Tuesday, November 3, 2009

எப்போதும்அந்தரத்தில் மிதந்த


தேனுண்ட மலர்களுக்கு

ரெக்கைகளில் ஆயிரம்

நிறங்களும்

எட்டுத் திக்கும்

கண்காணிக்கும்

கண்களும்

வேக வாகனங்களில்

மோதிச் சரிந்தாலும்

மோட்சம் மறுத்து

அலையும் ஆன்மாக்கள்

பலரின் நெஞ்சுக்குள்

காதல் வேளைகளிலும்

சிலரின் வயிற்றுக்குள்

தேர்வுக் காலங்களிலும்

வண்ணத்துப் பூச்சிகளாகவே

வாழ்கின்றன எப்போதும்(உயிரோசை மின்னிதழில் பிரசுரம் ஆனது)

39 comments:

Ashok D said...

நல்லாயிருக்கு தல..


வண்ணங்கள்
வரிகளுக்கு யார் கொடுத்தது?
வண்ணத்துபூச்சியா!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லாயிருக்கு அனுஜன்யா.

இன்னும் கொஞ்சம் சொற்சிக்கனம் இருந்திருக்கலாம் என்று தோன்றினாலும் (உதா : அந்தரத்தில் மிதந்த - பின்ன தரையிலா மிதப்பாங்க), படிப்பதில் ஒரு சுவை இருக்கிறது.

நந்தாகுமாரன் said...

beautiful like a butterfly

Unknown said...

பிடிச்சிருக்கு... புரிஞ்சிருக்கு.. ;))))

க.பாலாசி said...

//பலரின் நெஞ்சுக்குள்
காதல் வேளைகளிலும்

சிலரின் வயிற்றுக்குள்
தேர்வுக் காலங்களிலும்//

உண்மைதான்...படபடக்கும் காலங்களில் இவைகளை பார்த்துணரத்தான் முடிவதில்லை.

நல்ல கவிதை...

தராசு said...

புரிஞ்சுடுச்சு,

புரிஞ்சுடுச்சு. அந்த கலர் கலரா இருக்கற பூவைப் பத்திதான சொல்றீங்க.

Kumky said...

வண்ணத்து பூச்சிகளின் நாட்கணக்கிலான வாழ்வு குறித்து கவலை கொண்டேன்.

பிடிப்பில்லா நேரங்களில், சுறுசுறுப்பாக சுற்றித்திரியும் அவைகளின் பார்வையில் படுமாறு சும்மா கிடந்திருக்கிறேன்.

படைப்பின் உச்சங்களை காணவல்ல அதன் அழகோடு எதனையும் ஒப்பிட மனமின்றி ரசித்திருக்கிறேன்.

போலவே வாகனங்களில் முத்தமிட்டு
வீழந்த் ஆன்மாக்கள் குறித்தும் யோசிக்க ஆரம்பித்திருக்கிறேன்..,
காதல் பருவமும்,தேர்வு காலங்களும் கடந்துபோய்விட்ட யூத்தாகிவிட்டதனால்....

Mahesh said...

வரிக்கு வரி கலர்.... கவிதை பாக்க்கவே வண்ணத்துப் பூச்சி மாதிரி... படிக்கும்போதோ படபடப்பு....
எப்பிடி இதெல்லாம்??? :)))))))

நர்சிம் said...

சரி தலைவா.

யாத்ரா said...

கவிதை ரொம்பப் பிடித்திருக்கிறது

ராமலக்ஷ்மி said...

//பலரின் நெஞ்சுக்குள்

காதல் வேளைகளிலும்

சிலரின் வயிற்றுக்குள்

தேர்வுக் காலங்களிலும்//

ரசித்தேன் வண்ணத்து பூச்சியையும் வண்ண எழுத்துக்களையும்.

மணிஜி said...

