Tuesday, June 30, 2009

போர்ஹெயின் புலிகள் ……(எதைப்) பற்றியும் பற்றாமலும் .... (30th June '09)



நாகார்ஜுன் வலைத் தளத்தில் புலிகள் பற்றி ஜோர்ஜ் லூயி போர்ஹெ எழுதியிருந்ததைப் படித்தேன். உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை. எனக்குப் புலிகளைப் போல மனதை ஆக்கிரமிக்கும் விலங்கு வேறெதுவும் இல்லை. யானையும் மிகப் பிடிக்கும். ஆயினும், இந்தப் பதிவு யானைகளைப் பற்றி இல்லாததால், இனி புலிகள் மட்டுமே.

புலியின் நடையில் இருக்கும் கம்பீரம் வேறெந்த விலங்கிடமும் இல்லை. மிகப் பெரிய உருவம். ஊடுருவும் கண்கள். வசியம் செய்யும் உடல் வரிகள். பிரத்யேகமான மஞ்சளாரஞ்சு/ கருப்பு நிற உடல். திருவனந்தபுரம் மிருகக் காட்சி சாலையில் பாதுகாப்பான தூரத்தில், திறந்த வெளியில் ஐந்தாறு புலிகளைப் பார்த்தது நினைவு இருக்கிறது. அப்போது பறவைகளைக் கவனிப்பதில் நாட்டம் மிகுந்திருந்த பருவம் என்பதால், அந்தப் புலிகள் அவ்வளவு வசீகரிக்கவில்லை. பிறகு என் பெங்களூர் தினங்களில் வந்து போகும் நண்பர்/உறவினர்களைக் கூட்டிச் செல்லும் தலங்களில் பன்னர்கட்டா தேசியப் பூங்கா பிரதான இடம் வகித்தது. அதனால், புலிகளை அவற்றின் இருப்பிடத்தில், சௌகரியமான வண்டிகளுக்குள் அமர்ந்து கொண்டு அருகில் பார்க்க முடிந்தது. மிக அரிதாக ஒரு முறை ஒரு புலி என்னைக் குறிவைத்து முறைத்தது. நிஜமாகவே அதன் கண்கள் என்னவெல்லாமோ சொல்லிய உணர்வு. அதற்காகவே மீண்டும் செல்லும் உத்தேசமும் இருந்தது.

ஒரு முறை ஒரு பெரியவர் தனது பேத்தியுடன் இந்த பன்னர்கட்டா பூங்காவில் புலி safari சென்றார். அந்தப் பெண் குழந்தைக்கு நான்கோ ஐந்தோ வயது. இவர் விளையாட்டாக அந்தக் குழந்தையைத் தூக்கிப் பிடித்து புலியின் திசையில் காண்பிக்க, அந்தப் புலி எப்போது, எப்படிப் பாய்ந்து, அந்தக் குழந்தையைக் கவ்விச் சென்றது என்பது யாருக்கும் முற்றிலும் புரியாத மர்மம். அந்தப் பெரியவர் வண்டியிலிருந்து வெளியே வர முயன்றதை மற்றவர்கள் தடுத்து விட்டனர். மாண்ட சிறுமி, கொன்ற புலி இவற்றின் முகங்கள் மறந்து போனாலும், வாழ்வின் அனைத்தையும் சில வினாடிகளில் தொலைத்து விட்ட பெரியவரின் முகம் இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.

போர்ஹெயைப் பற்றியும், குறிப்பாக அவருடைய புலிகள் பற்றியும் எனக்கு எஸ்ராவின் 'விழித்திருப்பவனின் இரவு' புத்தகக் கட்டுரை மூலம் தெரிய வந்தது. அதில் வரும் சில வரிகள்:



புலியைப் பற்றிய போர்ஹெயின் வெவ்வேறு குறிப்புகளைத் தனியாகத் தொகுத்து வாசிக்கும்போது புலி அவரது கதா வாக்கியங்களின் குறுக்காக எப்போதும் உலவிக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. மேலும் அவருக்குப் பெரிதும் விருப்பமாயிருப்பது புலி என்ற மிருகமல்ல, அந்தச் சொல்தான் என்றே தோன்றுகிறது. காரணம் புலியை வன்மம் நிரம்பியதாக அவர் ஒருபோதும் சித்தரிக்கவில்லை. மாறாக புலியை மனிதன் எதிர்கொள்ளும் விதமே அவருக்கு விசித்திரமான ஈர்ப்பை உருவாக்குகிறது. அவரது பிரசித்தி பெற்ற 'இன்னொரு புலி' என்ற கவிதையிலும் அதையே வெளிப்படுத்துகிறார். கவிதையில் தான் உருவாக்கும் புலி வெறும் படிமம்; குறியீடு. அது நிஜப் புலியை ஒருபோதும் வெளிப்படுத்துவதில்லை. ஆனால் நிஜமான கங்கை நதிக்கரைப் புலி இப்போதும் தனியாக, மூர்க்கமாக மானின் வாசனையை முகர்ந்தபடி அலைந்துகொண்டு இருக்கிறது. தான் உருவாகிய கவிதைப் புலி வெறும் சொற்கூட்டம். அது ஒரு கனவு. தான் நிஜமான மற்றும் கவிதையில் உருவான புலி இரண்டையும் தவிர்த்து இன்னொரு புலியைத் தேடிக்கொண்டிருப்பதாக முடியும் இக்கவிதை போர்ஹெக்குள்ளிருந்த புலியின் அகத்தேடுதலை நுண்மையாக வெளிப்படுத்தியுள்ளது.




