Wednesday, January 6, 2010

வெவ்வேறு செடிகள்
பசுமைத் தண்டுகள் தாங்கிய 

வெள்ளைப் பூங்கொத்துகள் இரண்டை
வெம்மையான பின்னிரவில்
வாங்கிக் கொள்ளச் சொல்கிறாள்
கண்ணாடி இறக்கி
தரிசனம் தருபவன்
நீண்ட பேரத்திற்குப் பின்
ஒன்று போதுமென்கிறான்
மனைவியை மகிழ்விக்கப்போகும்
பூக்களுடன் சில்லென்ற
உலகுக்குள் மறைகிறான்
இரண்டையும் விற்கக் கூடிய
சாமர்த்தியமற்றவள்
சாலையோரத்தில் காத்திருக்கும்
கணவன் முன் தயங்குகிறாள்
அவன் கைவீச்சில் தெறிக்கும்
அவள் உதட்டு இரத்தம்
வெள்ளைப் பூங்கொத்தில்
செஞ்சாயம் பூசுகிறது
மனைவிகளை மகிழ்வூட்டவும்
இரத்தம் சிந்தவும் தூண்டும்
பூக்கள் வெவ்வேறு செடிகளில்
பூத்திருக்க வேண்டும்

(கீற்று மின்னிதழில் பிரசுரம் ஆனது)

49 comments:

லேகா said...

Anujanya,

Nice one!! :-)

நந்தாகுமாரன் said...

நல்லா தான் இருக்கு இந்தச் சிவப்பு எழுத்து சமுதாயச் சாடல்

na.jothi said...

எதார்த்தம்னு சொல்லிட்டு போகமுடியலை அண்ணே

ராமலக்ஷ்மி said...

வெள்ளைப் பூங்கொத்தைத் தவிர்த்து செஞ்சாயம் பூசிய படத்தின் தேர்வு கவிதையை மேலும் வலி(மை)யாக்குகிறது.

நல்ல கவிதை.

RaGhaV said...

அருமை.. :-))

வெண்பூ said...

அனுஜன்யா.. அருமை.. பாராட்டுகள்.

Prabhu said...

அட, புரிகிறதே!

Ashok D said...

ஆண்கள் பெண்களை பூக்களால் தாக்கினால்; பெண் ஆண்களை பூத்தொட்டிகளால் தாக்குவார்கள்.

உங்கள் கவிதை பெண்களை மென்மையானவர்கள் என்று சொன்னாலும்.. இன்றைய நிலைமை வேறு... அது எதுன்னு கல்யாணம் ஆன எல்லா ஆண்களுக்கும் தெரியும் புரியும் :))

காருக்குள்ளயிருந்து பூவாங்கனவர் யாருன்னு எனக்கு தெரியும்.. இதை நான் சொல்லமாட்டேன்... அடுத்து பின்னூட்டமிடும் நண்பர்கள் சொல்லுவார்கள் :)

தர்ஷன் said...

பூடகமாக எதையும் சொல்லாமல் நேரடியாகவே சொல்லியிருக்கின்றீர்கள் என்றுதான் படுகிறது. நன்றாக இருக்கிறது

பா.ராஜாராம் said...

ரொம்ப பிடிச்சிருக்கு அனு!

Kumky said...

வாவ்...

நேசமித்ரன் said...

தீபாவளி கேப்புகளை கடைசியாக எல்லாம் வெடித்து தீர்த்த பிறகு அந்த குட்டி சாண நிற அடிபாகமும் ரோஸ் நிற மூடியும் கொண்ட அட்டைகளின் மேல் கருங்கல்லால் நச் என்று வைக்கும் போது பக்கத்தில் ஓட்டை பல் தெறிக்க சிரிக்கும் சிரிப்பு வெளிச்சத்துக்கும் வெடிக்கும் வெளிச்சத்துக்கும் உள்ளதுதான் உங்கள் உரைனடையின் வேகத்துக்கும் கவிதைகளின் வேகத்துக்கும் உள்ள இடைவெளி

அருமைங்க
மழை கழுவின தார் சாலையில் பேருந்தில் இருந்து உதிரும் ஒற்றை மல்லிகைப் பூ அந்த கடைசி வரின்னும் சொல்லத்தோணுது

புத்தாண்டு வாழ்த்துகள்

தீபா said...

Adipoli :-)

Anonymous said...

