Monday, June 30, 2008

ஹைகூக்கள்

காணமல் போய்விட்டது
ஊரின் குளம் மட்டுமல்ல
அதில் நிதம் குளித்த நிலவும்கூட

தன்னை மறந்து சல்யூட் அடித்தார்
போக்குவரத்து காவலர்
ஆம்புலன்சின் சுழல் விளக்கிற்கு

உடன் கட்டை ஏறத்
தயாராக படுத்துக் கிடந்தது
சடலத்தின் நிழல்

34 comments:

கோவி.கண்ணன் said...

//காணமல் போய்விட்டது
ஊரின் குளம் மட்டுமல்ல
அதில் நிதம் குளித்த நிலவும்கூட

தன்னை மறந்து சல்யூட் அடித்தார்
போக்குவரத்து காவலர்
ஆம்புலன்சின் சுழல் விளக்கிற்கு

உடன் கட்டை ஏறத்
தயாராக படுத்துக் கிடந்தது
சடலத்தின் நிழல்//

மூன்றும் அருமையாக இருக்குங்க !

உடன் கட்டை ஏறத்
தயாராக இருந்தது தலைகீழ்
கட்டப்பட்ட கோழிக்குஞ்சு

- முன்பெல்லாம் சிறுநகர, கிராமங்களில் சனிக்கிழமை இறந்தவர்களுடன் 'சனிப்பொணம் தனியாகப் போகாது...யாரையாவது காவு வாங்கிவிடும்' என்று அதை தவிர்பதற்காக ஒரு கோழிகுஞ்சை தலைகீழாக பாடையுடன் கட்டி சுடுகாட்டுக்கு அனுப்புவார்கள்.

இப்ப அந்த வழக்கம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

Sen22 said...

அருமையா இருக்குங்க ஹைக்கூ கவிதைகள்...

Sen22 said...

//- முன்பெல்லாம் சிறுநகர, கிராமங்களில் சனிக்கிழமை இறந்தவர்களுடன் 'சனிப்பொணம் தனியாகப் போகாது...யாரையாவது காவு வாங்கிவிடும்' என்று அதை தவிர்பதற்காக ஒரு கோழிகுஞ்சை தலைகீழாக பாடையுடன் கட்டி சுடுகாட்டுக்கு அனுப்புவார்கள்.//

இதை நான் இப்பத்தான் கேள்விப்படறேன்...

VIKNESHWARAN ADAKKALAM said...

சூப்பர்ங்க...

Anonymous said...

//காணமல் போய்விட்டது
ஊரின் குளம் மட்டுமல்ல
அதில் நிதம் குளித்த நிலவும்கூட//

அருமையாக இருக்கிறது.

இன்னும் அந்த வழக்கம் கிராமங்களில் இருக்கிறது.

anujanya said...

கண்ணன், உங்கள் முதல் வருகை. 'கோழிக்குஞ்சு' இதுவரை கேள்விப்படாத ஒன்று. வேறு கவிதையில் உபயோகப் படுத்திக் கொண்டால் கேஸ் போடாதீர்கள். உங்களது ஊக்கம் மிக்க மகிழ்ச்சி தருகிறது. எல்லா பதிவுக்கும் விடாமல் பின்னூட்டம் போடவும்.

அனுஜன்யா

anujanya said...

'sen22' என்றால் என்ன பெயர் என்று யோசிப்பதே நல்லாயிருக்கு. உங்க கவிதை இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை. வருகைக்கு நன்றி. எல்லா பதிப்புக்கும் வரவும்.

அனுஜன்யா

anujanya said...

விக்னேஷ்,

'இபொஹ்' இப்போ எப்பிடி இருக்கு? மணிகண்டனை நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள். வாழ்த்துக்கு நன்றி. எப்போதும் வரவும்.

அனுஜன்யா

anujanya said...

வேலன்,

பெயருக்கேற்றபடி குறிஞ்சி புதல்வனாக இருக்கிறீர்கள். குற்றாலம், பழனி என்று. கோவையும் கூட மலைப்பிரதேசத்தில் சேர்க்கலாம். வாழ்த்துக்கு நன்றி. அடிக்கடி வரவும்.

அனுஜன்யா

தமிழ் said...

/காணமல் போய்விட்டது
ஊரின் குளம் மட்டுமல்ல
அதில் நிதம் குளித்த நிலவும்கூட/

நல்ல இருக்கிறது
கற்பனையும் வரிகளும்

அகரம் அமுதா said...

/////காணமல் போய்விட்டது
ஊரின் குளம் மட்டுமல்ல
அதில் நிதம் குளித்த நிலவும்கூட

உடன் கட்டை ஏறத்
தயாராக படுத்துக் கிடந்தது
சடலத்தின் நிழல்/////

கலக்கறீங்க அனு! மிகத்துய்த்தேன். அருமை!

anujanya said...

வாங்க திகழ்மிளிர், என்ன அழகான பெயர்! கோகுலன் சொன்னதுபோல் இரண்டு வினைச்சொல் உள்ள அழகிய பெயர்ச்சொல். வாழ்த்துக்கு நன்றி.

அனுஜன்யா

anujanya said...

தொடர்ந்து தரும் ஊக்கத்துக்கு நன்றிகள் பல அமுதா.

அனுஜன்யா

Anonymous said...

ஆதங்கமாய் ஒன்று, அங்கதமாய் ஒன்று,ஆழமாய் ஒன்று.. மூன்றுமே அருமை.

