Thursday, August 13, 2009

புனரபி


உள்ளே இருந்தேன்
அதாவது வெளியே
அரங்குக்கு மிக சமீபத்தில்
மிதந்து கொண்டிருந்தேன்
ஒலிச்சித்திரம் கேட்ட
சில நாட்களுக்குப் பின்
திரையரங்கு என்னை
வாரிச்சுரிட்டி உள்ளிழுத்தது
கண்டிராத பலர்
நடித்துக்கொண்டே இருந்தனர்
இயக்குனர் இருப்பதாகச்
சொல்லப்பட்டாலும்
தங்களுக்கான வசனங்கள்
தாமாகவே பேசினர்
முதலில் காட்சிகளைக்
காணப் பழகியவன்
பிறகு நடிக்கவும் துவங்கினேன்
பல வேடங்களுக்குப்பின்
சிலரின் வெளியேற்றமும்
வேறு சிலரின் புது வருகையும்
உண்டாக்கிய அச்ச தினங்களில்
ஒரு நாள் திரையரங்கு
என்னையும் வாரிச்சுருட்டி
வெளியே துப்பியது
அரங்கத்துள் சிலர் என்
நடிப்பை விமர்சித்தனர்
இலேசாக உணர்ந்தாலும்
சில காட்சிகளில்
இன்னும் நன்றாக
செய்திருக்கலாம்
என்றெண்ணியபடி
வெளியே மிதந்தேன்
அதாவது உள்ளே

46 comments:

அத்திரி said...

உள்ளேன் அண்ணாச்சி

நேசமித்ரன் said...

அனுஜன்யா

நானும் வெளியே மிதக்கிறேன் அதாவது உள்ளே
அருமை ..! இது போன்ற கவிதைகள் வாசித்து நாள் மிக ஆயிற்று

T.V.ராதாகிருஷ்ணன் said...

முதல் முறை படித்ததும் புரிந்து விட்டது..அருமை..

விநாயக முருகன் said...

உலகமே ஒரு நாடகமேடை.
கவிதை அருமை

Mahesh said...

soul searching... huh??

Anonymous said...

//இன்னும் நன்றாக
செய்திருக்கலாம்//

இந்த ஒரு எண்ணம்தான் வாழ்வை மென்மேலும் செம்மையாக்கிச் செல்கிறது. இழந்த சந்தர்ப்பங்கள் மீண்டும் கிட்டாவென அறியும்போது இழப்பின் வலி கூடுகிறது.

சமயங்களில் உள்ளே வெளியே விளையாட்டில் நாம் உணர
மறு(ற)ப்பது தற்போதிருப்பது எங்கேயென.

நல்ல கவிதை. அதென்ன எழுதிய கவிதை. பிறவெல்லாம் மண்டபத்தில் யாராவது எழுதிக் கொடுத்ததா?

Vidhoosh said...

அருமையான கவிதை. அருமையான பெயர். பிறப்பை இவ்வளவு அழகாக சொல்ல முடியுமா?
-வித்யா

ஆ.சுதா said...

கவிதையின் கடைசி வரி எனக்கு புரியவில்லை,சட்டென்று படித்திலா என்னவோ தெரியவில்லை, மீண்டும் வந்து படித்து புரிந்து கொள்வேன்.

na.jothi said...

கவிதையா சொல்லி மிதக்க ஆரம்பிச்சுட்டிங்க

சிவக்குமரன் said...

நல்லாருக்குங்க....

Ashok D said...

நன்றாக ரசித்தேன் உள்ளே.
அதாவது உள்ளே இருப்பதும்
வெளியே...

Ashok D said...

6வது ஓட்டு என தாக்கும்...

இரவுப்பறவை said...

இப்போது நீங்கள் திரை அரங்குக்கு உள்ளே இருக்கிறீர்களா,
இல்லை வெளியிலா?

இரவுப்பறவை said...

இப்போது நீங்கள் திரை அரங்குக்கு உள்ளே இருக்கிறீர்களா,
இல்லை வெளியிலா?

sakthi said...

என்னையும் வாரிச்சுருட்டி
வெளியே துப்பியது
அரங்கத்துள் சிலர் என்
நடிப்பை விமர்சித்தனர்

அருமை அனுஜென்யா சார்

வார்த்தைகளும்

வரிகளும்

அ.மு.செய்யது said...

