Tuesday, August 4, 2009

நீலப்பூக்கள்


கதவில் பொருத்தியிருந்த
கண்ணாடிப் பட்டைக்கப்பால்
யாரோ ஒருத்தியின்
கெண்டைக் கால்களை
நீலப்பூக்கள் வளைந்து சென்ற
சூடிதார் போர்த்தியிருந்தது
யாருடனோ பேசிக்கொண்டிருக்கிறாள்
சற்று மடங்கியும்
நிமிர்ந்தும்
தரை பாவாமலும்
பிறகு வருடியும்
சிறிது காதலும்
நிறைய வெட்கமும்
காண்பித்த கால்கள்
நாணத்தில் பூக்கள்
நிறம் மாறாவிட்டாலும்
வடிவங்கள் மாறியபடி;
வெளியில் சென்று
பார்க்கவில்லை என்றாலும்
நீலப் பூக்கள்
கனவில் பூத்தன
அதே நிறத்திலும்
வேறு கதையுடனும்


(உயிரோசை 29th June 2009 மின்னிதழில் பிரசுரம் ஆகியது)

41 comments:

கார்க்கிபவா said...

அங்கே படித்து விட்டேன்.. இங்கேயும் ஃபர்ஸ்ட்டா???????

மாசற்ற கொடி said...

வாவ் ! மிக அருமை. கண் முன்னே காட்சியாய் விரிகிறது.

கூடுதல் மகிழ்ச்சி (முதல் ஆள்(?) & உடனே புரிந்த கவிதை )

அன்புடன்
மாசற்ற கொடி

மாசற்ற கொடி said...

வாவ் ! மிக அருமை. கண் முன்னே காட்சியாய் விரிகிறது.

கூடுதல் மகிழ்ச்சி (முதல் ஆள்(?) & உடனே புரிந்த கவிதை )

அன்புடன்
மாசற்ற கொடி

இரவுப்பறவை said...

நீலப்பூக்கள் நிறம் மாறவில்லை..
அழகாய் இருக்கிறது.. கவிதை

நட்புடன் ஜமால் said...

உயிரோசைக்கு வாழ்த்துகள்!


அந்த பூக்களை இரசித்துவிட்டு

அப்பாலிக்கா படிச்சிட்டு

மறுக்கா வாறேன்.

Vidhoosh said...

:) டிவி சீரியல் மாதிரி ஒரே சீன்தான், ஆனால் நிறைய காட்சிகள்.

:0 இப்படியெல்லாம் ஈஸி கொஸ்டின் பேப்பர் தரக்கூடாது.

--வித்யா

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

வாவ்! ரொம்ப நல்லாயிருக்குங்க. அதுவும் இந்த நீல நிற template backgroundல் படிக்கும்போது இன்னும் கூடுதலா பிடிச்சிருக்கு.

நர்சிம் said...

//சிறிது காதலும்
நிறைய வெட்கமும்
//
நீலப் பூக்கள்
கனவில் பூத்தன
அதே நிறத்திலும்
வேறு கதையுடனும்
//

மிக ரசித்தேன்..அனு‘ஜெம்’யா.

மண்குதிரை said...

nalla irukku

Raju said...

:-)

என்ன சொல்றதுன்னு தெரியலே!

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

rasiththEn.

-priyamudan
sEral

Unknown said...

இது ரொம்ப சூப்பர் அண்ணா... :)))

Unknown said...

சாரி அண்ணா கேட்காம இருக்க முடியல... Are you alright??

















ஹி ஹி ஹி புரியற மாதிரி கவிதை எல்லாம் எழுதிருக்க.. ;))

RaGhaV said...

அருமையான கவிதை.. :-))))

Ashok D said...

எளிமையான வார்தைகள்
அது கொடுக்கும் பூரிப்பு
அலாதி

முதல் வாசிப்பிலேயே
புரிந்தது :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஸ்ரீமதியின் ரெண்டு கமெண்ட்டுகளையும் வழிமொழிகிறேன் :)))))

Ashok D said...

நல்ல கவிதைங்கன்னா

நாஞ்சில் நாதம் said...

:)))

நட்புடன் ஜமால் said...

தரை பாவாமலும்]]


அழகு வார்த்தை பிரயோகம்.

அழகிய கனவு

பல கதைகள் சொல்லும் ஒரு தாலாட்டு(கனவு)

தராசு said...

//நாணத்தில் பூக்கள்
நிறம் மாறாவிட்டாலும்
வடிவங்கள் மாறியபடி;//

ரசித்தேன் தல.

நந்தாகுமாரன் said...

சொன்னமாதிரி ரெண்டாவது தடவை பாராட்ரதுல ஒண்ணும் தப்பில்லை தான் :) நல்லாயிருக்குங்க

நேசமித்ரன் said...

