Wednesday, August 26, 2009

பிள்ளையார் 'பிடிக்கப்' போயி ..


என் கசின் என் வீட்டிற்கு ஊரிலிருந்து வந்திருந்தான். "என்னடா இயந்திர வாழ்கை! எப்படி சமாளிக்கிற" என்றான் நிஜமான வருத்தத்துடன். நாமாகவே புலம்புவதோ அல்லது அலுத்துக்கொள்வதோ செய்யலாமே ஒழிய மத்தவங்க பரிதாபமா சொன்னா உடனே மறுப்பதுதானே வீரம்?

"அதெல்லாம் இல்லடா. எல்லாம் நம்ம மனோபாவம். பாரு நான் ப்ளாக் எல்லாம் எழுதுறேன். நல்லா பொழுது போகும். நிறைய பேரு எழுதுறாங்க. பல விஷயங்கள் தெரிஞ்சுக்கலாம்" னு அடுக்கிக் கொண்டே போனேன். முதல்ல என்னோட ப்ளாக் காமிச்சேன். 'புனரபி' படிச்சான். 'ப்ச்' என்ற சப்தம் வந்தது.

"நீ இப்பிடியெல்லாம் எழுதுவியா"

"எனக்கே தெரியாது; தானா வருது"

கொஞ்ச நேரம் என்னை உற்றுப் பார்த்து, "உன்னப் புகழ்ந்தேன்னு நெனச்சிட்டியா" என்றான்.

எங்கோ ஒரு எச்சரிக்கை மணி அடித்த சத்தம் கேட்டது. அவனாவே எதையோ க்ளிக் செய்தான். இந்த தருணத்தில் ஒரு முக்கிய செய்தி சொல்லியாக வேண்டும். அவன் விஜயம் செய்தது 'விடுமுறை தினத்தை முன்னிட்டு' என்று கலைஞர் டிவி ‘சிறப்பு நிகழ்ச்சிகளை’ இருபத்தியாறு ஸ்பான்சர்கள் தயவில் ஒளிபரப்பிய 'விநாயகர் சதுர்த்தி' தினம்.

அவன் க்ளிக் செய்து, தற்போது பார்த்த திரை "சிதைவுகள் ..." என்று மேல் வரியிலும், "சிதைந்து கொண்டு இருப்பவனின் துண்டுகள் ..." என்று அதற்குக் கீழேயும் இருந்தது. அதற்குக் கீழே நாமெல்லாம் இடுகை என்று அறியும் ஒரு வஸ்து "பிள்ளையார் எப்போது தமிழகத்துக்கு வந்தார்?" என்ற கேள்வியுடன் துவங்கியது. எனக்குள் ஒரு பல்பு எரிந்தது இப்போது.

இப்போது இன்னொரு முக்கிய தகவல். இந்த கசின் இருக்கானே, அவன் ஒரு தீவிர பிள்ளையார் பக்தன். எவ்வளவுன்னா, எப்பவும் அவன் டவுசர் பாக்கெட்டில் ஒரு பிள்ளையார் விக்கிரகம் இருக்கும். மன்த்லி டெஸ்ட் முதல், இன்ஜினியரிங் நுழைவுத் தேர்வு, கிரிக்கெட் விளையாடும் போது, டெண்டுல்கர் பேட்டிங் செய்யும் போது, ஸ்டெபி கிராப் விம்பிள்டன் விளையாடுகையில், ரஜினி வில்லன் அடியாட்களுடன் தீ வளையத்துக்குள் இருக்கும்போது என்று சர்வரோக நிவாரணி அவனுக்கு அந்த பிள்ளையார் விக்கிரகம்தான். எனக்கு பயமா இருந்தது. இதப் படிச்சு 'மெர்ஸில்' ஆகி (நன்றி: கார்க்கி) கணினி திரைக் கிழிக்கப் படுமோ என்று பதட்டமா இருந்தது. அவன் படு உற்சாகத்துடன் படிக்கத் துவங்கினான். நான், லேட்டஸ்ட் ஹாரிஸ் பாட்டு கேக்குறியா என்று கார்க்கி தளத்துக்கு தாவ முயன்றேன்.

