Thursday, December 31, 2009

Paa, வேட்டைக்காரன் அனுபவங்கள் – எதைப் பற்றியும் பற்றாமலும்

இந்த முறை கிறிஸ்துமஸ் தினங்களில் உண்மையிலேயே கர்த்தரால் இரட்சிக்கப் பட்டவன் போல் உணர்ந்தேன். நம்ம அதிர்ஷ்டம் கிறிஸ்துமஸ் பெரும்பாலும் சனி, ஞாயிறுகளில் வருவதாகவே ஞாபகம். இல்லாவிட்டாலும், புதன் கிழமை என்று வாரத்தின் நடுவில் வரும். இந்த முறை வெள்ளி, அதைத் தொடர்ந்த சனி,ஞாயிறு என்று முன்பே தயாராக இருந்த உற்சாகம், மகாராஷ்டிரா அரசு திங்கட் கிழமையையும் விடுமுறை (மொஹரம்) என்று அறிவித்ததில் திடீர்னு ஐம்பது ஃபாலோவர்ஸ், நூறு பின்னூட்டம் வந்த பதிவர் போல சந்தோஷ அதிர்ச்சியில் மூழ்கித் திளைத்தேன்.



இந்தத் தினங்களில் வூட்டுக்கார அம்மாவின் சைடிலிருந்து உறவினர்கள் வரப்போவது முன்பே தெரியும் (நான் அவர்கள் வீட்டில் ஒரு வாரம் டேரா அடித்தது வேறு விஷயம்). அதனால் முறுக்கிக் கொண்டு, 'இதோ பாரு, நீ எங்க வேணும்னாலும் அவங்களக் கூட்டிக் கொண்டு போ. என்ன ஆள விடு' என்று முன்பே மனைவியிடம் டீலா நோ டீலா விளையாடினேன். சில சமயம் பூனைக்கும் காலம் வரும் தானே! சோ, வந்த விருந்தினர்களுடன் டிபன் சாப்பிட்டு, மனைவியுடன் அவர்களை முதல் வேலையாக மும்பையின் தூரப் பகுதிகளுக்கு அனுப்பி வைத்தேன். ஏற்கெனவே என் தம்பி தற்காலிக பிரம்மச்சாரி என்ற சொர்க்கத்தில் திளைத்துக் கொண்டிருந்தான். அப்புறம் என்ன! உடனே ஒரு போன் போட்டு, xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx (அடுத்த நான்கு வரிகள் தணிக்கை செய்யப்பட்டு விட்டன; எனக்கும் நற்'குடி' பட்டம் வாங்குவதில் நாட்டமில்லையா என்ன!).


மாலை சுமார் ஐந்து மணிக்கு (வானமும் அப்போது உண்மையிலேயே மப்பும் மந்தாரமுமாக இருந்தது பாஸ்) மனைவி தொலைபேசியில் "இன்று இரவு 'Paa' படம் புக் செய்கிறேன். நேரா அந்த தியேட்டருக்கு வந்துடுங்க..." நான் வழக்கம் போல் பேசுவதற்கு முன் 'ஹுக்கும்' என்பதை வழக்கம் போலவே 'சரி மேடம்' என்று புரிந்து கொண்டவள் உபரித் தகவலாக 'நாளை உங்களுக்குப் பிடித்த (தோடா..) 'வேட்டைக்காரன்' படமும் புக் செய்து விட்டேன்' என்றாள்.


ஆஹா, ஒரு ஆர்ட் ஃபிலிம்; மறுநாள் ஒரு சயின்ஸ் ஃபிக்சன் (புவி ஈர்ப்பு விசையை மீறி ஐம்பது அடி பறந்து உதைப்பது, நூறு அடி நீர்வீழ்ச்சியில் ஒரு சிறு சிராய்ப்புடன் விழுந்து எழுவது எல்லாம் அந்த வகை தானே?) என்று மகிழ்சியானேன். இரண்டு பட விமர்சனமும் எழுதலாம் என்று தமிழ் வலையுலகின் சிறந்த முற்போக்குத் தளங்களை, தேர்வு தொடங்க ஐந்து நிமிடம் முன்பு புத்தகத்தைப் புரட்டும் மாணவன் போல் அவசரமாக, ஒரு எழவும் புரியாமல் படித்துக் கொண்டேன்.


முதலில் Paa. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் 'ரொம்ப நல்லா இருக்கு'. Progeria என்னும் இளமையில் துரித முதுமை என்னும் நோயால் பீடிக்கப்படும் ஆரோ (அமிதாப்) என்னும் பன்னிரண்டு வயது சிறுவ ....தாத்தா. அவன் அம்மா (வித்யா பாலன்) ஒரு டாக்டர். அப்பா.. (அபிஷேக்) அந்த அம்மாவைக் காதலித்து, இந்தக் குழந்தை உருவானது தெரிந்ததும், தனது அரசியல் வாழ்வுக்கு இடைஞ்சல் என்று கருக்கலைப்பு செய்யச் சொன்னதால், உறவில் முறிவு ஏற்பட்டு பிரிந்து சென்றவர். முதலில் ஒரு chance மீட்டிங். அப்பாவும் மகனும். தாம் யாரென்று அறியாமலே. பிறகு hate-love என்று அவர்கள் உறவு மலர்ந்து, வளர்ந்து...அதற்குள் ஆரோவின் உடல்நிலை மோசமாகி ... இறுதியில் தன் அம்மாவையும், அப்பாவையும் சேர்த்து வைக்கிறான். அமிதாப் இரண்டாவது இன்னிங்க்ஸில் தூள் கிளப்புகிறார். நம்ம ஊர் தாத்தாக்கள் கவனிப்பார்களா? அபிஷேக் மிக மிக நன்றாக, வழமையான அலட்டல் இல்லாத நடிப்பில் கவர்கிறார். வித்யா பாலன் திரையில் வரும்போதெல்லாம் நான் கைக்குட்டையால் உதட்டோரத்தைத் துடைத்துக் கொண்டே 'வாவ்' என்றேன். என் மனைவி முறைத்த போது 'வாவ், எவ்வளவு அழகான புடவை! இந்த மாதிரி நீயும் வாங்கிக்கோ' என்று சமாளித்தேன். இவர் அந்தக் கால காஞ்சனா என்னும் நடிகைக்கு ஏதாவது உறவா? (வேலன், ஜ்யோவ் போன்ற சென்ற தலைமுறை ஆட்களிடம் கேட்க வேண்டும்).