அனு'ஜென்' யா என்று சொல்லிப் பார்த்துக் கொண்டேன்
எளிய சொற்களின் வீர்யம் அப்படி சொல்ல வைத்தது
நீலப் பூக்கள் எவ்வளவு அழுத்தமான படிமமாக விரிந்து கொண்டே போகிறது
இரண்டாம் முறை என்ன வாசிக்கும் போதெல்லாம் பாராட்டலாம்

பா.ராஜாராம் said...

அழகான கவிதை அனு.ஒரு கவிதை சிறப்புற இரண்டு காரணம் உண்டு.பார்வையும் பகிரும் தரமும்.இரண்டும் கைகூடியிருக்கிறது.அன்பு அனு.

கிருத்திகா ஸ்ரீதர் said...

கலக்குறீங்க சாமி...
நீலப்பூக்கள்... வளைந்தும் நெளிந்தும் கோலமிடுவது தங்கள் கனவில் மட்டுமல்ல...

இது நம்ம ஆளு said...

அருமையான படத்துடன் கவிதை பிரமாதம்!

Anonymous said...

சிறிது காதலும்
நிறைய வெட்கமும்
காண்பித்த கால்கள்
நாணத்தில் பூக்கள்


--- ரொம்ப பிடிச்சிருக்கு.

விநாயக முருகன் said...

ஏற்கனவே உயிரோசையில் படித்துவிட்டேன் நண்பா. நீலப்பூக்கள் மனதில் நுண்ணிய படிமமாக விரிகிறது

அ.மு.செய்யது said...

காலையிலே படிக்கணும்னு நினைச்சேன்.அவரசத்துல படிச்சா ஒன்னும் புரியாதுன்னு
நைட் தான் படிக்க முடிஞ்சது.

Simply Superb and user friendly.

அசால்ட் பண்றீங்க....!

Mahesh said...

மிகவும் ரசித்தேன்.... அபாரம்...

Unknown said...

வா.......ரே.........வா.....!!


ஹரே.... பாபி....!! இதர்.... தேக்கோ .....!! மச்சி ஏதோ சொல்து....!!!


கியா போல்ரே மச்சி......???

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

Excellent.

Thamira said...

என்ன எங்கேயுமே உங்களை பார்க்கமுடியலை.? ரொம்ப பிஸியா அங்கிள்?

அப்புறம் கவிதை அழகு.! வழக்கம் போலில்லாமல் நல்லாயிருந்தது.. ஹிஹி..

ராமலக்ஷ்மி said...

அழகுக் கவிதை.

//நாணத்தில் பூக்கள்
நிறம் மாறாவிட்டாலும்
வடிவங்கள் மாறியபடி//

ரசித்தேன்.

//நீலப் பூக்கள்
கனவில் பூத்தன
அதே நிறத்திலும்
வேறு கதையுடனும்//

அருமை!

ஆ.சுதா said...

அங்கேயும் படித்தேன்.
ரொம்ப பிடித்திருந்தது.

anujanya said...

இந்த முறை FIFO முறை இல்லாமல் LIFO முறையில் நன்றி சொல்லலாம்னு ... நாமளும் ஏதாவது புதுமை பண்ணனும் இல்லையா?

@ ராமலக்ஷ்மி

வாங்க சகோ. நன்றி உங்கள் பாராட்டுக்கு. சரி சரி, சீக்கிரம் பதிவு போடுங்க. ரொம்ப நாட்கள் ஆயிடுச்சு.

@ ஆதி

யாரு? நா உனக்கு அங்கிள்? இதுக்கு நீ வரவே வேண்டாம்.

கொஞ்சம் ஆணி அதிகம். ஆபிஸ்ல திடீர்னு வேலை செய்ய சொல்றாங்க. அநியாயம்.

//வழக்கம் போலில்லாமல் நல்லாயிருந்தது//

உன்னைய மாதிரி ஆளுங்க இருக்கும் வரைக்கும் நல்ல கவிதை எப்படி வரும்? :))

நன்றி ஆதி.

@ ஜெஸ்வந்தி

வித்தியாசமான, அழகான பெயர். நன்றி ஜெஸ்.

@ மேடி

முஜே ஹிந்தி மாலும் நஹி. நன்றி மேடி.

@ மஹேஷ்

நன்றி மஹேஷ்.

@ செய்யது

கவிதையைப் பொறுத்தவரை, அமைதியான சூழலில் படிப்பது தான் சிறப்பு. குறிப்பாக முத்து, யாத்ரா, அகநாழிகை, சேரல் இவர்களை அப்படிப் படித்தால் ரொம்ப நல்லா இருக்கும்.

நன்றி செய்யது. அங்க வந்து நாளாச்சு. வரேன்.

@ விநாயகமுருகன்

நன்றி வி.மு.