நல்லாயிருக்கு(சத்தியமா)

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஸ்ரீமதி said...
பிடிச்சிருக்கு... புரிஞ்சிருக்கு.. ;))))


வழிமொழிகிறேன்

பித்தன் said...

colour full

நேசமித்ரன் said...

ரொம்ப நல்லா இருக்கு தலைவரே
ஒரு வண்ணமயமான கவிதை

:)

வெண்ணிற இரவுகள்....! said...

பலரின் நெஞ்சுக்குள்

காதல் வேளைகளிலும்

சிலரின் வயிற்றுக்குள்

தேர்வுக் காலங்களிலும்

வண்ணத்துப் பூச்சிகளாகவே

வாழ்கின்றன எப்போதும்//
arpudha varigal

Cable சங்கர் said...

/நல்லாயிருக்கு(சத்தியமா)//

இந்த தண்டோரா சொல்றதை நம்பாதீங்க.. இப்படித்தான் இங்க புரிஞ்சாப்புல பாராட்டிட்டு அவரு பதிவுல புரியாத கவிதைன்னு எழுதுவாரு..

அ.மு.செய்யது said...

//தேர்வுக் காலங்களிலும்

வண்ணத்துப் பூச்சிகளாகவே//

ஹர்ரே வா !!!

கவிதையின் பொருளோடு வடிவத்தையும் மாற்றியமைத்தது,
கண்காட்சி கவிதை வகைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

உ.ம் ஒரு கண்காட்சி கவிதையிலிருந்து சில வரிகள்.

முதுகு வரை

நீ
ண்
டு
.
.
வளர்ந்த கூந்தல்.

ரௌத்ரன் said...

வர வர உங்க இளமை ஊஞ்சல் கெட்ட ஆட்டம் போடுது போங்க :)

நல்லாருக்கு கவிதை...

thamizhparavai said...

வண்ண வார்த்தைகள் சிறகடிக்கின்றன வண்ணத்துப் பூச்சியாய்....
வரவர இப்படி எழுத ஆரம்பிச்சிட்டீங்க...
கவிதை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே சைடு பார்ல இருக்கிற மத்த ப்ளாக்ஸை எல்லாம் க்ளோஸ் பண்ணிட்டு, ப்ளேயரை pause பண்ணிட்டு ரொம்பக் கவனமா,புரியாமப் போயிருமோன்னு படிக்க ஆரம்பிச்சேன்.
எல்லாம் வேஸ்ட்...ரசித்தேன்

ராகவன் said...

அன்பு அனுஜன்யா,

இதை உயிரோசையிலேயே படித்தேன். உங்களுக்கு எழுத வேண்டும் என்றும் நினைத்திருந்தேன். இந்த பதிவை பார்த்ததும் என் பின்னூட்டம் எழுதுகிறேன்.

வண்ணத்துப்பூச்சிகளாகவே வாழ்கின்றன எப்போதும், அழகாக முடிகிறது கவிதை!

வாழ்த்துக்கள்

அன்புடன்
ராகவன்

பா.ராஜாராம் said...

அருமையாய் இருக்கு அனு!

@சுந்தர்
:-))

உயிரோடை said...

க‌விதை ந‌ல்லா இருக்கு அனுஜ‌ன்யா.

மண்குதிரை said...

uyirosaiyile vasiththeen

ingkeeyum pakirnthathiRku nanri

"உழவன்" "Uzhavan" said...

அப்ப அப்ப இப்படி புரிகிற மாதிரியும் எழுதுங்க தலைவா :-)

வால்பையன் said...

அந்தரத்தில் மிதந்த
சரக்கடித்த ஆட்களுக்கு
கால்களில் ஆயிரம்
சக்கரங்களும்
எட்டுத் திக்கும்
பறக்கும்
ரெக்கைகளும்

வேக வாகனங்களில்
மோதிச் சரிந்தாலும்
தூசு தட்டி
முறைக்கும் ஆன்மாக்கள்

பலரின் பாக்கெட்டில்
மாசமுதலிலும்
சிலரின் பாக்கெட்டில்
வாரமுதலிலும்

போதைக்காகவே
வாழ்கின்றன காகிதங்கள்!