திரைக்கதை மிக மிக மெதுவாக, அதேசமயம் அதீத சோகமில்லாமல் நகர்கிறது. இயக்குனர் பால்கி சீனி கம் படத்தில் செய்த அல்லது செய்யத் தவறிய தவறுகள்/விஷயங்களை மீண்டும் செய்கிறார். இந்தக் காலத்துக்கு கொஞ்சமாவது திரைக்கதை வேகமாக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் ஒரு ட்விஸ்ட். ம்ஹும். முடியாதுய்யா என்கிறார். சரி. அவர் படம். இசை ராஜா. அவருடைய பழைய பாட்டுக்களை புது வாத்தியங்களுடன், A R ரெஹமானுக்குத் தெரியாமல் அவருடைய ரெகார்டிங் தியேட்டரில் ஒலிப்பதிவு செய்த பாடல்கள் போல் துல்லியம். இசைக்கு யாராவது சிரிக்கிறார்களா என்று பார்த்தேன். நிச்சயமாக இல்லை. சொல்லப் போனால் கும் சும் கும் பாட்டின் போது நிறைய மலர்ந்த முகங்கள், தலை, கால் ஆட்டிக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது.


அடுத்த நாள் வேட்டைக்காரன். விஜய் படம் பார்க்க வந்தவர்களை அவ்வளவு பெரிய மாலிலும் சுலபத்தில் அடையாளம் காணலாம். நூறு சதவீதம் தமிழர்கள். அதற்கான நடை, உடை, பாவனை. நிச்சயமாக இளைஞர்கள்/ஞிகள். நிறைய உற்சாகப் பந்துகளாகச் சிறுவர்கள். எனக்குப் பக்கத்து சீட்டில் ஒரு அதி உற்சாக விஜய் ரசிகனான சிறுவன். பின்புற வரிசை முழுதும் 20-25 வயது விஜய் ரசிகர்கள். மும்பை மல்டிப்ளக்ஸ்களில் விசில் சத்தம் வெகு அபூர்வம். எனக்கும், என் தம்பிக்கும் ஆனந்தமாக இருந்தது. படம் எனக்கு கில்லி அளவு revetting stuff என்று இல்லா விட்டாலும், ஒரு சராசரி விஜய் படம். எல்லாம் இருக்கிறது. எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. நீங்கள் போக்கிரி ரசித்தீர்களா? திருப்பாச்சி ரசித்தீர்களா? அயன்? ஆதவன்? பில்லா? சாமி? தூள்? சண்டைக் கோழி? அப்புறம் என்னய்யா இதுல மட்டும் நொட்டை சொல்லிக்கிட்டு? நான் ஒரு அறிவு ஜீவி. கலைப்படங்கள் மட்டும் தான் பார்ப்பேன்; ரசிப்பேன் என்பவர்கள் பொதுவாக மசாலா படங்களை விமர்சிப்பார்களே தவிர, விஜய் படங்களுக்கு மட்டும் முதல் ஷோ பார்த்து விட்டு 'ச்சே, என்ன மட்டமான படம்' என்று விமர்சனம் எழுதுவதில்லை. லாஜிக் பார்க்காமல், அடிப்படை விஞ்ஞான விதிகள் பொருந்துமா என்று யோசிக்காமல் ஒரு இரண்டரை மணி நேரம் அக்கடா என்று உங்கள் கனவை இன்னொருவர் மூலம் outsource செய்ய வேண்டுமென்றால் இந்தப் படங்கள் எல்லாமே ஒன்று தான். அதில் விஜய் படங்களை மட்டும் ரவுண்டு கட்டி விமர்சிப்பது ஏன்? அவருடைய பன்ச் டயலாக் செய்யும் உபத்திரவங்களா?


ஆர்னால்டு தன் வலது புஜத்தில் மட்டும் ஒரு போபோர்ஸ் சைஸ் பீரங்கியுடன் ஓடி ஓடி சுடுவதை வாய் பிளந்து பார்க்கிறோம். அதே விஜய் செய்தால் நக்கல். போலவே ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் வகையறாக்கள். என்ன, அவர்கள் முதலிலேயே 'இதோ பாருப்பா, எங்க ஹீரோ இந்த மாதிரி கோடியில் ஒன்றாக விசித்திர பலத்துடன் விளங்குவார். கண்டுக்காதீங்க' என்ற ரீதியில் ஒரு அறிமுகம் செய்து விடுவார்கள். அப்போது சுற்றிய பூக்கூடையை, பார்ட் ஒன்று முதல் பார்ட் மூன்று வரை கேள்வி கேட்காமல் பார்த்து விட்டு கை தட்டுவோம். கொஞ்சம் கேபிள் போல விஷயம் தெரிந்தவர்கள் 'மேகிங்' (இன்னொரு ஜல்லி) நல்லா இருக்கு என்பார்கள். அது பற்றி ஒன்றும் பிரக்ஞை இல்லாத பெரும்பாலோருக்கு அவர்கள் எதிர்பார்த்து வரும், ஏதோ ஒன்று விஜய், விஷால் படங்களிலேயே கிடைக்கிறது. விமர்சனம் என்ற பெயரில் இவ்வளவு முக்கியத்துவம் எதற்கு என்று புரியவில்லை.


