கள்.

32 comments:

பரிசல்காரன் said...

முதல் வரவாய் இருக்க வேண்டும் என்ற பொதுப்புத்தியில் முதலில் பதிவைப் படிக்காமலே இந்தப் பின்னூட்டம்...

ஹி..ஹி..

Anonymous said...

நானா முதல்?

ரொம்ப நல்ல இருந்துது. இலக்கிய வியாதி... குட் நல்ல சொற்றொடர்.

பரிசல்காரன் said...

சாலமன் - முத்தையா கடிதம் குறித்து நான் பெருமதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய குருஜி சுந்தர் அவர்களுக்கிட்ட பின்னூட்டத்தில் ‘இது எங்களைப் போன்ற மொக்கையர்களிடம் மாட்டாமலிருக்கக் கடவது’ என சாபம்/வரம் இட்டிருந்தேன்.

இரண்டாவது நாளே அது நர்சிம்மிடம் போனது அவர் ஃபூக்கோ பற்றிய ஃபிலிமை எடுத்துவிட்டதன் காரணம்தான் என்று நினைக்கிறேன். ஆஹா.. நம்மகிட்ட ஒருத்தன் சிக்கீட்டாண்டா என்று அவர்கள் சிரிப்பது உங்களுக்குக் கேட்டது போலவே எனக்கும் கேட்டது! சந்தடி சாக்கில் இலக்கியவியாதிகள் என்று எள்ளி நகையாடிய உங்கள் எழுத்தில் குறைந்தது மூன்று சாலமன்களும், இரண்டு முத்தையாக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்!

Karthikeyan G said...

//கவிஞர் யாரென்று கண்டு பிடியுங்கள்.//

கம்போடியா வை சேர்ந்த கவிஞ்ர் 'கிம் வைல்ட்' ஆ? ;)

பரிசல்காரன் said...

யப்பா.. கார்த்திகேயா... முடியல.. ஆளவிடு..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அந்தக் கவிதைகளைச் சமீபத்தில்தான் படித்தேன். முகுந்த் நாகராஜ்தானே... (வீணாப்போனவன் என்ற பெயரில் வலைப்பதிவு வைத்திருக்கிறார்).

கார்க்கிபவா said...

முகுந்த் நாகராஜன்..

நர்சிம்மின் பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிரேன்..

ஆனால், உங்களை மொக்கைவாதியா சித்தரிப்பதை வெறுக்கிறேன். அப்புறம் எங்கள எல்லாம் யார் மதிப்பா??????????? :)))))))))

Unknown said...

:))))

narsim said...

//பரிசல்காரன் said...
முதல் வரவாய் இருக்க வேண்டும் என்ற பொதுப்புத்தியில் முதலில் பதிவைப் படிக்காமலே இந்தப் பின்னூட்டம்...
//

பரிசல்.. பொதுப்புத்தி போன்ற வார்த்தைப் பிரயோகங்களைப்பார்த்தால்.. ம்ம்ம்

narsim said...

அனுஜன்யா,

நீங்க நினைத்ததே தான்.. இதுல எதுக்கப்பா என்னைய கோர்த்தீங்கன்னு போன்ல கேட்டேன். மிகத் தெளிவாக சொல்லிவிட்டேன்.அதாவது நான் எழுதும் கடிதம் மிகச் சாதாரண மாகத்தான் இருக்கும் ஒரு கடிதம் போலவே, என்று.

(இவங்க எழுதறமாதிரி எழுதினா அதுவரை நண்பனாக இருப்பவன் கடிதம் கண்டவுடன் எதிரியாகிவிடுவான் தல)

தமிழன்-கறுப்பி... said...

நேற்று விடுமுறை என்பதால் நேற்றய பதிவுகளை இனிமேல்தான் படிக்க வேண்டும்...

மாசற்ற கொடி said...

பற்றியும் ....... பற்றாமலும்" இந்த முறை பல விதயங்களை முன் வைத்திருக்கிறது.