"புன‌ர‌பி" தேடி க‌ண்டெடுத்த‌ வார்த்தை! ஸ்கோரிங்..

உள்ளே வெளியே...கொஞ்ச‌ம் வித்தியாச‌மான‌ முய‌ற்சி !!
க‌விதையை டிசைஃப‌ர் ப‌ண்ண‌ வெகுநேர‌ம் பிடித்த‌து என‌க்கு.

மங்களூர் சிவா said...

/
அரங்குக்கு மிக சமீபத்தில்
மிதந்து கொண்டிருந்தேன்
/

யூத் அண்ணாச்சி இன்னும் மெதந்துகிட்டிருக்கீங்களா? தெளிஞ்சிட்டீங்களா?

ஜோடா குடிங்க!

பா.ராஜாராம் said...

ஒன்றுமே இல்லை என தோன்றுகிறது அனு.ஜோதி சொல்லி வந்தேன்.வித்யாவின் பின்னூட்டம் வாசித்தபிறகே புரிந்தது.புரிந்த பிறகு வாசித்து கொண்டிருக்கவே தோன்றுகிறது.மீண்டும்,ஒன்றுமே இல்லை என தோன்றுகிறது...

thamizhparavai said...

கவிதை படிக்க உள்வந்த என்னை வாரிச்சுருட்டி வெளியே துப்பிவிட்டது...
ஹ்ம்ம்ம்ம்ம்

யாத்ரா said...

ரொம்ப நல்லா இருக்குண்ணா கவிதை, வாழ்க்கையை எவ்வளவு அழகா சொல்லியிருக்கீங்க

//முதலில் காட்சிகளைக்
காணப் பழகியவன்
பிறகு நடிக்கவும் துவங்கினேன்
பல வேடங்களுக்குப்பின்
சிலரின் வெளியேற்றமும்
வேறு சிலரின் புது வருகையும்
உண்டாக்கிய அச்ச தினங்களில்
ஒரு நாள் திரையரங்கு
என்னையும் வாரிச்சுருட்டி
வெளியே துப்பியது
அரங்கத்துள் சிலர் என்
நடிப்பை விமர்சித்தனர்
இலேசாக உணர்ந்தாலும்
சில காட்சிகளில்
இன்னும் நன்றாக
செய்திருக்கலாம்
என்றெண்ணியபடி
வெளியே மிதந்தேன்
அதாவது உள்ளே//

class

Unknown said...

முதலில் புரியவில்லை என்றாலும், பின்பகுதியும் கருத்தும்(உண்மையிலேயே) நன்றாக புரிந்தது..

அருமையான கவிதை..

Unknown said...

இன்சைடு இருந்தேன்
அதாவது அவுட்சைடு
மால் 'க்கு ஜஸ்ட் பக்கத்துல
செம மப்புல மெதந்துகிட்டு இருந்தேன்
சவுண்டு கேட்ட
சம் டேய்ஸ் ஆப்டர்
தேட்டராண்ட என்ன
செம பிகரு உள்ள இஸ்துகினு போச்சு
கண்டுக்காம சோ மெனி பேர்
ஆக்ட் குட்துகினு இருந்தாங்க
டையரக்டர் பிரசன்ட்ன்னு
ஆஜரானாலும்
ஓன் டையலாக்க
கப்பு அடிக்காம பேசுனாங்க
பஸ்ட்டு சீன காட்ச் பன்னிகின நானு
அப்பால ஆக்கட்டும் உட்டேன்
சோ மெனி ஆக்டுக்கு அப்பால
சம் படீஸ் அவுட்கோயிங்
சம் படீஸ் இன்கம்மிங்
செம மெர்சலான என்னையும்
ஒன் டே தேட்டரு தூ... ன்னு துப்பி
அவுட்சைடு கடாசீருச்சு
தேட்டருள்ள சோ மெனி பேர்ஸ்
நம்ம ஆக்ட டிஸ்கஸ் பண்ணாங்கோ
லைட்டா பீல் ஆட்சு
சம் சீன்ல
இன்னும் சீன போட்ருக்கலாம்னு
அப்பால அப்டியே
மப்புல அவுட்சைடு ப்லோட் ஆயிட்டேன்....!!

மாதவராஜ் said...