போலவே இரண்டு புலிகளைப் பற்றிய ஒரு படம் என்னை மிகக் கவர்ந்த படங்களுள் ஒன்று. பெயர் தெரியவில்லை. சுரேஷ் கண்ணன்/அய்யனார் போன்றோர் அறிந்திருக்கலாம். ஒரு தாய் வயிற்றில் பிறந்த இரு புலிக்குட்டிகள், பிறகு பிரிக்கப் பட்டு, ஒன்று காட்டிலும், மற்றது மன்னனிடத்திலும் என்று இருக்கும். முடிவில் அவை ஒன்று சேர்வது, தீ பிடித்து எரியும் மரங்களைத் தாண்டிச் செல்ல காட்டுப் புலி, நாட்டுப் புலிக்கு உதவுவது என்று மசாலாவாக இருந்தாலும், எனக்கு ஆனந்தக் கண்ணீர்தான் - எம்.ஜி.ஆர்.ருக்குப் பதில் புலிகள் நடித்த 'நீரும் நெருப்பும்' என்று என் தம்பி என்னை கேலி செய்தாலும்.

ஏற்கனவே என் தளத்தில் சில ஈழச் சார்புப் பதிவுகள். இப்போது புலிகள் பிடிக்கும் என்று வேறு சொல்கிறேன். இந்த வார நட்சத்திரம் வேலன் "எழுதப்பட்ட ஒவ்வொரு வார்த்தைக்கும் எழுதியவரே பொறுப்பாளர்; எழுதியவன் இறந்துவிட்டான் - பிரதி மட்டுமே பேசுகிறது என்று பி.ந.ஜல்லி அடிக்க முடியாது;" என்று பீதி ஏற்றுகிறார். ஆதலால், இப்போதைக்கு புலிகளுக்கு ஓய்வு கொடுப்போம், அவை மீண்டும் வரும்வரை (ஆஹா என்ன ஒரு குறியீடு!).

அடுத்தது கவிதைகள். ஹலோ, ஓடாதீர்கள். உங்களுக்கே தெரியும், நான் ரொம்ப நாட்களாக கவிதைகள் 'பற்றியும்-பற்றாமலும்' இல் எழுதவில்லை. மேலதிகமாக, என் கவிதை பற்றி ஒன்றும் சொல்ல மாட்டேன் என்றும் உறுதி அளிக்கிறேன்.

சுந்தர் ஏற்கெனவே எழுதிவிட்டார். இருப்பினும், சொல்ல விழைவது நந்தா என்னை மிகவும் கவருகிறார். கவிஞர்கள் என்றாலே உங்களுக்குள் தோன்றும் 'மூன்று நாள் தாடி; மென் சோகம்; சமயங்களில் சிறுபத்திரிகைகள் தூங்கும் ஜோல்னாப்பை; தனிமை மற்றும் வானம் பற்றி நிறைய எழுதும் ஜீவன்கள்' என்ற பிம்பத்தை சற்று விலக்கி, ஒரு modern, uptodate, மென்பொருள் யுவனுடன் பேசும் உணர்வைத் தரும் இவர் கவிதைகள். சுட்டி கொடுத்தால் பக்தியுடன் உடனே செல்லும் ஜாதி நீங்கள் யாரும் இல்லை என்பதால், சில கவிதைகளை இங்கேயே கொடுக்கிறேன். (என் தளத்தில் நல்ல கவிதைகளே வருவதில்லை என்ற புகாரும் யாரும் சொல்ல முடியாது)



என் தலைக்குள் ரோஜா


என் மூளை ஒரு ரோஜாப் பூவாகிப் பூத்த வேளை
நான் கடவுள் இருக்கிறாரா என யோசித்துக் கொண்டிருந்தேன்
நீங்கள் என்னை அழிக்க வரும் போதும்
நான் எதிர்க்கவில்லையென்றால்
என் கை ரோஜாப்பூ பறித்துக் கொண்டிருக்கும்
நான் முட்களைப் பற்றிக் கவலைப்படுவதேயில்லை
அவை என்னைக் குத்திக் கிழித்தால்
என் ரோஜாப்பூ இன்னும் சிவந்துவிடுமே