அந்த அம்மா- குழந்தை reminded me of one more smart question from a child.

அபிஷேகம் முடிந்து திரை போட்டவுடன்

குழந்தை : ஏன் மூடிட்டாங்க ?

அம்மா : நீ குளிச்சதும் dress பண்ணிக்க door க்ளோஸ் பண்றோம்ல - அத மாதிரிதான்

குழந்தை : ஆன்னா அப்ப குளிக்கறதை காமிச்சாங்களே ?

அம்மா : ????

அந்த கவிதைகள் அருமை. யார் என்று கண்டு பிடிக்க கூகிள் ஆண்டவரே துணை - இப்படித்தான் நாம் வீணாக போய் கொண்டிருக்கிறோம்.

ஹிந்தியை விட்டு விடுங்கள் - பாவம்.

அன்புடன்
மாசற்ற கொடி

மண்குதிரை said...

வணக்கம் அனுஜன்யா,

அது முகுந்தின் கவிதை.

நான் சொல்லும் முன்பே சுந்தர் அவர்கள் சொல்லிவிட்டார்.

தொடர்ந்து படித்து வருகிறேன்.

நீங்களும் கடிதம் ஒன்றை எழுதுங்கள்....................

அகநாழிகை said...

அனுஜன்யா,
அம்மா, பிள்ளை உரையாடல் யோசிக்க வேண்டிய விஷயம்தான்.
சாலமன்-முத்தையா நல்ல தொடர் பதிவு.
ஏன் எல்லாவற்றையும் பிசைந்து தந்து விட்டீர்கள். தனித்தனி பதிவாக இட்டிருக்கலாமே..

-பொன். வாசுதேவன்

முரளிகண்ணன் said...

சாலமன் சுற்றில் எப்படியும் நீங்கள் மாட்டுவீர்கள். அப்போ இருக்கு கும்மி

வால்பையன் said...

//அம்மா : "எல்லோருக்கும் ஹலோ சொல்லுவாரு"

"எல்லோருக்கும் அருள் புரிவாரு" என்று சொல்லி மாட்டிக்கொள்ளாத அந்த அம்மாவின் சாதுரியம் முன் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடமாக இருக்க வேண்டும். //

சொன்னாத்தான் இன்னும் கேள்வி கேட்டு கொடைவும்ல!

வால்பையன் said...

//இந்த சம்பாஷணையைக் குறும்பாக கவனித்துக் கொண்டிருந்த கணவரை நான் ரசித்தேன்.//

போதையில் ஆண்கள் கண்ணுக்கு தெரிய மாட்டார்கள்!

அத்திரி said...

கலக்கல் /............... கடேசி கவிதை அருமை

Anonymous said...

அனுஜன்யா,

பரவலான விஷ்யங்களைப் பற்றிய இவ்விதமாக எழுதுவது நல்ல பயிற்சி.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் விஷ்யங்களில் நல்ல வெரைட்டி தெரிகிறது.

கவிதை முகுந்தோடதுதானே. சுட்டி கொடுங்கள் புதியவர்களுக்கு உதவும்.

மாதவராஜ் said...

எல்லாவற்றையும் ரசிக்க முடிந்தது.
//இந்தத் தொடரில் அய்யனார், வளர்மதி, பெருந்தேவி, கென், தமிழ்நதி ஆகியோர் (எழுதினால்) என்ன எழுதுவார்கள் என்று தெரிந்து கொள்ள ஆவல். //

இவர்களோடு உங்களையும் சேர்த்துப் பார்க்க ஆசை.

ஜியா said...

:)) pathiva padichu mudichu comment podura samayathula etho velai vanthu appadiye vitutten... oru rendu mani neram kazichu thirumba open panna enna comment poda vanthennu maranthu pochu :((

no tamil font... in office :((

கே.என்.சிவராமன் said...