அவன் "டேய், பிள்ளையார் சதுர்த்தி அன்னிக்கு இந்த மாதிரி தல புராணம் மாதிரி யாரோ புண்ணியவான் எழுதியிருக்காரு. இப்ப என்ன சினிமா பாட்டு" என்று கடிந்துகொண்டு படிக்கத் துவங்கினான். முதலில் மெய்மறந்து இருந்தவன், போகப்போக முகம் சிவந்தான். நரம்புகள் புடைக்கத் துவங்கின.

"டேய், என்னடா இது? பிள்ளையார்னா யாருன்னு நினைச்சாரு இவரு? ஏதோ யுவான் சுவாங், வாஸ்கோட காமா ரேஞ்சுக்கு நம்ம சாமிய இறக்கிட்டாரு! ப்ளாக் இருந்தா என்ன வேணா எழுதலாமா"

"அப்படியில்ல. வரலாறு.... "

"புடலங்கா. இந்த வரலாற்ற எப்படி வேணாலும் மாத்தலாம். அப்பப்போ யாருக்கு பலம் அதிகமோ அவங்க இஷ்டப்படி அத மாத்திடலாம்"

கொஞ்சம் மூச்சு வாங்கிக்கொண்டு மீண்டும் ஆரம்பித்தான்.

"என்ன சொல்ல வராரு இவரு? அது என்னடா தமிழ்க் கடவுள்? பிள்ளையார் என்ன மாநில ஆளுநரா? ஆந்திராவில் இருந்தாரு. அப்புறம் தமிழ்நாட்டுக்கு போஸ்டிங் ஆச்சு அப்பிடீன்னு. அவர் எல்லாம் கடவுள். எப்பவும், எங்கயும் இருப்பார். ஏண்டா இப்படி எல்லாம் எழுதுறாங்க. இதை எல்லாம் கேள்வியே கேக்க மாட்டாங்களா?"

"என்ன அப்படி சொல்லிட்ட! இங்க க்ளிக் பண்ணு" என்று சொல்லி பின்னூட்டம் என்று இன்னொரு சுனாமியைத் திறந்து விட்டேன்.

எதிர் பார்த்த மாதிரியே, ஸ்ரீதர், நர்சிம் என்று பெயர்களை வாஞ்சையாகச் சொல்லிக்கொண்டான். பற்களை நற நறவென்று கடித்ததால் 'ஜ்யோவ்' என்று சொல்ல சிரமப்பட்டான்.

"ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகிற? இது சிலபேரோட கருத்து. அதுக்கு எதிர் கருத்தும் வருது. அதையும் ஆரோக்கியமா விவாதிக்கிறாங்க. உன்னோட வாதம் கொஞ்சம் பிற்போக்கு" என்றவுடன் கிட்டத் தட்ட சுரேஷ் கண்ணன் ரேஞ்சுக்கு முற்போக்குவாதிகளைத் திட்ட ஆரம்பித்தான்.

சரி இது சரிப்படாதுன்னு அவனுக்கு பாவ்லா காட்டி, வல்லிசிம்ஹன் அம்மா, துளசி டீச்சர் என்று அவசரமாக தமிழ்மணத்தில் தேடினேன். நல்ல வேளை! இரண்டு பெரும் பிள்ளையார் சதுர்த்தி ஸ்பெஷல் போட்டிருந்தார்கள். கோவில் தர்மகர்த்தா பக்தர்களிடம் கேட்பது போல அவனிடம் "பாத்தியா? இப்ப திருப்தியா?" என்று கேட்டேன். சந்தம் வந்திருந்தவன் கொஞ்சம் சாந்தம் ஆகி இருந்தான்.

படிச்சு முடிச்சுட்டு வெளிய வந்தா மீண்டும் தமிழ்மணம். அவன் கண்களுக்கு என்று 'பிள்ளையாரை உடைப்பது பிரசாரமேயாகும்" என்று தமிழ் ஓவியா இடுகை தென்பட்டது. எனக்கு பேஸ்மென்ட் நடுங்கத் துவங்கியது. நல்ல வேளையா அதே சமயம் இசையருவியில் "அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே" என்று அவனுக்குப் பிடித்த ரஜினி பாடத் துவங்கினார். முதல் வேளையா கணினியை ஆப் செய்தேன். இன்டெர் நெட் இணைப்பையும் தற்காலிகமாக எடுத்து விட்டேன்.


