Wednesday, March 18, 2009

நிழலதிகாரம்



மலைச்சரிவின் இருமருங்கும்
உருளத் தயாராகி
நின்றுவிட்ட பாறைகள் தம்
நிழல்களைத் தொலைத்திருந்தன;
அருகாமை மரங்களிலிருந்தும்
நழுவியிருந்த நிழல்கள்;
மெல்லிய சலனத்துடன்
உரையாடிய மரங்களும்
காற்று பிடுங்கப்பட்டு
பாறைகளாகக்கூடும்;
மெல்லப் பறந்த புறாவை
துரிதப் பயணம் செய்த நிழலுடன்
துளைத்து விட்ட தோட்டா ;
மேற்பர்வையிட்ட
பலரின் இடையில்
சொருகப்பட்ட உறைவாள்கள் ;
ஒவ்வொரு உறைவாளுக்கும்
பலப்பல நிழல்கள்.


அம்ருதா (பிப்ரவரி 2009) இதழில் பிரசுரம் ஆகியது. அவர்களுக்கு என் நன்றி.


இந்தக் கவிதையைக் ஆகச் சிறப்பாகப் புரிந்து கொள்ள வளர்மதி அவர்களின் இந்தப் பதிவு உதவக்கூடும். சுற்றும் தலை, மேலும் கிறுகிறுத்தால் பொறுப்பு ஏற்கப்பட மாட்டாது :) கவிதை அந்தத் தொடர் பதிவுகளின் சாராம்சம் அல்ல. அவற்றைப் படித்தபின் தோன்றிய உணர்வில் எழுதியது - இந்தக் கவிதை நிமித்தம் வளரை யாரும் திட்ட வேண்டாம் :)


27 comments:

கார்க்கிபவா said...

எனக்குப் புரியல

ராமலக்ஷ்மி said...

//மெல்லப் பறந்த புறாவை
துரிதப் பயணம் செய்த நிழலுடன்
துளைத்து விட்ட தோட்டா ;//

அருமை இவ்வரிகள்.

ஹி, கவிதை புரிந்த மாதிரிதான் இருக்கிறது. ஆனால் என் புரிதல் சரியா என்பது உறுதியாகத் தெரியாததால் மற்றவர்கள் கமெண்டுகள் போட்டதும் பார்க்க வருகிறேன் மறுபடி:)!

நாணல் said...

புரிந்தும் புரியாமலும் இருக்கு கவிதை....

தமிழன்-கறுப்பி... said...

வளர் மதியை வாசித்து பல நாட்களாகிறது, அதனால் இந்தப்பதிவுக்கான நேரடிப் புரிதல் எந்தளவுக்கு ஒத்துப்போகும் என்பது தெரியவில்லை...

தமிழன்-கறுப்பி... said...

இப்படி சொன்னா தப்பிச்சிடலாம்ல...?

மேவி... said...

அனுஜன்யா .....
நீங்க இதில் நிழல்கள் பற்றி சொல்லி இருக்கீங்க ....
ஒரு ஒரு மனிஷனும் தான் சுயத்தை இழக்கும் போது அவனது வாழ்வில் ஒரு பிரச்சன்னை வருகிறது .....
அதில் இருந்து அவனை காப்பாற்றி கொள்ளவே உறைவாள்களை சுமக்கிறான்....

அவன் சுயத்தை இழக்காமல் இருந்தால் அவன் வாழ்வு நல்ல படியாக இருக்கும் ...
பிரச்சன்னை வர வாய்ப்பு இல்லை ....

என்ன நான் சொன்னது கரெக்ட் அஹ ......

மற்றப்படி கவிதை சூப்பர் ஒ சூப்பர் ....
நல்ல கிதுப்பா......

அப்படியே நாம் ப்ளோக் பக்கம் வந்துட்டு போங்க

முரளிகண்ணன் said...

ஐ யாம் எஸ்கேப்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

எனக்குக் கவிதை பிடித்திருக்கிறது.

narsim said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
எனக்குக் கவிதை பிடித்திருக்கிறது.
//

வேற என்னய்யா வேணும்.. அவ்வளவுதான்.. வாழ்த்துக்கள்

KarthigaVasudevan said...

//ஒவ்வொரு உறைவாளுக்கும்
பலப்பல நிழல்கள். //

சொல்ல வந்ததை சொல்லாமல் சொல்லும் கலை கவிதை .ஆழகான வரிகள்.எனக்கும் இந்தக் கவிதை பிடித்திருக்கிறது.

Unknown said...

:))))

வால்பையன் said...