இந்த மனிதனின் வருகையும், வாழ்க்கையும் இப்பேர்ப்பட்டதுதானா?

கார்க்கிபவா said...

எனக்கும் என்னெனேமோ தோன்றுகிறது. ரொம்ப பிடிச்சிருக்கு தல.. ரொம்ம்ப

வெண்பூ said...

அருமை அனுஜன்யா.. முதல் வாசிப்பிலேயே புரிந்தது..

அ.மு.செய்யது said...

லவ்டேல் மேடி டிரான்ஸிலேசன் பேஜாரு...மாமேய் !!!

நம்ம குப்பத்து ஜனங்களுக்கோசரம் பிரியற மாதிரி இன்னாமா சொல்லிகின...

Anonymous said...

அருமை அண்ணா.. அசத்தல் :-)

ராமலக்ஷ்மி said...

//சில காட்சிகளில்
இன்னும் நன்றாக
செய்திருக்கலாம்//

இந்த எண்ணம் மட்டும் என்றென்றைக்கும் மாறாது தோன்றிக் கொண்டேதான் இருக்கும், வெளியே மிதக்கையிலும். தலைப்புக்கு ஒரு தனி வணக்கம்.

மாசற்ற கொடி said...

அருமையான புரிந்த கவிதை.

இதற்கு மேலும் மெருகூட்ட அந்த படம் - simply superb. இந்த கவிதைக்கும் படத்திற்கும் என்ன connecting point என பார்த்து கொண்டிருந்த பொழுது - it just happened.

அன்புடன்
மாசற்ற கொடி

RaGhaV said...

கவிதை அருமை.. :-)

மண்குதிரை said...

nanban yathravai vazhimozhikireen.,

class

பித்தன் said...

xcellant arumai....

Ashok D said...

உள்படம் அருமை

ஸ்வாமி ஓம்கார் said...

நல்ல தலைப்புடன் நல்ல உணர்வு

நாணல் said...

//இன்னும் நன்றாக
செய்திருக்கலாம்//

இதன் அடிப்படையில் தான் இன்னும் உலகம் இன்னும் இயங்கிகொண்டிருப்பதாக உணர்கிறேன்... அருமையான கவிதை... :)

ரௌத்ரன் said...

எந்த ராமகிருஷ்ணன்?
ஷிவோ
புனரபி மரணம்...
புரிஞ்சவன் அழுவுறான்...
புனரபி ஜனனம்...
புரியாட்டியும் அழுவுறான்...
தோ தின் கி ஜிந்தஹி...
அய்யோ...ஏண்டியம்மா பெத்த?
சுத்தமா புடிக்கல சார்...
காட்டு குயிலே மனசுக்குள்ளே...
ராத் கி முசாஃபர்...
அப்ப பம்ருதி பம்ருதி படி...
"புரியுதா"?
"இல்ல சார்"
"நீ ஒரு மக்கு பலா"
"அப்ப ரைட்டு"
நதி மாதிரி...
து பாக்னா சமல் கே...
ஹம்!
நொந்த ராமகிருஷ்ணன்...
நேதி...நேதி..ன்னு...
:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

இயக்குனர் இருப்பதாகச்
சொல்லப்பட்டாலும்
தங்களுக்கான வசனங்கள்
தாமாகவே பேசினர்
முதலில் காட்சிகளைக்
காணப் பழகியவன்

சில காட்சிகளில்
இன்னும் நன்றாக
செய்திருக்கலாம்
என்றெண்ணியபடி
வெளியே மிதந்தேன்
அதாவது உள்ளே

அற்புதம் சார்.

Vidhoosh said...

உங்க கவிதையைப் படிச்சதும் எதிர் கவிஜ என்னவாயிருக்கும்னு யோசிக்கற அளவுக்கு உங்க இரசிகர்கள் கவிஜ கலக்கறாங்க.

ஆனா, ரௌத்ரனின் புலம்பல் ரொம்பவே இரசிச்சேன். :))

//அப்ப பம்ருதி பம்ருதி படி...// ;))
-வித்யா

Unknown said...

//புனிதா||Punitha said...
அருமை அண்ணா.. அசத்தல் :-)//

Repeatuuuuuuu :)))

anujanya said...

