Thursday, March 12, 2009

இடம் பிடித்தல்விலகியிருந்த விருட்சங்களாலும்
தீண்டாத கொம்புகளாலும்
தரையிலேயே படர்ந்திருந்தன
பலகாலமாய்க் கொடிகள்;
செயற்கைப் பற்றுதலில்
கூரை ஏறிய கொடிகளில்
பளபளக்கத் துவங்கின
பரங்கியும் பூசணியும்;
மனங்குமைந்த மரஞ்செடிகள்
முறையிட்டன மேலிடத்தில்;
பின்வந்த வைபவத்தில்
மரத்தில் காய்த்த மாவும்
செடியில் பூத்த ரோஜாவும்
இலை தலை என்று இடம் பிடிக்க
கோலத்தைக் காவல்செய்த
பரங்கிப்பூ கண்டது
சாணியில் இருத்தலின் சுகம்;
காய்த்திருந்த பூசணிகட்கும்
வாய்த்ததென்னவோ வாசல்தான் -
கழிந்த திருஷ்டிக்கு
சிதறடிக்கப்பட்டு வீழ்ந்தவொன்று;
பின்வரப்போகும் திருஷ்டிக்கு
விகாரமாய்த் தொங்கிய மற்றொன்று.
மனம் நொந்த கொடிகளிடம்
அண்டை வீட்டு பழக்கொடி
திராட்சைகள் உயர்ந்தால்
நரிகளுக்கு புளிக்குமென்றது

('புதுவிசை' இதழில் பிரசுரமானது)

40 comments:

வாழவந்தான் said...

நல்ல கவிதை.
இதுக்கு மேல இதை விமர்சிக்க எனக்கு தகுதியிருக்கான்னு தெரியலை

www.narsim.in said...

அதான் புதுவிசையில் பிரசுரமாகிவிட்டதே.. நல்லா இருந்ததால்தானே..

//பரங்கிப்பூ கண்டது
சாணியில் இருத்தலின் சுகம்//

//பின்வரப்போகும் திருஷ்டிக்கு
விகாரமாய்த் தொங்கிய மற்றொன்று.
மனம் நொந்த கொடிகளிடம்
அண்டை வீட்டு பழக்கொடி
திராட்சைகள் உயர்ந்தால்
நரிகளுக்கு புளிக்குமென்றது//

ம்ம்.. தொடருங்கள்

முரளிகண்ணன் said...

வேறென்ன சொல்ல..

அருமை

மண்குதிரை said...

வாசித்தேன். ரசித்தேன்.
வாழ்த்துக்கள் அனுஜன்யா.

பரிசல்காரன் said...

எனக்கல்ல.. சமீபத்தில் நமது நண்பர் ஒருவருக்கு வந்த மெயிலில் உங்கள் நட்பு வட்டாரத்தில் எல்லாரும் நன்றாக எழுதுகிறீர்கள்.. ஆனால் எங்கே பார்த்தாலும் சூப்பர், ஆஹா, ஓஹோ என்று பின்னூட்டம் போடுகிறீர்கள். கடுப்பாக இருக்கிறது’ என்று ஒருவர் அனுப்பியிருக்கிறார்.

இப்போ.. இப்படி ஒரு நல்ல கவிதையப் படிச்சுட்டேன்... ‘தம்பி’ மாதவன் ஸ்டைலில் கேட்கிறேன்.

‘இப்ப நான் என்ன செய்ய?’

புதியவன் said...

//திராட்சைகள் உயர்ந்தால்
நரிகளுக்கு புளிக்குமென்றது//

நல்லா இருக்கு...

யாத்ரா said...

//கோலத்தைக் காவல்செய்த
பரங்கிப்பூ கண்டது
சாணியில் இருத்தலின் சுகம்//


இந்த வரிகள் எங்கெங்கெல்லாமோ இட்டுச் செல்கிறது

VIKNESHWARAN ADAKKALAM said...

அழகான வர்ணிப்பு... கொஞ்சம் நிறுத்து படிக்கிற மாதிரி இருந்தா இன்னும் நல்லா இருக்கும்...

வளர்மதி said...

நன்றாகவே வந்திருக்கு அனுஜன்யா.

என்றாலும், இன்னும் கொஞ்சம் சிக்கனம் கடைப்பிடித்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

நட்பின் நிமித்தம் சில இடங்களைச் சுட்டிக்காட்டலாமா :)

அன்புடன்,
வளர் ...

