Tuesday, September 1, 2009

உச்சத்தின் அருகில்


முன்னூறு கண்கள்
உற்றுப் பார்த்தாலும்
சட்டை செய்யாத இயந்திரம்
பத்தாயிரம் அடி உயரத்தில்
மிதக்கிறது முன்னும் பின்னும்
அலட்சியப் புன்னகையுடன்;
குதிகாலில் குறுக்கிட்ட
குழந்தையின் பார்பியால்
தடுமாறி விழுபவளைத்
தாங்கிப் பிடிப்பவன்
கண்களிலிருந்தும்
அதரங்களிளிருந்தும்
சில பூக்கள் அவளைச்
சூழ்ந்த நேரத்தில்
மீண்டும் பெண்ணானவளின்
கன்னங்களின் சிவப்புக்கு
அவள் செலவழித்த நேரங்கள்
பலருக்குப் புரிகிறது இப்போது;
வேறு தளத்திற்கு நகர்ந்திருந்த
கவிதை ஒருவனுக்கு;
கேட்கும் ராகத்தின்
புது இழைகள் ஒருத்திக்கு;
எல்லாமே உச்சத்தின் அருகில்
சில மணித்துளிகளே ஆயினும்

(நவீன விருட்சம் மின்னிதழில் பிரசுரம் ஆகியது.)

43 comments:

Mahesh said...

//கேட்கும் ராகத்தின்
புது இழைகள் ஒருத்திக்கு
//

அருமை !!!

அது போக... எங்கெல்லாம் கவிதையைப் பாக்கறீங்க !!

Vidhoosh said...

ம்ம். :)

-வித்யா

ந.ஆனந்த் - மருதவளி said...

ரொம்ப நல்லா வந்திருக்கு அனுஜன்யா. ஆனா ஒண்ணு. பார்பின்னா என்னன்னு புரியல உங்க பெயரைப் போலவே!

என்றும் அன்புடன்.

Ashok D said...

பலருக்குப் புரிகிறது இப்போது
கவிதை :)


மருதவளி பார்பிங்கறது பொம்மை அவ்ளவே.

நாஞ்சில் நாதம் said...

அருமை !!!

ஈரோடு கதிர் said...

//மீண்டும் பெண்ணானவளின்
கன்னங்களின் சிவப்புக்கு//

ஆஹா... கவிதை

//மருதவளி said...
பார்பின்னா//

பார்பி டால்...பொம்மை

அமிர்தவர்ஷினி அம்மா said...

அருமை ! :)

முரளிகண்ணன் said...

அருமை அனுஜன்யா

Unknown said...

ஹைய் சூப்பரா இருக்கு அண்ணா :)))

Anonymous said...

//கன்னங்களின் சிவப்புக்கு
அவள் செலவழித்த நேரங்கள்
பலருக்குப் புரிகிறது இப்போது;//

க்ளோஸப்ல பாத்தா மேக் அப் போட்டிருக்கறது நல்லா தெரியும் போல இருக்கு.

அ.மு.செய்யது said...

வாவ் !!!!!!! மனோகர கற்பனை.

இந்த கவிதைக்காக நீங்கள் தேர்ந்தெடுத்த சொற்கள் வழக்கத்திற்கு மாறாக,
எளிமையாகவும் அழகாகவும் இருக்கின்றன.

இதே டிரெண்டை தொடருங்கள் தலைவரே !!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

படித்தவுடன் புரிந்துவிட்டதே! அப்போது இது கவிதை இல்லையா?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இந்தக் கவிதையை நவீன விருட்சத்தில் படித்து விட்டு உங்களுடன் பேசியது ஞாபகத்தில் இருக்கிறது. இவ்வளவு நாள் கழிச்சா பதிவுல ஏத்தறது :)

விமானம் முன்னும் பின்னுமாக மிதக்கிறது என்பதில் தேவையற்ற குழப்பம் வருகிறது என்று அப்போது சொல்லியிருந்த ஞாபகம். இப்போதும் அப்படியே.

