Tuesday, July 28, 2009

வாசுகி



அப்போ நான் எட்டாங் கிளாஸ் படித்துக் கொண்டிருந்தேன். கோ-எஜுகேஷன் பள்ளி. பெண்கள் ஸ்கர்ட்டிலிருந்து ஒவ்வொருவராகத் தாவணிக்கு தத்தம் திடீர் தினங்களில் மாறிக்கொண்டிருக்க பசங்க தொடை தெரியும் அரை நிஜாரிலிருந்து பேண்ட்டுக்கு மாற பெற்றோர்களிடம் விண்ணப்பம் போட்டிருந்த பருவம். லைலா, நசீமா, உஷா, ஆஷா, ரோசலின்ட் என்ற மாடர்ன் பெயர்களுடன், எங்களை வசீகரிக்கவும் தவறாத அழகுப் பெண்கள். ராஜேஸ்வரி, வேதரத்தினம், புஷ்பலதா, தனகாந்திமதி போன்ற கொஞ்சம் புராதனப் பெயர்களுடன் எல்லா விதத்திலும் சுமாராக விளங்கும் நல்ல பெண்கள். இந்த இரண்டு பிரிவுகளிலும் இல்லாத, எங்களுக்கு இலேசாக பயம் தந்த tomboy பெண்கள் சிலர். அவர்களில் ஒரு உற்சாகப் பந்துதான் வாசுகி.

நீங்கள் புராணங்களில் தேர்ந்தவர் என்றால், பாற்கடல் கடைவதற்கு மந்திரமலை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பு கயிறாகவும் பயன்பட்டது என்று நினைவுக்கு வரும். தமிழ் ஆர்வலர்களுக்கு வாசுகி என்றவுடன் அய்யனின் துணைவியார் என்பது ஞாபகம் வரும். எனக்கு, வாசுகி என்றால் என் பள்ளித் தோழி வாசுகிதான். மொதோ பெஞ்சில்தான் அமர்வாள். இல்ல இல்ல, அப்படி ஒண்ணும் படிப்பில் ஓஹோ எல்லாம் இல்லை. ஒரு மாதிரி 'ஜஸ்டு பாசு' கேசு. ஆனால், அதற்கெல்லாம் அலட்டிக் கொள்ளவே மாட்டாள். நம்ம கபில் தேவ் மாதிரி பல் சற்று தூக்கல். அதனால் எப்போதுமே சிரிக்கத் தயாரானது போல தோற்றம் அவளுக்கு. இலகுவில் புன்னகைத்தும் விடுவாள்.

விளையாட்டு வகுப்புகளில் பையன்கள் சற்று தூரத்தில் இருக்கும் கிரிக்கெட் மைதானத்திற்கும், பெண்கள் பள்ளி வளாகத்துக்குள் இருக்கும் சிறு மைதானத்திற்கும் சென்று விடுவோம். இது தவிர, பள்ளி கிருத்துவப் பள்ளி என்பதால் MI / RI என்று சுருக்கமாகச் சொல்லப்பட்ட நீதிபோதனை / மத போதனை என்னும் வகையில் வகுப்பு பிரிக்கப்படும். முதலில் நீதிபோதனை வகுப்பில் சென்று உறங்கும் வழக்கம் இருந்த என்னை, 'அங்க கதை எல்லாம் சொல்றாங்க. கிளாஸ் முடியும் போது பிஸ்கட்/கேக்/டீ எல்லாந் தராங்க; நீயும் வாயேன்' என்று சொல்லி RI வகுப்புக்குக் கூட்டிச் சென்றவள் வாசுகி தான்.

விவிலியத்தின் நிறைய பக்கங்கள் வாசுகிக்கு அத்துப்படி. மத்தியானம் நாங்க எல்லாம் கலர் கலர் டிபன் பாக்ஸ்ல இட்லி,தோசை, தக்காளி சாதம்னு சாப்பிடும் போது, வாசுகியும், அவள் அண்ணன் சம்பந்தமும் ஆளுக்கொரு தட்டுடன் மிட்-டே மீல்ஸ் சாப்புடுவாங்க. சில சமயம் அங்க வர சூடான சாம்பார் வாசனை தூக்கலா இருக்கும்.

இது ஏதாவது ஏழ்மையின் அவலம் அல்லது வாசுகிக்கு ஏதாவது ஆகி விட்டதோ என்று பயத்துடன் விலக நினைப்பவர்களுக்கு - அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. தைரியமா மேலே படியுங்கள்.

நான் அப்பவே எங்க பள்ளியின் கிரிக்கெட் அணியில் இருந்தேன். எப்பவாவது பதினொன்றுக்குள் எடுப்பார்கள். ஆனால், ஜூனியர் அணியின் உப தலைவன் நான். அதனால எங்க வகுப்புக்குள் கொஞ்சம் மிதப்பா தான் இருப்பேன். அப்பா டெஸ்ட் மேட்ச் கனவுகளுடன் வாங்கித் தந்த கான்வாஸ் ஷூ போட்டுக்கொண்டு மைதானத்தை வலம் வந்து நண்பர்கள் முன் பிலிம் காட்டுவது என் வாடிக்கை.