கொழுக்கட்டையைச் சாப்பிடும் போது யதேற்சையாகப் பார்த்தால் பிள்ளையார் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகச் சிரித்துக் கொண்டிருந்தார்.

45 comments:

Vidhoosh said...

பம்பாயா?? ம்ம்..நல்ல அனுபவம். நல்ல கசின்.

ஊருக்கு அனுப்பிட்டீங்களா?
--வித்யா

அன்புடன் அருணா said...

//நாமாகவே புலம்புவதோ அல்லது அலுத்துக்கொள்வதோ செய்யலாமே ஒழிய மத்தவங்க பரிதாபமா சொன்னா உடனே மறுப்பதுதானே வீரம்?//
ரொம்ப சரி!

கார்க்கிபவா said...

ஹாஹாஹா.. தல சூப்பர்..

சும்மாவே பயந்து நடுங்குவது போன்றவர் நீங்க. இதில் மெர்சில் வேறு ஆனால் எப்படி இருக்கும்ன்னு நினைச்சு பார்த்தேன் அதுக்குத்தான் அந்த ஹாஹாஹா.. பதிவுக்கு இல்ல :)))

//ஊருக்கு அனுப்பிட்டீங்களா?
--வித்யா//

தைரியமா பதிவு போடும்போதே தெரியலையா?

வால்பையன் said...

ரொம்ப நாள் குளிக்காம இருந்த பார்வதி மேடத்துக்கு ஒருநாள் குளிக்கனும்னு ஆசை வந்ததாம்!
குளிக்க போகசொல்ல தான் பாத்திருக்காங்க பாத்ரூம்ல தாழ்பாள் இல்ல, மத்தவங்களை காவலுக்கு வைக்கவும் பயம்

அதனால் ஒடம்புலருந்த அழுக்கையெல்லாம் உருட்டி ஒரு பொம்மை செஞ்சு அதுக்கு உயிர் கொடுத்து, மவனே அம்மா குளிக்க போறேன் யார் வந்தாலும் உள்ளார விடாதன்னு சொல்லிட்டு போயிட்டாங்க!

அப்ப பார்த்து சிவன் வந்துருக்கார், நேர விறுவிறுன்னு உள்ள போனவரை தடுத்து நிறுத்தியிருக்காரு நம்ம அழுக்குருண்டை(அப்ப எந்த பேரும் இல்ல), சிவன் ”பிள்ளை யார”ப்பா நீ ந்னு கேக்க அந்த பேரயே வச்சிகிட்டாங்க!

அப்படியும் உள்ள விடாததால கோபம் வந்து தலைய வெட்டிபுட்டாராம், வெளிய வந்த பார்வது குய்யோ,முறையோன்னு சத்தம் போட்டு ஊரைகூட்ட சிவன் டரியலாகிட்டார்!

இருப்பா அவசரப்படாதே, இதுக்கு ஒரு பரிகாரம் இருக்கு, இப்படியே நேர போகசொல்ல எந்த உயிரினம் முதல்ல கண்ணுல படுதோ, அந்த தலைய கொண்டுவாங்கன்னு சொல்லிட்டாராம்! அப்படி வந்தது தான் புள்ளையாரோட தல!

ஆக மொத்தம், பார்வதிக்கு பொறந்த!? குழந்தை எப்படி தமிழ் கடவுளாகும்! எப்படி முன்முதற் கடவுளாகும்!?

**********

எனக்கு சொன்ன, கேட்ட, பார்த்த(சுட்டி டீவில்) கதையை தான் சொல்லியிருக்கேன்!
நானா இட்டுகட்டலை நண்பர்களே!
என் ப்ளாக்குளயே எழுதியிருப்பேன்! ஏன் எப்ப பார்த்தாலும் நாத்திகம் பேசுறேன்னு கேட்டதால இங்க!

வால்பையன் said...

பின்னூட்டம் ரீலீஸ் ஆவும்னு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!
சூடா உரையாடல் போய் ரொம்ப நாளாச்சு!