முகுந்தன் said...

//தன்னை மறந்து சல்யூட் அடித்தார்
போக்குவரத்து காவலர்
ஆம்புலன்சின் சுழல் விளக்கிற்கு//

அட்டகாசமான வரிகள்...

இதற்கு வடிவேலு நடித்தால் எப்படி இருக்கும் ?
அவ்வ்வ்வ்....

Thamira said...

இன்னும் ஜொலிக்க வாழ்த்துக்கள்.. அனுஜன்.!

Anonymous said...

எனக்கு எப்பொழுதுமே ஹைக்கூ பிடிக்கும்...அதிலும் இன்று உங்கள் வலை அறிமுகமானதில் பெரும் மகிழ்ச்சி. அழகான புனைவு அனுஜன்யா.

Unknown said...

//காணமல் போய்விட்டது
ஊரின் குளம் மட்டுமல்ல
அதில் நிதம் குளித்த நிலவும்கூட//

Superb lines.....!! :-)
Really very nice..!!

Syam said...

அட்டகாசம்...

anujanya said...

சேவியர், முகுந்தன், தாமிரா மற்றும் புனிதா - அனைவருக்கும் நன்றி.

அனுஜன்யா

anujanya said...

நன்றி ஸ்ரீ மற்றும் ஸ்யாம்

அனுஜன்யா

ஜி said...

//காணமல் போய்விட்டது
ஊரின் குளம் மட்டுமல்ல
அதில் நிதம் குளித்த நிலவும்கூட//

அருமை.. ஹைக்கூவிற்கு ஒவ்வொருவர் ஒவ்வொரு விளக்கம் சொல்றாங்க... எனக்கு அது எந்த இலக்கணத்துல அமைந்திருக்கும், எப்படி எழுதனும் போன்றவைகள் இன்னும் புரியாத புதிராகவே இருக்குது...

anujanya said...

ஜி, நன்றி. ஹைக்கூ என்பது பொதுவாக இரண்டு/ மூன்று வரிகளில் 'நச்'னு இருக்கவேண்டிய குறுங்கவிதைகள். என் போன்றவர்களிடம் அவதிப்படுகிறது.

அனுஜன்யா

கிஷோர் said...

//உடன் கட்டை ஏறத்
தயாராக படுத்துக் கிடந்தது
சடலத்தின் நிழல்//

சரியாக விதிகளுக்குள் வரும் அட்டகாசமான ஒரு ஹைக்கூ. கலக்கறீங்க‌

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

//காணமல் போய்விட்டது
ஊரின் குளம் மட்டுமல்ல
அதில் நிதம் குளித்த நிலவும்கூட//

-ஃ-ஃ-ஃ-ஃ-
கடலில் நிலா - என்
கலங்கிய மனதுபோலவே
-ஃ-ஃ-ஃ-ஃ-

குளத்து நீரிலே அந்த மென்காற்று வீசும் இரவு வேளையில் தனிமையில் நின்று நிலவை ரசிப்பதே ஒரு தனிசுகம். தவளைகள் குதிக்கும்போது மட்டும் சிறிது நெளிந்து நெளிந்து என்னைப் பார்த்து புன்னகைக்கும் அந்த நிலவையெல்லாம் விட்டுவந்து காலங்களாகிவிட்டன...ஹீம்..

மதுவதனன் மௌ.

anujanya said...

கிஷோர் மற்றும் மது, மிக்க நன்றி. இன்றுதான் பார்த்தேன்.

அனுஜன்யா

உயிரோடை said...

காணமல் போய்விட்டது
ஊரின் குளம் மட்டுமல்ல
அதில் நிதம் குளித்த நிலவும்கூட

அருமையான‌ ப‌டிம‌ம்

உடன் கட்டை ஏறத்
தயாராக படுத்துக் கிடந்தது
சடலத்தின் நிழல்

ஏதார்த்த‌ம் ந‌ல்லா இருக்குங்க‌ அனுஜ‌ன்யா

anujanya said...

@ மின்னல்

உங்கள் பாராட்டுக்கு நன்றி

அனுஜன்யா

முரளிகண்ணன் said...

அட்டகாச ஹைக்கூக்கள். முன் படித்து ரசித்தது. இப்போது ஹைக்கூ லேபிள் முழுவதையும் திரும்ப படித்தேன். சூப்பர்

Anonymous said...

I liked the first one. The other two did not impress me much but the first one is superb. COntinue to write like this,

ஜீனோ கார்த்திக் said...

///காணமல் போய்விட்டது
ஊரின் குளம் மட்டுமல்ல
அதில் நிதம் குளித்த நிலவும்கூட////

உங்க ஹைக்கூ ரொம்ப நல்லா இருக்குங்க.

anujanya said...

முரளி, அனானி மற்றும் பாபு,

மிக்க நன்றி. முரளி, நீங்களே தமிலிஷ்ல சேர்த்து விட்டீர்களா? திடீர்னு நிறைய பேர் வந்து பார்க்கறாங்க.

அனுஜன்யா

அனைவருக்கும் அன்பு  said...

அழகான வர்ணனைகள்
குறுக்கி கொடுத்தாலும்
நிரமாராத வார்த்தைகள் .......அருமை

அனைவருக்கும் அன்பு  said...

அருமையாய் அழகாய் கையகல பாத்திரத்தில் அறுசுவை உணவு உண்டது போல ரசித்தேன் .............வாழ்த்துக்கள்