Friday, October 30, 2009

முன்னார் - சில புகைப்படங்கள்

வெயிலான் நண்பர்களுடன் நீலகிரிக் காடுகளுக்குள் சென்ற நேரம். யார் அந்த நண்பர்கள்? செல்வா, சமவெளி மானாகிய அடர்கானகப் புலி மற்றும் உமா கதிர். இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் ஜ்யோவ், வால்பையன், லதானந்த் இவர்களும் அதே மலைத்தொடர்களின் இன்னொரு பகுதியில் என்று இருந்த நேரம். எனக்கும் ஆபீஸில் off-site என்று சொல்லப்படும் அலுவலகமில்லாத இடத்தில் கலந்தாலோசனை என்று முடிவாக, ஆபிஸ் பெரிய தலைகளுடன் கொச்சி வழியாக முன்னார் சென்றேன்.


வெயிலான் போல அழகாக எழுத வரவில்லை. அதனால் பரிசல் எப்போதும் போல ஆரம்பித்து வைத்த ட்ரெண்டை, வழக்கம் போல ஆதி தொடர, நானும் என்னால் முடிந்ததை....


இந்தப் புகைப்படங்கள் எதுவும் நான் எடுக்கவில்லை. என்னிடம் மொபைல் காமிரா தவிர்த்து வேறு நல்ல காமிரா இல்லை. அன்பளிப்புகள் ஏற்றுக்கொள்ளப்படும் எப்போதும் போல்.

ஆதலால், புகைப்படங்கள் நன்றாக இருந்தால், அது எடுக்கப்பட்ட இடத்தின் பெருமையாக இருக்கலாமென்றும், நன்றாக இல்லையென்றால் காமிரா/எடுத்தவர் சரியில்லை என்றும் கொள்க.



கொச்சி



தேயிலைத் தோட்டம் - தூரத்து ஏரி மற்றும் மேகங்கள்



நீர்வீழ்ச்சி?

 
அருவி?

    

குளிக்க முடிந்தால் அருவி
பயமாக இருந்தால் நீர்வீழ்ச்சி



பச்சை நிறமே பச்சை நிறமே

   
என் ஜன்னலுக்கு வெளியே


மலைராணி முந்தானை


நீர்வீழ்ச்சி தீமூட்டுதே


இயற்கையென்னும் இளைய கன்னி


மீண்டும் மீண்டும்
 தண்ணீர் தண்ணீர்

 




அடர்கானகப் புலிகள் இருக்கலாம்



சமவெளி மான்களும் தென்படலாம்

29 comments:

மணிஜி said...

வழக்கமாக கவிதை வார்த்தைகளால் எழுதுவீர்கள்.ஒரு மாற்றமாக கேமராவால்..ரசிக்கும்படித்தான் இருக்கிறது.

அ.மு.செய்யது said...

ப‌ட‌ங்க‌ள் அருமை !!!

( இது டெம்பிளேட் பின்னூட்ட‌ம் இல்லை )

☼ வெயிலான் said...

// வெயிலான் போல அழகாக எழுத வரவில்லை. //

என்னாதிது? இது ரொம்ம்ம்ப.........

படத்திலிருக்கும் அருவி சாலையைக் கடக்கும் அருவி தானே?

Ashok D said...

போட்டோக்கள் நன்றாகவே வந்திருக்கிறது அதில் உள்ள captionகளும்.

வால்பையன் said...

ஆகா அருமையான கிளைமேட் போலயே!

அருவி பீர் மாதிரி பொங்கி வழியுதே!?

வட போச்சே!

நந்தாகுமாரன் said...

அருமையான ஒளிப்படங்கள் ... இயற்கையை அதன் இயல்பிலேயே பிரதியாக்குவதும் எனக்கும் பிடித்த ஒரு கலையே ... இவை எவையும் நமக்கு சவால் விடவில்லை நம்மை அரவணைக்கின்றன ...

நேசமித்ரன் said...

பொறாமையா இருக்கு பாஸ் ..!
நல்லா இருங்க

:)

Anonymous said...

அனு,

நீர்வீழ்ச்சி, அருவி ஆகிய இரு தலைப்புக்கள் சொல்லாத விஷயங்களைச் சொன்னது.