கவிதை நன்றாகத்தான் இருக்கிறது. தொடர்ந்து தூள் கிளப்புங்க :)

பா.ராஜாராம் said...

நல்லா இருக்கு அனு."மீண்டும் பெண்ணாவளின் கன்னங்கள்" நல்ல mood!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

கவிதை அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

Mahesh said...

//விமானம் முன்னும் பின்னுமாக மிதக்கிறது என்பதில் தேவையற்ற குழப்பம் வருகிறது //

விமானத்தையா குறிப்பிடுறீங்க? விமான பணிப்பெண்ணைத்தானே இயந்திரம்னு சொல்றீங்க??

க.பாலாசி said...

//வேறு தளத்திற்கு நகர்ந்திருந்த
கவிதை ஒருவனுக்கு;
கேட்கும் ராகத்தின்
புது இழைகள் ஒருத்திக்கு;
எல்லாமே உச்சத்தின் அருகில்
சில மணித்துளிகளே ஆயினும்//

ஆழ பதியும் வரிகள்...அழகு...உங்கள் கவிதையில்... சற்று தூக்கலாக...

பித்தன் said...

நல்லா இருக்கு

நந்தாகுமாரன் said...

இந்தக் கவிதை எளிமையாக, நேரடியாக, அருமையாக, அழகாக இருக்கிறது ... ஏற்கனவே ந.வி.யில் படித்துவிட்டேன்

விநாயக முருகன் said...

அருமை அனுஜன்யா

விருட்சத்தில் ஏற்கனவே படித்தேன்

அருமை

Unknown said...

தமிழில் :

நீங்க எழுதுன கவுஜ சூப்பரு....!!

ஆனா படத்துல சப்ப மூக்கு பிகரு....!!




ஆங்காங் பாசையில் :


கிங்கிஸ்தா.... மங்கிஸ்தா....!!

மங்கிஸ்தா.... பாயாஸா......!!

மாதவராஜ் said...

ரசித்தேன்.

RaGhaV said...

அருமை.. :-)

thamizhparavai said...

நல்லா இருக்கு தலை...
//மீண்டும் பெண்ணானவளின்
கன்னங்களின் சிவப்புக்கு
அவள் செலவழித்த நேரங்கள்//
இதுதான் கவிதை...
உங்கள் கவிதைகள் நீங்கள் பதிவிடுவதுடன் முடிந்துவிடுவதில்லை..
லவ்டேல் மேடி மற்றும் வால்பையனின் பின்னூட்டங்களோடுதான் பூரணமடைகின்றதென்னெண்ணம்.

நட்புடன் ஜமால் said...

கண்களிலிருந்தும்
அதரங்களிளிருந்தும்
சில பூக்கள் அவளைச்
சூழ்ந்த நேரத்தில்
மீண்டும் பெண்ணானவளின்]]

அருமை அருமை ஐயா!

நட்புடன் ஜமால் said...

எல்லாமே உச்சத்தின் அருகில்
சில மணித்துளிகளே ஆயினும்]]

ஆம்!

கார்க்கிபவா said...

கவிதைக்கு ஏற்றார் போல் கிங்ஃபிஷர் பணிப்பெண்ணின் படத்தை போட்டிருக்கலாம்.

கவிதை மட்டும் அழகு..

நர்சிம் said...

//எல்லாமே உச்சத்தின் அருகில்
சில மணித்துளிகளே ஆயினும்//

’ஏ’க்ளாஸ் அனு’ஜம்’யா.

வால்பையன் said...

நல்லாயிருக்கு!

எதிர்கவுஜ கூட போடலாம், ஆனா கொஞ்சம் சிறுசா ட்ரை பண்ணிங்கன்னா தாவூ தீராது!

நேசமித்ரன் said...

அருமை

இந்த வார்த்தைகளில்தான் புதிதாய் பால் சுரப்பதை உணர்வது போல எவ்வளவு திறப்புகள் .அனு'ஜென்'யா கவிதை நல்லா வந்திருக்கு
:)

Unknown said...