வளர்மதி said...

அடடா ... ஏன் என் புன்னூட்டத்தை இன்னும் வெளியிடலை; போட்டு அஞ்சு நிமிஷமாச்சு; கேஸ் போட்டுடுவேன்; இல்ல இந்த ”திமிர் பிடிச்ச கவிஞன் என் புன்னூட்டத்தை வெளியிடல்லை” ன்னு ஒரு பதிவு போட்டுவேன் ;)

Unknown said...

// இடம் பிடித்தல் //


தலைப்ப பார்த்தனையும் இது ஏதோ அரசியல் ப்லாகாட்ட இருக்குமோன்னு நெனச்சேன் .....!!! " இடம் பிடித்தல் " அப்படீங்கறத ........ ஏதோ தொகுதியில கட்சி எடம் புடிக்கறதுன்னு நெனச்சிட்டேன் .....!!! நெம்ப சாரி தம்பி....!!!


கவிதை நெம்ப சூப்பரா இருக்குது கண்ணு ....!!!!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இந்தக் கவிதை எனக்குப் பிடித்திருக்கிறது. நீங்க நல்லா எழுதியிருக்கீங்கன்னு சந்தோஷமா இருக்கு.

இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம்... வார்த்தைகளைக் கோர்ப்பதில் கவனம் செலுத்தினால் நல்லா இருக்கும். கவிதை ஒரு தொழில்நுட்பமும்கூடத்தானே.

வால்பையன் said...

திறந்திருந்த சரக்கும்
திறக்காத வாட்டர் பாட்டிலும்
டேபிளில் நின்றிருந்தன
பலகாலமாய் விற்காத
சுண்டல் தட்டில்,
கூடவே சிக்கன் துண்டுகளும்
நாறத் துவங்கின
சிகரெட்டோ பீடியோ;
நல்ல கம்பெனி சரக்குக்கு
தெறியாதவர் இங்கெதுக்கு;
எதிரிந்த டேபிளில்
பாதி தீர்ந்த குவாட்டரும்
சாய்ந்து ஓடிய
வாட்டர் பாட்டிலும்
போதையின் சுவையை
குறிப்பில் காட்டியது.
பூமியில் வாழ்வெதென்பது
துக்கத்தை மறத்தலும்
சுகத்தில் முதத்தலும்.
கழிந்த வாழ்க்கை
எடுக்கப்பட்ட வாந்தி;
பின்வரப்போகும் வாந்தி
கழிய போகும் நாளில் மற்றொன்று.
மனம் நொந்த நாட்களில்
அண்டை வீட்டில்
கடன் வாங்கியாவது
சரக்க அடிச்சிரு


என் பதிவிலும் போட்டுகிடட்டுமா தல!

ச.முத்துவேல் said...

நானொரு கோணத்தில், அரசியல் கவிதையாகப் புரிந்துகொண்டு என் கருத்துக்களை சொல்கிறேன்.(என் பார்வையில் இருப்பதுபோல், நீங்கள் எழிதியிருக்கமாட்டீர்கள் என்கிற திடமான நம்பிக்கையோடு.புதுவிசையும் வெளியிட்டிருப்பது மேலும் நம்பிக்கை தருகிறது).

ஏற்கத் தயங்கும் இடங்கள்..
1.செயற்கைப் பற்றுதல்..
2.கொடிகளில் காய்க்கிற எவையும் இலைக்கும், தலைக்கும் போகதா?

நட்புடன்
முத்துவேல்
அறிமுகத்திற்கு(புகைப்படம்) நன்றி

ராமலக்ஷ்மி said...

இடம் பிடித்தல் வெகு அருமைங்க. இயல்பாக வந்து விழுந்திருக்கின்றன வரிகள். வாழ்த்துக்கள்!

மாசற்ற கொடி said...

"கொடி" பற்றிய கவிதை நினைவுகளை சுத்தி சுத்தி வருது, திரும்ப திரும்ப யோசிக்க வைப்பதற்கு நன்றி.

வால் அட்டகாசமாக ஒரு எதிர் பதிவிட்டிருக்கிறார். அதற்கும் மூல காரணம் நீங்கள் என்பதால், ........................ one more நன்றிதான் .

அன்புடன்
மாசற்ற கொடி

ச.முத்துவேல் said...

