Thursday, June 25, 2009

கல்வளையம்


கழுத்தைச் சுற்றிய கல்வளையம்
பிறர் கண்களுக்குத் தென்படாமலும்
எனக்கும் புலப்படாமலும்
தொடர் பாரமாய்த் தொங்கியபடி ..
பால்ய நண்பர்களிடம்
பதட்டமாய் விசாரித்தேன்
மௌனத்துடன் நகர்ந்தவர்கள்
தூர தேசக் கடலில்
திரவியம் தேடுவதாகவும்
கடலாழத்தில் கல்வளையங்கள்
பாரம் தருவதில்லை என்றும்
கேட்டறிந்து கொண்டேன்
உள்ளூரில் பிழைப்பதற்கு
வித்தைகளைக் கைவிட்டு
விவசாயம் செய்தேன்
வியர்த்தேன் முதன்முதலாய்
பயிராக்கிய கரும்பிற்கு
தேடி வந்த எறும்புகள்
தேய்த்து விடக்கூடும்
கல்வளையத்தை
எறும்புகள் ஊறுகையில்
சமயோசித காகங்களின்
இடைத்தரகு எச்சங்கள்
சிகிற்சை நடக்கையில்
பக்கவிளைவுகள் இயல்பு தானே
காற்றின் திசைகள் மாறினால்
காகங்களுக்குத் தெரியும்
எச்சமிடும் புதுவிடம் எதுவென்று
கரும்புச் சாகுபடியில்
விளைந்த வியர்வைகள்
நெற்றிப் பட்டையுடன்
கழுத்துக் கல்லையும்
கரைத்துக் கொண்டிருந்தன

(கீற்று இதழில் பிரசுரம் ஆனது)

44 comments:

நட்புடன் ஜமால் said...

கீற்றுக்கு வாழ்த்துகள்


படிச்சிப்போட்டு வாறேன்!

நட்புடன் ஜமால் said...

உழைப்பின் உயர்வில் பல பாரங்கள் கறைக்கபடுகின்றன ...

நாமக்கல் சிபி said...

பாராட்டுக்கள்!

நாமக்கல் சிபி said...

//(கீற்று இதழில் பிரசுரம் ஆனது)//

உங்க சொந்த படைப்பு எதையாவது நான் எதிர்பார்க்கிறேன்!

ச.முத்துவேல் said...

நல்ல கவிதை. நல்ல மெசேஜ். கீற்றுவில் வந்ததற்கு வாழ்த்துகள்.

Mahesh said...

தயவு செய்து வேடிக்கைக்காக சொல்வதாக நினைக்க வேண்டாம்....

முதல் வாசிப்பிலேயே அர்த்தத்தை உணர்ந்து வாசித்து அனுபவிக்க முடிந்தது... அருமை !!! அருமை !!

ஜோசப் பால்ராஜ் said...

அருமையான கவிதை,
என்ன ஒரு அருமையன பொருள்,
வியக்க வைக்கும் மொழி நடை.

முரளிகண்ணன் said...

கவிதை அருமை.

\\//(கீற்று இதழில் பிரசுரம் ஆனது)//

உங்க சொந்த படைப்பு எதையாவது நான் எதிர்பார்க்கிறேன்\\

மாநக்கலாரே?

நாணல் said...

uzhaippin perumai unarthum azhagana kavithai.. vaazthukkal

நர்சிம் said...

மகேஷ்.

Thamira said...

அதுதான்.. அதேதான்.!

மணிஜி said...

”அனு”பவித்தேன்..”ஜன்”ம சாபல்யம் அடைந்தேன்”யா”

மங்களூர் சிவா said...

/
கடல் ஆழத்தில் கல்வளையத்தின் பாரம் தெரியாது
/
:(
கண்ணீர் வரவழைக்கும் வரிகள்

ஆ.சுதா said...

சிறப்பான கவிதை.
ரொம்ப நல்லா இருக்குங்க

மேவி... said...

kavithai nalla irukku dude

ரமேஷ் வைத்யா said...

நன்றாக இருக்கிறது அனுஜன்யா

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நல்ல கவிதை
வாழ்த்துகள்

-ப்ரியமுடன்
சேரல்

ராம்.CM said...