Vidhoosh said...

ஏன்யா வால். அதெப்படிங்க.. ???

அதான் பிள்ளையார் உலகத் தொல்லையெல்லாம் தாங்காம தற்கொலை பண்ணிட்டருன்னு சமீபத்துல யாரோ எழுதிருந்தாங்கப்பு...

அதான் போயி சேந்துட்டாருல்ல..
விட்டிர வேண்டியதுதான??

--வித்யா

வால்பையன் said...

//அதான் பிள்ளையார் உலகத் தொல்லையெல்லாம் தாங்காம தற்கொலை பண்ணிட்டருன்னு சமீபத்துல யாரோ எழுதிருந்தாங்கப்பு...//

இது வேற நடந்துருக்கா!
எங்கிட்ட யாருமோ சொல்லலையே!
ஒரு இரங்கல் நோட்டீஸ் கூட யாருமே அடிக்கல!

Sridhar V said...

அனுஜன்யா!

நல்லா எழுதியிருக்கிங்க. :) உங்க கஸின் என்ன அந்நியன் மாதிரி உங்களுக்குள்ளேர்ந்து வந்திட்டாரோ?

//"உன்னப் புகழ்ந்தேன்னு நெனச்சிட்டியா"//

:)) குசும்பனுக்கும் சொந்தக்காரரோ உங்க கஸின்?

/'விடுமுறை தினத்தை முன்னிட்டு' என்று கலைஞர் டிவி ‘சிறப்பு நிகழ்ச்சிகளை’//

காமெடி நிகழ்ச்சி மட்டும் வழங்காம காமெடியாவே நிக்ழ்ச்சி வழங்குறாங்க. சிரிச்சிக்க வேண்டியதுதான்.

Vidhoosh said...

இப்பத்தான் டோண்டு சாரின் FOAF (friend of a friend) சொன்ன கதை எல்லாம் கேட்டுட்டு வந்தேன்.

அனுவும் அந்நியந்தான் போலருக்கு ஸ்ரீதர்.

------

வாலு ... சென்னை வருவீங்கல்ல, அப்ப அடிச்சிரலாம், இரங்கல் செய்தி..


-வித்யா

Thamira said...

சும்மாவே பயந்து நடுங்குவது போன்றவர் நீங்க. இதில் மெர்சில் வேறு ஆனால் எப்படி இருக்கும்ன்னு நினைச்சு பார்த்தேன் அதுக்குத்தான் அந்த ஹாஹாஹா.. பதிவுக்கு இல்ல :)))

// rippeetu..

Thamira said...

:0))

வால்பையன் said...

//வாலு ... சென்னை வருவீங்கல்ல, அப்ப அடிச்சிரலாம், இரங்கல் செய்தி..//

கொழக்கட்டை கொடுப்பிங்கல்ல!


வீங்க வீங்க கொடுக்க கூடாது
(இதுவும் ஒரு செவிவழி கதை தான்)

ரௌத்ரன் said...

பெரிய சதுர்த்தி சோதனைனு சொல்லுங்க..நல்ல வேளை நீங்க கொழுக்கட்டை ஆகாம தப்பிச்சுட்டீங்க :)

வால் ஆரம்பிச்சாச்சா...எத்தன யுகம் ஆனாலும் ஆறாத கொழுக்கட்டை இந்த ஆத்திக X நாத்திகம் தான் போல...நடத்துங்க :)

குசும்பன் said...

//பிள்ளையார் 'பிடிக்கப்' போயி ..//

கார்க்கியான மாதிரி.

இப்படிக்கு தலைப்பை முடித்து வைப்போர் சங்கம்
துபாய் கிளை

அகநாழிகை said...

அனுஜன்யா,

நன்றாயிருந்தது.

ரசித்தேன்.

அந்த அம்பி கசின் நீங்களேதானே ?

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

சின்னப் பையன் said...

ஹாஹாஹா..

Ashok D said...

அந்த கொழுக்கட்டை tastukka கொண்டாடலாம் விநாயகர் சதுர்த்தியை. :)

Kumky said...

சிப்பு சிப்பா வர்ரது.....

ஒன்னியும் மன்சு வுட்டு சொல்லதாவலை.