உயர்வு தாழ்வு பூ வாங்கறதிலையும் வந்தாச்சா!!!

பூங்குன்றன்.வே said...

//இரத்தம் சிந்தவும் தூண்டும்
பூக்கள் வெவ்வேறு செடிகளில்
பூத்திருக்க வேண்டும்//

இந்த வரிகள் கவிதையின் ஆழம் புரிகிறது.

அர்த்தமுள்ள,சமுதாய பார்வை கொண்ட அருமையான கவிதை.

Mahesh said...

செடிகள் வேறா... வளர்த்தவர்கள் வேறா??

சாட்டையடி கவிதை ...

Anonymous said...

//ஒன்று பாவை கூந்தலிலே ஒன்று பாதை ஓரத்திலே //

இதையே வித்தியாசமாகப் பார்த்திருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது.

பாலா அறம்வளர்த்தான் said...

நன்றாக இருக்கிறது அனு!!!
மற்ற கவிதைகளையும் படிக்க/புரிய, இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக கூட்டிப் போங்களேன்.

Mohan said...

கவிதை ரொம்ப நல்லா இருந்ததுங்க!

அமிர்தவர்ஷினி அம்மா said...

கவிதை பிடித்திருக்கிறது என்பதை விடவும் கவிதை புரிந்திருக்கிறது :)

Mohan said...

கவிதை ரொம்ப நல்லா இருந்ததுங்க!

Thamira said...

கிரேட்.. அனுஜன்யா.! இது போன்ற எளிமையான நடையிலேயே தொடர்ந்து கவிதைகளை எழுதுங்களேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை.. அனுஜன்யா..

Vidhoosh said...

இன்னிக்கி கவிதையால் இல்லை, கவிதைக்கு இருக்கும் படத்தால் தலை சுற்றுகிறது. கண்ணைக் குத்துகிறது... ஒரே ரெட் ரெட் கூடாத் தெரியறது.

btw, நல்ல கவிதைச் சாடல்.

-வித்யா

இரவுப்பறவை said...

இரண்டும் வேறு வேறு செடிகளில் பூத்திருந்தாலும் இரண்டும் ஒரே வகைதானே..
நல்லா இருக்குங்க...

உயிரோடை said...

அழ‌கிய‌ல் குறைவாக‌ இருக்கோ?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கவிதை நல்லாயிருக்கு அனுஜன்யா.

Unknown said...

கவிதை ரொம்ப நல்லாருக்குங்க..

ஆனா, படத்த சேர்ந்தாப்ல ஒரு நிமிஷம் பார்த்தா பைத்தியம் பிடிச்சுடும் போலிருக்கு..

கமலேஷ் said...

ஐயோ...என்ன மாதிரி கவிதை இது...
கவிதை படிச்சிட்டு உடம்பு சில்லிற்குது...மிக அழகா பதிவு செஞ்சிருகீங்க...வாழ்த்த வார்த்தைகளே இல்லை...புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

மணிகண்டன் said...

very nice anujanya. i liked it because i could understand it :)- don't want to know on whether my understanding is in synch with what you wrote :)-

thamizhparavai said...

கவிதை நல்லா இருந்தது அனு சார்...
கை நீட்டி அடிப்பது கொஞ்சம் மிகையோ எனத் தோன்றி லாஜிக் பார்க்க வைத்தது உண்மை...

சந்தான சங்கர் said...

சாயம் வெளுந்திட
சென்றது ஒரு பூ
சாயம் வாங்கிட
சென்றது ஒரு பூ
பூத்திடும்பொழுது
அறிந்திருக்காமல்....வாழ்த்துக்கள் நண்பரே..
(என் வலைபக்கமும் வாங்க )

நர்சிம் said...

பின்றீங்களே தலைவா...

//மனைவியை மகிழ்விக்கப்போகும்
பூக்களுடன் சில்லென்ற
உலகுக்குள் மறைகிறான் //

ம்ம்ம்ம்.

CS. Mohan Kumar said...

அருமையா இருக்கு கவிதை. இதே போல் எழுதுங்க தல

malarvizhi said...

ரொம்ப நன்றாக இருக்கிறது.

மாதேவி said...

நல்ல கவிதை.

"உழவன்" "Uzhavan" said...

ஐயோ.. பாவம் பூக்களா இல்லை பெண்களா? :-)
அருமை

கிருத்திகா ஸ்ரீதர் said...