அழகான கவிதை.வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

வாசிக்கையிலே எனக்கும் மனதுக்குப் பிடித்துப் போயின ஆழமான இவ்வரிகள்:
//தூர தேசக் கடலில்
திரவியம் தேடுவதாகவும்
கடலாழத்தில் கல்வளையங்கள்
பாரம் தருவதில்லை//

என்றைக்கும் உழைப்பின் வியர்வையே கல் வளையம் கரைக்க வல்லது:
//கரும்புச் சாகுபடியில்
விளைந்த வியர்வைகள்
நெற்றிப் பட்டையுடன்
கழுத்துக் கல்லையும்
கரைத்துக் கொண்டிருந்தன//

மிக மிக அருமை அனுஜன்யா. வாழ்த்துக்கள்!

நந்தாகுமாரன் said...

நர்சிம்.

வால்பையன் said...

இதற்கான எதிர்கவுஜ நாளை எனது பதிவில் வெளிவரும்!

ஹிஹிஹி!

சின்ன சாம்புள்

(மூடி சுற்றிய பாட்டில்
பிறர் கைகளுக்கு அகப்படாமலும்
எனக்கு புலப்படாமலும்
தொடர் பம்பரமாய் சுத்தியபடி
பார் ஓனரிடம்
பவ்யமாய் விசாரித்தேன்)

Unknown said...

இன்னும்... இன்னும்...!!!


உங்ககிட்ட இருந்து இன்னும் எதிர் பார்கிறேன்...!!!


ம்ம்ம்... ம்ம்.... மேல சொல்லுங்க....!! உங்களால முடியும்......!!!

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!!!

Ashok D said...

அப்டியே தளபதி விஜய் stylla படிங்கன்னா..

அண்ணா... கவித சூப்பரங்கனா..

இந்த கல்வளையம் கல்வளையம்ன்னு சொல்லாறாங்களனா.. அப்டின்னா என்னாங்கனா..?(seriousa பதில்வேனும்னா)

அப்புறம் கல்லு.. வளையுமான்னா?
(இது சும்மா தமாஸ்னா, எல்லாம் இந்த வால்பையனால வந்த impactன்னா)

//கடலாழத்தில் கல்வளையங்கள்
பாரம் தருவதில்லை//
//காற்றின் திசைகள் மாறினால்
காகங்களுக்குத் தெரியும்
எச்சமிடும் புதுவிடம் எதுவென்று//

ரசித்தேன்.

na.jothi said...

நல்லா இருக்கு அண்ணா

Unknown said...

மிகவும் ரசித்தேன்..

//.. உள்ளூரில் பிழைப்பதற்கு
வித்தைகளைக் கைவிட்டு
விவசாயம் செய்தேன்..//

நடைமுறைப்படுத்துவதில் மிகவும் சிரமம்..

//.. (மூடி சுற்றிய பாட்டில்
பிறர் கைகளுக்கு அகப்படாமலும்
எனக்கு புலப்படாமலும்..//

ம்ஹும்...

கார்க்கிபவா said...

இப்ப படிச்சப்பதான் தெளிவா பிரிஞ்சுது தல..

ஓக்கே உஙக்ளுக்கு கவிதை சுமாரா வருது

வால்பையன் said...

உங்கள் கவிதைக்கான பரிசு

சரக்குப்பானை

அமிர்தவர்ஷினி அம்மா said...

கவிதை எனக்கு புரிஞ்சுடுச்சு, அதனால் சொல்றேன் அருமையா இருக்கு.

வால்பையன் said...

மூடி சுற்றிய பாட்டில்
பிறர் கைகளுக்கு அகப்படாமலும்
எனக்கு புலப்படாமலும்
தொடர் பம்பரமாய் சுத்தியபடி
பார் ஓனரிடம்
பவ்யமாய் விசாரித்தேன்
தள்ளாடி நடந்தவர்கள்
பக்கத்து கடையில்
சரக்கு அடித்ததாகவும்
இந்தகடை சரக்கு போதை
தருவதில்லை என்றும்
கேட்டறிந்து கொண்டேன்
உள்ளூரில் குடிப்பதற்கு
பட்டைகள் பலவாங்கி
ஊரல் போட்டேன்
வியந்தேன் முதன்முதலாய்
காய்ச்சிய சாராயத்தில்
ஊறிய பூச்சிகள்
செத்துவிடக்கூடும்
சரக்குபானையை
எறும்புகள் ஊறுகையில்
ரெண்டு கைகளையும்
மேலே தூக்கி
சப்பென்று அடித்தால்
பானை உடைவது இயல்புதானே
சரக்கின் சுவை மாறினாலும்
நாக்குக்கு தெரியும்
தண்ணி கலந்த நாதாறி யாருன்னு
சரக்கு காய்ச்சும்போது
விளைந்த வியர்வைகள்
கழுத்து முட்டும்வரை
குடிக்க வைக்கிறது!