@ அத்திரி

ஓகே. உள்ளேயா? வெளியேயா? :)))

நன்றி அத்திரி

@ நேசமித்ரன்

நன்றி நேசா.

@ T.V.R.

நன்றி TVR

@ விநாயகமுருகன்

அதேதான். நன்றி வி.மு.

@ மஹேஷ்

Yeah, sort of :)))

நன்றி மஹேஷ்

@ வேலன்

//நல்ல கவிதை.//
நன்றி

//அதென்ன எழுதிய கவிதை. பிறவெல்லாம் மண்டபத்தில் யாராவது எழுதிக் கொடுத்ததா?//

மீதி பேரு கவிதையெல்லாம் கூட பதிவா போடுவேன்ல. அதான் :)

@ விதூஷ்

நன்றி வித்யா.

@ முத்துராமலிங்கம்

திரும்ப வந்தீங்களா? புரிந்ததா? சொல்லப்போனால், இது மிகவும் நேரிடையான கவிதை. அதனால், ரொம்ப சிரமப்படாமல், என்ன தோன்றுகிறதோ, அதான்னு லூஸ்ல விடுங்க பாஸ். நன்றி முத்து

@ ஜோதி

'உங்கள் முதல் வருகை?' னு கேக்கலாம்னு இருந்தேன். அதே 'புன்னகை' மற்றும் 'J' .

நன்றி ஜோதி.

@ சிவக்குமாரன்

நன்றி சிவா.

@ அசோக்

வாங்க கவிஞர். நன்றி அசோக் - வோட்டுக்கும் :)

@ இரவுப்பறவை

இப்போதைக்கு உள்ளே தான் :) நன்றி சௌந்தர்.

@ சக்தி

நன்றி சக்தி.

@ செய்யது

என்னப்பா, ரொம்ப நேரடிக் கவிதைனு நினைச்சேன். நன்றி செய்யது.

@ சிவா

உங்களோட சேந்தா எங்க தெளியுறது? மிதந்து கொண்டே இருக்க வேண்டியது தான் :). நன்றி சிவா.

@ ராஜாராம்

நீங்க கடோசியா சொன்னதுதான் ரைட்டு. நன்றி ராஜா.

@ தமிழ்ப்பறவை

நன்றி பரணி.

@ யாத்ரா

நன்றி யாத்ரா.

@ பட்டிக்காட்டான்

நன்றி ப.கா. :)

@ மேடி

ம்ம், நடத்து. இப்ப எல்லாம், உன்னோட எதிர்க் கவுஜைகளுக்கு கிராக்கி அதிகம். நல்லா இருக்கு.

நன்றி மேடி :)

@ மாதவராஜ்

வாங்க மாதவ். பல நாட்களுக்குப் பின் வருகை!

ஆம், மாதவ். அப்படி தான் இருக்கும் போல. நன்றி.

@ கார்க்கி

நினெச்சேன். உனக்குப் பிடிக்கும் போதே.... கடைசியில் சொல்றேன்.

Still thanks சகா.

@ வெண்பூ

மேலே கார்க்கிக்கு சொன்னதேதான் உனக்கும்.

நன்றி வெண்பூ.

அனுஜன்யா

anujanya said...

@ செய்யது

ரொம்ப அவசியம். சரி சரி - ஏதோ கூட்டம் சேர்ந்தா சரிதான் :)

நன்றி செய்யது.

@ Vijayashankar

நன்றி (உங்கள் முதல் வருகை?)

@ புனிதா

வாங்க புனிதா. அதே 'இனியவள்' புனிதாதானே நீங்க?

நன்றி தங்கச்சி :)

@ ராமலக்ஷ்மி

நன்றி சகோ.

@ மாசற்ற கொடி

நன்றி. நீங்க ஒருத்தர் தான் நுட்பமா அந்தப் படத்தை கவனிச்சு இருக்கீங்க.

Thanks.

@ ராகவேந்திரன்

நன்றி ராகவ்.

@ மண்குதிரை

நன்றி நண்பா.

@ பித்தன்

நன்றி பித்தன்

@ அசோக்

உங்களுக்கும் படம் சொல்வது புரிந்ததா? சூப்பர். நன்றி அசோக்.

@ ஸ்வாமி ஓம்கார்

நன்றி ஸ்வாமிஜி. உங்கள் முதல் வருகை.

