Monday, June 16, 2008

எண்கள் யுகம்

எண்களும் பொத்தான்களும்
எங்கும் துரத்துகின்றன
கைபேசியில் பேச; தொலைக்காட்சி காண;
கால்குலேட்டரில் கழிக்க; கணினியை இயக்க;
வங்கியில் பணமெடுக்க;
குளிரைக் கூட்ட - உணவை சூடூட்ட
காற்றை வேகமாக்க - இசையில் லயிக்க
எண்களும் பொத்தான்களும் !
கட்டை விரலிலும் ஆள்காட்டியிலும்
ரேகைகள் அழிந்து எண்களின் பிசுபிசுப்பு !
இப்படி எண்ணியபடி லிப்டில் நுழைந்தேன்
மாறுதலுக்கு நடுவிரலால் ஐந்தை அழுத்த
மூன்று தாண்டுகையில் இருட்டாகி நின்றது
நடுவிரலுக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்.
கைபேசியை எடுத்தபடி.

11 comments:

அகரம் அமுதா said...

கணக்கைப்பற்றி இப்டி கணக்குப் பண்ணிட்டீங்களே! உம்! கவிதை அருமை

ச.முத்துவேல் said...

கட்டை விரலிலும் ஆள்காட்டியிலும்
ரேகைகள் அழிந்து எண்களின் பிசுபிசுப்பு !

கவித்துவமான கற்பனை.மிகவும் ரசிக்கிறேன்.

anujanya said...

நன்றி முத்துவேல், இந்தத் தொடர் ஊக்கத்திற்கு.

அனுஜன்யா

மங்களூர் சிவா said...

மீ தி 4-த்
அட இங்கயும் எண் வந்திருச்சே!

:))

anujanya said...

நன்றி அமுதா.

சிவா, உங்கள் முதல் (யு, த பர்ஸ்ட்) வருகை. நன்றி.

MSK / Saravana said...

நல்லா இருக்கு ..
:)

Really fantastic..

anujanya said...

சரவணன்,

நன்றி

அனுஜன்யா

ரௌத்ரன் said...

ரொம்ப இயல்பா இருக்குங்க உங்க கவிதை....

anujanya said...

நன்றி ரௌத்ரன்

அனுஜன்யா

சந்தனமுல்லை said...

கவிதையாவே யோசிப்பீங்களோ??
நல்லாருக்கு...தொடரட்டும்..கவிதை மழை!!

anujanya said...

நன்றி சந்தனமுல்லை.

அனுஜன்யா