"சாலையோரத்தில் காத்திருக்கும்
கணவன் முன் தயங்குகிறாள் "

மொத்த கவிதையையும் முன்னெடுத்துச்சேல்லும் வரிகள்...கனமான கவிதை... வாழ்த்துக்கள்.. பூக்கள் எப்போதும் பூக்க மட்டுமே செய்வதில்லை!!!

Unknown said...

நல்ல கவிதை அனுஜன்யா. நல்ல கவிதை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மிக அருமையாக இருந்தது ..அனுஜன்யா.

தினேஷ் ராம் said...

அருமை :D

creativemani said...

சில விஷயங்களை பல பரிமாணங்களில் பார்க்கக் கற்றுக் கொடுக்கும் வகையில் இருக்கிறது சார்.. அருமை..

BAUVIAM said...

கவிதை அருமை
பூக்கள் விற்பது ஒரு கலை
இறைவா நன்றி என்னை(இதுவரை ) வாங்குபவராக படைத்ததற்கு !!!!
vicksvinayak

Bee'morgan said...

நல்லாயிருக்கு அண்ணா.. :)

Unknown said...

அப்போ ஒவ்வொரு செடிக்கும் ஒவ்வொரு குணமுண்டா?? பூக்களுக்கும் இது பொருந்துமா??

ஹி ஹி ஹி வேற 1னும் இல்ல. கவிதை புரிஞ்சிடிச்சி. அதான் கேள்வி கேட்டேன். :))) கவிதை நன்று அண்ணா :))

Karthikeyan G said...

அனுஜன்யா சார். கவிதை நல்லா இருக்கு..

anujanya said...

@ லேகா

நன்றி லேகா. நிறைய நாட்கள் கழித்து வருகிறீர்கள்.

@ நந்தா

நன்றி நந்தா. ஆனாலும் உங்களுக்கு ....:))

@ ஜோதி

அப்படியா... நன்றி ஜோதி.

@ ராமலக்ஷ்மி

நன்றி சகோ.

@ ராகவ்

நன்றி பாஸ்.

@ வெண்பூ

இங்க நல்லாத்தான் பாராட்டுற. அங்க....சரி சரி நன்றி.

@ பப்பு

அடப்பாவி... நன்றி

@ அசோக்

பெண்கள் வலிமை பெற்றால் நல்லது தானே அசோக் :). நன்றி பாஸ்.

@ தர்ஷன்

நன்றி தர்ஷன். நீங்கள் சொல்வது சரிதான்.

@ ராஜாராம்

நன்றி ராஜா (நீங்க எதையாவது பிடிக்கவில்லை என்று எப்போதாவது சொல்லியதுண்டா? அவ்வளவு நல்ல மனசு...)

@ கும்க்கி

நன்றி தல. நிச்சயம் உங்களுக்கும் நம்ம ஆதிக்கும் பிடிக்கும்னு நினைத்தேன் :)

@ நேசமித்ரன்

பின்னூட்டமே கவிதையா நீங்க மட்டும் தான் எழுத முடியும் நேசன். ரொம்ப நன்றி.

@ தீபா

நன்றி :)

@ சின்ன அம்மிணி

அய்யய்யோ அப்படி இல்ல. இதில் வர்க்கபேதம் இல்லை. நன்றி C.A.

@ பூங்குன்றன்

நன்றி நண்பா. நல்ல பெயர் உங்களுக்கு.

@ மஹேஷ்

நன்றி மஹேஷ். இப்போ எங்கே?

@ வேலன்

ஆமாம் இல்ல? நீட்சியாக...'ஒரு கொடியில் ..இரு மலர்கள்' பாட்டும் ஞாபகம் வந்தது. நன்றி வேலன்.

@ ப்ரியமுடன் பாலா

உங்கள் முதல் வருகை? மற்ற கவிதைகள் அவ்வளவு கஷ்டமா இருக்கா? சரி, இப்போ ஒரு பின்னூட்டமிஸ்ட் நீங்க. எப்ப பதிவு எழுதப் போறீங்க பாசு?

@ மோஹன்

உங்களுக்கும் முதல் வருகை? கவிதை நல்லா எழுதுகிறீர்கள். நிறைய வாசியுங்கள். நிறைய எழுதுங்கள். நன்றி பாஸ். (இரண்டு முறை வந்ததற்கும்)

@ அமித்து.அம்மா

என்ன ஒரு குசும்பு ? சரி சரி ஒரு 'நன்றி' சொல்லிக்கிறேன் :)

@ ஆதி

உனக்குப் பிடிக்கும்னு தெரியும் ஆதி. சரி ட்ரை பண்ணுகிறேன் :)

@ T V Radhakrishnan

நன்றி சார்.