Venkatesh Kumaravel said...

ஹிஹி... இதுக்கு தான் யாராச்சும் நான் ப்ளாக் பண்றப்ப வந்து இது என்னன்னு கேட்டா... தமிழ் டைப்ரைட்டிங் ப்ராக்டீஸ்னு சொல்லி வச்சிருக்கேன். ஆன்லைன் வகுப்பு... முழுசும் ஃப்ரீன்னு சொன்னப்புறம் இப்பெல்லாம் தூங்கப்போகுமுன்னே இன்னைக்கு டைப்பிங் படிச்சியான்னு கேக்குறாங்க... ஹிஹி

அத்திரி said...

ஹிஹிஹிஹி-................

அ.மு.செய்யது said...

//'மெர்ஸில்'//

தலைவரே !!! அது மெர்ஸல். நீங்கள் குற்றிய'லி'கரத்தில் சொல்லி வீட்டீர்கள்.

( சென்னை மொழியில் எவரேனும் சொற்குற்றம் செய்தால் எனக்கு கெட்ட கோவம் வரும்.)

பதிவு: நகைச்சுவை உங்களுக்கு நல்லாவே வருகிறது.உங்களைப் போன்றோர் இப்படி 'மொக்கை' ரக பதிவு
எழுதலாம்.வால்பையன் பின்நவீனத்துவ கவிதை எழுதக்கூடாதா ??

Unknown said...

// என் கசின் என் வீட்டிற்கு ஊரிலிருந்து வந்திருந்தான். //


என்னது அசின் உங்க வீட்டுக்கு வந்திருந்தாங்களா...!!






// என்னடா இயந்திர வாழ்கை! //


அப்போ நீங்கதான் ரஜினியா....?






/// நாமாகவே புலம்புவதோ அல்லது அலுத்துக்கொள்வதோ செய்யலாமே ஒழிய மத்தவங்க பரிதாபமா சொன்னா உடனே மறுப்பதுதானே வீரம்? ///


வீரத்துல புலிக்கேசி மன்னன் மாதிரியா.....??







// பாரு நான் ப்ளாக் எல்லாம் எழுதுறேன். //


அடங்கொன்னியா....!! ப்ளாக்குல எங்க எழுதுறீங்க.... மொக்கைல போடுறீங்க...!!








// நல்லா பொழுது போகும். //


ஆமா... ஆமா.... ஏதாவது இலுச்சவாயன் கெடச்சா.... அவனோட காத கடுச்சு துப்புற வரைக்கும் நல்லாவே பொழுது போகும்....!!








// நிறைய பேரு எழுதுறாங்க. //


ஆமா...ஆமா......







// பல விஷயங்கள் தெரிஞ்சுக்கலாம்" //


அப்புடியா......??






// முதல்ல என்னோட ப்ளாக் காமிச்சேன் //


தெருச்சு ... அடுத்த ட்ரெயின புடுச்சு ஊருக்கு ஓடீருப்பாரே....!! வந்த விருந்தாளிய ... ப்ளாக்க ஓப்பன் பண்ணி காமிச்சு ஓடவெச்சுட்டீங்க...!!






// 'ப்ச்' என்ற சப்தம் வந்தது //


செவுத்துல ஓட்டிகிட்டு உங்க ப்ளாக்க படுச்ச பல்லி மேல இருந்து குதுச்சு சூசைடு பண்ணிகிச்சாங்க தலைவரே......???







// "நீ இப்பிடியெல்லாம் எழுதுவியா" //


எப்பவுமே இப்படித்தான்....








// "எனக்கே தெரியாது; தானா வருது" //


பின்நென்னுங்கோ தலைவரே..... ? மொக்க போட P.hd ஆ ... முடுச்சிட்டு வருவாங்க ...??








//கொஞ்ச நேரம் என்னை உற்றுப் பார்த்து, "உன்னப் புகழ்ந்தேன்னு நெனச்சிட்டியா" என்றான். //



அப்பாடா.... வந்தவரு உஷாராயிட்டாருப்பா ...!!










// எங்கோ ஒரு எச்சரிக்கை மணி அடித்த சத்தம் கேட்டது. //


ரோட்டுல ஏதாவது ஆம்புலன்சு போயிருக்குமுங்கோ தலைவரே....!!