Ashok D said...

போதைக்காகவே
வாழ்கின்றன ரம்மைபோல
சாரி நம்மைபோல
சில ஆன்மாக்கள்
ஜந்துக்கள் என்றும் போட்டுக்கலாம்

எங்க படிங்க வால்

Karthikeyan G said...

No Sir, This poem is not at your best..

Karthikeyan G said...

No Sir, This poem is not at your best..

Ashok D said...

கார்த்தி, அனுஜன்யா என்ன ’குங்குமம்’மா best கண்ணா best' கொடுக்கறதுக்கு. இப்பதான் எல்லாரும் கவித புரிய ஆரம்பிச்சுருக்குன்னு சொல்லறாங்க!.. நீ வேற...

Karthikeyan G said...

Ashok JI,
குங்குமம் மட்டும் Bestஐ கொடுக்கலாம் என்று இல்லை. யார் வேண்டுமானாலும் தனது Bestஐ கொடுக்கலாம். சட்ட சிக்கல் ஏதும் வராது. :-)

Ashok D said...

அப்போ குங்குமம் பெஸ்ட்ன்னு சொல்லுறியா கார்த்தி...

அப்ப அனுஜன்யா கவிதை குங்குமம் மாதிரி பெஸ்டா கொடுங்கன்னு சொல்லவற.. புரியுது.

ஏதோ என்னால முடிஞ்சது.


அனுஜன்யா வாத்தியாருக்கு...

மழையையும் காமத்தையும் கவிதைப்(படுத்தி)யிருக்கிறேன் படித்துவிட்டு செல்லவும்.
பிரமாதமாக இருந்தால் பிரமாதம் எனவும் சுமாராக இருந்தால் சுமார் எனவும் உங்கள் பின்னூட்டங்களை போட்டு ஆதரவு அளிக்கமாறு கேட்டுகொள்கிறேன்.

http://ashokpakkangal.blogspot.com/2009/11/blog-post.html

மகேஷ் : ரசிகன் said...

பட்டாசா இருக்கு கவிதை..

நானும் தான் பட்டாம்பூச்சி பார்த்திருக்கேன். ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...

Admin said...

நல்ல வரிகள்

Thamira said...

உங்களுக்கு ஒரு விஷயம் இருக்கிறது. பதிவுக்கு வரவும்.

Vijayashankar said...

:-)

மும்பையில் எங்கே நீங்கள்?

வெள்ளம் அபயம் தப்பிவிட்டதே?

- விஜயஷங்கர், பெங்களூரு
http://www.vijayashankar.in

anujanya said...

@ அசோக்

ஆம். வண்ணத்துப் பூச்சிகள் தான் அசோக். நன்றி.

@ ஜ்யோவ்

தரையில் மிதக்கலாம் - டாஸ்மாக்காக இருந்தால் :). நீரிலும் மிதக்கலாம். சரி சரி.

நன்றி ஜ்யோவ்.

@ நந்தா

நன்றி நந்தா.

@ ஸ்ரீமதி

ஹ்ம்ம் அது.. நன்றி ஸ்ரீ.

@ பாலாசி

நன்றி சகா.

@ தராசு

யோவ், குசும்பு தான் உமக்கு. நன்றி பாஸ்.

@ அப்துல்

அப்பா! ஏதோ சிரிப்பானாவது வந்ததே. நன்றி அப்துல்.

@ கும்க்கி

ரொம்ப அழகான, கவிதைத்துவமான பின்னூட்டம் கும்க்கி. நன்றி.

@ மஹேஷ்

அதெல்லாம் தானாகவே .. சரி சரி மஹேஷ். பேமெண்டு அனுப்பிடறேன்.

நன்றி மஹேஷ்.