உங்களின் சார்பு நிலை எனக்குத்தெரியாது என்பதால் அப்படியொரு மாற்றுக்கருத்தை பதிவிட்டிருந்தேன்.ஒருவேளை, நான் நினைப்பதுபோல் நீங்கள் எழுதியிருந்தால்..? என்பதே காரணம்.அப்படியொரு சூழலில், நேர்மையோடு என் கருத்தைப் பதிவிடுவதே சரி என்று நம்பினேன்.

என் பார்வையிலேயே கோளாறு என்றால்..?

பின்னூட்டம் இட்டுவிட்டு மனைவியோடு மாலை நடை சென்றிருந்தேன். மனம் முழுக்க இப்படிச் செய்திருக்க வேண்டாம் என்றே உறுத்திக்கொண்டிருந்தது.அதனால் இதையும் எழுதிவிட்டேன். என் 2 பின்னூட்டங்களையும் வெளியிடாமல், தவிர்த்துவிடவும். நன்றி. நட்புடன்
முத்துவேல்.

Unknown said...

நல்லா இருக்கு.

திருஷ்டிக்கும்
வாசலில் தொங்குவதற்க்கும்
நானென்று சொல்லி
கவிதை எழுதி சாப்பிடும்
சோற்றில் ”என் முழு உருவத்தை”
மறைத்தாலும் மறைக்க
முடியாது
பூசணி அல்வா
பூசணி புளிக்கூட்டு
பூசணி தயிர் பச்ச்டி
பூசணி குழம்பு
பூசணி இனிப்பு மிட்டாய்
பூசணி கல்யாணக் கூட்டு

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே நீங்க இப்பிடி அருமையா எழுதுறதப் பார்க்கும் போதெல்லாம் எனக்கும் கவிதை எழுதும் உணர்வு வந்து விடுகின்றது. உங்கள் கவிதைகளில் ஒரே பிழை அதுதான்.

Thamira said...

வார்த்தைக்கோர்வையை ரசித்தேன்.. மேலோட்டமாகவே ஏதோ விஷயங்களுடன் ஒப்பிட்டுப்பார்த்து விளங்கிக்கொள்ள முயற்சித்தேன். இருப்பினும் எந்த அடிப்படையில் இது உருவாகியிருக்கிறது என அறிந்துகொள்ள விரும்புகிறேன். அதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. (என்ன நெம்ப சீரியஸாக பின்னூட்டி விட்டேன் போலருக்கே..)

ராம்.CM said...

நல்ல கவிதை...

வாழ்த்துக்கள் அனுஜன்யா...

Anonymous said...

ஏற்கனவே ’புது விசை’யில் படித்திருக்கிறேன்.

நன்றாக இருக்கிறது.

Unknown said...

ரொம்ப நல்லா இருக்கு அண்ணா :)))

கணினி தேசம் said...

மிகவும் ரசிக்க வைத்தது.
நன்றி.

கணினி தேசம் said...

// கே.ரவிஷங்கர் said...

நல்லா இருக்கு.

திருஷ்டிக்கும்
வாசலில் தொங்குவதற்க்கும்
நானென்று சொல்லி
கவிதை எழுதி சாப்பிடும்
சோற்றில் ”என் முழு உருவத்தை”
மறைத்தாலும் மறைக்க
முடியாது
பூசணி அல்வா
பூசணி புளிக்கூட்டு
பூசணி தயிர் பச்ச்டி
பூசணி குழம்பு
பூசணி இனிப்பு மிட்டாய்
பூசணி கல்யாணக் கூட்டு//

ரிப்பீட்டு..!!

பூமகள் said...

இடம் பிடித்தல் - இந்த தலைப்பே கவிதையின் கருவை அழகாக காட்டியிருக்கிறது..

பூசணிக் கொடியைச் சுற்றி சுற்றி பின்னப்பட்ட வார்த்தையாடலும் கவிக் கருவும் சொக்க வைக்கிறது..

என்னென்று சொல்ல இனி.. மேல் சொல்லப்பட்டுள்ள எல்லா புகழுரைகளையும் வழிமொழிகிறேன்.

பாராட்டுகள் அனுஜன்யா. :)

அமுதா said...

அருமை

தமிழன்-கறுப்பி... said...

எப்படிய்யா இதையெல்லாம் கற்பனை பண்றிங்க..(மும்பைல இருக்கிறிங்க)

தமிழன்-கறுப்பி... said...

next post?