//சுற்றும் தலை, மேலும் கிறுகிறுத்தால் பொறுப்பு ஏற்கப்பட மாட்டாது //

எச்சரிக்கைக்கு நன்றி
சுத்த ஆரம்பித்த தலை இன்னும் நிக்கல!
நின்ன பொறவு திரும்பவும் வர்றேன்.

அகநாழிகை said...

அனுஜன்யா, நல்ல கவிதை.
பெரும்பாலும் நவீன கவிதைகள் ஒரே வாசிப்பில் சரியான புரிதலை தந்து விடாது. சமயங்களில் கவிதையை வாசித்தபின் வாசகன் உள்வாங்கிக் கொள்வதும், படைப்பாளி சொல்ல வந்ததும் வேறு வேறாகி விடுவதும் உண்டு. படைப்பின் பன்முகத்தன்மை காரணமாகவும், வாசகன் கவிதையை அணுகுவதன் முறை சார்ந்தும் கவிதை புரிதல் அமைகிறது. பிரம்மராஜன் ‘அய்யனார்‘ என்ற தலைப்பில் எழுதியிருந்த மூன்று வரி கவிதையை நானும் என் நண்பர்களும் பல நாட்கள் விவாதித்துக் கொண்டிருந்தோம். என்னை மிகவும் கவர்ந்த கவிதைகளில் ஒன்று அது.
அந்தக் கவிதை...
“ அப்பனுக்கு கல் குதிரைகள்
மகனுக்கு மண் குதிரைகள்
எனக்கோ மனித குதிரைகள் “

தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

- பொன். வாசுதேவன்

மாசற்ற கொடி said...

புரிந்தும் புரியாமலும் இருக்கிறது. இதன் "மூலம்" மிக அருமை. நன்றி.


அன்புடன்
மாசற்ற கொடி

na.jothi said...

நிழலுக்காக ஆசைப்பட்டு
நிழலாகிப்போன வாழ்க்கை

anujanya said...

@ கார்க்கி

:(. எல்லாம் அந்த .....ரால வந்த வினை.

@ ராமலக்ஷ்மி

நன்றி. இது ஒரு மாதிரியான கவிதைதான். நான் எழுதியிருக்காவிட்டால் எனக்குப் புரிந்திருக்க வாய்ப்பே இல்லை :)

@ நாணல்

வாங்க நாணல். மேலே சொன்ன வரிகள்தான் :)

@ தமிழன்

தல. சூப்பரா எஸ்கேப்பு :)

@ MayVee

உங்க புரிதலும் சரிதான். நன்றி. வரணும் அங்க. ரொம்ப நாளாச்சு.

@ முரளி

உங்க நேர்மை மெச்சப் படுகிறது :)

@ ஜ்யோவ்ராம்

ஆஹா, அப்ப கடைய மூடிடலாம். இதுக்காகத் தான் எழுதுவதே. நன்றி குரு.

@ நர்சிம்

நன்றி தல. நீங்க சொல்றது கரெக்ட்.

@ மிசஸ்.டவுட்

வாங்க இலக்கியவாதி :) உங்க முதல் வருகை. நன்றி. கொஞ்சம் பெருமையாவும் இருக்கு.

@ ஸ்ரீமதி

பரிசல் சொன்னாகூட நீ திருந்தல ! ஆனா, இந்தக் கவிதை அப்படி :) . நன்றி ஸ்ரீ.

@ வால்பையன்

ஹா ஹா. ஆனா, குறைந்த பட்சம் எதிர்-கவிதை எழுதலாமே குரு?

@ அகநாழிகை

வாங்க வாசு. உங்களுக்குப் பிடித்ததில் எனக்கு மிக மகிழ்ச்சி.
பிரம்மராஜன் 'குதிரைகள்' இப்போ என்னைப் பிடித்துக் கொண்டுவிட்டன.

அனுஜன்யா

மணிகண்டன் said...

:)-

Thamira said...

வழக்கம் போல கிர்ர்ர்ர்.. (ஆமா மலைச்சரிவுன்னா ஒருபக்கம்தானே அதெப்படி இருபுறமும் உருள பாறைகள் தயாராக இருக்கமுடியும்?)

Anonymous said...

வேலைப் பளுவால் கவனிக்கவில்லை இவ்வள்வு நல்ல கவிதையை.

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...

எனக்குக் கவிதை பிடித்திருக்கிறது.//

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் இளைஞனே?

anujanya said...