ஆனால், ஒரு விஷயம். தொலைக்காட்சிகளிலும் TRP ஏற வேண்டுமென்றால் அது திரைப்படம் தொடர்பானதாக இருக்க வேண்டும். நம் பதிவுலகிலும் அப்படியே. ஹிட்ஸ், தொடர்பவர்கள் இத்யாதிகள் வேண்டுமென்றால் திரைப்படம் பற்றி எழுதுவது மிக மிக அவசியம். இதை நான் ஏதோ ஒரு உச்சாணிக் கொம்பில் இருந்து கொண்டு 'ச்சே, என்ன ஜனங்கள். இப்படி சினிமா வெறி பிடித்து அலைகிறார்கள்' என்று அங்கலாய்க்கவில்லை. சினிமா என்னும் ஊடகத்தின் கவர்ச்சி சக்தியைப் புரிந்ததால் சொல்கிறேன். உதாரணத்திற்கு இந்த இடுகைக்கு, இதற்கு முந்தைய குஷ்வந்த் சிங்க் இடுகையை விட குறைந்தது இரு மடங்கு ஹிட்ஸ் வரும். அதில் ஒன்றும் தவறோ, ஆச்சரியமோ இல்லை. It is a natural process, which we need to understand. இப்போது யோசித்தால், இந்த இடுகைக்கு 'நான் ஏன் பிரபலம் இல்லை' என்றும் தலைப்பு வைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.


இந்தச் சிற்றுரையை முடிக்கு முன் ஒரு முக்கிய தகவல். நான் இன்னொரு படமும் பார்த்தேன். அதைப் பற்றியும் எழுதாமல் இருக்க வேண்டுமென்றால் .....நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். என்னுடைய சோம்பல் ஒன்றே போதும்.

இது எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம்... ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். Have a great, rocking year...all of you.

61 comments:

ஆர்வா said...

விஜய் பற்றிய உங்கள் பார்வை புதிதாக இருக்கிறது. ரசித்தேன்

na.jothi said...

நீங்க சொல்ற விஷயங்களை கேட்கறதே புதுசா இருக்கும் பொழுது எங்க பின்னூட்டம் போடறது

இராஜ ப்ரியன் said...

நல்ல பதிவு
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும் .......

sathishsangkavi.blogspot.com said...

நல்ல விமர்ச்சனம்........

புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே......

sathishsangkavi.blogspot.com said...

நல்ல விமர்ச்சனம்........

புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே......

பித்தன் said...

ரசித்தேன். Happy New Year 2010

ரமேஷ் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Anonymous said...

அண்ணன் அர்னால்ட்டுக்கும் விஜய்க்கும் ஒப்பீடு. ஒகே. கார்க்கியோட ரொம்பநேரம் பேசறீங்க போலிருக்கு :)

pudugaithendral said...

புத்தாண்டு வாழ்த்து சொல்ல வந்தேங்க.

Cable சங்கர் said...

தலைவரே.. கார்கிகிட்ட எவ்வளவு வாங்கினீங்க..:))) ஹாப்பி நியூ இயர்..

அமிர்தவர்ஷினி அம்மா said...

பின்புற வரிசை முழுதும் 20-25 வயது விஜய் ரசிகர்கள் //

இவ்ளோ சுத்தி வளைக்காம சிம்ப்பிளா உங்கள மாதிரி யூத் வரிசைன்னு சொல்லி இருக்கலாம் ;))

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

எனக்கும் நற்'குடி' பட்டம் வாங்குவதில் நாட்டமில்லையா என்ன! ;)

சைக்கிள் கேப் :))))

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

{நேரா அந்த தியேட்டருக்கு வந்துடுங்க..." நான் வழக்கம் போல் பேசுவதற்கு முன் 'ஹுக்கும்' என்பதை வழக்கம் போலவே 'சரி மேடம்' என்று புரிந்து கொண்டவள்}

ஃபேமிலி சீக்ரெட்டெல்லாம் வெளியில் சொல்லக்கூடாது மிஸ்டர் அனுஜன்யா...

Unknown said...

Paa படத்தில் எனக்கு ரொம்ப பிடித்த நடிப்பு வித்யா பாலன்.அற்புதமாக செய்திருக்கிறார்.

ஸ்கூல் பெண் குழந்தைப் பாத்திரம் கொஞ்சம் மிகை.

//கும் சும் கும் பாட்டின் போது நிறைய மலர்ந்த முகங்கள்//

பாட்டு எதிர்பார்க்காத சமயத்தில் திடீ்ரென வருவதால் தாக்கம் ஜாஸ்தி.

அமிதாப் கம்புயூட்டரில் பிரவுஸ் செய்யும் ஒரு காட்சியில் மெலிதான மேஸ்ட்ரோவின் பின்னணி இசை absolutely stunning.