பிரவின்ஸ்கா said...

அருமை .
கீற்றுவில் வந்ததற்கு வாழ்த்துகள்.

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

பிரவின்ஸ்கா said...

அருமை .
கீற்றுவில் வந்ததற்கு வாழ்த்துகள்.

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

ராஜ நடராஜன் said...

வாலோட எதிர்க்கவுஜதான் எனக்குப்புரியுது.எனது பார்வைக்கோளாறு காரணமாக இருக்கலாம்.மீண்டும் ஒரு முறை வர முயற்சிக்கிறேன்.

butterfly Surya said...

அருமை !!! அருமை !!

Unknown said...

(தமிழில் எழுதி வெகு நாளானதாலோ, அல்லது கூகிள் 'திரான்ச்ளிடேரடின்' காரணத்தாலோ, என் தமிழில் எழுத்துபிழை இருந்தால் .... இந்த சிறுவனை மன்னிக்கவும்!)

அனுஜன்யாவில் உன் நண்பனின் முதல் தினம் இன்று. நேற்றிரவின் இனிய நேரத்தின் விளைவல்லவோ இன்று காலை தலைசுற்றும் கள்வளையம்? அதை போக்க பரிகாரம் தேடிய எனக்கு கிடைத்தது மருந்து .. அனுஜன்யாவில் நான் சுவைத்தேன் கல்வளையம் என்ற கவிதை மருந்து. மேலும் அனுஜஞாவின் பக்கங்களை படித்தேன். நல்ல கருத்துக்கள். ஆனால். அனால்....

என்ன கொடுமையடா இது? (தமிழர் உரிமைகளை பற்றி) வெளிப்படையா சொல்ல வேண்டிய கருத்துக்கள் இப்படி மறைமுகமா சொல்ல வேண்டியுள்ளது! தட்டி கேட்க வேண்டிய உரிமைகளை சுற்றி வளைத்து நாசுக்காய் (அதாவது பதுங்கி பதுங்கி) கெஞ்சி கேட்க வேண்டியதாய் இருக்கு. என்ன கொடுமையடா இது? நல்லதுக்கு காலம் இல்லை. இறந்தாலும், இது ஒரு நல்ல துவக்கம்! இந்த ப்லோக் உரிம்யயாளரான என் நண்பன் பெருமைப்பட வேண்டிய முயற்சி.

என் நண்பன் துவங்கிய நல்ல காரியத்துக்கு என்னால் முடிந்த அளவுக்கு குரல் குடுக்கலாமே என்று இந்த ப்லோக் உலகத்தில் நுழைந்து இருக்கிறேன்.. தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்ற நம்பிக்கையுடன்..... இப்படிக்கு, அன்பே சிவம்!

Unknown said...

(தமிழில் எழுதி வெகு நாளானதாலோ, அல்லது கூகிள் 'திரான்ச்ளிடேரடின்' காரணத்தாலோ, என் தமிழில் எழுத்துபிழை இருந்தால் .... இந்த சிறுவனை மன்னிக்கவும்!)

அனுஜன்யாவில் உன் நண்பனின் முதல் தினம் இன்று. நேற்றிரவின் இனிய நேரத்தின் விளைவல்லவோ இன்று காலை தலைசுற்றும் கள்வளையம்? அதை போக்க பரிகாரம் தேடிய எனக்கு கிடைத்தது மருந்து .. அனுஜன்யாவில் நான் சுவைத்தேன் கல்வளையம் என்ற கவிதை மருந்து. மேலும் அனுஜஞாவின் பக்கங்களை படித்தேன். நல்ல கருத்துக்கள். ஆனால். அனால்....