@ நாணல்

வாங்க தங்கச்சி. நன்றி நாணல்.

@ நந்தா

தேங்க்ஸ்.

@ ரௌத்ரன்

ஐயோ, கண்ணக் கட்டுதே! என்ன கொலைவெறி ரௌத்ரன்?

கலக்கல். நன்றி :)))))

@ நாஞ்சில் நாதம்

:) - உங்களுக்கு நர்சிம் கொடுத்து இருக்கிறார் :))))))

@ அமித்து.அம்மா

நன்றி AA.

@ விதூஷ்

ரசிகர்களின் எதிர்க் கவுஜைக்கு பல ரசிகைகள் போல. நல்லா இருங்க :)

நன்றி வித்யா.

@ ஸ்ரீமதி

ஹ்ம்ம். நடத்து. நன்றி ஸ்ரீ. அப்புறம், வேலன் வலைப்பூவில்... ரொம்ப தேங்க்ஸ் :)


அனுஜன்யா

anujanya said...

@ அனைவருக்கும்

உங்களுக்கு இந்தக் கவிதை பிடித்து இருந்தாலும், நண்பர்கள் சிலர் தனி மடலில் இந்தக் கவிதை தங்களுக்குப் பிடிக்காததை பின்வரும் காரணங்களுடன் சொல்லி இருக்கிறார்கள். அவற்றின் சாராம்சம்:

"உங்களுடைய இந்தக் கவிதையைப் படித்ததும் எரிச்சல்தான் வந்தது - அதற்கு முக்கியக் காரணம் அந்த உள்ளே வெளியே தான்.

கவிதையில் தத்துவம் கூடாதென்பதில்லை. ஆனால் இப்படி நேரடியான தத்துவங்களை (புனரபி, இயக்குனர், நடிப்பு, வசனங்கள் இன்னபிற) மேலோட்டமாகச் சொல்லி, அந்தத் தத்துவங்களின் வலிமையால் கவிதை சிறப்பானது என்றும் சொல்வதை எப்படி ஒத்துக் கொள்ள முடியும்? நவீன கவிதை மரபிலிருந்து வேறுபடும் முக்கியமான புள்ளியில்லையா இது?

(நேரடியான கருத்துகளைச் சொல்லி அந்தக் கருத்துகளின் வலிமையால் கவிதை சிறப்பானது என்று சொல்லும் போக்குடன் எனக்கு உடன்பாடில்லை - பசுவய்யா)."

சொன்ன நண்பர்களுக்கு என் மீதான அக்கறை அதிகம். அவர்கள் வீச்சும் அதிகம். அவங்க சொல்வதை நான் முழுதும் ஒப்புக் கொள்கிறேன். இது இதனை ரசித்த உங்களை எல்லாம் காயப்படுத்த எழுசவில்லை. என்னைப் போலவே, நீங்களும் இந்தக் கவிதை பற்றிய மாற்றுக் கருத்தை அறிய வேண்டும் என்ற ஆசையில்.

அதுக்காக, அடுத்த பதிவில் இருந்து ரொம்ப தாக்காதீங்க :)

அனுஜன்யா

நாஞ்சில் நாதம் said...

////:) - உங்களுக்கு நர்சிம் கொடுத்து இருக்கிறார் :)))))) //////

அதுல உங்களுக்கு ரெம்ப சந்தோசம் . ஓகே. என்னைக்காவது ஒருநாள் எனக்கு புரியுற மாதிரி கவிதை எழுதுவீங்கயில்ல. அன்னிக்கு பிரிச்சு மேஞ்சுர்ரேன்

Earn Staying Home said...

அருமை

TKB காந்தி said...

இப்போவேல்லாம் உங்க சில கவிதை புரியற மாதிரி தோணுது, சாமானிய மக்கள் சார்புல நன்றி :)

//அடுத்த பதிவில் இருந்து ரொம்ப தாக்காதீங்க// இது போங்கு ஆட்டம் ;)

anujanya said...

@ நாஞ்சில் நாதம்

என்னது பிரிச்சு மேயுறதா? ஆஹா, கிளம்பிட்டாங்கையா.

@ Earn Staying Home

நன்றி

@ காந்தி

இந்த லொள்ளுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல. நன்றி காந்தி.

அனுஜன்யா