ஒரு நாள் அப்படி தனியே ஓடிக்கொண்டிருந்தேன். மாலை சுமார் 5.30 மணி. திடீர்னு என்னைத் தாண்டி ஒரு உருவம் ஓடியது. யார்ரா அதுன்னு கொஞ்சம் வேகம் எடுத்துப் பார்த்தால் ...வாசுகி. நான் அவளைப் பிடிக்கப் போக (அட, டச்சிங் எல்லாம் கிடையாது), அவள் இன்னும் கொஞ்சம் வேகம் எடுத்தாள்.

இது எனக்குள் எதையோ உசுப்பி விட்டது. அவளைக் கூப்பிட்டு நிறுத்தினேன்.

"ஏய், இங்க வா"

"நீ தான் இங்க வாயேன்"

அப்போதே பெண்கள் சொல்வதைக் கேட்பவனாக இருந்திருக்கிறேன் என்று இப்போது புரிகிறது. அவள் அருகில் சென்றேன்.

"எதுக்கு கூப்பிட்ட" என்றாள்.

"நீ எதுக்கு ஓடுற? அதுவும் பாய்ஸ் கிரவுண்டுல உனக்கு என்ன வேல"

"அடுத்த வாரம் ஸ்போர்ட்ஸ் டே இருக்குல்ல?"

"ஆமாம், அதுக்கென்ன - உனக்கு என்ன அதுல?"

"நான் அத்லெட் - நூறு, இருநூறு மீட்டர் ரேசுல ஓடுகிறேன்"

"என்னது? நீயா? சரி சரி 'ஓடுறேன்'ன்னு வேணா சொல்லு. 'அத்லெட்' எல்லாம் பெரிய வார்த்தை" என்றேன் நக்கலாக.

"என்கூட ரேஸ் வரியா" என்றாள்.

"அடச் சீ! போயும் போயும் உன்கூடவா?"

"தோத்துடுவோம்னு பயமாடா?"

"வாடி பாத்துடுவோம்"

மைதானத்தில் அப்போதே நூறு, இருநூறு மற்றும் நானூறு மீட்டர்களுக்கான அடையாளங்கள் இருந்தன.

"சொல்லுடா, நூறா, இருநூறா?"

மீண்டும் என் தன்மானம் தூண்டப்பட்டது.

"இருநூறு மீட்டர்"

என் தோள் அளவு உயரமே இருந்தவளை கொஞ்சம் பரிதாபமாகப் பார்த்தேன். எதுக்கும் இருக்கட்டும் என்று நன்றாக மூச்சு இழுத்து விட்டுக்கொண்டேன். அவள் எப்போதும் நாற்பது மதிப்பெண் வாங்கப்போகும் கணிதத் தேர்வில் வைத்துக் கொள்ளும் அதே முகபாவத்துடன் அமைதியாக இருந்தாள்.

அவளே தான் சொன்னாள் - ஒன், டூ, த்ரீ.

சடுதியில் ஓடினேன். சுமார் ஐம்பது மீட்டர்களில் முன்னணியில் இருந்தேன். நூறிலும் நான்தான். நூறு தாண்டியதும் வளைவு வந்தது. அனாயாசமாக என்னை முந்தினாள். நான் வேகம் எடுத்தேன். அவளும். ஏய், என்ன இது. பதறி ஓட ஆரம்பித்தேன். அவள் என்னைத் திரும்பிப் பார்க்கவில்லை. இன்னும் இன்னும் வேகமெடுத்தாள். அவள் இருநூறைத் தொட்டபோது நான் சுமார் 180 மீட்டர்கள்தான் முடித்திருந்தேன்.

கடைசி இருபது மீட்டர்கள் ஓடப் பிடிக்காமல் நடந்து வந்தேன். அந்த முன்பற்களுடன் அவள் சிரித்து 'பரவாயில்ல, நா நினைச்சத விட வேகமாத்தான் ஓடுற" என்றாள்.

"என்ன, நக்கலா? இப்ப வரியா?"

"நா ரெடி" என்றவளிடம் இந்த முறை நூறு மீட்டர் என்றேன் எச்சரிக்கையாக.

இந்த முறை நான் 'ஒன் டூ த்ரீ' சொன்னேன் (லக்கு மாறுதானு பார்க்கலாம்)

அடிப்பாவி.. ஐம்பது மீட்டருக்குள் அவள் எனக்கு ஐந்து-ஆறு மீட்டர்கள் முன்னால பறந்து கொண்டிருந்தாள். அவளைக் கடந்ததைக் கவனித்தேன். அவள் எப்போ கீழே மடங்கி உட்கார்ந்தாள் என்று கவனிக்கவில்லை. சம்பிராதயமாக நூறு மீட்டர் கல்லை வெற்றிப் பெருமிதத்துடன் தொட்டு விட்டுப் பார்த்தால், அவள் அங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்தாள். இருட்டி விட்டிருந்தது. கையை நீட்டினேன். பிடித்து மெல்ல எழுந்து கொண்டாள்.

அவள் வீடு அருகில்தான். மெல்ல நடந்து போய்விடுவாள் என்பதால், நான் சைக்கிளில் வீடு வந்து சேர்ந்தேன். அடுத்த சில நாட்கள் வாசுகி பள்ளிக்கு வரவில்லை. வேதரத்தினம் அவளுக்கு காச்சல் என்றாள்.

ஒரு வாரம் கழத்து வாசுகி, தாவணி உடையில் அடக்கமாக வந்து உட்கார்ந்தாள். அடக்கம் எல்லாம் ஒரு வாரந்தான். அப்புறம் அதே சவுடால். அதே சிரிப்பு. நான் அவளிடம் ஓட்டப்பந்தயத்தில் தோற்றதை யாரிடமும் சொல்லாமலிருக்க அவளுக்கு அவ்வப்போது லஞ்சம் அழுதேன். பென்சில், காம்பஸ் பெட்டி, கடல உருண்டை என்று.