//வித்யா பாலன் திரையில் வரும்போதெல்லாம் நான் கைக்குட்டையால் உதட்டோரத்தைத் துடைத்துக் கொண்டே 'வாவ்' என்றேன்//

காரணத்தை உளவியல் ரீதியில் பார்த்தால் பட இடங்களில் வித்யா ஒரு மாதிரி கலைந்துப் போன உடைகளில்(informal)தோற்றமளிப்பது
அடுத்து உட்காரும் போஸ்கள்.


// நீங்கள் போக்கிரி ரசித்தீர்களா? திருப்பாச்சி ரசித்தீர்களா? அயன்? ஆதவன்? பில்லா? சாமி? தூள்? சண்டைக் கோழி? அப்புறம் என்னய்யா இதுல மட்டும் நொட்டை சொல்லிக்கிட்டு? நான் ஒரு அறிவு ஜீவி. கலைப்படங்கள் மட்டும் தான் பார்ப்பேன்;//

அது சரிங்கண்ணா!(விஜய் ஸ்டைல்?)
புளிச்சுப் போனதய புளிக்க வைக்கக்கூடாது.அரைச்ச மாவையே அரைக்க கூடாது.கமல் மாதிரி டிராக் மாறனும்.

கார்க்கிபவா said...

/ நீங்கள் போக்கிரி ரசித்தீர்களா? திருப்பாச்சி ரசித்தீர்களா? அயன்? ஆதவன்? பில்லா? சாமி? தூள்? சண்டைக் கோழி? அப்புறம் என்னய்யா இதுல மட்டும் நொட்டை சொல்லிக்கிட்டு? //

நெத்தியடி..அட எனக்கில்லை தல..

இதைத்தான் நான் பதிவுலும் என்னுடன் பேசுபவரிடத்திலும் தொடர்ந்து சொல்லி வருகிறேன்..விஜய் படத்திற்கெல்லாம் விமர்சனமே தேவையில்லை. எனக்கு ஒரு ரசிகனாக விஜ்யிடம் ஆயிரம் எதிர்பார்ப்புகள் இருக்கலாம். இன்னும் கொஞ்சம் அதிகமாக கேட்கலாம். அதனால் வேட்டைக்காரன் பிடிக்கவில்லை என்று சொல்கிறேன்.

ஆனால் இதுதான் விஜய் படம் என்று ஒரு லேபிள் இருக்கிறது. அதற்கு சற்றும் குறையாமல் இருக்குஅப்புறம் ஏன் கொடுமையென்று சொல்றாங்கனு தெரியல.. இதுல கொடுமை என்னவென்றால் படம் சென்னையில் கலெக்‌ஷனில் பின்னுகிறது. சத்யமில் மூன்றாவது வாராமக காலையில் 8 மணிக்கு ஸ்பெஷல் போடுகிறார்கள்.ஐனாக்ஸீல் ஆறு காட்சிகளாக இருந்ததை 8 காட்சிகளாக ஆக்கியிருக்கிறார்கள். மாயாஜாலில் இந்த வார இறுதியிலும் 20 காட்சிகள் போடுகிறார்கள். என் அலுவலகம் அருகில் இருக்கும் திருவான்மியுர் தியாகராஜாவில் மாலை காட்சிகளில் 500 பேருக்கும் குறையாமல் வருகிறார்கள். இன்னும் என்ன வேண்டுமென்று தெரியவில்லை? திரையுலகில் இருக்கும் பதிவர்கள் சன்னின் மீது இருக்கும் கடுப்பில் படம் ஃப்ளாப் என்று சொல்லி வ்ருகிறார்கள்.

5000 பேர் படிக்கும் பதிவில் சொல்வதால் என்ன ஆகப் போகிறது. வேட்டைக்காரனின் எழுந்த விஜய் சுறாவில் சீறுவார்.

இத்துடன் என்னுடைய சிறிய உரையையும்.....:))

கமலேஷ் said...

அழகான நல்ல விமர்சனம் ....இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

Thamira said...

வித்யா பாலன் திரையில் வரும்போதெல்லாம் நான் கைக்குட்டையால் உதட்டோரத்தைத் துடைத்துக் கொண்டே 'வாவ்' என்றேன். என் மனைவி முறைத்த போது 'வாவ், எவ்வளவு அழகான புடவை! இந்த மாதிரி நீயும் வாங்கிக்கோ' என்று சமாளித்தேன்.//

என்னா ரசனைய்யா உமது.? :-))

ஒரு விவேக் ஜோக்கில் 'அடிங்க.. ஆனா கையை கழுவிட்டு அடிங்க..' என்று சொல்வார்.. அதுதான் நியாபகம் வருது, நீங்கள் விஜய் படங்கள் பற்றிச்சொல்லும்போது.!

கமர்ஷியலுக்கெல்லாம் இங்கே யாரும் எதிரிகள் இல்லை. பறந்து பறந்து அடிக்கட்டும், குத்து டான்ஸ் ஆடட்டும், பிஜிஎம் அதிர பஞ்ச் டயலாக் கூட பேசட்டும், ப்ளேன்லயிருந்து குதிக்கட்டும்.. யாரு வேணான்னு சொன்னது.. படம் முடிஞ்சபின்னாடி ஈர சாணியை மூஞ்சியில் அப்பிய எஃபக்டை தராதீர்கள் என்று மட்டும்தான் கெஞ்சுகிறோம். நீங்கள் சொன்ன லிஸ்டிலிருந்தே கூட உதாரணம் சொல்லமுடியும். சாமி, தூள், திருப்பாச்சி.. இவையெல்லாம்தான் எங்கள் சாய்ஸ். இவற்றோடு வேட்டைக்காரனை ஒப்பிடாதீர்கள். ஏன் லிஸ்ட்ல அப்படியே குருவி, வில்லுன்னு சேர்க்கிறதுதானே.. பயமா இருக்குதுல்ல.!