கவிதை புரியவில்லை என்ற டெம்ப்ளேட் பின்னூட்டத்துடன் கொலைவெறியுடன் அலைபவர்களுக்கும், அவர்களைத் திருப்திப்படுத்தவென்றே உலகில் உய்வித்த காதல் கவிதை கவிஞர்களையும் வலிக்காமல் பகடி செய்யும் கவிதை இது:





அந்தச் சிரிப்பு என்னும் சிவப்புக் கம்பள விரிப்பு தானே
என்னை உன் இதய தேசத்திற்கு வரவேற்றது


உயர்ந்தவள் நீ
ஒப்பீடுகளால் இன்னும் உயர்ந்தாய்
உவமைகளைத் தேட வைக்கும் அழகு உன்னுடையது
உவமைகளே கூற முடியாது அழகு உன்னுடையது
நீ வந்து தட்டும் போதெல்லாம்
என் கதவுகள் பூ பூப்பதும்
நீ வார்த்தைகளைக் கொட்டும் போதெல்லாம்
அவை என்னுள் கவிதைகளாகவே விழுவதும்
நீ எனை விட்டுப் போகும் போதெல்லாம்
அக்கவிதைகள் சொல் உதிர்ப்பதும்
வேடிக்கையான இந்நிகழ்வுகள் என் வாழ்வில்
வாடிக்கையாகிவிட்டன

கவிதையின் தலைப்பு என்ன தெரியுமா? - "ஒரு User Friendly கவிதை"

ஒரு அறிவியல் புனைவு கவிதை:


கனவு பூமியும் Neuron Networkக்கும்


செவ்வாய் கிரகத்தில்
என் புதுமனை புகுவிழா நாளின் இரவில்
பல்லியின் சப்தம்

பழுதுபட்ட கால எந்திரத்தில்
என் கால்களுக்கு இடையே
ஓடும் கரப்பான்பூச்சி

அரை மணியில் தயாராகிவிட்டது
என் புற்று நோய்க்கான டிசைனர் ட்ரக்
அந்த எழவெடுத்த மருத்துவரின்
ப்ரிஸ்க்ரிப்ஷன் கையெழுத்து தான் புரியவில்லை

பூங்கா மூடும் நேரம்
என் க்ளோனிங் காதலியை சந்திக்கும்
என் க்ளோனிங் நான்
கவனிக்கும் நான்

ஒரு ஒளி வருடத்திற்குப் பிறகு கிடைத்த
என் காலி டைரி

யாத்ராவுடன், நந்தாவும் மிக வலுவுடன் சிபாரிசு செய்யப்படுகிறார்.

37 comments:

வால்பையன் said...

அடுத்த எர்திவினைன்னு ஆசையோடு ஓடி வந்தேன்,

அறிவியல் புனைவு கவிதைகள் ஏமாற்றத்தை போக்கி விட்டது!

Sridhar V said...

அனுஜன்யா,

பற்றியும் பற்றாமலும் நன்றாக பற்றிக் கொண்டிருக்கிறது. நந்தா பற்றி சுந்தர் ஒரு அறிமுகம் கொடுத்திருந்தார். நீங்கள் ஒரு படி மேலே போய் ‘நந்தா ஏன் இப்படி எழுதுகிறார்’ என்று எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன் :)

சென்ஷி said...

:))

சுவாரஸ்யமான இன்னொரு பதிவு.

அ.மு.செய்யது said...

ப‌ன்னீர்கெட்டா ச‌ம்ப‌வ‌ம் இப்போது நினைத்தாலும் ப‌கீரென்று இருக்கிற‌து.

க‌விதைக‌ள பார்த்தா ஒரே ஸ்டொமொக் ஃபய‌ரிங்கா இருக்கு..எப்ப‌டி தான் இப்ப‌டியெல்லாம் யோசிக்க‌றாங்க‌ளோ.

ப‌கிர்வுக்கு ந‌ன்றி அனுஜ‌ன்யா.

Anonymous said...

நந்தா பற்றி நல்ல அறிமுகம் அனுஜன்யா. எப்போதும் சுட்டி கொடுங்கள். கலாய்த்தாலும், அதைப் படிப்பவர்கள் தீர்மானிக்கட்டும்.

மற்றபடி நீங்கள் வெளியில்தான் புலி வீட்டில் என்ன என்பது உங்களை நன்கறிந்த எனக்குத் தெரியும்.

நேசமித்ரன் said...

உயிரோசையில் வந்திருக்கும் உங்கள் கவிதைக்கு வாழ்த்துக்கள் அனுஜன்யா

பொர்ஹெயின் புலிகளைப்பற்றின எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரை முக்கியமானது .