பள்ளி முடிந்து, கல்லூரி முடிந்து, பெங்களூரில் வேலை கிடைத்து, வார இறுதிகளில் வெறியாகக் கிரிக்கெட் ஆட்டம் தொடர்ந்தது. HMT கிரவுண்டில் மேட்ச். நான் ஒன் டவுன் செல்வேன். முதல் விக்கெட் விழுந்ததும் படு ஸ்டைலாக சென்று, இரண்டு ஓவர் விளையாடினேன். ஒரு ஷார்ப் சிங்கிள் எடுக்கையில், படுபாவி பீல்டர் டைரக்ட் ஹிட் அடிக்க, ஆட்டமிழந்தேன்.

அடுத்த ஆட்டக்காரர்கள் மட்டைப் பயிற்சி எடுத்துக்கொண்டு மெல்லத் தட்டிக் கொண்டிருந்தார்கள். அருகில் சிறிது தண்ணீர் தேங்கி இருந்தது. ஒருவன் சற்று வேகமாக அடித்துவிட, 'போச்சு, பந்து தண்ணீரில் நனையப் போகிறது' என்று நொந்து போகையில், ஒரு சூடிதார் பெண், கடைசி நிமிடத்தில் குனிந்து அந்தப் பந்தைத் தடுத்து, அனாயசமாகப் பந்தை எங்களிடம் வீசி எறிந்தாள். சரி நன்றி சொல்லலாம்னு அருகில் சென்றால், தெரிந்த முகம்.

"நீ வாசுகி தானே"

"ஞாபகம் இருக்கா? மறந்துட்டியோன்னு நினெச்சேன்"

"நீ எங்க இங்க?"

பக்கத்திலிருந்த இளைஞனைக் கூப்பிட்டு "ஜான், இவன் என்கூடப் படிச்சவன்; இது என் ஹஸ்பண்டு ஜான்; இந்த கிரவுண்டு மெயின்டெயின் பண்ணுறது இவர்தான்" என்று அறிமுகப்படுத்தினாள்.

"என்ன முன்னாடியே பாத்திட்டியா?"

“ம்ம், பார்த்தேன்.”

“எப்போ?”

“நீ ரன் அவுட்டகும்போது” என்றாள், அதே வசீகரமான முன்பல் சிரிப்புடன்.

66 comments:

Anonymous said...

கதைன்னு சொல்லறீங்க, பாத்தா சொந்த கொசுவர்த்தி மாதிரி இருக்கே.. என்னமோ நல்ல இருங்க:))

இரவுப்பறவை said...

கதை நன்றாக உள்ளது,
இது நிஜமாகவே கதையா?, இல்லை கதையாக்கப்பட்ட நிஜமா?

Anonymous said...

என் அம்மாவை ஞாபகப்பதறாங்க வாசுகி. நான் கல்லூரி படிக்கும்போது கூட அம்மாவுடன் Physical Training Course படித்தவர்கள் வந்து பேசும் ஞாபகம் வந்துவிட்டது. மூன்று குழந்தைகள் பிறந்ததும் அம்மா வேலைக்கு ,பி டி டீச்சர் வேலைக்கு போவதை விட்டு விட்டார்கள். கூடப்படித்தவர்கள் வந்து, உங்கம்மாதான் எங்களை விட நல்லா விளையடுவா, அவ இப்ப வேலைக்குபோவதில்லையே என்று வருத்தப்படுவார்கள்.

Vijayashankar said...

இது புனைந்திட்ட கதையா இல்ல அனுபவத்தின் புனைவா?

எல்லோருக்கும் விடலை பருவம் இப்படி இருக்கும்...

சரி வாசுகி என்ன ஆனார்?

--
அன்புடன்
விஜயஷங்கர்
பெங்களூரு
http://www.vijayashankar.in

மண்குதிரை said...

suvai. rasiththeen.

நையாண்டி நைனா said...

நாங்க எல்லாரும் இதை கதை என்றே நம்பிட்டோம்.

இப்படி புரியறா மாதிரி அதுவும் பெருசா எழுதி இருக்கீங்களே...!!! டுயூசன் டீச்சர் எங்க தல உண்மைதமிழன் அண்ணாவா?

பரிசல்காரன் said...

வழுக்கிக் கொண்டு போகும் நடை. சின்ன சின்ன உதாரணங்களில் சுவாரஸ்யம் என்று நன்றாகவே வந்திருக்கிறது ஜி!

//அப்போதே பெண்கள் சொல்வதைக் கேட்பவனாக இருந்திருக்கிறேன் என்று இப்போது புரிகிற//

இது புனைவு என்பதை இந்த வரிகள் கட்டுடைத்துவிடுகிறது!

Vidhoosh said...

:) நல்லா இருக்கு.

Ashok D said...

கதை சிஸர் சாரி சிக்ஸர். welldone.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நல்ல கதை அனுஜன்யா! வாசுகி எந்த மாதிரி பெண்? தெரியவில்லை. எனக்குத் தோன்றிய மாதிரி வைத்துக்கொள்கிறேன்.

-ப்ரியமுடன்
சேரல்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கதை ரொம்ப சுவாரசியமா வழுக்கிக்கிட்டு போகுது. இது(வும்) முக்கியம்தானே.