Prabhu said...

நல்லா இருக்குன்னு. சொல்றத விட என்ன நல்லாருக்குன்னு சொல்றேன்.(பரிசல் பின்னூட்டம் தான் காரணம்.) ஒரு visualisation இருந்தது. ஒரு தோட்டத்த படம் பிடிச்சு காண்பிக்கிறமாதிரி இர்ந்தது. இது இல்பொருள் உவமை அணியா? ஹி... ஹி... சின்ன வயசில படிச்சது...

anujanya said...

@ வாழவந்தான்

நன்றி. உங்களுக்கு இல்லாத தகுதியா :)

@ நர்சிம்

நன்றி தல

@ முரளிகண்ணன்

நன்றி முரளி

@ மண்குதிரை

பாராட்டுக்கு நன்றி

@ பரிசல்

//சூப்பர், ஆஹா, ஓஹோ என்று பின்னூட்டம் போடுகிறீர்கள். கடுப்பாக இருக்கிறது’ என்று ஒருவர் அனுப்பியிருக்கிறார்.//

'அருமை. பிரமாதம்' என்று சொல்லலாமே :)

நன்றி கே.கே.

@ புதியவன்

நன்றி

@ யாத்ரா

ஆம். இட்டுச் செல்ல வேண்டும் :) நன்றி யாத்ரா.

@ விக்னேஷ்வரன்

நன்றி விக்கி.

@ வளர்மதி

நன்றி வளர். தாராளமா சுட்டிக்காட்டலாம். உங்களுக்கு இல்லாத உரிமையா!

ஒரு பத்து நிமிஷமாவது ஆபிஸ் வேல பக்க விடமாடேங்கறீங்க :)

@ லவ்டேல் மேடி

நன்றி. உங்க ப்ரோபைலில் ஒரு நாற்பது வயது கம்மியாகக் காண்பிக்கிறீர்களோ!:)

@ ஜ்யோவ்

நன்றி குரு. கல்லைக் கண்டால் ... கதைதான். கருத்து இருந்தா தொழில் நுட்பப் பிரச்னை. தொழில் நுட்பம்/புத்திசாலித்தனம் இருக்கும்போது கற்பனை வறட்சி. பார்ப்போம் :))

@ வால்பையன்

உங்க எதிர் கவிதை இன்னும் சூப்பர். பாருங்க அதுக்கு எவ்வளவு வரவேற்பு!

@ முத்துவேல்

நாம் இருவரும் விரிவாகப் பேசிவிட்டோம். தற்போது உங்களுக்கு சந்தேகம்/வருத்தம் எதுவும் இல்லை என்பதில் மகிழ்ச்சி. உங்களைப் போல எண்ணி, கேட்க யோசித்து, கேட்காமலே சென்று இருக்கக்கூடிய சிலருக்காக :

முதல் கேள்வியான செயற்கைப் பற்றுதல்: செயற்கையாகப் பற்றுதல் தேவைப்பட்டது ஏன்? பல விலகல்களாலும், தீண்டாமைகளாலும் தானே? அவற்றில் கொடிகளுக்கு அவமானம் ஏதுமில்லை.

இரண்டாவது: "கொடிகளில் காய்க்கிற எவையும் இலைக்கும், தலைக்கும் போகாதா?"
போகும் நிச்சயமாக - அனுமதிக்கப் பட்டால். ஆனால் பெரும்பாலும், அவை கூடிய வரையில் நசுக்கப்பட்டே இருக்கின்றன. Their successes are acknowledged with lot of grudge. Not wholeheartedly என்பதைச் சொல்ல வந்தேன்.

உங்கள் புரிதலுக்கும், கேட்க நினைத்ததை உரிமையுடன் கேட்டதற்கும் நன்றிகள் பல முத்து.

@ ராமலக்ஷ்மி

உங்கள் தொடர் பாராட்டு எப்பவும் போலவே உற்சாகம்தான்.

@ மாசற்ற கொடி

'கொடி' பற்றி புகழ்வதால் கூடுதல் மகிழ்ச்சியா? என்ன இருந்தாலும் நீங்க 'வாலு'க்கு தான் 'கொடி' பிடிக்கிறீர்கள் :)

@ ரவிசங்கர்

நன்றி ரவி.

@ அப்துல்லா

உன்னோட உள்குத்து புரியுது அப்துல் :)) நன்றி தோழா.