என்ன கொடுமையடா இது? (தமிழர் உரிமைகளை பற்றி) வெளிப்படையா சொல்ல வேண்டிய கருத்துக்கள் இப்படி மறைமுகமா சொல்ல வேண்டியுள்ளது! தட்டி கேட்க வேண்டிய உரிமைகளை சுற்றி வளைத்து நாசுக்காய் (அதாவது பதுங்கி பதுங்கி) கெஞ்சி கேட்க வேண்டியதாய் இருக்கு. என்ன கொடுமையடா இது? நல்லதுக்கு காலம் இல்லை. இறந்தாலும், இது ஒரு நல்ல துவக்கம்! இந்த ப்லோக் உரிம்யயாளரான என் நண்பன் பெருமைப்பட வேண்டிய முயற்சி.

என் நண்பன் துவங்கிய நல்ல காரியத்துக்கு என்னால் முடிந்த அளவுக்கு குரல் குடுக்கலாமே என்று இந்த ப்லோக் உலகத்தில் நுழைந்து இருக்கிறேன்.. தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்ற நம்பிக்கையுடன்..... இப்படிக்கு, அன்பே சிவம்!

Unknown said...

(தமிழில் எழுதி வெகு நாளானதாலோ, அல்லது கூகிள் 'திரான்ச்ளிடேரடின்' காரணத்தாலோ, என் தமிழில் எழுத்துபிழை இருந்தால் .... இந்த சிறுவனை மன்னிக்கவும்!)

அனுஜன்யாவில் உன் நண்பனின் முதல் தினம் இன்று. நேற்றிரவின் இனிய நேரத்தின் விளைவல்லவோ இன்று காலை தலைசுற்றும் கள்வளையம்? அதை போக்க பரிகாரம் தேடிய எனக்கு கிடைத்தது மருந்து .. அனுஜன்யாவில் நான் சுவைத்தேன் கல்வளையம் என்ற கவிதை மருந்து. மேலும் அனுஜன்யாவின் பக்கங்களை படித்தேன். நல்ல கருத்துக்கள். ஆனால். அனால்....

என்ன கொடுமையடா இது? (தமிழர் உரிமைகளை பற்றி) வெளிப்படையா சொல்ல வேண்டிய கருத்துக்கள் இப்படி மறைமுகமா சொல்ல வேண்டியுள்ளது! தட்டி கேட்க வேண்டிய உரிமைகளை சுற்றி வளைத்து நாசுக்காய் (அதாவது பதுங்கி பதுங்கி) கெஞ்சி கேட்க வேண்டியதாய் இருக்கு. என்ன கொடுமையடா இது? நல்லதுக்கு காலம் இல்லை. இருந்தாலும், இது ஒரு நல்ல துவக்கம்! இந்த ப்லோக் உரிம்யயாளரான என் நண்பன் பெருமைப்பட வேண்டிய முயற்சி.

என் நண்பன் துவங்கிய நல்ல காரியத்துக்கு என்னால் முடிந்த அளவுக்கு குரல் குடுக்கலாமே என்று இந்த ப்லோக் உலகத்தில் நுழைந்து இருக்கிறேன்.. தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்ற நம்பிக்கையுடன்..... இப்படிக்கு, அன்பே சிவம்!

நேசமித்ரன் said...

அற்புதம் அனுஜன்யா..!

வேறென்ன சொல்ல கல்வளைய பாரம் அழுத்துகிறது

thamizhparavai said...

மூணாவது தடவை படிச்சப்போ ,குத்து மதிப்பா கவிதை புரிஞ்சிடுச்சு அனுஜன்யா சார்...
//
ஓக்கே உஙக்ளுக்கு கவிதை சுமாரா வருது//
ரிப்பீட்டு...
வாலோட எதிர் கவிதையும் நல்லா இருந்தது...

விநாயக முருகன் said...

அருமை. வாழ்த்துகள்

நந்தாகுமாரன் said...

இதை விடவும் உயிரோசையில் இன்று வெளியான கொன்றை வேந்தன் அபாரம் மிகவும் ரசித்தேன் :) அருமை

நந்தாகுமாரன் said...

sorry ... with respect to my previous comment ... I shouldn't have compared ...

Iyappan Krishnan said...

அட்டகாசம்னே...


மொக்கையில என்ன தான் கலாய்ச்சாலும், உங்களோட கவிதைகள் படிக்கும் போது என்னமோ செய்யுதுண்ணே

நன்றி நன்றி

anujanya said...