// எனக்குள் ஒரு பல்பு எரிந்தது இப்போது. //


எத்தன வாட்ஸுங்கோ தலைவரே......?







// எவ்வளவுன்னா, எப்பவும் அவன் டவுசர் பாக்கெட்டில் ஒரு பிள்ளையார் விக்கிரகம் இருக்கும். //


தலைவரே.... அத சுட்டுருங்க... திருட்டு புள்ளையார் ரொம்ப ராசியானவர்....







// கொழுக்கட்டையைச் சாப்பிடும் போது யதேற்சையாகப் பார்த்தால் பிள்ளையார் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகச் சிரித்துக் கொண்டிருந்தார். //



அப்போ .. கொழுக்கட்டையை ... சரக்குல ஊறவெச்சு சாபிட்டிருப்பீங்க ...!! அப்போ நல்ல ப்பெத்த ரூவா நோட்ட பாத்திருன்தீங்கனா கூட காந்தி தாத்தா சிருச்சிகிட்டு இருந்திருப்பாரு....!!

மணிநரேன் said...

விநாயக சதுர்த்தியன்று நல்லதொரு அனுபவம்போல தெரிகின்றது...;)

thamizhparavai said...

ரசித்தேன் தலைவரே... :-)

Anonymous said...

//அதற்குக் கீழே நாமெல்லாம் இடுகை என்று அறியும் ஒரு வஸ்து "பிள்ளையார் எப்போது தமிழகத்துக்கு வந்தார்?" என்ற கேள்வியுடன்//

கொழுக்கட்டைங்கற வஸ்து இருந்தா எங்களுக்கெல்லாம் மத்த கேள்வியே வராது. கற்பனையா நிறமா இந்த கசின்?

Cable சங்கர் said...

நகைச்சுவையில் சும்மா பின்றீங்களே தலைவரே..

மண்குதிரை said...

rasiththen, siriththen

valpayan pinnuttaththaiyum

Unknown said...

:))))))))))))))))))

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)))))))

"உழவன்" "Uzhavan" said...

சிரிப்பு இன்னும் ஓயல சாமி :-)))

மேவி... said...

பிள்ளையார் சிரித்தது வில்லத்தனமாக ....உங்களை பார்த்து


(பிறகு நான் என் பதிவுகளை தமிழ்மணத்தில் சேர்ப்பது இல்லை)

Unknown said...

படித்தேன்.. ரசித்தேன்..

//.. எப்பவும் அவன் டவுசர் பாக்கெட்டில் ஒரு பிள்ளையார் விக்கிரகம் இருக்கும். ..//

கடவுள அங்க எப்படி உங்க அசின் வெச்சாரு..??!!

முரளிகண்ணன் said...

புன்னகையோடே படித்து முடித்தேன்

மங்களூர் சிவா said...

:))))))))))

நாஞ்சில் நாதம் said...

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா....

நாஞ்சில் நாதம் said...

பொய். அவரு புனரபி படிச்சவுடன் பொட்டீய உடைச்சு போட்டுருப்பாரு

கோவி.கண்ணன் said...

:)

ஆஹா ப்ளாக் படிப்பதால் நாமெல்லாம் தெளிஞ்சிட்டோம்னு சொல்ல வர்றீங்க !

Karthik said...

:))))))))))

நந்தாகுமாரன் said...

31-08-2009 உயிரோசை மின்-இதழில் வெளியான உங்களின் “ஜிப்சி” கவிதை என்னை பெரிதும் கவர்ந்தது ... “எப்போதும்” தான் ... உங்கள் மின்-அஞ்சல் முகவரி தெரியாததால் இந்த பதிவில் இதை பின்னூட்டமாக எழுத வேண்டி ஆயிற்று ...

பா.ராஜாராம் said...

தாமதமாயிருச்சு அனு...சேர்த்து சிரிச்சுட்டேன்.மனசு லேசானது.

anujanya said...

@ விதூஷ்

மும்பையே தான். ஊர் போய் சேர்ந்தாச்சு :)

நன்றி வித்யா

@ Ram

நன்றி ராம்

@ அன்புடன் அருணா

வாங்க ப்ரின்சி. நன்றி.