@ தா.(எ) ஆ.

//எந்த அடிப்படையில் இது உருவாகியிருக்கிறது என அறிந்துகொள்ள விரும்புகிறேன்.//

முத்துவேலுக்கு ஒரு சிறு விளக்கம் கொடுத்திருக்கேன். புரியுதான்னு பாருங்க. இல்லைனா 'சாட்'ல வாங்க. பெரிய பொழிப்புரை எல்லாம் கூடாதுன்னு குருஜி 144 போட்டு விட்டார் :)

@ ராம்

நன்றி ராம்.

@ வேலன்

நன்றி வேலன்.

@ ஸ்ரீமதி

நன்றி ஸ்ரீ

@ கணினி தேசம்

நன்றி பாராட்டுக்கும், பின் தொடர முடிவு செய்ததற்கும் :)

@ பூமகள்

ஒரு கவிதாயினி பாராட்டினால் மகிழ்ச்சியே தனிதான். நன்றி பூமகள்.

@ அமுதா

நன்றி அமுதா

@ தமிழன்

கொடிகள், செடிகள், மரங்கள் எல்லா இடங்களிலும் ஒண்ணுதான் தல. நன்றி.

"Next Post" - இதுக்கே தாவு தீருது. கற்பனை வறட்சி தல. பார்ப்போம்.

@ பப்பு

நன்றி. உங்கள் முதல் வருகை? அணி இலக்கணம் அவ்வளவு தெரியா விட்டாலும், 'இல் பொருள் உவமை அணி' இல்லை என்ற அளவு தெரியும் :)
கொஞ்சம் பூடகமாகச் சொல்லப் பட்ட வரிகள்.
'பின் தொடர்வதற்கும்' நன்றி.

அனுஜன்யா

மேவி... said...

kavithai nalla irukkupaa...
:-))

மேவி... said...

present sir

சிவக்குமரன் said...

அருமை!!

MSK / Saravana said...

கவிதை நல்லா இருக்குங்க்னா.. :)

வாலின் கவிதை செம அட்டகாசமா இருக்கு. ;)

கார்க்கிபவா said...

//ஆனால் எங்கே பார்த்தாலும் சூப்பர், ஆஹா, ஓஹோ என்று பின்னூட்டம் போடுகிறீர்கள். கடுப்பாக இருக்கிற//

அவர் பேர சொல்லுங்க சகா.. நான் போய் அவரது பதிவுல குப்பை, கண்றாவினு போட்டுட்டு வரேன்

உயிரோடை said...

ச‌த்திய‌மா புரிய‌லை. என‌க்கெல்லாம் புரிய‌ற‌து போல‌ க‌விதை எழுங்க‌ளேன் அண்ணா

அமிர்தவர்ஷினி அம்மா said...

மனம் நொந்த கொடிகளிடம்
அண்டை வீட்டு பழக்கொடி
திராட்சைகள் உயர்ந்தால்
நரிகளுக்கு புளிக்குமென்றது //

நல்ல வரிகள்.

இடம் பிடித்தல் - முதலும், முடிவும், இடைப்பட்ட வரிகள் அனைத்தும் என் பார்வையில்
பெண்ணீயக் கவிதை போல் தெரிகிறது.

anujanya said...

@ MayVee

நன்றி. அங்க வரணும்.

@ சிவக்குமாரன்

உங்கள் முதல் வருகை? நன்றி

@ சரவணன்

நன்றி சரா. வால் பற்றித் தெரிந்தது தானே! நாம மாங்கு மாங்குன்னு எழுதினா, சுலபமா எதிர் கவிதை எழுதுறார் :)

@ கார்க்கி

//அவர் பேர சொல்லுங்க சகா.. நான் போய் அவரது பதிவுல குப்பை, கண்றாவினு போட்டுட்டு வரேன்//

'குப்பை, கண்றாவி' எல்லாம் இப்ப என் பதிவுலையே போட்டு விட்டாயே! :)))

@ மின்னல்

நாங்களும் உங்க பதிவுல அதைத் தான் சொல்றோம் :)

அனுஜன்யா

anujanya said...

@ அமித்து.அம்மா

வாங்க. பன்முகத்தன்மை உள்ள கவிதை ஆக்கிட்டீங்க. உன்னிப்பா கவனிச்சா, வேறு ஒன்றும் புரியும் :)

நன்றி அமித்து.அம்மா.

அனுஜன்யா