//(இவங்க எழுதறமாதிரி எழுதினா அதுவரை நண்பனாக இருப்பவன் கடிதம் கண்டவுடன் எதிரியாகிவிடுவான் தல)//

நர்சிம்,

அவரவர் நண்பர்களுக்கு அவரவர் நண்பர்களை குறித்து தெரியும், புரியும். அவரவர்களை, அவரவராக ஏற்றுக் கொள்வதுதானே நட்பு. எனவே எதிரியாக மாட்டார்கள்.

:-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

Unknown said...

அனுஜன்யா,

அவியல் நல்லா இருக்கு.

//எனக்கென்னவோ இந்த meme யை ரொம்ப நீட்டாமல் விட்டு விடுவது மேல் என்று படுகிறது.//

100% உண்மை.

Deepa said...

திருமஞ்சனாம் வில் பே பேர்ஃபோர்ம்த ஃபார் மூலாவர் ஓம் சன்டே, த்தே 12த் அப்ரைல் 2009. அல் அரே இன்விதேத ஏன்ட் ரேகுவேஸ்தேத தோ பர்திசிபேத்.

இது தான் ஹிந்தியில் நீங்கள் அடித்திருப்பது! நல்லா இருக்குல்ல?!
:-)

//Lead India: பெரியவர்கள் தங்கள் வீட்டு சிறார்கள் தலையில் கை வைத்து உறுதி பூணுவது போல் காணப் படுவது சற்று நெருடலாக இருக்கு.//

எனக்கும் இதே தான் தோன்றியது. இன்னொன்றும் தோன்றியது. இது போல் அரசியல் தலைவர்களைத் தங்கல் பிள்ளைகள் தலை மீது கை வைத்து வாக்குறுதிகள் கொடுப்பார்களா?

ராம்.CM said...

கவிதை அருமை

ராமலக்ஷ்மி said...

பகிர்ந்து கொண்டிருக்கும் கவிதைகள் நன்று. ரசித்தேன் நானும் அம்மா பையன் உரையாடலையும், அந்த லிஃப்ட் சம்பாஷணையையும்:)!

anujanya said...

@ பரிசல்

//முதல் வரவாய் இருக்க வேண்டும் என்ற பொதுப்புத்தியில் முதலில் பதிவைப் படிக்காமலே இந்தப் பின்னூட்டம்...

ஹி..ஹி..//

யு டூ பரிசல்? :)

//சந்தடி சாக்கில் இலக்கியவியாதிகள் என்று எள்ளி நகையாடிய உங்கள் எழுத்தில் குறைந்தது மூன்று சாலமன்களும், இரண்டு முத்தையாக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்!//

அந்த விளையாட்டுக்கு என்னை யாரும் அழைக்காமல் இருக்கவே இத்தனை முஸ்தீபுகளும். உண்மையாகவே சொல்கிறேன். நாமளும் பங்கெடுத்தால், ஏதோ ஆஸ்காருக்கு அயன் படம் அனுப்பிச்ச மாதிரி இருக்கும். எதுக்கு தெரிந்தே அவமானப் படணும்?

@ மயில்

நன்றி மயில். எல்லோருக்கும் இலக்கியவாதிகள் மேல் இம்புட்டுக் கோவமா :)

@ கார்த்திகேயன்

க்ர்ர்ர்ர்ர். உங்களுக்கு கே.கே. பதில் சொல்லி விட்டார்.

@ ஜ்யோவ்ராம்

கரெக்ட். நீங்க பார்க்காத கவிதையா?

@ கார்க்கி

அட! நீயும் இலக்கியவாதிதான்!

@ ஸ்ரீமதி

பரிசல் சொன்னது ரைட்டு தான்.

@ நர்சிம்

//பரிசல்.. பொதுப்புத்தி போன்ற வார்த்தைப் பிரயோகங்களைப்பார்த்தால்.. ம்ம்ம்//

சரியாப் புடிச்சீங்க தல. பரிசல் நிச்சயம் எழுதணும்.