மீள்வாசிப்பிற்கு உதவினீர்கள் நன்றி

யாத்ரா said...

நண்பர் நந்தாவின் இனிய கவிதைகளை தங்கள் அறிமுகத்தில், மீண்டும் இங்கு வாசிக்கக் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. மிகவும் சந்தோஷமாயிருக்கிறது. மிக்க நன்றி.

நட்புடன் ஜமால் said...

(என் தளத்தில் நல்ல கவிதைகளே வருவதில்லை என்ற புகாரும் யாரும் சொல்ல முடியாது)\\

இப்படியெல்லாம் சொல்லப்படாது ...

இப்படி சொல்லலாமோ ...


சட்டெனெ விளங்கிய கவிதைகள் ...

நட்புடன் ஜமால் said...

மென்பொருள் யுவனுடன் பேசும் உணர்வைத் தரும் இவர் கவிதைகள். \\

அழகான கருத்துரை

\\சுட்டி கொடுத்தால் பக்தியுடன் உடனே செல்லும் ஜாதி நீங்கள் யாரும் இல்லை என்பதால், \\

ஹலோ ஹலோ நாங்க படிப்போம் தயவு செய்து சுட்டி கொடுக்கவும் ...

நட்புடன் ஜமால் said...

பூங்கா மூடும் நேரம்
என் க்ளோனிங் காதலியை சந்திக்கும்
என் க்ளோனிங் நான்
கவனிக்கும் நான்\\

அற்புத சிந்தனை ...

Unknown said...

புலிகளை பற்றி அருமையாக பதிவிட்டு.... கொலை நடுக்கத்தை நீக்கிய தாங்களை இனி ஸ்ரீ... ஸ்ரீ... ஸ்ரீ.. மான்... 24 ஆம் "புலி " கேசி என்று எல்லோராலும் போற்றப் படுவீர்...!!!


வாழ்த்துக்கள்....!! வாழ்க வளமுடன்.....!!!!





// அ.மு.செய்யது said...

ப‌ன்னீர்கெட்டா ச‌ம்ப‌வ‌ம் இப்போது நினைத்தாலும் ப‌கீரென்று இருக்கிற‌து. //



தலைவரே..... அது " ப‌ன்னீர்கெட்டா " இல்ல .... " பன்னார்கட்டா " ......!!

கன்னடத்தை கொலை செய்த குற்றத்துக்கு, உங்களுக்கு 30 நாட்களில் கன்னட பாஷை புத்தகம் வெறும் 500 ரூவாய்க்கு குறைந்த விலையில் அனுப்பி வைக்கப்படும் ....!!!

Kumky said...

:-))))

Mahesh said...

நல்ல அறிமுகம்....

புலி...நந்தா.. இதில் யார் எது? (அப்பாடா.. ."பற்ற" வெச்சாச்சு :)))))

மணிஜி said...

//அரை மணியில் தயாராகிவிட்டது
என் புற்று நோய்க்கான டிசைனர் ட்ரக்
அந்த எழவெடுத்த மருத்துவரின்
ப்ரிஸ்க்ரிப்ஷன் கையெழுத்து தான் புரியவில்லை//

ரசித்தேன் அனுஜன்யா...

Ashok D said...

உள்ளுக்குள் உறங்கும் புலியை மேல் நோக்கி நகர்த்தியது உங்கள் பதிவு எஸ்ரா உதவியுடன்.

நந்தா எனை சிறிதும் அசத்தவில்லை. ஒருவேளை கவிதை பற்றிய பிரக்ஜை என்னிடம் குறைவோ?

ராம்.CM said...

நன்றாக இருந்தது.

நந்தாகுமாரன் said...

அனுஜன்யா, என் கவிதைகள் குறித்த அறிமுகத்திற்கு மிக்க நன்றி, மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘இதையெல்லாம் எப்படி ரசிக்கிறீங்க’, என வேறு யாரும் கேட்கும் முன் வேறு பதிவு போட்டு விடவும் :)

Bannerghatta National Park குறித்த என் சமீபத்திய ஒளிப்படத் தொகுப்பை என் பதிவில் வெளியிடத் தூண்டுகிறது உங்கள் பத்தி

thamizhparavai said...

