Tuesday, June 10, 2008

இரவின் இறைவன்

மாலை வெய்யிலில்
மஞ்சள் பரிதி

கொஞ்சங் கொஞ்சமாய்
செந்நிறமானான்.

கருநிற இருட்டு துரத்திவிட
மறைந்தே போனான்

எங்கே சூரியன் என
மகளிடம் கேட்டேன்
பகல் சூரியன்
பக்கத்து தேசத்தில்;
இரவு சூரியன்தான்
இப்போதிருப்பது என்றாள்.
காண்பி என்றேன்;
பகலவன் போல
பகட்டுகாரனில்லை
இந்த இரவு சூரியன்;
இருக்குமிடம் தெரியாமல்
இருள் வழங்குவான் என்றாள்.

2 comments:

அகரம் அமுதா said...

நல்ல கவிதையாக்கம். வாழ்த்துக்கள்.

anujanya said...

அமுதா, தொடர் ஊக்கத்துக்கு மிக்க நன்றி.