என்ன ஆச்சு? எல்லோருக்கும் புரியிற மாதிரி எழுத ஆரம்பிச்சிட்டீங்க.

நல்லா இருக்கு. ஆனா விமானம் பற்றிய //மிதக்கிறது முன்னும் பின்னும்
அலட்சியப் புன்னகையுடன்// வரிகள் ஒரு தடுமாற்றத்தைத் தருகிறது.

TKB காந்தி said...

நல்லா இருக்குங்க அனுஜன்யா :)

Anonymous said...

nalla irukku thalaivare

mankuthiray

அகநாழிகை said...

எளிமையான வரிகளில் கவிதையின் அழகு கவர்கிறது.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

ரௌத்ரன் said...

சில ஆயிரம் கிலோமீட்டர் தொலைவிலிருந்து ஒரு இயந்திரம் இக்கவிதையை வாசிக்கிறது மெதுவாய் புன்னகைக்கிறது மீண்டும் தாடை இறுகு முன் சில கணப் பொழுதேனும் மெல்லுணர்வில் பூவெறிந்த கைகளுக்கு நன்றி சொல்கிறது :)

கவிதை நல்லாருக்கு சாரே..திட்டம் போட்டு ஒரு 'சுமார்' ஏர் ஹோஸ்டஸ் படம் போட்ட மாதிரி இருக்கே.எனக்கு உங்க மின் அஞ்சல் முகவரி வேணும்..என்னுடையது roudran@gmail.com

Unknown said...

கவிதை கடைசியில் கொஞ்சம் புரியவில்லை..

:-(

Karthikeyan G said...

அருமை!!

Thamira said...

என்ன எல்லாரும் புரிஞ்சுதுன்னு சொல்றாங்களே.. அய்யய்யோ.. வேற கடைக்கு வந்துட்டனா?

(தல.. எனக்கும் புரிஞ்சாமேரியே இருக்குது)

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணா உங்களைப் பத்தி பெருமையா எழுதியிருக்கேன்.ஓடியாங்கண்ணா.

:))

anujanya said...

@ மஹேஷ்

கவிதை எங்கும் இருக்கு. நாம் தான் உணர்ந்து எழுதணும்..னு யாராவது பெரிய ஆளு சொல்லியிருப்பாரு. நன்றி மஹேஷ்.

@ விதூஷ்

சரி சரி :)

நன்றி வித்யா

@ மருதவளி

வாங்க ஆனந்த். உங்கள் முதல் வருகை. பார்பி பற்றி பின்னாலே நண்பர்கள் சொல்லிட்டாங்க. என் பெயர் .. இதுல புரிய என்ன இருக்கு? நல்லா இருந்தா சரிதேன்.

நன்றி ஆனந்த்.

@ அசோக்

ம்ம், சரி சரி :) நன்றி அசோக்.

@ நாஞ்சில் நாதம்

அப்பாடா, சிரிப்பானிலிருந்து ஒற்றை வார்த்தைக்கு முன்னேற்றம் :)

ச்சும்மா, உங்களையும் கலாய்க்கணும்ல! நன்றி நாதம்.

@ கதிர்

நன்றி கதிர்

@ அமித்து.அம்மா

நன்றி AA

@ முரளிகண்ணன்

நன்றி முரளி

@ ஸ்ரீமதி

ஹாய், நன்றி ஸ்ரீ.

@ சின்ன அம்மணி

ஆம்; கிட்டத்தட்ட எல்லாருக்கும் :)

நன்றி CA

@ செய்யது

அப்படீங்கற? சரி முயற்சி செஞ்சிடலாம். நன்றி செய்யது.

@ T.V.Radhakrishnan

சார், நீங்களுமா :) நன்றி TVR

@ ஜ்யோவ்

பிரசுரம் ஆன உடனே போடவேண்டாமென்று சில நியதிகள் இருக்கே ஜ்யோவ்?

அன்னைக்கே சொன்ன ஞாபகம்: 'முன்னும் பின்னும் மிதந்தது' - விமானத்தை அல்ல; அவளைக் குறித்தது என்று.