////அரை மணியில் தயாராகிவிட்டது
என் புற்று நோய்க்கான டிசைனர் ட்ரக்
அந்த எழவெடுத்த மருத்துவரின்
ப்ரிஸ்க்ரிப்ஷன் கையெழுத்து தான் புரியவில்லை//
ஹி...ஹி.. ரசித்தேன்...
பன்னார்கட்டா துயர சம்பவம் மனதைப் பிசைகிறது...
//ஏற்கனவே என் தளத்தில் சில ஈழச் சார்புப் பதிவுகள். இப்போது புலிகள் பிடிக்கும் என்று வேறு சொல்கிறேன்//
கேட்க நினைச்சேன். சொல்லிட்டீங்க....
தலை...முதல் தடவையா கதை(?) ஒண்ணு எழுதிருக்கேன். வந்து பார்த்துட்டு விமர்சிக்கவும்...(டெம்ப்ளேட் பின்னூட்டம் மாதிரி இருக்கு...)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நந்தா ஒரு முக்கியமான கவிஞர். அவரைப் பற்றி எழுதியதற்கு நன்றி. அண்ணாச்சி சொன்ன மாதிரி லின்க் கொடுக்கவும், அப்போதுதான் உங்கள் வாசகர்கள் அதை புக்மார்க் செய்து படிக்க ஏதுவாயிருக்கும்.

புலிகளைப் பற்றிய விக்ரமாதித்யன் கவிதை ஞாபகம் வருகிறது எனக்கு :)

butterfly Surya said...

அருமை..

வாழ்த்துகள்.

அகநாழிகை said...

அனுஜன்யா,
புலிகளின் விஷயத்தில் என்னைக் கவர்ந்தது பார்வை.
அவ்வளவு கூர்மையாக, தெளிவாக, நேரடியாக இருக்கும். நாகார்ஜுனன் பதிவை வாசிக்கவில்லை. இனிதான் வாசிக்கவேண்டும்.

கவிதைகள் என்று சொல்லி விட்டு ஏன் ஓடாதீர்கள் என்கிறீர்கள் ?

உங்களிடமிருந்து வரும் கவிதை ஆக்கங்களையும், கவிதை அறிமுகங்களையும் யாரும் கேலி பேசுவதில்லை.

நந்தாவைப் பற்றிய தங்கள் அவதானிப்பு மிகச்சரி. நானறிந்த வரையில் வித்தியாசமான கோணத்தில், நவீனமாக அணுகும் கவிமனம் அவருடையது. வார்த்தைப் பிரயோகங்கள் கூரிய வாளைப் போன்றிருக்கும்.

பகிர்தலுக்கு மிக்க நன்றி.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

Ashok D said...

மறுவாசிப்பில், இரண்டாவது கவிதை வார்த்தை பின்னல்,superb. மூன்றாவது கவிதை neuron network நன்று. sorrypa NANDHA நமக்கு mindu கொஞ்சம் tubelight. :)

ராமலக்ஷ்மி said...

//வாழ்வின் அனைத்தையும் சில வினாடிகளில் தொலைத்து விட்ட பெரியவரின் முகம் இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.//

இந்த சம்பவம் எனக்கும் மறக்கவே இல்லை. இது நடந்த ஓரிரு தினங்கள் முன்னர்தான் குழந்தையாய் இருந்த மகனுடன் ஊரிலிருந்து வந்த அம்மா, தம்பி, தங்கையருடன் அங்கு சஃபாரி சென்று வந்தோம். சமீபத்தில் கூட அந்த நிகழ்வைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அப்போது வண்டிகளுக்கு க்ரில் கிடையாது. செக்யூரிட்டியும் கிடையாது. இச்சம்பவத்துக்குப் பிறகு கவனமாய் இருக்கிறார்கள் என்றாலும் அந்தக் குழந்தை..., ஆயுசுக்கும் மாறாத குற்றவுணர்வை அனுபவிக்க நேர்ந்த அந்த தாத்தா...:( !

ராமலக்ஷ்மி said...

//சுட்டி கொடுத்தால் பக்தியுடன் உடனே செல்லும் ஜாதி நீங்கள் யாரும் இல்லை என்பதால்//

அதைப் பற்றி உங்களுக்கென்ன, ‘என் பணி சுட்டி கொடுப்பதே’ எனக் கொடுத்தபடி இருக்க வேண்டியதுதானே, கவிதைகளை இங்கு கொடுத்தாலும் கூட:)! பாருங்கள் வேலன் தந்த சுட்டி மூலம் சென்று பார்த்தேன். போனால்..

//வானம் பற்றி நிறைய எழுதும் ஜீவன்கள்' என்ற பிம்பத்தை சற்று விலக்கி, //

தெரிந்தது ‘வானம்’ அவருக்கு ரொம்பவே பிடிக்குமென்று. நானும் அது போல வானத்தை திரளும் மேகங்களுடன், சூரியனின் சித்திரத் தீட்டல்களுடன் நிறைய படங்கள் எடுத்து வைத்திருக்கிறேன்:)!

//செவ்வாய் கிரகத்தில்
என் புதுமனை புகுவிழா நாளின் இரவில்
பல்லியின் சப்தம்

பழுதுபட்ட கால எந்திரத்தில்
என் கால்களுக்கு இடையே
ஓடும் கரப்பான்பூச்சி//

மிகவும் ரசித்தேன். நன்றி அனுஜன்யா!