@ நர்சிம்

நன்றி நர்சிம்

@ யாத்ரா

நன்றி யாத்ரா

@ ராமலக்ஷ்மி

நன்றி சகோ. நீங்க என்னதான் சொன்னாலும், அங்க இன்னும் வரலைனு கொஞ்சம் குற்ற உணர்வு இருக்கு. வரேன்.

@ தண்டோரா

நன்றி மணிஜி

@ அமித்து.அம்மா

உங்களுக்கு வேற ஆளே கிடைக்கிலியா. ஸ்ரீ சொல்றதையெல்லாம் வ.மொ. செஞ்சிகிட்டு :)))

நன்றி AA

@ பித்தன்

தேங்க்ஸ் பாஸ்.

@ நேசமித்ரன்

நன்றி நேசன்.

@ வெண்ணிற இரவுகள்

நன்றி நன்றி

@ கேபிள் சங்கர்

ஹா ஹா ஹா. அப்படியா சேதி.

@ செய்யது

நன்றி செய்யது. காட்சிக் கவிதை நல்லா இருக்கு.

@ ரௌத்ரன்

யோவ்! சரி சரி.

நன்றி ரௌத்ரன்

@ தமிழ்ப்பறவை

பரணி, எத்தனை குசும்பா உன் மனசுக்குள்? ரசித்தேன்.

நன்றி பரணி. எழுதி ரொம்ப நாளாச்சா?

@ ராகவன்

வாவ், உங்கள் முதல் வருகை? சில இடங்களில் உங்கள் பின்னூட்டங்கள் படித்து உங்கள் தளத்துக்கு வரணும்னு நினைத்து, postpone ஆகி விட்டது.

ரொம்ப நன்றி பாஸ்.

அனுஜன்யா

anujanya said...

@ ராஜாராம்

நன்றி ராஜா. சுந்தர் அப்படித்தான் :)

@ உயிரோடை

நன்றி லாவண்யா

@ விதூஷ்

ரொம்ப நன்றி வித்யா.

@ மண்குதிரை

நன்றி நண்பா.

@ உழவன்

:))). நன்றி தல.

@ வால்பையன்

ஏன்யா நீ திருந்தவே மாட்டியா? :))))

நன்றி குரு

@ தமிழன்-கறுப்பி

வாங்க தல. ரொம்ப நாட்களுக்குப் பிறகு வரீங்க. நன்றி.

@ அசோக்

யோவ்.....

@ கார்த்திகேயன் ஜி.

சரி சரி. அதற்காக இரண்டு முறை சொல்லணுமா :)

தேங்க்ஸ் கார்த்தி.

@ அசோக் & கார்த்திகேயன் ஜி

நல்லா இருக்கு உங்க விளையாட்டு.

@ அசோக்

கொஞ்சம் காலச் சிக்கல். வரேன் அசோக்.

@ மகேஷ்

வாங்க பாஸ். உங்கள் முதல் வருகை? உங்கள் தளம் எனக்குப் பிடிச்சிருக்கு.

நன்றி மகேஷ்

@ சந்ரு

உங்களுக்கும் இது முதல் வருகை இல்ல? ரொம்ப நன்றி பாஸ்.

@ ஆதி

பார்த்தேன் பார்த்தேன். நல்லா இரு.

@ விஜயஷங்கர்

உங்களுக்கும் முதல் வருகை! வாவ், நிறைய புது வரவுகள். நன்றி விஜய்.

ஆமாம்,
//மும்பையில் எங்கே நீங்கள்?

வெள்ளம் அபயம் தப்பிவிட்டதே?//

நீங்க நல்லவரா இல்ல .... உங்களுக்கு மகிழ்ச்சியா இல்ல.....

ச்சும்மா. நான் இருப்ப்பது காண்டிவிலி.

அனுஜன்யா

மகேஷ் : ரசிகன் said...

நன்றி தல...