என்னா ரசனைய்யா உமது.? :-((

Thamira said...

Car key Internationals Ltd -ன் பாக்ஸ் ஆஃபீஸ் ரிப்போர்ட் இங்கேயும் இருக்குது போலயிருக்கே.! ஹிஹி..

நந்தாகுமாரன் said...

ஸ்வாரஸ்யமான ஹாஸ்யம் ... ரசித்தேன் ... :)

சிவக்குமரன் said...

விஜய்? ம்...ம் ....

ரௌத்ரன் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் அனுஜன்யா

:)))

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

மொக்கைப் படம்னு தெரிஞ்சுகிட்டே முதல் நாள் முதல் ஷோ பாக்க வேண்டியது. உடனே படம் மொக்கைன்னு விமர்சனம் :) எல்லாம் தெரிஞ்சதுதானே தாத்தா :)

Ashok D said...

சூடான சுவையான ஜாங்கிரி.. பதிவ தான் சொன்னேன் ஜி..
(பி.கு. ஜாங்கிரி எனக்கு ரொ பிடிக்கும்)

காஞ்சனா(பாட்டிய) உங்களுக்கும் பிடிக்குமா.. :)

கார்க்கிபவா said...

இப்பதான் பார்த்தேன்.. அஞ்சாறு பின்னூட்டங்களில் என் பேரு.. வலையுலகில் பல விஜய் ரசிகர்கள் இருக்கையில் என்னை மட்டுமே லேபிள் குத்துவது எனக்கு சந்தோஷம்தான்,

ஆனா நல்லதா தல? கொஞ்சம் சொல்லுங்களேன் :)))

RaGhaV said...

மசாலா படங்களுக்கு யாரும் எதிரியில்ல தல, படத்தில நல்ல திரைகதையதான் எதிர் பார்க்கிறோம்..

அதாவது அவங்க சீரியஸ்னு சொல்ற காட்சிகள்ல, பார்க்கிறவங்க சிரிக்காம இருக்கனும்..
எரிச்சல கிளப்பகூடாது..

நீங்க சொல்ற போக்கிரி, திருப்பாச்சி,அயன்,ஆதவன்,பில்லா,சாமி,தூள், சண்டைக் கோழி எல்லாம் நல்ல மசாலா படங்கள்.. இந்த படங்கள்ல அதிகபட்சமாக நான்கு முதல் ஐந்து ஸீன்கள் சரியா இருக்காது..

மோசமான மசாலா படங்கள்ன்னு சொன்ன குருவி, வில்லு, அழகிய தமிழ்மகன், ரெட், ஆதி, கந்தசாமி, திருப்பதி,அருள்
இந்த படங்கள்ல அதிகபட்சம் நான்கு முதல் ஐந்து ஸீன்கள் மட்டுமே சரியா இருக்கும்..

இதுல வேட்டைகாரன் இரண்டாவது ரகம்.. :-(

அருமையான மசாலா படங்களுக்கு திரைகதை, ஒளிபதிவு, கலை, நடனம், இயக்கம், Stunts, Editing, Background Music எல்லாமே பொருந்தி வரனும்.. நிச்சயமா இந்த படத்துல அது இல்ல..

தமிழ் சினிமாவோட தனித்துவமே மசாலா படங்கள் தான்.. வேற எந்த சினிமா உலகமும் இந்த அளவிற்கு சிறந்த மசாலா படங்கள் கொடுத்தே கிடையாது.. அதுலேயே நாம தவறு செய்த எப்படி..??

இப்ப இருக்கிற காலகட்டதுல விஜய் மட்டும்தான் சரியா மசாலா படத்துக்கு பொருந்துராரு.. அவரே இப்படி தப்பு பன்னா எப்படி..??

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அனுஜன்யா.. :-))

மணிகண்டன் said...

பா திரைக்கதை நல்ல வேகமா தான போகுது :)- சும்மா நொள்ளை சொல்லாதீங்க !

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பரிசல்காரன் said...

//(புவி ஈர்ப்பு விசையை மீறி ஐம்பது அடி பறந்து உதைப்பது, நூறு அடி நீர்வீழ்ச்சியில் ஒரு சிறு சிராய்ப்புடன் விழுந்து எழுவது எல்லாம் அந்த வகை தானே?)//

வாட் எ கோ ___? என்ன சொல்றதுன்னு தெரியல.

இந்தப்படம் பார்க்க நான் போனப்ப அடுத்த நாள் என் மகளுக்கு சயின்ஸ் எக்ஸாம் அவர்கிட்ட இதத்தான் நான் சொன்னேன்!

thamizhparavai said...

/ இவர் அந்தக் கால காஞ்சனா என்னும் நடிகைக்கு ஏதாவது உறவா? //
என்னடா...எங்கேயோ பதிஞ்ச முகமா இருக்கேன்னு பார்த்தேன்.. சொன்னது சரிதான். காஞ்சனா ஜாடை வருகிறது...
சுவாரஸ்யமான விமர்சனங்கள்...
புத்தாண்டு வாழ்த்துக்கள் அனு சார்...

பரிசல்காரன் said...

விஜய் பற்றிய உங்கள் பார்வை 100க்கு 100 சரி.