அருவியை நீர் வீழ்ச்சி
என்றால்
மனது ஏனோ வலிக்கிறது

என்ற கவிதை ஞாபகம் வருகிறது.

Thamira said...

மொபைல் போன் குவாலிட்டிக்கு எக்ஸலண்டாக வந்திருக்குது.. அங்கிள்.!

அதுவும் மீண்டும்மீண்டும் தண்ணீர் ஏதோ ஓவியம் போல பிரமாதமாக இருக்கிறது.

Mahesh said...

off-site க்காக பாம்பேல இருந்து கொச்சியா? இதெல்லாம் ரொம்ப ஓவர்....

நாங்கள்லாம் சிங்கப்பூர்ல இருந்து மலேஷியா வரைக்கும்தான் போறோம்... ஹி ஹி ஹி...

யாத்ரா said...

ஆகா அருமையான படங்கள், கூட உங்களோட வர்ணனைகளும்.

Mahesh said...

மூணாறுக்கு கொச்சில இருந்து வர வழியை விட எங்க ஊர் உடுமலை வழியா போனா இன்னும் ரசிச்சுருப்பீங்க !!

ஃபோட்டோக்கள் அருமை.... !!!

பித்தன் said...

அருமையான படங்கள்

மண்குதிரை said...

wow romba nalla irukku

மங்களூர் சிவா said...

படம் ஒவ்வொன்னும்

கவித கவித











நீங்களும் எழுதறீங்களே புரியாதமாதிரி கவிதன்னு சொல்லிகிட்டு :))))))))))))))))

just for fun

மங்களூர் சிவா said...

/
புகைப்படங்கள் நன்றாக இருந்தால், அது எடுக்கப்பட்ட இடத்தின் பெருமையாக இருக்கலாமென்றும், நன்றாக இல்லையென்றால் காமிரா/எடுத்தவர் சரியில்லை என்றும் கொள்க.
/

haa haa
:)))

கார்க்கிபவா said...

வழக்கம் போல் அருமை தல. முதல் முரை புரிந்தும் புரியாதது போல் இருந்த கவிதை, மீள்வாசிப்பில் புரிகிறது. அருமையான மொழி உங்களுக்கு சாத்தியபடுகிறது. இந்தக் கவிதை எந்த இணைய இதழில் வந்தது?

:))

Venkatesh Kumaravel said...

நன்று. படங்கள் நல்லாயிருக்கு! குறிப்பா அந்த பசுமையான படம்!

Karthik said...

//அ.மு.செய்யது said...

ப‌ட‌ங்க‌ள் அருமை !!!

( இது டெம்பிளேட் பின்னூட்ட‌ம் இல்லை )//

அதேதான்.. :)

வினோத் கெளதம் said...

Superb shots ..:)

பிரவின்ஸ்கா said...

ப‌ட‌ங்க‌ள் அருமை.

-பிரவின்ஸ்கா

வெண்பூ said...

படங்கள் நன்றாக இருக்கிறது அனுஜன்யா.. பாராட்டுகள்.. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்ன்ற மாதிரி செல்ஃபோன் வெச்சே அழகழகான படங்களை சுட்டிருக்கீங்க..

பின்னோக்கி said...

இடம் நல்லாயிருக்குங்க. போன வருஷம் போகனும்னு நினைச்சு போக முடியலை.

மேவி... said...

raittu

அன்புடன் நான் said...

படங்கள் அனைத்தும்... மிகவும் நல்லாயிருக்குங்க.

anujanya said...

@ தண்டோரா

நன்றி மணிஜி

@ செய்யது

ஓகே ஓகே. நன்றி செய்யது.

@ வெயிலான்

உங்களுக்கு டவுட் என்றால், நீங்க எழுதியத திரும்பப் படிங்க. எனக்கு ரொம்ப பிடிச்சது.

ஆமாம், அந்த அருவி சாலையைக் கடக்கும் அழகு... வாவ்.

நன்றி வெயிலான்

@ அசோக்

நன்றி அசோக். புகைப்படம் எடுத்தவர் என் ஆபிஸ் நண்பர்.