@ கார்க்கி

அதான! முழு மனசா எதையும் பாராட்டுறது என்பது உன் அகராதியிலேயே இல்ல.

தேங்க்ஸ் கார்க்கி.

@ வால்பையன்

நல்ல கதை. எல்லாருக்கும் தெரிஞ்ச, கேள்விப்பட்ட கத தான். நன்றி குரு.

ஆனா, நீங்க எதிர்பார்த்த மாதிரி யாரும் 'உரையாடல்' செய்ய மாட்டேங்குறாங்க. நானும் தப்பிச்சேன் :)

@ விதூஷ்

அப்படி போடுங்க வித்யா.

@ வால்பையன்

இது ரொம்ப ஓவர்.

@ ஸ்ரீதர்

//உங்க கஸின் என்ன அந்நியன் மாதிரி உங்களுக்குள்ளேர்ந்து வந்திட்டாரோ//

யோவ், உண்மையிலேயே வந்தான்யா. நா எல்லா கொழுக்கட்டைக்காக பிள்ளையார் கும்பிடுபவன். அவன் உண்மையிலேயே வெறிய...சாரி பக்தன்.

கலைஞர் டிவி - செம் ப்லட்.

நன்றி ஸ்ரீதர்.

@ விதூஷ்

என்ன நீங்களும் கட்சி மாறீட்டீங்க. அவன் அந்நியன். நான் நானே தான் :)

@ ஆதி

இது ஒரு கமெண்டு. அதுக்கு ஒரு ரிபீட். யோவ், பதிவு படிச்சியா.

நன்றி ஆதி.

@ வால்பையன்

ஒரு நாளைக்கு நீங்க நிச்சயமா 'வீங்க வீங்க' வாங்கப் போவது என்னமோ நிச்சயம் குரு :))))

@ ரௌத்ரன்

வாங்க கவிஞர். மீதி நாட்களில் நான் தான் கொழுக்கட்டை ஆகுறது. அன்னிக்கு ஒரு நாள் மட்டும் 'விடுமுறை தினம்'

நன்றி ரௌத்ரன்.

@ குசும்பன்

அட்டகாசம் குசும்பன். ஆனா அது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தானே :)

நன்றி குசும்பா.

@ அகநாழிகை

//அந்த அம்பி கசின் நீங்களேதானே ?//

என்னை நம்புங்ணா - நா அவ்வளவு தீவிரம் இல்லைங்ணா :)

நன்றி வாசு.

@ ச்சின்னப் பையன்

நன்றி சத்யா.

@ அசோக்

அது அது. அதே தான். நன்றி அசோக்

@ கும்க்கி

இப்படியே சொல்லிக்கிட்டு... சரி சரி. நன்றி கும்க்கி.

@ வெங்கிராஜா

ஹா ஹா. இது நல்ல ஐடியாவா இருக்கே வெங்கி.

நன்றி.

@ அத்திரி

:)). நன்றி அத்திரி.

@ செய்யது

மன்சுகபா. பேசும்போது ஸ்பெல்லிங் மிஷ்டேக் ஆயிட்ச்சு.

//உங்களைப் போன்றோர் இப்படி 'மொக்கை' ரக பதிவு
எழுதலாம்.வால்பையன் பின்நவீனத்துவ கவிதை எழுதக்கூடாதா ??//

நா மொக்கை ஓகே. அதுக்காக வாலோட செயல்களுக்கு நான் பொறுப்பில்ல.

நன்றி செய்யது.

@ மேடி

ஆஹா. எவ்வளவு வேணாலும் அடி. ஏன்னா நா ரொம்ப நல்லவன்னு...

இப்பெல்லாம் உன் கமெண்டுலியே என் வியாவாரம் நல்லா ஓடுது.

நன்றி மேடி

@ T.V.Radhakrishnan

நன்றி TVR.

@ மணிநரேன்

நன்றி நரேன்

@ தமிழ்ப்பறவை

நன்றி பரணி.