மணிகண்டன் said...

பற்றியும் பற்றாமலும் சுவை. முதல் கவிதைக்கு டெம்ப்ளேட் பின்னூட்டம் போடலாம்ன்னு நினைச்சா, மிச்சம் எல்லாம் புரிஞ்சதுனால விட்டுட்டேன். அறிமுகத்துக்கு நன்றி. சுந்தர் அறிமுகம் படுத்தினாலும் அவரோட பதிவுகள்ள பல சண்டை (விவாதமா !) பதிவகளுக்கு நடுவுல படிக்கவேண்டியதா இருக்கு ! நமக்கு சண்டை தான வேடிக்கை பாக்க பிடிக்கும்..அதுனால நந்தாவ மிஸ் பண்ணிட்டேன். அறிமுகத்துக்கு நன்றி.

பரிசல்காரன் said...

வலையில் எழுதுபவர்களிலேயே குறுகிய காலத்தில் எழுத்தின் வீச்சை அதிகரிக்கச் செய்தவர் நீங்கள் என்றால் அது சத்தியமான உண்மை. எத்தனை நாட்கள் எழுதினாலும் எனக்கெல்லாம் ஒரு மேம்பாடும் எழுத்தில் வரவில்லை. (எண்ணத்திலாவது வந்திருக்கிறதாவெனத் தெரியவில்லை)

உங்கள் கவிதைகளும் எங்கோ வேறு யாராலோ சிறந்தவையெனக் கொண்டாடப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது. எனவே //என் வலையில் நல்ல கவிதைகள் வரவில்லையென்ற புகார் இனி வராது// போன்ற வரிகள் தேவையில்லை என்பதென் தாழ்மையான கருத்து!

நர்சிம் said...

//ஏற்கனவே என் தளத்தில் சில ஈழச் சார்புப் பதிவுகள். இப்போது புலிகள் பிடிக்கும் என்று வேறு சொல்கிறேன். இந்த வார நட்சத்திரம் வேலன் "எழுதப்பட்ட ஒவ்வொரு வார்த்தைக்கும் எழுதியவரே பொறுப்பாளர்; எழுதியவன் இறந்துவிட்டான் - பிரதி மட்டுமே பேசுகிறது என்று பி.ந.ஜல்லி அடிக்க முடியாது;" என்று பீதி ஏற்றுகிறார். ஆதலால், இப்போதைக்கு புலிகளுக்கு ஓய்வு கொடுப்போம்//

ரைட்டு..

//பரிசல்காரன் said...
வலையில் எழுதுபவர்களிலேயே குறுகிய காலத்தில் எழுத்தின் வீச்சை அதிகரிக்கச் செய்தவர் நீங்கள் என்றால் அது சத்தியமான உண்மை. எத்தனை நாட்கள் எழுதினாலும் எனக்கெல்லாம் ஒரு மேம்பாடும் எழுத்தில் வரவில்லை. (எண்ணத்திலாவது வந்திருக்கிறதாவெனத் தெரியவில்லை)
//

ராங்கு...

//மணிகண்டன் said...
பற்றியும் பற்றாமலும் சுவை. முதல் கவிதைக்கு டெம்ப்ளேட் பின்னூட்டம் போடலாம்ன்னு நினைச்சா, மிச்சம் எல்லாம் புரிஞ்சதுனால விட்டுட்டேன். அறிமுகத்துக்கு நன்றி.
//

மணிகண்டன்.. அப்ப நீங்க நம்ம பக்கம் கோவிச்சுட்டு தான் வராம இருக்கீங்களா? என்னப்பா இது?

அமிர்தவர்ஷினி அம்மா said...

அப்போது பறவைகளைக் கவனிப்பதில் நாட்டம் மிகுந்திருந்த பருவம் என்பதால், அந்தப் புலிகள் அவ்வளவு வசீகரிக்கவில்லை.

:)-

பரிசல்காரன் said...

நர்சிம் Said

//பரிசல்காரன் said...
வலையில் எழுதுபவர்களிலேயே குறுகிய காலத்தில் எழுத்தின் வீச்சை அதிகரிக்கச் செய்தவர் நீங்கள் என்றால் அது சத்தியமான உண்மை.

ராங்கு///


யோவ் நர்சிம்.. அத ஏன்யா ராங்குன்னீரு? அனுஜன்யா சந்தோஷமா இருந்தா பிடிக்காதே உங்களுக்கு? அவ்வ்வ்வ்வ்வ்

Venkatesh Kumaravel said...