மற்றபடி...சாதாரண பத்திரிகைக் கதைதான் :(

Suresh Kumar said...

நீங்க ரன் அவுட்டா இருந்தாலும் கதை சிக்ஸர் தான் ........ நல்ல அன்பவங்கள் நல்ல கதைகளாகவும் வரலாம்

அ.மு.செய்யது said...

கதை சுவாரஸியமா இருக்கு...தல...எழுத்துக்கள் ப்ப்ச்ச்...

நானும் கிறிஸ்துவ பள்ளியில் படித்தவன் என்பதால் இந்த அனுபவங்கள் எனக்கும் ஒத்து போகிறது.

நெறைய ரோஸ்லின்கள்...வாசுகிக்கள்....அதெல்லாம் ஒரு காலம்...( நான் ஸ்கூல் முடிச்சது சஸ்ட் ஆறு வருஷம் முன்னாடி தான் )

துபாய் ராஜா said...

இயல்பான எழுத்துநடையில் கதை அருமையாக உள்ளது.

படமும் அழகு.

வாழ்த்துக்கள்.

நர்சிம் said...

புனைவின் வெற்றியே அது புனைவா நிஜமா என குழ்ப்புவதில் தான் இருக்கிறது..அதை செவ்வனே செய்து விட்டீர்கள்.மிக நல்ல நடையில் கதையின் ஓட்டம் சீராக இருந்தது.

Vinitha said...

அனுபவம் கலந்திட்ட புனைவு!

எந்த ஊருங்க நீங்க... தாவணி எல்லாம் கோவை பக்கம் தான் சேஞ் ஆகும்!

நேசமித்ரன் said...

"அனு" பவம் என்றால் அற்புதம்
கதை என்றால் இன்னும் கொஞ்சம் மெனக்கெடலாம்
:)

நாணல் said...

சுவாரசியமா இருக்கு கதை..

கார்க்கிபவா said...

புனைவாமாம்....

மாசற்ற கொடி said...

ஒரு சாதரண நிகழ்வு என்றாலும் விவரித்த விதம் அருமை.

குறிப்பாக - அந்த ரன்னிங் ரேஸ் நல்ல விறுவிறுப்பு.

அன்புடன்
மாசற்ற கொடி

Anonymous said...

இப்படி எத்தனை முறை ரன் அவுட் ஆனீங்களோ?

நல்லா இருக்கு அனுஜன்யா.

sakthi said...

நன்றாக உள்ளது அனுஜன்யா சார்

:)))))

தராசு said...

கலர் கலர் டிபன் பாக்ஸ், MI/RI, இதெல்லாம் ஒரு Extra Fitting மாதிரி இருக்குது தல.

ரௌத்ரன் said...

விறுவிறுப்பான நடை அனுஜன்யா...இனி உள்ளடக்கத்தில் கவனம் செலுத்துங்கள்...நேற்று நீங்கள் மொழியாக்கம் செய்திருந்த சிறுகதை ஒன்றை படித்தேன்...இன்னமும் சுழன்று கொண்டேயிருக்கிறது அக்கதை.

Thamiz Priyan said...

வாவ்! கலக்கல்!
நல்லா ரசிச்சு படிச்சேன்.

Cable சங்கர் said...

/அவளுக்கு அவ்வப்போது லஞ்சம் அழுதேன். பென்சில், காம்பஸ் பெட்டி, கடல உருண்டை என்று.//

நாங்க எல்லாம் இதையெல்லாம் வேற ஒண்ணுக்குதான் கொடுப்போம்..:)

நாடோடி இலக்கியன் said...

தெளிவான நடை.கடைசி வரை சுவாராஸ்யம் குறையவில்லை.

அமிர்தவர்ஷினி அம்மா said...

புனைவல்ல நிஜம். எழுத்து நடை அதை ஊர்ஜிதப்படுத்துகிறது :)

அழகான மலரும் நினைவுகள்.

அத்திரி said...

அண்ணாச்சி அழகான மிக அழகான மலரும் நினைவுகள்.............வாழ்க்கையில் நாம் படித்த எந்த வகுப்பையும் மறக்கலாம்....ஆனால் 8ஆம் வகுப்பை மறக்கவே முடியாது...........அருமை..............எனக்கும் அப்படித்தான்

Unknown said...

// அப்போ நான் எட்டாங் கிளாஸ் படித்துக் கொண்டிருந்தேன். //

இப்போ.....??



// கோ-எஜுகேஷன் பள்ளி. //


ஐ............



// பெண்கள் ஸ்கர்ட்டிலிருந்து ஒவ்வொருவராகத் தாவணிக்கு தத்தம் திடீர் தினங்களில் மாறிக்கொண்டிருக்க பசங்க //



ஐ.......ஐ.........



// தொடை தெரியும் அரை நிஜாரிலிருந்து பேண்ட்டுக்கு மாற //


ச்ச.......ச்ச.......

Unknown said...

//உஷா, ஆஷா, லைலா, நசீமா, //



இதெல்லாம் மார்டன் பேரா ......??

முடியல......


///எங்களை வசீகரிக்கவும் தவறாத அழகுப் பெண்கள். //


மஜா மாடி .... குரு.....