@ ஜமால்

நன்றி ஜமால் - கருத்துக்கும், வாழ்த்துக்கும் :)

@ சிபி

முதல்ல பாராட்டுறியேன்னு டவுட்டா இருந்தது. லொள்ளு? நல்லா இரு சிபி.

@ முத்துவேல்

நன்றி முத்து.

@ மஹேஷ்

நன்றி மஹேஷ். மகிழ்ச்சியா இருக்கு.

@ ஜோசப்

டேய், வேணாம்டா. அதை எல்லாம் அங்க வெச்சுப்போம்.

@ முரளி

நன்றி முரளி. இரண்டையும் ரசிப்பது போல இருக்கு :)

@ நாணல்

வாங்க சகோ. நன்றி.

@ நர்சிம்

இது நல்லா இருக்கே.

@ ஆதி

சரி சரி

@ தண்டோரா

:). நன்றி தல.

@ சிவா

நன்றி சிவா.

@ முத்துராமலிங்கம்

நன்றி முத்து.

@ MayVee

வாங்க கவிஞர். ரொம்ப நாளா ஆளக் காணோம்? நன்றி.

@ ரமேஷ்

வாவ், தலையின் அபூர்வ வருகை. நன்றி ரமேஷ்.

@ சேரல்

நன்றி சேரல்.

@ ராம்

நன்றி தல. உங்க tight schedule இல இதுக்கும் நேரம் ஒதுக்குவதற்கு நன்றி பாஸ்.

@ ராமலக்ஷ்மி

நன்றி சகோ. அனுபவித்துப் படிக்கிறீர்கள்.

@ நந்தா

மஹேஷ்-நர்சிம்-நந்தா : நன்றி

@ வால்பையன்

வாங்க குரு. எ.க. நல்லாவே இருக்கு :)

@ மேடி

லொள்ளுல உன்னைய விட்டா வேற யாரு? நன்றி மேடி

@ அருணா

தேங்க்ஸ் ப்ரின்சி.

@ அசோக்

'கல்வளையம்' என்பது ஒரு குறியீடாகப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் Stone around the neck என்போமே. ஒரு மாதிரி பாவத்தின் சம்பளம் எனலாம். நன்றி அசோக்.

@ J

நன்றி புன்னகை :)

@ பட்டிக்காட்டான்

நன்றி பாஸ். உங்கள் முதல் வருகை?

@ கார்க்கி

தன்யனானேன் சுவாமி.

@ அமித்து.அம்மா

நன்றி சகோ. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.

@ வால்பையன்

உங்க ரவுசு தாங்க முடியல சாமி :))

@ பிரவின்ஸ்கா

நன்றி நண்பா. (இரண்டு முறை?)

@ ராஜ நடராஜன்

வாங்க தல. உங்க முதல் வருகை? புரியாட்டா பரவாயில்ல. திரும்ப வாங்க :) நன்றி

@ வண்ணத்துபூச்சியார்

வாவ். இன்னிக்கு என்ன பெரிய தலைங்க வருகையா இருக்கு! நன்றி பாஸ்.

@ அன்பே

வாங்க அன்பே சிவம். கட்டுண்டோம் பொறுத்திருப்போம். நன்றி தோழா.

@ நேசமித்ரன்

ஒவ்வொருமுறை நீங்க வரும்போதும் குதூகலம். அவ்வளவு அழகான பெயர். இது போலவே இன்னொரு நண்பன் பெயர் 'திகழ்மிளிர்' - இதுவும் எவ்வளவு அழகு!

நன்றி தோழா. உங்க பக்கம் வந்தே ஆகணும். நிறைய அரியர்ஸ் :((

@ தமிழ்ப்பறவை

குத்து மதிப்பா புரியுதுல்ல? அது போதும். நன்றி.

@ விநாயகமுருகன்

நன்றி வி.மு. உங்க தளத்துக்கும் வரணும்.

@ நந்தா

ஹாய், நீங்க சொல்லி தான் எனக்குத் தெரிஞ்சது. குஷியா இருக்கு என்பதையும் சொல்லணும். அதனால என்ன நந்தா? எனக்குத் தவறாத் தெரியல.

Thanks anyway buddy.

@ ஜீவ்ஸ்

வாய்யா காமிராமேன்! அங்க அவ்வளவு அட்டகாசம். இங்க இவ்வளவு பவ்யம். நன்றி ஜீவ்ஸ்.