நர்சிம் அண்ணன் பதிவில் சொன்னதே தான்.. மூத்தவர்கள் ஈகோ பார்க்காமல் பாராட்டுவது ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாய் இருக்கிறது. கொஞ்ச நாட்களுக்கு முன் யாத்ரா. இப்போது நந்தா. இன்னும் சேரல், மண்குதிரை, ச.முத்துவேல், கருப்பு வெள்ளை நிறைய பேர் இருக்கிறார்கள். பலர் அறியச்செய்ய வேண்டும். குறிப்பாக தமிழ் வேர்ட்ப்ரஸ் பதிவர்கள் கஷ்டப்படுகிறார்கள். நன்றி அனுஜன்யா சார்.

Thamira said...

கவிதைகள்.. ரசனை.!

மணிகண்டன் said...

நரசிம், இது என்ன அநியாயம் ? உங்களோட அடுத்த பதிவுல கூட வந்து கமெண்ட் போட்டேனே ! நான் வீட்டுக்கு வரும் நேரம் உங்களுக்கு நடுராத்திரி ஆகிடும். அதுனால போன் பண்ணல. இந்தியா வரும் பொது நிச்சயம் மீட் பண்ணலாம்.

anujanya said...

@ வால்பையன்

ஏன்? ஏன் ? ஏன் இந்தக் கொலைவெறி குரு? ஆள விடுங்க.

நன்றி நந்தாவுக்குச் சொல்லுங்கள்.

@ ஸ்ரீதர்

ஏதுடா, தல புகழுறாரோன்னு நினச்சா, குசும்பு :). அப்படி எல்லாம் எழுத நான் என்ன பைத்தியக்காரனா ? (pun intended :)))) )

@ சென்ஷி

தேங்க்ஸ் சென்ஷி.

@ செய்யது

நன்றி செய்யது. நீங்களும் முயற்சி செய்யலாம்.


@ வேலன்

சுட்டி கொடுக்கணும்கறீங்க. செஞ்சுடுவோம். மத்தபடி, வீட்டில புலி, பூனை, எலி எல்லாம் பொதுவுல எதுக்கு :))

@ நேசமித்ரன்

நன்றி நேசமித்ரன் - வாழ்த்துக்கும், வருகைக்கும்.

@ யாத்ரா

எங்களுத்தான் பெருமை யாத்ரா. நன்றி.

@ ஜமால்

//சட்டெனெ விளங்கிய கவிதைகள் ..//

வலிக்காமல் விமர்சிக்கும் கலை உங்களைப்போல் எல்லோருக்கும் வந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் ஜமால் !

சுட்டி கொடுத்து விடலாம். எல்லாப் புகழும் நந்தாவுக்கே! நன்றி ஜமால்.

@ மேடி

பின்னூட்டக் குசும்பில் நீதாம்பா நம்பர் ஒன். ஐயோ பாவம், உன் கிட்ட செய்யது மாட்டிக் கிட்டாரா!

@ கும்க்கி

நன்றி தல

@ மஹேஷ்

யோவ், இதுக்கு தான் நிறைய பேர் இருக்காங்களே. நன்றி மஹேஷ்.

@ தண்டோரா

நன்றி தண்டோரா. பெருமை நந்தாவுக்குத்தான்.

அனுஜன்யா

anujanya said...

@ அசோக்

நன்றி. நந்தாவைப் பற்றி மீள் வாசித்து நல்ல கருத்து சொன்னதற்கு நன்றி. நந்தா ரொம்ப நல்லா எழுதுகிறார் அசோக். அவசியம் படிக்க வேண்டும்.

@ ராம்

நன்றி தல. உங்க கதையைப் போலவே?

@ நந்தா

வாங்க ஹீரோ. அசோக்? அவர் நம்ம ஆளு. இதெல்லாம் அரசியல்ல சாதரணமப்பா.

போடுங்க ஒளிகப்பதிவு தொகுப்பை. நன்றி நந்தா.

@ தமிழ்ப்பரவை

நன்றி பரணி. சாரிபா, கொஞ்சம் அலுவலக ஆணிகள். அவசியம் கதை படிக்கிறேன்.

@ ஜ்யோவ்

ஓகே பாஸ். சுட்டி கொடுத்திடலாம். விக்கி கவிதைகள் நீங்க போட்டாதான் அழகு :)

@ வண்ணத்துப்பூச்சியார்

நன்றி தல.

@ அகநாழிகை

//உங்களிடமிருந்து வரும் கவிதை ஆக்கங்களையும், கவிதை அறிமுகங்களையும் யாரும் கேலி பேசுவதில்லை.//

இவ்வளவு வெள்ளந்தி மனிதரா நீங்கள் வாசு? கார்க்கி / வெண்பூ / குசும்பன் என்ற பிரமுகர்கள் பெயரைக் கேட்டதுண்டா நீங்கள்? :))))

நன்றி வாசு. பதிவின் சுவாரஸ்யத்துக்காக எழுதிய வரிகள். சட்டை செய்யாதீர்கள்.