// ராஜேஸ்வரி, வேதரத்தினம், புஷ்பலதா, தனகாந்திமதி போன்ற கொஞ்சம் புராதனப் பெயர்களுடன் எல்லா விதத்திலும் சுமாராக விளங்கும் நல்ல பெண்கள். //



யாரு சொன்னது... இதெல்லாம் புராதானப் பேர்கள்ன்னு.....!! இப்போ பாருங்க... எப்புடி எல்லாரும் நியூ பெஷன்க்கு மாருராங்கன்னு......


ராஜேஸ்வரி - ராவரி

வேதரத்தினம் - வேனம் ...


புஷ்பலதா - புபதா...

தனகாந்திமதி - தனதி... , தமதி....!!


இதுதான் இப்போ பேஷனுங்கோ சாமிங்கோவ்.....!!!

Unknown said...

// அவர்களில் ஒரு உற்சாகப் பந்துதான் வாசுகி. //



யூ மீன் ... வல்லூ'ஸ் ஒயிப் ........????





// நீங்கள் புராணங்களில் தேர்ந்தவர் என்றால், //


பஸ்ட் ப்ரைஸ் - மெரீனா சுத்தி காண்பிக்கப் படும்....

conditions apply : ( கடல் மட்டுமே....)



செகண்டு ப்ரைஸ் - கண்ணகி சிலை சுத்தி காண்பிக்கப் படும் .....

conditions apply : ( சிலை மட்டுமே....)


தேர்ந்து ப்ரைஸ் - சத்யம் தியேட்டர் சுத்தி காண்பிக்கப் படும்.

conditions apply : ( சத்யம் தியேட்டர் மட்டுமே....)




// மொதோ பெஞ்சில்தான் அமர்வாள். //


தத்தி பொண்ணு .........



// நம்ம கபில் தேவ் மாதிரி பல் சற்று தூக்கல். //


நம்ப அருக்காணியக்கா மாதிரிங்களா......???

Unknown said...

// கிளாஸ் முடியும் போது பிஸ்கட்/கேக்/டீ எல்லாந் தராங்க; //


அட... ச்ச..... எண்ணுங்க தலைவரே..... ஒயின் தரமாட்டாங்களா....??



// நீயும் வாயேன்' என்று சொல்லி RI வகுப்புக்குக் கூட்டிச் சென்றவள் வாசுகி தான். //


தெனாலி படத்துல வர்ற டைமன் பாபு மாதிரி ..... டைமன் வாசுகியா.....??





// நான் அப்பவே எங்க பள்ளியின் கிரிக்கெட் அணியில் இருந்தேன். //


முடியல... நா கெளம்புறேன்.....

Unknown said...

// வலம் வந்து நண்பர்கள் முன் பிலிம் காட்டுவது என் வாடிக்கை. //


படம் ஓடுச்சாங்க தலைவரே....... ???



// ஒரு நாள் அப்படி தனியே ஓடிக்கொண்டிருந்தேன். //


ம்ம்ம்.... ம்ம்ம்..... யாரு ப்ரபோஸ் பண்ணுனா.....???





// திடீர்னு என்னைத் தாண்டி ஒரு உருவம் ஓடியது. //


அய்யய்யோ....... டையநோசரா.....??



// யார்ரா அதுன்னு கொஞ்சம் வேகம் எடுத்துப் பார்த்தால் ...வாசுகி. //


வாட்.... எ... பப்பி..... சேம்.....!! ஒரு பொண்ணு உங்கள மிந்தீட்டு போரா.....!!!

Unknown said...

// நான் அவளைப் பிடிக்கப் போக (அட, டச்சிங் எல்லாம் கிடையாது), //


நம்பீட்டோம்......!!!




// டுத்த சில நாட்கள் வாசுகி பள்ளிக்கு வரவில்லை. வேதரத்தினம் அவளுக்கு காச்சல் என்றாள். //



" ஒளியிலே .... தெரிவது.... தேவதையா....."

ம்ம்ம்....ம்ம்ம்.....!!




// ஒரு வாரம் கழத்து வாசுகி, தாவணி உடையில் அடக்கமாக வந்து உட்கார்ந்தாள். //



நம்தன...... நம்தன...... நம்தன...... நம்தன......

Unknown said...

// கடல உருண்டை என்று. //


கெளவி கடையில சுட்டதா......??




// HMT கிரவுண்டில் மேட்ச் //


அட.... நம்ம மதிக்கர... கோகுலா... அடுத்து பி.இ.எள் .... அடுத்து HMT கிரவுண்டு....
அருமையான கிரவுண்டாச்சே தலைவரே......!!!





// ஒரு சூடிதார் பெண், கடைசி நிமிடத்தில் குனிந்து அந்தப் பந்தைத் தடுத்து, ///



நம்தன...... நம்தன...... நம்தன...... நம்தன......




// “நீ ரன் அவுட்டகும்போது” என்றாள், //


வாட்......எ.......பப்பி.....சேம்.......!!!

Unknown said...

போயிட்டு வாரனுங்கோவ்.....!!!

லவ்டேல் மேடி ............

Ayyanar Viswanath said...

நல்லாருக்கு அனுஜன்யா :)

நந்தாகுமாரன் said...

படு வேகமான ஸ்வாரஸ்யமான நடை i mean ஓட்டம் ... பெங்களூர் வந்து தான் சற்றே இளைப்பாறுகிறது :) ... மும்பைப் பந்தயம் எப்பொழுது ... ஓ sorry இது சிறுகதையா :)

விநாயக முருகன் said...