அதனால்தான் பலரும் நல்லாயில்லை என்றெழுதியபோது சிலர் மட்டும் இதைப் புரிந்துகொண்டு நல்லாத்தானேய்யா இருக்கு? என்று கேட்டார்கள்!

Vidhoosh said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
(இதில் அதிகம் சினிமா பற்றியது என்பதால் எஸ்கேப்)

கார்க்கிபவா said...

//இப்ப இருக்கிற காலகட்டதுல விஜய் மட்டும்தான் சரியா மசாலா படத்துக்கு பொருந்துராரு.. அவரே இப்படி தப்பு பன்னா எப்படி..?//
இதுக்கு பெரிய்ய்ய பதிலா ஒரு பதிவு டிராஃப்டுல இருக்கு. தூசு தட்ட்றேன்..

அதுக்கு முன்னால ராகவுக்கு ஒரு ப்ளூ சட்டை பார்சேல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

தீபா said...

Paa-கலைப்படம்னு சொன்னது படம் மெதுவா போனதனாலயா? Speed ok.

விஜய் பத்தின உங்கள் கருத்தே என்னுடையதும். எதோ மத்த கமர்சியல் படம் எல்லாம் செம லாஜிக்கோட இருக்கற மாதிரி. இங்க படம் நல்லா ஓடுது. இருந்தாலும் நீங்க கார்க்கி கிட்ட இருந்த எதோ பெரிசா எதிர்பாக்கறீங்கன்னு தோணுது.

அ.மு.செய்யது said...

என்னவோ போங்க..!! நீங்க மட்டும் போயி எல்லா படமும் பாத்துட்டு வந்துர்றீங்க..!!

புனேவுல தமிழ்ப்படமே ரிலீஸ் ஆவமாட்டேங்குது தலைவரே !! அப்படியே ரிலீஸ் ஆனாலும் ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்றதுக்குள்ள படத்த எடுத்துட்றாய்ங்க.!

வழக்கம் போலவே பதிவு செம்ம சிரிப்பு வெடி !!! அதிரடி !!! ( தர்க்க ரீதியாக சொல்ல வேண்டுமென்றால் )

மண்குதிரை said...

nice sir same to u

கார்க்கிபவா said...

தீபா எந்த ஊருன்னு சொல்லுங்க. அப்பவாது கேபிளுக்கு புரியட்டும் :))

அனு சார், இஹ்டுக்கெல்லாம் ரேட்டு இருக்கட்டும்.. சைடுபார்ல, பிடித்தமான தளங்களில் என் பேரும் வர எவ்ளோ ஆகும்ன்னு சொல்லுங்க?

உண்மைத்தமிழன் said...

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத முறையில் தம்பி கார்க்கி இளையதளபதிக்கு கொடி பிடிக்கிறார்..!

பல ஊர்களில் வசூல் நாள்தோறும் படியிறங்கிக் கொண்டிருக்கிறது..! உதயம் தியேட்டர் காத்தாடுகிறது..! வசூலிலும், பெயரிலும் இதுவொரு சாதாரணத் திரைப்படம் போலத்தான்..!

தீபா said...

Karki,
In London Vettaikaran is a hit movie

நேசமித்ரன் said...

பா...விமர்சனம் நல்லா இருக்கு தலைவரே

Wishes- நன்றி..

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

மேவி... said...

கவிதை நல்ல சார்

(ஒ இது கவிதை இல்லையா ...சாரி....வழக்கமாய் உங்க பிளாக் ல கவிதை படித்தே பழக்கம் ஆகிடுச்சா ..அதான் கண்டுகாதிங்க ...)


" ஐம்பது ஃபாலோவர்ஸ், நூறு பின்னூட்டம் வந்த பதிவர் போல சந்தோஷ அதிர்ச்சியில் மூழ்கித் திளைத்தேன்"

இந்த ஆசை உங்களிடமும் உள்ளதா ????? ரைட்டு

வித்யா பாலன்யை பார்த்த ........அங்கிள் இதெல்லாம் ரொம்ப ஓவர்

பதிவு நல்ல இருக்கு பாஸ்

நர்சிம் said...

நம்ம ரெண்டு பேருக்கும் வேவ் லெந்த் சமாச்சாரம் ஒரே மாதிரின்னு சொல்வீங்க..

காஞ்சனா மேட்டர்ல அது கன்ஃபார்ம் தலைவா.. காதலிக்க நேரமில்லை ஒரிஜினல் டிவிடி கதறும் அவ்வப்பொழுது. ஹூம்ம்ம்

நர்சிம் said...

//Deepa said...
Karki,
In London Vettaikaran is a hit movie
//

லண்டன்ல இருந்துட்டு செய்வினை செயப்பாட்டு வினை மறக்காம இருக்கிறது ஒரு ஆச்சர்யம் மேடம். ஆதிக்கு இட்ட பின்னூட்டமும் சூப்பர்.

creativemani said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்.. நன்றிகளும்.. எனது பதிவில் உங்கள் வாழ்த்துகளுக்கும் ஆசிகளுக்கும்..

Anonymous said...

அய்யா ஒங்களுக்கே இது அடுக்குமா ... விஜய் எங்க அர்னோல்ட் எங்க... ஏணி வெச்ச கூட விஜய்க்கு பக்கதுல அர்நோல்ட்ல வர முடியுமா..

தீபா said...

நர்சிம் சார் நன்றி ஹை. தன்யையானேன்.:-)

மாதவராஜ் said...

ரசித்தேன். புத்தாண்டு வாழ்த்துக்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Unknown said...