@ மணிகண்டன்

மணி, ஒவ்வொருவருக்கும் 'எஸ்கேப்பு'க்கு ஒவ்வொரு பாணி. முரளி, தமிழன்-கறுப்பி, ஸ்ரீமதி, நீ என்று பலவகையானவை :)

@ ஆதி

:)))). மலைச்சரிவின் ஒரு பாதை; அதன் இரு மருங்கும் என்று படியுங்களேன்.

@ வேலன்

நன்றி வேலன். ஆம், என் ஆசைக்கும், என் பருவம் பற்றிய உங்க (சரியான) கணிப்புக்கும் :)

அனுஜன்யா

குசும்பன் said...

//மலைச்சரிவின் இருமருங்கும்
உருளத் தயாராகி
நின்றுவிட்ட பாறைகள் தம்
நிழல்களைத் தொலைத்திருந்தன;
அருகாமை மரங்களிலிருந்தும்
நழுவியிருந்த நிழல்கள்;
மெல்லிய சலனத்துடன்
உரையாடிய மரங்களும்
காற்று பிடுங்கப்பட்டு
பாறைகளாகக்கூடும்;
மெல்லப் பறந்த புறாவை
துரிதப் பயணம் செய்த நிழலுடன்
துளைத்து விட்ட தோட்டா ;
மேற்பர்வையிட்ட
பலரின் இடையில்
சொருகப்பட்ட உறைவாள்கள் ;
ஒவ்வொரு உறைவாளுக்கும்
பலப்பல நிழல்கள். //

மிகவும் கவனத்தோடு தேர்ந்தெடுத்த வார்த்தைகளின் கோர்வைகள் அழகிய
கவிதையாக ஜனனம் எடுத்து இருக்கிறது!

(புரோபைல் பார்த்து ஒரிஜினல் குசும்பனா என்று எல்லாம் செக் செய்யக்கூடாது ஆமா!)

குசும்பன் said...

//தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...
வழக்கம் போல கிர்ர்ர்ர்.. (ஆமா மலைச்சரிவுன்னா ஒருபக்கம்தானே அதெப்படி இருபுறமும் உருள பாறைகள் தயாராக இருக்கமுடியும்?)//

இவ்வளோ அப்பாவியா ஆதி நீங்க? பின்னவீனத்துவத்துக்கு விளக்கம் கேட்கும் பாலகனை எல்லாம் யாரய்யா ஸ்டார் ஆக்கியது!
எனக்கு மட்டும் புரிஞ்சுதா? அப்படியே காப்பி பேஸ்ட் செஞ்சு சூப்பர் என்று சொல்லவில்லை! அதுபோல் செய்யுங்க, அப்பதான் ஊரு நம்மள மதிக்கும்!

மண்குதிரை said...

தொடர்ந்து முழு முனைப்போடு எழுதிவருகிறேர்கள்.

என் வாழ்த்துக்கள் அனுஜன்யா.

anujanya said...

@ குசும்பன்

என்ன நிசமாலுமே 'இலக்கியத்தில்' நாட்டமோனு பயந்துட்டேன். ஆனா, நீ திருந்தவே மாட்டியா :)

@ மண்குதிரை

நன்றி உங்கள ஊக்கத்திற்கு.

அனுஜன்யா

anujanya said...

@ மாசற்ற கொடி

'மூலம்' படித்தால் அதுவே ஒரு அனுபவம். இந்தக் கவிதை அப்படி ஒன்றும் பெரிய விஷயமில்லை. நன்றி.

@ புன்னகை

உங்களையும், 'கொடி'யையும் சற்று தாமதமாகப் பார்த்தேன். நன்றி புன்னகை.

அனுஜன்யா

உயிரோடை said...

நிழல்களை பற்றிய கவிதை அருமை.

//மெல்லப் பறந்த புறாவை
துரிதப் பயணம் செய்த நிழலுடன்
துளைத்து விட்ட தோட்டா ;//

ஜெய மோகனில் சங்க சித்திரங்களில் ஒரு சங்க கவிதையில் வரும் உவமை வில்லும் அதன் நிழலும் பயணிக்கும் தளங்கள் வேறென்றாலும் அவை இறுதியில் சேருமிடம் ஒன்று என்பது நினைவிற்கு வருக்கின்றது.

நன்றி அனுஜன்யா

நன்றி ஜெயமோகன்.

anujanya said...

@ மின்னல்

சாரி. இன்று தான் இந்தப் பின்னூட்டத்திற்குப் பதில் சொல்லாததை கவனித்தேன். நன்றி மின்னல். உங்கள் வாசிப்பும், புரிதலும் நுட்பம்.

அனுஜன்யா