ரன் அவுட்டில்லீங்க..
நாட் அவுட்டுனு நம்பிக்கையா இருங்க

- இரவீ - said...

சுவாரஸியமா இருக்கு.

பீர் | Peer said...

இந்த நிஜப் புனைவுகளை அடிக்கடி எதிர்பார்க்கிறேன், அசத்தல் அனுஜன்யா.

யாத்ரா said...

கதை ரொம்பப் பிடித்திருக்கிறது.

மணிகண்டன் said...

கிரிக்கெட், ஸ்கூல் நண்பி, கொசுவத்தி - இந்த கூட்டனி சாதாரணமானவங்க எழுதினாலே நல்லா இருக்கும்...அனுஜன்யா எழுதினா
சிக்ஸர் தான்.

நல்லா இருந்தது அனுஜன்யா. அடிக்கடி சிறுகதை எழுதுங்க.

Bee'morgan said...

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்.. இந்த கொசு வர்த்திக்கு எதுக்கு சிறுகதை லேபில்..?
:) நல்லா இருக்கு..

பா.ராஜாராம் said...

நக்கலும் நையாண்டியுமாக நகர்ந்து கொண்டிருந்த நடை...சுடிதாரில் மாறிய வாசுகி பந்தெடுத்து வீசுகிரதில் துவங்கி,மெல்லிய,புகை மாதிரியான,சோகம் மனசில் கவிழ்வதில் அனுவில் இருக்கும் எழுத்தாளன் வெளிபடுகிறான்!வாழ்த்துக்கள் அனு..

நட்புடன் ஜமால் said...

பதிவுகளை ரீடரில் படிப்பதில் ஒரு செளகர்யம் இருக்கின்றது, பின்னூட்டங்களை பார்த்துவிட்டால் நமது கற்பனை தடைபட்டு விடுகின்றது.

நான் ரீடரில் படித்து விட்டு கருத்துகளோடு இங்கு வந்தேன், அவை மாறுவதற்குள் ...

--------------------

கதையின் போக்கு வெகு சுவாரஸ்யம், துவக்கம் - வர்ணனை இரசிக்கும் படியாக.

[[பெண்கள் சொல்வதைக் கேட்பவனாக இருந்திருக்கிறேன் என்று இப்போது புரிகிறது]]

இந்த வரி ரொம்ப பிடிச்சிருக்கு, கதை என்று படித்து கொண்டிருப்பவர்களின் போக்கை மாற்றும், இது கதையாக இருக்காது என்று நினைத்திருப்பவர்கள் சற்று புன்னகையோடு நிமிர்ந்து உட்கார்வார்கள்.

ம்ம்ம் ...

மற்றபடி இந்த கதையில்(?) இன்னும் கொஞ்சம் டிங்கரிங் பார்த்து இருக்கனும் ‘தல’ - இப்படி சொல்ற தகுதி இருக்கான்னு தெரியலை, தோனித்து சொல்லிட்டேன்.

Ashok D said...

பொதுவான போது'க்கு விளக்கம் சொல்லவேயில்லையே???? ;)

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

சுவாரசியமான கதை. நல்ல நடை. முழுதையும் ஒரு மூச்சில் வாசிக்க வைக்கிறது.

Unknown said...

Autograph??? :))) Nallaa irukku anna.. :))

மங்களூர் சிவா said...

/
பரிசல்காரன் said...
//அப்போதே பெண்கள் சொல்வதைக் கேட்பவனாக இருந்திருக்கிறேன் என்று இப்போது புரிகிற//

இது புனைவு என்பதை இந்த வரிகள் கட்டுடைத்துவிடுகிறது!
/

well said parisal!
:))))

மங்களூர் சிவா said...

நீங்க ரன் அவுட்டா இருந்தாலும் கதை சிக்ஸர் தான்

மங்களூர் சிவா said...

/
கார்க்கி said...

புனைவாமாம்....
/

அதானே!

மங்களூர் சிவா said...

/
வடகரை வேலன் said...

இப்படி எத்தனை முறை ரன் அவுட் ஆனீங்களோ?
/

கணக்கு வழக்கு இருக்கா???

மங்களூர் சிவா said...

// டுத்த சில நாட்கள் வாசுகி பள்ளிக்கு வரவில்லை. வேதரத்தினம் அவளுக்கு காச்சல் என்றாள். //



" ஒளியிலே .... தெரிவது.... தேவதையா....."

ம்ம்ம்....ம்ம்ம்.....!!




// ஒரு வாரம் கழத்து வாசுகி, தாவணி உடையில் அடக்கமாக வந்து உட்கார்ந்தாள். //



நம்தன...... நம்தன...... நம்தன...... நம்தன......

//

ரிப்ப்ப்ப்ப்பீட்டு

☼ வெயிலான் said...

வெறும் ஒரு வரிக்கதை....
உங்களின் பாணி....
அருமை.....

கிருத்திகா ஸ்ரீதர் said...

"நீ ரன் அவுட்டகும்போது” என்றாள், அதே வசீகரமான முன்பல் சிரிப்புடன்."
கிளாசிக் டச்... அப்போ டாம் பாய் மாதிரி பொண்ணுங்களைக்கூட பிடிக்குமா.. !!!!!

புது வீடு நல்லாருக்கு.. அழகான நீலம்...

anujanya said...

@ மயில்

வாங்க விஜி. நீங்க தான் போணி. வியாவாரம் நல்லா இருக்கு.