இந்த இடுகை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு :)))) புத்தாண்டு நல்வாழ்த்துகள் அண்ணா. :))

ஜெயந்தி said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

பா.ராஜாராம் said...

சந்தேகமே இல்லை.

யூத்!

நீங்கதான் பாஸ்!

அறுபத்தைந்து வயதில் என்னா மாதிரி கம்பு சுத்துறீங்க!

(ஆமா, இதெல்லாம் எங்கே கத்துக்கிட்டீங்க?பதினேழு வயசுல கையெல்லாம் நடுங்குது!)

"உழவன்" "Uzhavan" said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் :-)

வெற்றி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.
விஜயை பற்றிய உங்கள் கணிப்பு மிகச்சரி!
படம் இங்கேயும் ஹிட்தான் தல!!

வெற்றி said...

சொல்ல மறந்துட்டேன்..லக்கி மாதிரி நீங்க பின்னால ஜகா வாங்கிடாதீங்க.ஒட்ட வச்சது ஒட்டாம வச்சதுன்னு..

//கார்க்கி said...
வேட்டைக்காரனின் எழுந்த விஜய் சுறாவில் சீறுவார்.//

இளைய தளபதியின் போர்வாள் கார்க்கி வாழ்க!!

புளியங்குடி said...

வசூல் வகையில் வேட்டைக்காரன் விஜயின் இன்னொரு வெற்றிப்படம்தான். சுறா என்ற பேரே அதுவும் இன்னொரு வழக்கமான படம்தான் என்பதைச் சொல்லிவிட்டது. இன்னும் எத்தனை படம் வந்தாலும், விஜய்க்கு இதுதான் ரூட்.

Karthik said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வேட்டைக்காரன் பத்தி ஒண்ணும் சொல்றதுக்கில்ல. :) :)

ராமலக்ஷ்மி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வித்யா பாலன் - காஞ்சனா அழகான ஒப்பீடு. சாந்தி நிலையம், சிவந்த மண் காஞ்சனா நினைவுக்கு வருகிறார்.

இரவுப்பறவை said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்...
வேட்டைக்காரன்....நீங்களா???

Bee'morgan said...

அண்ணா, உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் :)

anujanya said...

@ கவிதை காதலன்

நன்றி பாஸ். முதல் வருகை?

@ ஜோதி

அப்படியா! எங்க வேணுமானாலும் போடுங்க :)
நன்றி ஜோதி

@ இராஜ பிரியன்

நன்றி தல. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

@ சங்கவி

நன்றி நன்றி (இரண்டு பின்னூட்டம்ல). உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

@ பித்தன்

நன்றி பாஸ். உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

@ ரமேஷ்

நன்றி ரமேஷ். உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

@ சின்ன அம்மிணி

உங்களுக்கு ஓகே. சில பேருக்கு அருவருக்கத் தக்க வகையில் கோபம் :(

கார்க்கி : யார் அவர்?

நன்றி CA

@ புதுகைத் தென்றல்

ரொம்ப நாட்கள் கழித்து வரீங்க. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். நன்றி.

@ கேபிள்

யோவ்...சரி சரி உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

@ அமித்து.அம்மா

சொல்லலாம்..தற்பெருமைன்னு இந்த உலகம் பழிக்குமே...
சைக்கிள் கேப் - நீங்க பூடகமான கவிதைகள் எழுதலாம். வெகு நுட்பமான பார்வை :)

நன்றி AA. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

@ அறிவன்

நாலு பேருக்கு நாம தடுக்கி விழுவது தெரிந்தால் நல்லதாச்சே என்று தான் பாஸ் :)

நன்றி அறிவன்.

@ ரவிஷங்கர்

நன்றி. விஜய் - நீங்க சொன்னத ரொம்ப ரசிச்சேங்க்னா :)

@ கார்க்கி

உன் ஒருத்தனால எனக்கு வர கஷ்டம் இருக்கு பாரு .....

சரி ..நன்றி

@ கமலேஷ்

நன்றி கமலேஷ். உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

@ ஆதி

ரசனை - நீங்க பாவ்னா ரசிகருல்ல! ஹையோ ஹையோ..

மசாலாப் படம்னு ஆன அப்புறம் என்னய்யா நுட்பம்? உழக்குல என்ன கிழக்கு மேற்கு?

@ ஆதி (மீண்டும்)

கரெக்டு.

@ நந்தா

நன்றி நந்தா

@ சிவக்குமரன்

அவ்ளாவ் கோவமா பாஸ்? லூஸ்ல விடுங்க :)

@ ரௌத்ரன்

வாங்க கவிஞர். உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

அனுஜன்யா

anujanya said...

@ ஜ்யோவ்

ஹா ஹா. 'தாத்தா' - :)))))

@ அசோக்

நன்றி அசோக். காஞ்சனா எல்லோருக்கும் பிடிக்கும் :)

@ கார்க்கி

உன்ன மட்டும் குத்தினா பரவாயில்ல. என்னையும் சேர்த்து குத்துறாங்க..ச்சே.
பேசாம கவிதை எழுத வேண்டியது தான்.

@ ராகவ்

உங்க பின்னூட்டம் எனக்குப் பிடிச்சிருக்கு. நல்லா அலசறீங்க. ஆனாலும், அஞ்சு ஸீன் தான் மட்டமான லாஜிக். பத்த படி ஓகே. இதுல பத்து ஸீன் மட்டரகம்னு சொல்றது ஓகேயா? ஆதிக்கு சொன்ன பதில் தான். இருந்தாலும், நீங்கள் சொல்வதுடன் பெரும்பாலும் ஒப்புக் கொள்கிறேன்.