@ லவ்லிகர்ல்

உங்கள் முதல் வருகை? உங்கள் வலைப்பூவுக்கு வந்தேன். கவிதை எழுதுறீங்க. அது ஓகே. மேடி உங்கள் அண்ணனா? அப்ப நீங்களும் 'டெர்ரர்' பார்ட்டியா? :))

நன்றி நதியா.

@ இது நம்ம ஆளு

நன்றி சார். உங்க தளத்துக்கும் வந்தேன். நிறைய பதிவுகள். அசத்தல்.

@ கிருத்திகா

வாங்க கவிதாயினி. உங்கள் வலைப்பூ வந்து கொஞ்சம் நாட்களாச்சு. வரேன். நன்றி கிருத்திகா.

@ ராஜாராம்

என்ன சொல்ல ராஜா. நன்றி.

@ நேசமித்ரன்

நீங்க எழுதுவதை எல்லாம் படித்துவிட்டு, நாமளும் எழுதணுமான்னு யோசிக்கிறேன். (உடனே கார்க்கி/ஆதி "அதான் சொல்றோம்; நிறுத்திடுங்க' என்பார்கள்). நன்றி நேசன்.

@ நந்தா

வரிசையா கவிஞர்கள் வராங்க. நன்றி நந்தா. நேசனுக்குச் சொன்னது தான் உங்களுக்கும்.

@ தராசு

வாங்க தல. நன்றி.

@ ஜமால்

நன்றி ஜமால் - உங்கள் தொடர் ஊக்கத்திற்கு.

@ நாஞ்சில் நாதம்

ம், சிரிச்சு கிட்டே இருங்க. நன்றி.

@ அசோக்

ரொம்ப நன்றிங்ணா :)

@ அமித்து.அம்மா

'பொது'/'போது' படிச்சு மண்ட காஞ்ச உங்களுக்குக்காக, இப்படி எழுதினா ..இப்பிடி ஒரு கொலைவெறி கமெண்டா? இருக்கு உங்களுக்கு.

நன்றி AA.

@ அசோக்

இரண்டு முறை வந்திருக்க! நன்றி அசோக்.

@ ராகவேந்திரன்

நன்றி ராகவ்.

@ ஸ்ரீமதி

உன்ன....அமித்து.அம்மாவுக்கு சொன்ன கமண்ட்டு தான் உனக்கும்.

நன்றி ஸ்ரீ

அனுஜன்யா

anujanya said...

@ சேரல்

நன்றி சேரல்.

@ ராஜு

அப்படின்னா? சரி, பாராட்டுன்னே வெச்சுக்கறேன் :). நன்றி ராஜு.

@ மண்குதிரை

நன்றி தோழா.

@ நர்சிம்

நன்றி 'ஜெம்' கமெண்ட்டுக்கும்.

@ ஜ்யோவ்

நன்றி ஜ்யோவ்.

@ விதூஷ்

//இப்படியெல்லாம் ஈஸி கொஸ்டின் பேப்பர் தரக்கூடாது. //

வரேன் வரேன். அடுத்த முறை உங்களுக்கு எல்லாம் ....

நன்றி வித்யா.

@ ஜமால்

வேக வருகைக்கு நன்றி ஜமால்.

@ இரவுப்பறவை

நன்றி சௌந்தர்

@ மாசற்ற கொடி

இந்த தடவ எல்லா லேடிசும் (அமித்து.அம்மா, ஸ்ரீ, வித்யா, மா.கொ) கட்டம் கட்டி கலாய்க்கறீங்க. அடுத்த கவித ...இருக்கு உங்களுக்கு எல்லாம் :)

நன்றி மா.கொ. நன்றி மா.கொ. (இரண்டு முறைக்கு)

@ கார்க்கி

ஆமா, நீதா போணி. வியாவாரம் நல்லாத்தான் போச்சு. கட்சி நன்னியும் உனக்குத் தான்.

அனுஜன்யா

thamizhparavai said...

அழகு...

மங்களூர் சிவா said...

வாவ் ! மிக அருமை. கண் முன்னே காட்சியாய் விரிகிறது.

(கால்கள் அல்ல காட்சி)
:)))

பிரவின்ஸ்கா said...

அருமை

- ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

anujanya said...

@ பிரவின்ஸ்கா

நன்றி நண்பா.

@ சிவா

நீ உண்மையில் ரசிக்கிறியா இல்ல... கலாய்க்கறியா?

நன்றி சிவா.

@ தமிழ்ப்பறவை

வாங்க பரணி. ரொம்ப பிசியா? உங்க தளத்துக்கு வரலைனு கோவமா? வரேன் பாஸ்.
நன்றி உங்க பாராட்டுக்கு.

அனுஜன்யா

எல் கே said...

Kalakkal