இது கொஞ்சம் கொசுவத்தி; கொஞ்சம் புனைவு. அதனால ஹி ஹி. மன்னிச்சு விட்டுடுங்க. நன்றி விஜி.

@ இரவுப்பறவை

மேலே மயிலுக்குச் சொன்னதுதான் சௌந்தர். நன்றி உங்க பாராட்டுக்கு.

@ சின்ன அம்மிணி

உங்க அம்மாவுக்கு என் வாழ்த்துகள். இந்த மாதிரி குடும்பத்திற்காக தன்னை விட்டுக் கொடுத்த பெண்கள் எத்தனை பேரோ! நன்றி சின்ன அம்மிணி - உங்க முதல் வருகைக்கும், பகிர்வுக்கும்.

@ டக்ளஸ்

:) ? சரி சரி. ஒரு கவிதை எழுதினாத்தான் கமெண்டு எழுதுவ போல :))

@ Vijay

உங்க கேள்விக்கு மேலே பதில் சொல்லிவிட்டேன். வாசுகி ... இன்னமும் அதே உற்சாகப் பந்தாக இருக்க வேண்டும் என்றே எண்ணுகிறேன். நன்றி விஜய்.

@ மண்குதிரை

நன்றி நண்பா. கோவிக்காத. நண்பன்தானேனு உரிமையோட அங்க வராம லேட் பண்ணுறேன் :)

@ நையாண்டி நைனா

வாய்யா. மொத வருகையே இப்படி சரவெடியா? ஒரு கமன்ட்டுல என்னையும் உ.த. அண்ணாச்சியையும் கலாய்க்குறியே! நன்றி.

@ பரிசல்

நன்றி கே.கே. ஹலோ, உண்மையில் நான் ஒண்ணும் உங்களைப் போல 'பெண்கள் சொல்வதைக் கேட்பவன்' இல்லை. கதைசொல்லி அப்படிப் பட்டவர். நான் மானஸ்தன் :).

@ விதூஷ்

நன்றி வித்யா.

@ அசோக்

தேங்க்ஸ் அசோக்

@ நாஞ்சில் நாதம்

எத்தனை நாட்கள் இப்படியே ஸ்மைலி போடுவதாக உத்தேசம்? நீங்க ஸ்ரீமதிக்கு உறவா? நன்றி :)

@ சேரல்

//வாசுகி எந்த மாதிரி பெண்? தெரியவில்லை. எனக்குத் தோன்றிய மாதிரி வைத்துக்கொள்கிறேன்.//

அதான் கவிஞனுக்கு அழகு. நன்றி சேரல்.

@ ஜ்யோவ்

குரங்கு அப்பம் தின்ன கதைதான் குருஜி. சுவாரஸ்யமும், ஆழமும் என்னைப் பொறுத்தவரை mutually exclusive. நன்றி ஜ்யோவ்.

@ சுரேஷ்

நன்றி சுரேஷ்.

@ செய்யது

ரொம்ப நன்றி செய்யது. ஆமா, பள்ளிப் பருவ அனுபவங்கள் ....

@ துபாய் ராஜா

வாங்க தல. நீங்க தான் படத்துக்கும் கமண்ட்டு போட்டது. நன்றி பாஸ்.

@ நர்சிம்

நன்றி பாஸ். நீங்க சொன்னா நிச்சயம் சரிதான். Thanks really v.m.

@ வினிதா

நன்றி வினிதா. கோவை என்றில்லை. நிறைய ஊர்களில் அப்படித்தான் என்று நினைக்கிறேன் .

@ நேசமித்திரன்

இது பாதி; அது மீதி. ஆயினும், நன்றி :)

@ நாணல்

வாங்க தங்கச்சி. நன்றி நாணல்

@ கார்க்கி

'அனுபவம்'னு போட்டா நம்புவியா? (இவரு எங்க பள்ளிக்கொடம் போனாரும்ப)

@ மாசற்ற கொடி

நன்றி மா.கொ. - நீங்க லேட்டஸ்டா என்ன எழுதி இருக்கீங்க?

@ வேலன்

நன்றி வேலன்

அனுஜன்யா

anujanya said...

@ சக்தி

நன்றி சக்தி. இது என்ன சிறுபுள்ளத்தனமா 'சார்' னு?

@ தராசு

உண்மைதான் தல. சரியா புடிச்சீங்க. நன்றி :)

@ ரௌத்ரன்

நன்றி ரௌத்ரன். கவனம் செலுத்தலாம். சரக்கு அவ்வளவு இல்ல என்கிட்டே.

'துயிலும் பெண்'? மூலக்கதை அவ்வளவு வசியம்.

@ தமிழ் பிரியன்

வாங்க ஜின்னா. நன்றி.

@ கேபிள்

உங்களைப் பத்தி தெரியாதா? சரி சரி.

@ நாடோடி இலக்கியன்

நன்றி - உங்க தளத்துக்கு வரணும் வேலன் சொல்லிக்கிட்டே இருப்பார்.

@ அமித்து.அம்மா

வாங்க ஸ்டார். நன்றி AA.

@ அத்திரி

உனக்கும் அதே எட்டங்கிளாசு தானா! சரி சரி. நன்றி அத்திரி.

@ மேடி

என்ன இது அதகளம்! செம்ம formல இருக்க! நன்றி மேடி.

@ அய்யனார்

வாவ், அய்ஸா! நன்றி அய்ஸ்.

@ நந்தா

:). நன்றி நந்தா.