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

@ மணிகண்டன்

பாஸ், நீங்க நடுத்தர வயது குடும்பஸ்தர். உங்களுக்கு இந்த ஸ்பீட் போதும். எங்கள மாதிரி யூத்..... சரி சரி.

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

@ பரிசல்

பொண்ணுக்கு பாடம் சொல்லிக் கொடுக்காம படம் பார்த்துட்டு, explanation வேறயா?

@ தமிழ்ப்பறவை

நன்றி பரணி. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

@ பரிசல் (மீண்டும்)

விஜய் - நமக்கெல்லாம் விரைவில் ஆட்டோ வரும் போல இருக்கு :((

@ விதூஷ்

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். உங்க பாலிசி தான் கரெக்ட் போல இருக்கு.
நன்றி விதூஷ்.

@ கார்க்கி (திரும்பத் திரும்ப)

ரொம்ப அவசியம்....

@ தீபா

Paa - Speed - மணிகண்டனுக்கு சொன்ன பதில உங்களுக்குச் சொல்ல முடியுமா? :)

விஜய் - ஏதோ லண்டன்ல இருக்கீங்க. தப்பிச்சீங்க. இல்லாட்டி ஆட்டோ வரும்.

@ செய்யது

மும்பை வந்து பாக்குறது. நன்றி செய்யது.

@ மண்குதிரை

நன்றி பாஸ்.

@ கார்க்கி (ஐயோ)

என்னது சைடு பாரா? அதுக்கெல்லாம்...எலக்கியம்னு பேரு...

@ உண்மைத் தமிழன்

கார்க்கியோட அப்படி என்ன சண்டை உங்களுக்கு தல? இல்ல, சும்மா வினவுகிறேன் :))

நன்றி தல.

@ தீபா

Thanks for the info.

@ நேசமித்ரன்

வாங்க பாசு. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். நன்றி.

@ மேவீ

யோவ்.. ரொம்ப நாள் கழிச்சு வர. பரவாயில்ல. நன்றி மேவீ.

@ அத்திரி

நன்றி பாசு. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

@ நர்சிம்

காஞ்சனா... ஹ்ம்ம். அப்படியே தீபா மூலம் நம்ம ஆதியிடம் நக்கலா? லேசுப்பட்ட ஆளா நீரு!

@ அன்புடன் மணி

வாங்க மணி. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

@ satturmaikan

அது அது...நன்றி பாஸ்.

@ தீபா

ஹ்ம்ம்.

@ மாதவராஜ்

வாங்க மாதவ். நன்றி. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

அனுஜன்யா

anujanya said...

@ T V Radhakrishnan

நன்றி TVR. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

@ ஸ்ரீமதி

வாங்க மே'ம். உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் :)
நன்றி ஸ்ரீ.

@ ஜெயந்தி

நன்றி. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். உங்கள் 'கோயம்புத்தூர் பயணம்' நல்ல சுவாரஸ்ய இடுகை.

@ ராஜாராம்

அடப்பாவி... சரி சரி உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். நன்றி ராஜா.

@ உழவன்

வாங்க பாசு. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். உங்கள் கவிதை நவீன விருட்சத்தில் வந்ததற்கு வாழ்த்துகள். Font கொஞ்சம் பெருசா இருந்தால் சிறப்பாக இருக்கும். நன்றி.

@ வெற்றி

வாங்க பாஸ். உங்க தளத்திற்கு வந்தேன். தூள் கெளப்புறீங்க. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். நன்றி.

@ புளியங்குடி

வாங்க தல. உங்க முதல் வருகை? சித்த மருத்துவம், சிறு பத்திரிகை, சேவை என்று பரிமளிக்கிறீர்கள். வாழ்த்துகள். நன்றி பாஸ்.

@ கார்த்திக்

வா கார்த்திக். உனக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். விஜய்..லூஸ்ல விடு. அசலும் வட்டியுமா திருப்பிக் கொடுக்காமலா இருப்ப :)

@ ராமலக்ஷ்மி

வாங்க சகோ. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
காஞ்சனா...எஸ். எஸ்... நன்றி

@ சௌந்தரராஜன் ராஜேந்திரன்

உங்க சமீப கவிதை நல்லா இருக்கு சௌந்தர். இரவுப்பறவை என்றால் உடனே புரியும். இப்படி திடீர்னு பெயரை மாத்தினால்...

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். நான் நானேதான் :)

@ பாலா

வா பாலா. எப்படி இருக்க? புத்தாண்டு வாழ்த்துகள்.

@ எல்லோருக்கும்

நான் விஜய் ரசிகன் என்று எண்ணிக்கொண்டு சில காட்டமான மின்னஞ்சல்களும் ஒரு அருவருப்பான உத்தியுடன் வந்த பின்னூட்டமும் எனக்கு அதிர்ச்சி தந்தன. இவ்வளவு வக்கிர புத்தியுடன் இணையத்தில் உலாவும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதைப் பற்றி என்ன சொல்ல...

அனுஜன்யா

இரவுப்பறவை said...

மன்னிக்கவும் வேற ஒரு பிரச்சினை அதான்...
இப்போ பெயரை இரவுப்பறவை அப்படினே மாத்திட்டேங்க..
//உங்க சமீப கவிதை நல்லா இருக்கு சௌந்தர். //
ரொம்ப சந்தோசமா இருக்குங்க.. நன்றி...

anujanya said...

@ இரவுப்பறவை

நன்றி சௌந்தர்.

அனுஜன்யா