நர்சிம், இதுக்குப் பதில் சொல்வதற்குள் நீங்க பதிவ எழுதி, அதுக்கு அப்புறம் இன்னும் இரண்டு பேர் எழுதி ... என் சுருசுப்பை நானே மெச்சிக் கொள்கிறேன். ரொம்ப நல்லா எழுதி, நம்ம எல்லாரோட மானத்தையும் காப்பாத்திடீங்க. நன்றி.

@ தமிழன்

நிதானமா படியுங்க. மீண்டும் வரவும். நன்றி தமிழன்.

@ மாசற்ற கொடி

உங்க உரையாடல் இன்னும் நல்லா இருக்கு. எழுதுங்களேன். நன்றி.

@ மண்குதிரை

நன்றி தல. கடிதம் விளையாட்டுக்கு நான் வரல.

@ அகநாழிகை

நன்றி. இது ஒரு மாதிரி அவியல்/கதம்பம்/காக்டெயில் (கான மயிலாட ...). அதனால கலந்து கட்டி பிசைந்து ..... விட்டு விடுங்கள் ப்ளீஸ்.

@ முரளி

ஏன் இந்த கொலவெறி?

@ வால்பையன்

வாங்க குரு. சரியா புரிஞ்சு வெச்சுருக்கீங்க.

@ அத்திரி

நன்றி அத்திரி.

@ வேலன்

நன்றி அண்ணாச்சி. எல்லாம் உங்க பாதை தான் :)

@ மாதவராஜ்

உங்க வார்த்தைகளுக்கு நன்றி மாதவ். நான் பதிவில் சொன்னதும் இதுதான். உங்கள், மற்றும் நான் குறிப்பிட்ட சிலர் போல அதே intensity என் எழுத்தில் இருக்காது.

@ ஜி

நல்ல வேலை மறந்து போச்சு. இல்லாட்ட செம்ம திட்டு வங்கி இருப்பேன் :) நன்றி ஜி.

@ பைத்தியக்காரன்

முற்றிலும் சரி தோழா. நட்பு என்பது அப்படியே ஏற்றுக் கொள்வது.

@ ரவிஷங்கர்

நன்றி ரவி. அவியல் போல சுவையா இருக்கா?

@ தீபா

வாங்க தீபா! உங்கள் முதல் வருகை. பெரிய பாரம்பரியம். ஹிந்திய விட்டு விடுகிறேன். அது பாவம்.

உங்கள் கருத்துக்கு நன்றி தீபா.

@ ராம்

வாங்க தல. கவிதை முகுந்த் எழுதியது. அங்க போயி படிங்க. நிறைய அபாரமான கவிதைகள் இருக்கும்.

@ ராமலக்ஷ்மி

நன்றி சகோ.

அனுஜன்யா

கார்க்கிபவா said...

//@ கார்க்கி

அட! நீயும் இலக்கியவாதிதா//

என்னை இப்படி ஆபாசமாக திட்டியதற்கு சபையில் மன்னிப்புக் கேட்கும் வரை நான் இந்தப் பக்கம் வர மாடேன்..

யாத்ரா said...

தாங்கள் குறிப்பிட்ட முகுந்த நாகராஜ் அவர்களின் கவிதை எனக்குள்ளும் பாதிப்பை ஏற்படுத்தியது.

மேவி... said...

kalakkal thaan ponga

Ashok D said...

லிப்ட் சம்பாஷணை நல்லாயிருந்தது (சரக்கு இருந்ததால)

anujanya said...

@ கார்க்கி

:)

@ யாத்ரா

உண்மைதான் யாத்ரா. மென் உணர்வுகளைத் தட்டி எழுப்பும் கவிதைகள் அவருடையது.

@ MayVee

நன்றி 'கவிஞர்' - ச்சும்மா.

@ அசோக்

உங்கள் முதல் வருகை அசோக்? 'சரக்கு' பதிவில் என்று வருமோ :( நன்றி அசோக் :)

அனுஜன்யா