@ விநாயகமுருகன்

நன்றி வி.மு.

@ இரவீ

நன்றி இரவீ.

@ பீர்

நன்றி பீர் (ஒரே போதையா இருக்கு).

@ யாத்ரா

உண்மையா? நன்றி யாத்ரா.

@ மணிகண்டன்

நன்றி மணி. இதுக்கே ஜ்யோவ் கலாய்க்குறாறு

@ Bee'morgan

தப்புதா. நன்றி பாலா.

@ ராஜாராம்

நன்றி ராஜா. நீங்களே பாராட்டினா, ரொம்ப சந்தோஷமா இருக்கு.

@ ஜமால்

//மற்றபடி இந்த கதையில்(?) இன்னும் கொஞ்சம் டிங்கரிங் பார்த்து இருக்கனும் ‘தல’//

உங்கள் ஆக்கபூர்வ ஆலோசனைக்கு நன்றி ஜமால்

//- இப்படி சொல்ற தகுதி இருக்கான்னு தெரியலை, தோனித்து சொல்லிட்டேன்.//

என்ன இப்படி சொல்றீங்க. உங்களுக்கு இல்லாத தகுதியா/ உரிமையா?

@ அசோக்

ஹ்ம்ம், இப்ப அங்க போயி பார்க்கவும்.

@ ஜெஸ்வந்தி

வாங்க ஜெஸ். உங்கள் முதல் வருகை. நன்றி. முடிந்த போது வாங்க.

@ ஸ்ரீமதி

hmm, sort of. thanks

அனுஜன்யா

anujanya said...

@ சிவா

யோவ், நீயா ஒரு கமெண்டு போடுறது. அது என்ன 'Well said parisal'? அப்புறம் கார்க்கி சொல்லுறதுக்கும் ஒரு 'அதானே' வேற :)

நன்றி சிவா.

@ வெயிலான்

நன்றி வெயிலான்.

@ கிருத்திகா

நன்றி கிருத்திகா. Tomboy பெண்கள் எல்லா ஆண்களுக்கும் பிடிக்கும் என்றே நினைக்கிறேன். புது வீடு - வேலனுக்கு நன்றி :)

அனுஜன்யா

மாசற்ற கொடி said...

இப்பொழுதுதான் பார்த்தேன். ஆசை யாரை விட்டது ?

கடைசியாக பதிவிட்டது உரையாடல் போட்டிக்கு ஒரு கதை. முடிந்தால் படித்து உங்கள் எண்ணத்தை சொல்லவும்.

http://massattrakodi.blogspot.com/2009/06/blog-post.html

அன்புடன்
மாசற்ற கொடி

ராமலக்ஷ்மி said...

மிக அருமையான நடை. ரசித்துப் படித்தேன்.

எழுதியவரை தெரியும் என்பதாலேதான் எத்தனை கலாய்ப்பு:)! குறிப்பாக மேடி:)!

எழுத்தாளரை தெரியாது என நினைத்துக் கொண்டு மறுபடி வாசித்தால், அனுபவமா புனைவா என்கிற கேள்விகள் புறந்தள்ளப் பட்டு அற்புதமாய் நிற்கிறது கதை. வாழ்த்துக்கள் அனுஜன்யா!

anujanya said...

@ ராமலக்ஷ்மி

வாங்க வாங்க. ஊரில் அனைவரும் நலமா?

ஆமாம், ஏகப்பட்ட கலாய்ப்பு. அதிலும் மேடி - கேக்கவே வேண்டாம். ஆனால் அவர் போன்றவர்கள் தாம், நம் அன்றாட அழுத்தங்களிலிருந்து விடுதலை தருகிறார்கள்.

முன்னாடியே சொன்ன மாதிரி இது புனைவனுபவம். உங்களுக்குப் பிடிக்கும்னு தெரியும். நன்றி சகோ.

அனுஜன்யா

வெட்டிப்பயல் said...

அறுபது வருஷத்துக்கு முன்னாடி நடந்தது எல்லாம் இன்னும் நினைவிலிருந்து எழுதறீங்கனா, உங்க ஞாபக சக்தியைக் கண்டு பிரமித்து போகிறேன்... அப்பவே கோ எட் எல்லாம் இருந்ததா?

நாடோடி இலக்கியன் said...

//உங்க தளத்துக்கு வரணும் //

முன்னாடியே சில முறை
வந்திருக்கீங்க அனுஜன்யா.
என்னோட பக்கத்தில் ஒரு கவிதை,ஒரு சிறுகதை,ஒரு திரைவிமர்சனத்திற்கென என நீங்க போட்டிருக்கிற பின்னூட்டமெல்லாம் ஞாபகம் வச்சிருக்கோம்ல.

anujanya said...

@ வெட்டிப்பயல்

பாலாஜி - முதலில் கையக் குடு - உரையாடல் வெற்றிக்கு.

அப்புறம் ...ஏன் இந்த கொல வெறி? ஒத்தரு யூத்தா இருந்தா இவ்வளவு பேருக்கு கஷ்டமா?

நன்றி பாலாஜி. அப்புறம் ஜெமோ அனுபவம் எப்படி இருந்தது? ஒரு பதிவு போடலாமே?

@ இலக்கியன்

பாருங்க இப்பதான் பாலாஜி உங்க ஞாபக சக்தி சூப்பர் என்கிறாரு. நீங்க கவுத்துட்டீங்க.

நன்றி பாஸ்.

அனுஜன்யா