நன்றி ஜ்யோவ்.

@ ராஜாராம்

நன்றி ராஜா.

@ ஜெஸ்வந்தி

நன்றி ஜெஸ்வந்தி.

@ மஹேஷ்

கரெக்டு. சரியா சொல்லலைனு தோணுது. தேங்க்ஸ் மஹேஷ்.

@ பாலாஜி

வாங்க பாலாஜி. உங்க முதல் வருகை? உங்க வலைப்பூ நல்லா இருக்கு.

நன்றி

@ பித்தன்

நன்றி பித்தன்.

@ நந்தா

நன்றி நந்தா.

@ விநாயகமுருகன்

நன்றி வி.மு. :)

@ மேடி

Hongkong பாஷை - சூப்பர். நன்றி மேடி.

@ மாதவராஜ்

நன்றி மாதவ்

@ ராகவ்

நன்றி ராகவ்.

@ தமிழ்ப்பறவை

நன்றி பரணி. வாஸ்தவம் தான். வால், மேடி ...ஸ்ஸப்பா... நன்றி

அனுஜன்யா

anujanya said...

@ ஜமால்

நன்றி & நன்றி ஜமால் :)

@ கார்க்கி

டேய் அடங்குடா. நன்றி கார்க்கி.

@ நர்சிம்

நன்றி தல. உங்கள விடவா!

@ வால்பையன்

வாங்க குரு. என்னது தாவு தீருதா? ஒப்புக்கொள்ள முடியாது :)

நன்றி குரு.

@ நேசமித்ரன்

நன்றி நேசன்.

@ seenu

சீனு, என்ன இது? மொத மொறை வரும்போதே இப்படி கலாய்க்கறீங்க :)

சரி; எப்ப எழுதப் போறீங்க?

நன்றி .

@ காந்தி

நன்றி காந்தி. அங்க வரணும். ரொம்ப நாட்களாச்சு :(.

@ மண்குதிரை

நன்றி மாடசாமி :). உனக்கும் மேல இருக்குற கமெண்டு தான் :(

@ பொன்.வாசு

நன்றி 'ஆசிரியரே' :)

@ ரௌத்ரன்

நன்றி கவிஞர் :). என்ன தனிமை கொல்லுதா? ஒரு வார இறுதியில் துபாய் சென்று அண்ணாச்சி, அய்ஸ், குசும்பன் எல்லாரையும் பாத்துட்டு வாங்க. சரியாகிடும் :)

anujanya@gmail.com

@ பட்டிக்காட்டான்

அப்பாடா! மூச்சு வந்தது. என்னடா எல்லோருக்கும் புரியற மாதிரி எழுதுறோமேன்னு கவலையா இருந்தது :)

நன்றி ப.கா.

@ கார்த்திகேயன்

நன்றி கார்த்தி.

@ ஆதி

மொதல்ல நல்ல டாக்டர் கிட்ட போகவும். சமயத்தில் நோய் முற்றி, எல்லாக் கவிதைகளும் புரிய மாதிரி தோன்றும் :)

நன்றி ஆதி.

@ அப்துல்

டேய், உன்ன நம்பி ஓடிப் போயி பார்த்தா... அவ்வவ்.

நன்றி அப்துல்.


அனுஜன்யா

கிருத்திகா ஸ்ரீதர் said...

"மீண்டும் பெண்ணானவளின்"
சொல்லில் பிழை இருந்தால் பொறுத்துக்கொள்ளலாம்... ஆனால் பொருளில் பிழையிருந்தால்????

எனக்கு எங்கயோ ஸ்ருதி தட்டுது அனுஜன்யா... ஆனாலும் வார்த்தைகளின் ஜாலம் ஈடுகட்டுகிறது... வாழ்த்துக்கள்

anujanya said...

@ கிருத்திகா

நாம் இது பற்றி விவாதித்து விட்டோம் :). மிக முக்கியமான அவதானிப்பு உங்களுக்கு. Thanks from the heart.

அனுஜன்யா