@ விதூஷ்

நந்தா, அமித்து.அம்மா, விதூஷ்... எல்லா கவிஞர்களுக்கும் எப்படி ஒரே மாதிரி குசும்பு...

நன்றி வித்யா.

அனுஜன்யா

anujanya said...

@ இரவுப்பறவை

நன்றி பாஸ்.

@ உயிரோடை

அழகியல்? எது எப்பவாவது இருந்திருக்கா? நன்றி லாவண்யா.

@ ஜ்யோவ்

நன்றி ஜ்யோவ்.

@ பட்டிக்காட்டான்

நன்றி பாஸ். நீங்க சொல்றது கரெக்டு தான்.

@ கமலேஷ்

வாங்க கமலேஷ். உரையாடல் போட்டிக்கு ஒரு மகத்தான கவிதை எழுதிட்டு என்ன ஒரு அடக்கம் உங்களுக்கு? நன்றி பாஸ்.

@ மணிகண்டன்

நன்றி மணி. 'அடத் தூ' - பயப்படாதீங்க. உங்க கவிதையும் நல்லா இருக்கு :)

@ தமிழ்ப்பறவை

வாங்க பரணி. நீங்க சொல்றது சரி என்றாலும், அவ்வப்போது இதைப் பார்க்க நேர்வதும் கொடுமை. நன்றி பரணி.

@ சந்தான சங்கர்

வாங்க கவிஞர்! உங்கள் முதல் வருகை? 'ஒரு பிடி காற்றுக் கோலம்' கவிதை எனக்குப் பிடித்தது. பல்வேறு கவிஞர்களை வாசியுங்கள். நிறைய எழுதுங்கள். வாழ்த்துகள் சங்கர். நன்றி உங்கள் வருகைக்கும்.

@ நர்சிம்

விட்ரா விட்ரா . அதெல்லாம்....தானா வருது :) நன்றி நர்சிம்.

@ மோகன் குமார்

வாங்க தல. லாயர் சொல்லுக்கு அப்பீல் ஏது? எழுதிடுவோம் :)). நன்றி மோகன்

@ மலர்விழி

அழகான பெயர். உங்கள் தளத்துக்கு வந்திருந்தேன். 'சிதம்பரம்' பதிவு நல்லா இருந்தது. நன்றி சகோ.

@ மாதேவி

நன்றி மாதேவி. ஆமாம், 'சின்னு ரேஸ்றி' என்றால் என்ன அர்த்தம்?

@ உழவன்

நிச்சயம் பூக்களான பெண்கள்தான் பாசு. நன்றி.

@ கிருத்திகா

வாங்க கவிதாயினி. ரொம்ப நாளாச்சு? உங்க கையால் பாராட்டு ...மிக்க மகிழ்ச்சி.

@ சித்தார்த்

வாவ், சித்துவின் முதல் வருகை! ரொம்ப நன்றி சித்து.

@ முத்துலட்சுமி

நீங்களும் முதல் தடவை வரீங்க இல்ல? ரொம்ப நன்றி சகோ.

@ சாம்ராஜ்ய ப்ரியன்

நன்றி தினேஷ். வருத்தம் எல்லாம் போச்சா? :)))

@ அன்புடன் மணி

வாய்யா மணி. ரொம்ப நன்றி.

@ பவ்யம் ?

ஹலோ, குருநாதரே! நான்தான் உங்க கிட்ட பவ்யமா இருக்கணும். ரொம்ப நன்றி உங்கள் முதல் வருகைக்கு.

@ பாலா

ரொம்ப நன்றி பாலா.

@ ஸ்ரீமதி

கல்யாணம் ஆனாலும் ....இந்த குறும்பு மட்டும் இன்னும் போகல... போகவும் வேண்டாம்.. நன்றி ஸ்ரீ.

@ கார்த்திகேயன்

நன்றி கார்த்தி.

அனுஜன்யா

anujanya said...

@ தமிழிஷ் தளத்தில் வாக்களித்த நண்பர்களுக்கும் மிக்க நன்றிகள்.

அனுஜன்யா