@ ராமலக்ஷ்மி

பெங்களூர்வாசி நீங்க. உங்களுக்குத் தெரியாமல் இருக்குமா?

சரி சரி, எல்லோரும் போட்டுத் தாக்குவதால், சுட்டி கொடுத்து விடுகிறேன். என்ன, தொழில் நுட்பம் கொஞ்சம் பிரச்சனை.

நன்றி சகோ.

@ மணிகண்டன்

செம்ம குசும்புயா உமக்கு. இதுல சுந்தர வேற சீண்டறீங்க. நன்றி மணி. ஆம், நந்தாவை மிஸ் பண்ணாதீங்க.

அனுஜன்யா

anujanya said...

@ பரிசல்காரன்

//வலையில் எழுதுபவர்களிலேயே குறுகிய காலத்தில் எழுத்தின் வீச்சை அதிகரிக்கச் செய்தவர் நீங்கள் என்றால் அது சத்தியமான உண்மை. //

முதல்ல இத விட கேவலமா எழுதினேன் என்பதை எவ்வளவு அழகா சொல்லுறீங்க கே.கே. ச்சும்மா. தேங்க்ஸ் கே.கே. ஜ்யோவ் கூட ஒருமுறை தொலைபேசியில் கூப்பிட்டுச் சொன்ன விஷயம் இது. உண்மையோ, மிகையோ, இல்லை சுத்தப் பொய்யோ,கேக்க மகிழ்ச்சியாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கு.

//எத்தனை நாட்கள் எழுதினாலும் எனக்கெல்லாம் ஒரு மேம்பாடும் எழுத்தில் வரவில்லை. (எண்ணத்திலாவது வந்திருக்கிறதாவெனத் தெரியவில்லை)//
இதுக்கு நரசிம் பதில் சொல்லிட்டார். யோவ், உனக்கே ஓவராத் தெரியல இது?

//உங்கள் கவிதைகளும் எங்கோ வேறு யாராலோ சிறந்தவையெனக் கொண்டாடப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது.//

யோவ் கே.கே., மொக்கையில் இருந்து கிட்டே இப்படி சொல்லுறது எப்பேர்ப்பட்ட குசும்பு!

@ நரசிம்

ஒரு executive style பின்னூட்டம். ரசிக்கிறேன். Time management at its best. நன்றி தல.

@ அமித்து.அம்மா

வாவ், யாரும் பாக்கல. 'மிஸ்' பண்ணிட்டங்கன்னு நினச்சேன் :). You are juz too good A.A.

@ பரிசல்காரன்

//யோவ் நர்சிம்.. அத ஏன்யா ராங்குன்னீரு? அனுஜன்யா சந்தோஷமா இருந்தா பிடிக்காதே உங்களுக்கு? அவ்வ்வ்வ்வ்வ்//

உண்மையத்தான் சொல்லுறாரோ என்னவோ. ஏன்யா பொதுவுல மானத்த வாங்கறீங்க :)

@ வெங்கிராஜா

வெங்கி, என்னய்யா 'மூத்தவர்கள்'? யூத்தா இருந்தாலும்னு போடணும் :)

Wordpress bloggers? முடிந்தால் நீ கூட உன் பதிவில் போடலாமே வெங்கி? நன்றி.

@ ஆ.மூ.கி.

அதானே, நாம எழுதினதப் பத்தி .... சரி சரி. தேங்க்ஸ் பா.

@ மணிகண்டன்

சரி, சரி உங்க சமாளிப்பெல்லாம் இருக்கட்டும். இந்த மாதிரி பொது இடத்தை இதுக்கு யூஸ் பண்ணினா, இரண்டு சைடும் தலா ஐந்து பின்னூட்டம் போடணும்-தெரியும்ல?

அனுஜன்யா

Venkatesh Kumaravel said...

//வெங்கி, என்னய்யா 'மூத்தவர்கள்'? யூத்தா இருந்தாலும்னு போடணும் :)//
LOL

//Wordpress bloggers?//
சத்யராஜ்குமார்ன்னு ஒருத்தர் இருக்காரு... குறைஞ்சது அவர் பக்கம் பாருங்க. வலைக்குள் மழைன்னு ஒரு பக்கமும் கவனிச்சிருக்கேன் நல்லாயிருக்கும்.

//முடிந்தால் நீ கூட உன் பதிவில் போடலாமே வெங்கி?//
நாங்கள் குறிப்பிடுவதைக் காட்டிலும் நீங்கள் குறிப்பிடுகையில் அதன் வீச்சு அதிகம். நன்றி.

anujanya said...

நன்றி வெங்கி. அவசியம் பார்க்கிறேன்.

அனுஜன்யா