@ சின்ன அம்மணி

வாங்க சகோ. ஆமா, கொழுக்கட்டை இருந்தா வேற எதுவும் கேள்வி வந்திருக்காது. அது ரெடி ஆவதற்குள்ள இத்தனை ரகளை. நெசமாலுமே கசின் தான் :)
நன்றி.

அனுஜன்யா

anujanya said...

@ யாத்ரா

நன்றி யாத்ரா.

@ கேபிள்

நன்றி தல. (கவிதை எழுதாத என்று எவ்வளவு நாசூக்காக சொல்றீங்க)

@ மண்குதிரை

நன்றி மண்குதிரை. கவிதை எழுத மட்டும் தமிழ் வார்ப்புரு?

@ ஸ்ரீமதி

திரும்ப ஆரம்பிச்சிட்டியா. நன்றி ஸ்ரீ.

@ நேசமித்ரன்

நன்றி நேசா.

@ அமித்து.அம்மா

நன்றி AA.

@ உழவன்

நன்றி உழவன். உயிரோசை நீங்களா? வாழ்த்துகள்.

@ மேவி

ஹா ஹா. நன்றி மேவி.

@ பட்டிக்காட்டான்

அவன் அசின் இல்லைங்க. ஆஹா 'அசின்'னா இருந்தா.....

அது ஒரு குட்டி விக்கிரகம். ஒரு அங்குலம் உயரம் இருக்கும்.

நன்றி தல.

@ முரளிகண்ணன்

நன்றி தல. ரொம்ப நாட்களுக்குப் பின் வருகை.

@ சிவா

இதோட விட்டியே. நன்றி சிவா.

@ நாஞ்சில் நாதம்

பரவாயில்ல கொஞ்சம் முன்னேற்றம்னு சொல்ல வந்தால், அடுத்த கமெண்டு வேற. அதுவும் கொலைவெறி கமெண்டு. சரி சரி இருக்கட்டும்.

நன்றி நாதம் :)

@ கோவியார்

ஆஹா, பெரிய தல வருகை. வலையுலகப் பெரியார் மாதிரி நீங்க தெனம் தாக்கும் போது, கொஞ்சங்கூட திருந்தலைனா எப்பூடி!

நன்றி கோவி.

@ கார்த்திக்

நன்றி கார்த்திக்

@ நந்தா

ஹை, ஜாலி. இங்கியே சொன்னா இன்னும் நல்லா இருக்கு. நான் மெயில் எப்பவாவது தான் பார்ப்பேன். அதோட இங்க சொன்னீங்கன்னா கொஞ்சம் விளம்பரம் கூட :)

Jokes apart, my mail id is : anujanya@gmail.com

Thanks buddy.

உங்க கவிதை, மற்றும் நேசன், விநாயக முருகன், உழவன், கார்த்திக் பிரபு, பிரேம்குமார் என்று தெரிந்த நண்பர் பட்டாளம். மகிழ்ச்சிதான் :)

@ ராஜாராம்

வாங்க ராஜா. நீங்களாவது தாமதமா இருந்தாலும் வரீங்க. உங்க பதிவுகளை ஆற அமர படிக்கனும்னு நினெச்சு, அப்படியே தள்ளிப் போகுது.

ரொம்ப நன்றி ராஜா.

அனுஜன்யா

"உழவன்" "Uzhavan" said...

@ உழவன்

நன்றி உழவன். உயிரோசை நீங்களா? வாழ்த்துகள். //
 
தகவலுக்கு மிக்க நன்றி ஐயா. நீங்கள் சொன்ன பிறகுதான் பார்த்தேன். மகிழ்ச்சி

Unknown said...

//.. @ பட்டிக்காட்டான்

அவன் அசின் இல்லைங்க. ..//

அது என்னமோ தெரியலைங்க, கசின் அப்படினுதான் தட்டசுனேன், ஆனா அது அசின்னு மாறிடுச்சு..

//.. ஆஹா 'அசின்'னா இருந்தா..... ..//

ரொம்ப ஆசையா இருப்பிங்க போல..

anujanya said...

@ உழவன்

மீண்டும் வாழ்த்துகள். இன்னும் நிறைய எழுதுங்க.

@ பட்டிக்காட்டான்

கசின் அசின் ஆகும்போது ஆசை மட்டும் வராதா? :)

அனுஜன்யா