@ வால்பையன்

ஆமாம் குரு, க்ளைமேட் சூப்பர். என்னது பீரா? உங்களைத் திருத்த முடியாதுப்பா :)

நன்றி குரு.

@ நந்தா

ஆம், நந்தா. பெங்களூரு மழைவானம், கர்நாடகாவின் வனங்கள் என்று உங்க தளத்தில் அதகளம் பண்ணும் ஆசாமி தானே நீங்க.

நன்றி நந்தா

@ நேசமித்ரன்

வாங்க பாஸ். இந்தியா வரும்போது சொல்லுங்க. ஒரு ட்ரிப் போவோம்.

நன்றி நேசன்.

@ வேலன்

விக்கி கவிதை இல்ல அது?

நன்றி வேலன்

@ ஆதி

//மொபைல் போன் குவாலிட்டிக்கு எக்ஸலண்டாக வந்திருக்குது//

நான் சொன்னது "இந்தப் புகைப்படங்கள் எதுவும் நான் எடுக்கவில்லை. என்னிடம் மொபைல் காமிரா தவிர்த்து வேறு நல்ல காமிரா இல்லை". அப்படின்னா, என் நண்பர் அவரோட காமிராவில் எடுத்தார்னு அர்த்தம்.

என்னவோ போங்கப்பா.

நன்றி ஆதி

@ மஹேஷ்

off-site : Singapore to Malaysia. ஆனா வருடத்தில் பத்து மாதம் ஜெனிவா. நல்லா இருப்பா.

நன்றி மஹேஷ்

@ யாத்ரா

நன்றி யாத்ரா

@ மஹேஷ்

//மூணாறுக்கு கொச்சில இருந்து வர வழியை விட எங்க ஊர் உடுமலை வழியா போனா இன்னும் ரசிச்சுருப்பீங்க //

ஆஹா, இந்த உடுமலை ஆளுங்க பெருமை.....சரி சரி.

நன்றி மஹேஷ்

@ பித்தன்

நன்றி பாஸ்

@ மண்குதிரை

நன்றி நண்பா

@ சிவா

//நீங்களும் எழுதறீங்களே புரியாதமாதிரி கவிதன்னு சொல்லிகிட்டு :))))))))))))))))//

இது ஓகே.

//just for fun//

இது எதுக்கு சிவா? நா ரொம்ப நல்லவன். எவ்வளவு எடிசாலும் தாங்குவேன். வேணும்னா ஆதியக் கேளு :)

நன்றி சிவா

@ கார்க்கி

டேய்

@ வெங்கிராஜா

நன்றி வெங்கி

@ கார்த்திக்

பின்னூட்டம் போடுவதிலும் ஒரே அலை-வரிசையா? வெங்கி வந்தவுடன் கார்த்திக்.

நன்றி கார்த்திக்

@ வினோத்கௌதம்

வாங்க பாஸ். ரொம்ப நாட்கள் கழிச்சு வரீங்க. தேங்க்ஸ்.

@ பிராவின்ஸ்கா

ஹாய், எவ்வளவு நாட்கள் ஆச்சு, இங்க வந்து. நன்றி பாஸ்.

@ வெண்பூ

உனக்கும் ஆதிக்கும் ஒரே அளவு தான் ...........

என்ன சொல்ல. இந்தப் படங்கள் என் நண்பர் அவரோட (மொபைல் அல்லாத) காமிராவில் எடுத்தது. நீங்க எங்க என்னோட கவிதையைப்...சரி சரி விடுறா விடுறா.

நன்றி வெண்பூ.

@ பின்னோக்கி

அதனால் என்ன பாஸ். இந்த வருஷம் போயிட்டு வாங்க.

நன்றி

@ மேவி

ஓகே

@ கருணாகரசு

ரொம்ப நன்றி பாஸ்

அனுஜன்யா

நர்சிம் said...

ஆஹா..படங்கள்.அருவி மட்டும் ஹோ..என்று சத்தமும் கேட்டது.

கபீஷ் said...

அழகான படங்கள். :-):-)

anujanya said...

@ நர்சிம்

இப்பெல்லாம் கவிதை எழுதுறீங்கன்னு தெரியுது :)

@ கபீஷ்

நன்றி பாஸ்.

அனுஜன்யா